ஈழத்தமிழர்கள் மீது இலங்கையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகள்
1956 – 2009
1 இக்கினியாகலை படுகொலை 05.05.1956.
150 பேர் உயிரிழப்பு.
2 1956 இனப்படுகொலை 01.05.1958. 300க்கு மேல் உயிரிழப்பு
3 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10.01.1974. 9 பேர் உயிரிழப்பு
4 1977 இனப்படுகொலை
1978. 1500 க்கு மேல் உயிரிழப்பு
5 பெரியபுல்லுமலை இனப்படுகொலை 20.05.1980. 25 பேர் உயிரப்பு
6 1981 இனப்படுகொலை 1981. எண்ணிக்கை தெரியவில்லை
7 யாழ்நூலக எரிப்பு 01.06.1981. சுமார் 90 ஆயிரம் நூல்கள் சாம்பலாகின.
8 1983 இனப்படுகொலை 23.07.1983. 3000 க்கு மேல் உயிரிப்பு
9 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை 25.07.1983. 35 பேர் உயிழப்பு.
10 திருநெல்வேலி படுகொலை 24,25.07.1983. 51 பேர் உயிழப்பு.
11 சம்பல்தோட்டம் படுகொலை 1984. 55 பேர் உயிரிழப்பு.
12 சுன்னாகம் காவல்நிலைய படுகொலை 08.01.1984. 19 பேர் உயிரிழப்பு.
13 சுன்னாகம் சந்தை படுகொலை 28.03.1984. 9 பேர் உயிரிழப்பு.
14 மதவாச்சி-ரம்பாவா படுகொலை 09.1984. 15 பேர் உயிரிழப்பு
15 திக்கம் படுகொலை 16.09.1984.16 பேர் உயிரிழப்பு.
16 ஒதியமலை படுகொலை 01.12.1984. 32 பேர் உயிரிழப்பு.
17 குமுழமுனை படுகொலை 02.12.1984. 6 பேர் உயிரிழப்பு.
18 செட்டிகுளம் படுகொலை 02.12.1984. 52 பேர் உயிரிழப்பு.
19 மன்னார் படுகொலை 04.12.1984. 200 க்கு மேல் உயிரிழப்பு
20 கொக்கிளை கொக்குதொடுவாய் படுகொலை 15.12.1984. 131 பேர் உயிரிழப்பு.
21 முள்ளிய வளை படுகொலை 16.01.1985. 17 பேர் உயிரிழப்பு.
22 வட்டக்கண்டல் படுகொலை 30.01.1985. 52 பேர் உயிரிழப்பு.
23 புதுக்குடியிருப்பு-ஐயன் கோவிலடி படுகொலை 21.04.1985. 30 பேர் உயிரிழப்பு
24 வல்வை 85 படுகொலை 10.05.1985. 70 பேர் உயிரிழப்பு
25 திருகோணமலை படுகொலை 1985 03.05.1985- 50 பேர் உயிரிழப்பு
26 நெடுந்தீவு குமுதினி படகு படுகொலை 15.05.1985. 36 பேர் உயிரிழப்பு.
27 கிளிவெட்டி படுகொலை 1985 01.01.1985- 150 பேர் உயிரிழப்பு
28 திரியாய் படுகொலை 08.08.1985. 10 பேர் உயிரிழப்பு
29 சாம்பல்தீவு படுகொலை 04.08.1985 – 09.08.1985. 383 பேர் உயிரிழப்பு.
30 வயலூர் படுகொலை 24.08.1985. 50 பேர் உயிரிழப்பு.
31 நிலாவெளி படுகொலை 16.09.1985. 30 க்கு மேல் உயிரிழப்பு
32 பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு
33 கந்தளாய் படுகொலை 09.11.1985. 6 பேர் உயிரிழப்பு
34 முதூர் கடற்கரைசேனை படுகொலை 8.11.1985 – 10.11.1985. 30 பேர் உயிரிழப்பு
35 வங்காலை தேவாலய படுகொலை 06.01.1986. 9 பேர் உயிரிழப்பு
36 கிளிநொச்சி தொடருந்து நிலைய படுகொலை 25.01.1986. 12 பேர் உயிரிழப்பு
37 உடும்பன்குளம் படுகொலை 19.02.1986 130
38 ஈட்டி முரிஞ்சான் படுகொலை 19.03.1986 – 20.03.1986 20
39 பெரிய புல்லுமலை படுகொலை 08.05.1986
10.11.1986 18
24
40 அனந்தபுரம் ஏவுகணை தாக்குதல் 04.06.1986 5
41 கந்தளாய் படுகொலை 04,05,06.1986 50 க்கு மேல்
42 மண்டைதீவு கடல் படுகொலை 10.06.1986 33
43 செருவில் படுகொலை 12.06.1986 21
44 தம்பலகாமம் படுகொலை 12.11.1985. 34
45 பரந்தன் விவசாயிகள் படுகொலை 28.06.1986 7
46 பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை 15.07.1986 48
47 தண்டுவான் பேருந்து படுகொலை 17.07.1986 17
48 முதூர் மணல்சேனை படுகொலை 18.07.1986 14
49 அடம்பன் படுகொலை 12.10.1986 20
50 பெரிய பண்டி விரிச்சான் படுகொலை 15.10.1986 2
51 கொக்ககட்டிச்சோலை படுகொலை 28.01.1987 133
52 பட்டித்திடல் படுகொலை 26.04.1987 17
53 தோணிதட்டமடுபடுகொலை 27.05.1987 13
54 ஆலவாய் கோவில் படுகொலை 29.05.1987 40
55 மூளாய் மருத்துவமனை படுகொலை 05.11.1987 5
56 கிழக்கு பல்கலைக்கழகப் படுகொலை 23,24.05.1990 226
57 சம்மாந்துறை படுகொலை 10.06.1990 37
58 வீரமுனை படுகொலை 20.06.1990-15.08.1990 233
59 சித்தாண்டி படுகொலை 20,27.07.1990 137
60 பரந்தன் சந்தை படுகொலை 24.07.1990 15
61 பொத்துவில் படுகொலை 30.07.1990 125
62 திராய்கேணி படுகொலை 06.08.1990 90 க்கு மேல்
63 கல்முனை படுகொலை 11.08.1990 62
64 துறைநீலாவணை படுகொலை 12.06.1990 60
65 ஏராவூர் மருத்துவமனை படுகொலை 12.08.1990 10
66 கோரவெளி படுகொலை 14.08.1990 15
67 சேனகன் படுகொலை 26.08.1990 4
68 நெல்லியடி சந்தை படுகொலை 29.08.1990 16
69 சத்துருக்கொண்டான் படுகொலை 09.09.1990 205
70 நட்பிட்டிமுனை படுகொலை 10.09.1990 23
71 வந்தாறு மூலை படுகொலை 05&23.09.1990 174
72 ஒட்டுசுட்டாள் படுகொலை 27.11.1990 12
73 புல்லுமலை படுகொலை 1984- 110
74 புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை 30.01.1991 28
75 உருத்ர புரம் படுகொலை 04.02.1991 9
76 வங்காலை படுகொலை 17.02.1991 5
77 வட்டாக்கச்சி படுகொலை 28.02.1991 9
78 வந்தாறு மூலை படுகொலை 09.06.1991 10
79 கொக்கக்கட்டிச் சோலை படுகொலை 12.06.1991 220 க்கு மேல்
80 கிண்ணியடிபடுகொலை 12.07.1991 13
திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதே கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.
அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..
பேச முடியவில்லை……
சிரிக்க முடியவில்லை………
ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது.
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?
முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.
“சிந்திய குருதியால்
சிவந்த தமிழ் மண்ணில்
சந்ததி ஒன்று
சரித்திரம் படைக்க….
முந்திடும் என்பதால்….
முளையிலே கிள்ளிட…..
சிந்தனை செய்தவர்
சிறுநரிக் கூட்டமாய்….
‘இந்தியப்படையெனும்’
பெயருடன் வந்தெம்
சந்திரன் போன்ற…
திலீபனின் உயிரைப்
பறித்திட எண்ணினால்…..
பாரிலே புரட்சி…..
வெடித்திடும் என்று….
வெற்றியுடன் அவர்களை…..
எச்சரிக்கின்றேன் !”
மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.
இரத்த அழுத்தம் – 80/50
நாடித் துடிப்பு – 140
சுவாசம் – 24
#தியாகதீபம்_திலீபன்
#ஈழத்தின்குரல்
தியாக தீபம் திலீபன் -எட்டாம் நாள் நினைவலைகள்.
22.09.1987
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள்.
உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள். அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தையா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985 ஆம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..
லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.
தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.
தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.
திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..?
வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.
“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.
இந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.
புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.
ரஜனி திரணகம (1954–1989) ஈழத் தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க, பேராசிரியர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அவர், போர்க்கால மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தினார். குறிப்பாக இவர், இந்திய அமைதி காக்கும் படை மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கி வடக்கு கிழக்கில் பத்மநாபா தலைமையில் கொலை, களவு, கடத்தல், என வெறியாட்டம் ஆடிய EPRLF ஆயுத கும்பலை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார்.
இந்திய ஆமியின் கொடூரங்கள் இவரின் எழுத்துக்கள் வழியாக வெளிவருவதை இந்திய ஆமியின் ஒரு சாரார் விரும்பவில்லை. இந்திய ஆமியின் சார்பில் கொலை செய்வதற்கான திட்டத்தை இந்திய ஆமி தளபதிகளில் ஒருவரான கேணல் சசிகுமார் EPRLF அமைப்பின் ரஃபிக் என்பவரோடு சேர்ந்து திட்டமிட்டார்.
இந்த திட்டத்தின் படி EPRLF அமைப்பின் கார்த்திக் மற்றும் தாமஸ் ஆகிய இருவரும் இந்த கொலையை செய்தனர். திட்டத்தின் படி கொலை விழுந்த மறு கணமே புலிகள் மீது குற்றம் சுமத்தி EPRLF அறிக்கை வெளியிட்டது.
அதை மக்கள் மத்தியில் இந்தியா ஆமி ஏற்பாட்டில் EPRLF கொண்டு சென்றது. புலிகள் இயக்கம் மணலாறு காட்டுக்குள் இருந்த நிலையில் இதை EPRLF கும்பல் வேகமாக செய்தது.
இந்தியப் படை வெளியேறிய பின்னர் கொலை செய்த தாமஸ் டக்ளஸ் தேவானந்தா கும்பலில் செயல்பட்டு வந்தார். கார்த்திக் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.
பிற்காலத்தில் தாமஸ் திருகோணமலை பகுதியில் தனிப்பட்ட தகராறு ஒன்றில் வெட்டி கொல்லப்பட்டார்.
இக்கொலைத் திட்டத்தை செய்லபடுத்திய கேணல் சசிகுமார் என்கிற இந்திய ஆமி அதிகாரி கொலை நடந்த சில நாளில் அரியாலை மணியம்தோட்ட பகுதியில் நடந்த சண்டையில் மரணம் அடைந்தார்.
#ஈழத்தின்குரல்
நான் ஓடியதால் பயமடைந்த அந்த ஊர்காவல் படையினர் பலரை அவசர அவசரமாக துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் விட்டு ஓடிவிட்டார்கள் இவர்களின் இந்த வெறிச் செயலினால் 17 பேர் படுகொலை செய்யப்பட்டும் 10 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ந நிலையிலும் மறுநாள் இருந்ததைக் கண்டோம்.
நான் தப்பிக்காமல் இருந்திருந்தால் அழைத்துச் செல்லப்பட்ட 45 பேரும் முதற்கட்டமாக படுகொலை செய்யப்பட்டு அடுத்த கட்டமாக இன்னும் ஊருக்குள் வந்து அடுத்தடுத்த கட்டங்களாக படுகொலை செய்திருப்பார்கள் அந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர்.
அன்று நடந்தேறிய அந்த கொடுரமான படுகொலைச் சம்பவத்தினை நினைத்தால் இப்போதும் எனது நெஞ்சு காய்கின்றதென கூறினார் குறித்த படுகொலையில் இருந்து உயிர் தப்பிய பேரின்பராசா என்பவர்.
இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் எதிரொலியாகத்தான் இந்த புதுக்குடியிருப்பு படுகொலை அப்போது நோக்கப்பட்டது.
ஏனெனில் இதில் படுகொலை செய்யப்பட்ட 12 வயதுடைய ஒரு சிறுவனை இந்த இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்கள் சிறிய சிறிய துண்டாக அரிந்து படுகொலை செய்திருந்தார்கள்.
இந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து வீரச்சாவடைந்த தனது அண்ணனின் எட்டாவது நாளுக்கு தனது வீட்டில் பொங்கல் படைத்துவிட்டு அந்தப் பொங்கலை அவரின் உறவினருக்கு கொடுப்பதற்காக வீதியில் வந்தபோது இந்தக் கொலைகாரர்களின் பிடியில் சிக்கி இருந்தார் அப்போது அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில்தான் இவ்வாறு ஈவு இரக்கமின்றி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பபட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#ஈழத்தின்குரல்
இன்று (செப்டம்பர் 21) புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினமாகும்
21.09.1990
கண்களும் கையும் கட்டப்பட்ட நிலையில் கடற்கரைக்கு அண்மையில் இருந்த குளிக்குள் படுகொலை செய்யப்படுவதற்காக காத்திருந்தோம். நான் அன்று தப்பியோட முயற்சிக்காவிட்டால் எமது ஊரையே அழித்திருப்பார்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினர் - குறித்த படுகொலையில் இருந்து உயிர் தப்பியவரின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்.
செப்டம்பர் 21ம் திகதி புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 32வது ஆண்டு நினைவு தினமாகும்
1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதியாகும் எனக்கு அப்போது 25 வயது மட்டக்களப்பு ஆரையம்பதில் உள்ள புதுக்குடியிருப்பு கிராமம்தான் எனது வசிப்பிடம் நான் திருமணம் செய்யவில்லை அம்மா அப்பா மற்றும் சகோதர சகோதரிகளுடன் வசித்து வந்தேன் க.பொ.த உயர்தரம் வரையும் படித்து விட்டு அரச வேலைக்காக காத்துக்கொண்டிருந்த காலம் அது.
வழமைபோல் நான் எனது வீட்டில் (மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு அருகில்) இரவு உணவை முடித்துவிட்டு எனது அம்மாவினுடைய அக்காவின் (பெரியம்மா) வீட்டுக்கு (கடற்கரைக்கு அண்மித்த இடம்) இரவு உறக்கத்திற்காகச் சென்றேன் அப்போது நேரம் ஒரு 8.00 மணியிருக்கும் பின்பு பிபிசி தமிழோசை கேட்டுவிட்டு 9.20 மணியளவில் உறங்குவதற்காகச் சென்றபோது எங்களது கதவை யாரோ தட்டி தமிழில் அழைப்பதைக் கேட்டபோது கதவைத் திறந்து பார்த்தேன் முத்துலிங்கம் என்பவர் எனது பெரியப்பாவின் பெயரைச் (கதிரண்ணன்) சொல்லி அழைத்தார் இராணுவத்தினர் சுற்றிவழைத்துள்ளதாகவும் விசாரணை செய்யப் போவதாகவும் பயப்படாமல் எல்லோரும் வரும்படியும் அவர் சொன்னார் அவருக்கருகில் இராணுவ உடை தரித்து ஆயுதங்களுடன் 4 பேர் நின்றார்கள் (இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்கள்;)
(முத்துலிங்கம் என்பவருக்கு மூன்று மொழியும் தெரியும் இதனால் இவரைக் கொண்டே மற்றவர்களை வீடு வீடாகச் சென்று அழைத்தனர்)
அப்போது என்னையும் எனது பெரியம்மா பெரியப்பா மற்றும் எனது சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு வீதிக்கு வந்தார்கள் அப்போது 40 இற்கு மேற்பட்டோர் வீதியில் வரிசையாக நின்பதைக் கண்டேன் எங்களையும் அவர்களுடன் நிற்கச் சொன்னார்கள்.
அனைவரையும் கடற்கரை நோக்கி அழைத்துச் சென்றார்கள் எனக்கு என்னவோ சந்தேகமாகத்தான் இருந்தது ஏதோ விபரிதம் நடக்கப்போகின்றது என நான் மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.
கடற்கரைக்கு அண்மையில் இருந்த ஒரு பெரிய குளிக்குள் எல்லோரையும் அமர வைத்துவிட்டு எனது பெரியப்பாவையும் மூன்று மொழிகளும் தெரிந்த முத்துலிங்கம் என்பவரையும் முதலில் அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு சென்றார்கள் அப்போது நின்ற ஒரு ஆயுததாரி (இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்) ஏதோ சிங்களத்தில் சொல்ல அதற்கு முத்துலிங்கம் என்பவர் “இப்போது இருவர் இருவராக விசாரணைக்கென்று பெரியவர் அழைக்கின்றார் நாங்கள் முதலில் போகின்றோம் அவர் விசாரிக்கின்றபோது சில நேரம் தடியால் அடிப்பார் இதனால் யாரும் அழுதால் நீங்கள் பயப்படத் தேவையில்லை” என சொல்லிவிட்டு போனார்கள்.
ஆனால் திரும்பிவரவில்லை ஆனால் அழுகுரல் கேட்டது பின்பு இன்னும் இருவர் சென்றார்கள் அவர்களும் வரவில்லை அழுகுரல்தான் கேட்கின்றது அப்போது எனக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது.
நான் பின்னுக்கு பின்னுக்கு சென்றேன் 10 பேருக்கு மேல் சென்றுவிட்டார்கள் அடுத்ததாக மிகவும் உறுதியான பலமுள்ளவர்கள் இருவர் (நல்லையா கோவிந்தன்) ஆகியோர் சென்றார்கள் அதில் கோவிந்தன் என்பவர் தப்பி ஓடுவதற்கு எத்தனிக்க அவரை துரத்திக்கொண்டு நீண்ட நேரமாக கொல்லுவதற்காக முயற்சிப்பதும் நல்லையா என்பவர் அவர்களுடன் சண்டைபோட்டு தப்பிக்க எத்தனிக்கவும் அதிக நேரமாக அடுத்த இருவரை அழைப்பதற்கு அவர்கள் வரவில்லை அப்போது நான் எப்படியாவது ஓட வேண்டும் என முடிவெடுத்தேன்.
ஆனால் பின்பு வந்தவர்கள் பெண்களின் சாறிகளை கிழித்தும் எங்களது சட்டைகளை களட்டியும் எமது கண்ணையும் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டிவிட்டு இன்னும் இருவரை அழைத்துச் சென்றார்கள் அடுத்ததாக எனது முறை நானும் எனது மைத்துணர் முறையான ஒருவரும் செல்ல வேண்டும் அப்போது நான் அவரின் முதுகில் உரைந்து எனது கண்ணை களட்டினேன் பின்பு கையையும் ஒருமாதிரி களட்டிவிட்டு எனக்கு முன்னால் நின்ற ஆயுததாரியை (இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்) வேகமாக உதைத்து தள்ளிவிட்டு ஓடினேன் சிறிது நேரத்தில் அடம்பன் கொடியில் தடுக்கி விழுந்தேன் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள் நான் விழுந்ததால் எனக்கு படவில்லை என்னுடன் நின்ற எனது மைத்துணரும் மற்ற திசையில் ஓடினார்.
பின்பு நான் ஒரு மணிநேரமாக திசை தெரியாமல் ஒடித்திரிந்து ஊருக்குள் வந்து எனது வீட்டை அடைந்தேன்.
தியாக தீபத்தின் ஆவண காட்சியகம் அங்குரார்ப்பணம்..!
தியாக தீபம் திலீபன் அண்ணனை நினைவுகூரும் வகையில் நல்லூரில் ஆவண கண்காட்சி இன்றைய தினம் திங்கட்கிழமை தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத்தூபிக்கு முன்பாக உள்ள பகுதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது
நான்காவது வருடமாக வழமை போன்று நல்லூரில் இன்று ஆரம்பமான ஆவண கண்காட்சி எதிர்வரும் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தமிழ் மக்களுடைய விடுதலைக்காக 12 நாட்கள் நீராகாரம் இன்றி தன்னுடைய உயிரினை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபன் அண்ணனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகமெங்கும் எழுச்சிப்பூர்வமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதனொரு அங்கமாக ஆவண கண்காட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனுடைய வரலாற்றினையும், தியாகங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து இயம்புகின்ற வகையில் இந்த வரலாற்றுக் கண்காட்சியினை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
#தியாகதீபம்_திலீபன்
#ஈழத்தின்குரல்
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அம்பாறை சிவராஜா அனோஜனுக்கு மன்னிப்பும் விடுதலையும் கோரி யாழ்ப்பாணத்தில் மெழுகுதிரி போராட்டம்!
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறையைச் சேர்ந்த சிவராஜா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் மெழுகுதிரி ஏந்திய கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசு உடனடியாக ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
#ஈழத்தின்குரல்
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் சபேசன் அவர்களின் அன்புத் தந்தையாரான அந்தோனி யேசேப்பு அவர்கள் இவ்வுலகினை நீத்துள்ளார்...
அவருக்கு எமது புகழ் வணக்கம்..
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்..
ஒரே நாட்டுக்குள் வாழும் இரண்டு இன மக்களும் தங்களுடைய இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையில் கூட சமமான இடத்தைப் பெற முடியாத நிலை இருந்தால், அந்த நாட்டின் ‘ஒரே தேசம்’ என்ற கருத்து நடைமுறையில் எவ்வளவு வலிமையானது.
இந்த பதிவின் ஊடாக ஒரு பொதுவான எனது கேள்வியை முன்வைக்கிறேன்.
இதை உணர்ச்சியோடு மட்டும் அல்லாமல், வரலாறு, சட்டம், அரசியல், தேசிய அடையாளம்.ஆகிய நான்கு கோணங்களில் பார்க்க வேண்டும்.
01.சிலை என்பது வெறும் கல் அல்ல.
ஒருவருக்கு சிலை அமைப்பது என்பது அந்த நபரின் வாழ்க்கை, தியாகம் அல்லது வரலாற்றுப் பங்களிப்பை ஒரு சமூகத்தின் நினைவில் நிலைநிறுத்தும் ஒரு நினைவுச் சின்னம்.
அதேபோல் மலர் வைப்பது, விளக்கேற்றுவது, நினைவஞ்சலி செலுத்துவது, நினைவுநாள் கடைப்பிடிப்பது ஆகியவையும் ஒரு சமூகத்தின் வரலாற்று நினைவகத்தின் பகுதிகளாகும்.
ஆனால் அந்த நினைவுச் செயல் சட்டத்தால் அனுமதிக்கப்படுகிறதா, அந்த இடத்திற்கு உரிய அனுமதி தேவையா, அந்த நினைவுச் சின்னம் பொது ஒழுங்கு அல்லது பிற சட்டங்களை மீறுகிறதா என்பவை தனித்தனியாக பரிசீலிக்கப்பட வேண்டிய சட்டக் கேள்விகள்.
எனவே நினைவுகூரும் உரிமை
மற்றும் எந்த இடத்திலும் எந்த நினைவுச்சின்னத்தையும் அமைக்கும் உரிமை இரண்டும் ஒன்றல்ல.
02.உண்மையான பிரச்சினை இங்கேதான் தொடங்குகிறது.
ஒரே நாட்டில்,
ஒரு இனத்தின் வரலாற்று நபருக்கு நினைவுச்சின்னம் அமைக்க முடிகிறது;
இன்னொரு இனத்தின் வரலாற்று நபரை நினைவுகூரும்போது எதிர்ப்பு உருவாகிறது;
ஒருவரின் நினைவேந்தல் இயல்பானதாகக் கருதப்படுகிறது;
மற்றொருவரின் நினைவேந்தல் சந்தேகத்திற்குரியதாக அல்லது அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது;
என்ற நிலை தொடர்ந்தால், மக்கள் இயல்பாகவே ஒரு கேள்வியை கேட்க
முடியும்:
நாம் சட்டத்தின் கீழ் சமமான குடிமக்களா, அல்லது எங்கள் வரலாற்றுக்கும் நினைவுகளுக்கும் வேறு அளவுகோல்களா?
இது மிகவும் முக்கியமான கேள்வி.
இலங்கை அரசியலமைப்பின் Article 12-1 அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்றும், Article 12-2 இனம், மதம், மொழி உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் பாகுபாடு செய்யக்கூடாது என்றும் குறிப்பிடுகிறது. Article 14 -1 பேச்சு மற்றும் வெளிப்பாடு, அமைதியான ஒன்று கூடல், கலை ,கலாசாரம் மற்றும் மொழியைப் பயன்படுத்துதல் போன்ற உரிமைகளையும் அங்கீகரிக்கிறது.
ஆனால் இவ்வுரிமைகள் முழுமையானவை அல்ல; அரசியலமைப்பின் Article 15 கீழ் சட்டத்தால் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருக்கலாம். அதனால் ஒவ்வொரு நினைவேந்தல் சம்பவத்தையும் குறிப்பிட்ட சட்டச் சூழலுடன் ஆய்வு செய்ய வேண்டும்.
03.இரண்டு இனங்கள் -இரண்டு தேசங்கள்” என்ற உணர்வு எவ்வாறு உருவாகிறது?
இதனை நேரடியாக இந்த நாடு இரண்டு தேசங்களாகவே உள்ளது என்று சட்டப்பூர்வ முடிவாகக் கூற முடியாது.
ஆனால் மக்களின் அனுபவம் வேறொரு அரசியல் உணர்வை உருவாக்கக்கூடும்.
ஒரு தமிழ் குடும்பம்,
எங்களுடைய இறந்தவரை நினைவுகூர்வதற்கே ஏன் இவ்வளவு தடைகள்.என்று கேட்கும் நிலை ஏற்பட்டால்,
அவர்களின் மனதில் அடுத்த கேள்வி:
இந்த நாட்டின் வரலாற்றில் எங்களுடைய நினைவுகளுக்கும் சமமான இடம் இல்லையா. என்பதாக மாறலாம்.
அதிலிருந்து:
சமத்துவக் கேள்வி -அடையாளக் கேள்வி - தேசியக் கேள்வி - அரசியல் தீர்வுக் கேள்வி.
என்ற ஒரு தொடர் உருவாகலாம்.
இதுதான் மிகவும் கவனிக்க வேண்டிய அரசியல் உளவியல்.
04.எதிர்ப்பவர்கள் அறியாமலேயே ஒரு பிரிவினை உணர்வை வலுப்படுத்துகிறார்களா?
இங்கே மிகவும் கவனமாகச் சொல்ல வேண்டிய ஒன்று இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட நினைவுச்சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் இரண்டு தேசக் கோட்பாட்டை ஆதரிக்கிறார்கள்.என்று கூறுவது
சரியான முடிவு அல்ல.
அவர்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் வேறுபட்டிருக்கலாம்:
சட்டம் மற்றும் ஒழுங்கு;
குறிப்பிட்ட நினைவுச் சின்னத்தின் அரசியல் பொருள்;
பொது இடத்தைப் பயன்படுத்தும் விதிமுறைகள்;
அல்லது வேறு அரசியல் காரணங்கள்.
இவற்றை ஒவ்வொன்றாக ஆதாரத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால் அந்த எதிர்ப்பு ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வேறுபட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது என்ற உணர்வு உருவானால், அதன் அரசியல் காரணங்கள் வேறாக இருக்கலாம்.
அதாவது:
எதிர்ப்பின் நோக்கம் ஒன்றாக இருக்கலாம்; ஆனால் அதன் சமூக விளைவு வேறொன்றாக இருக்கலாம்.
இது மிகவும் முக்கியமான வேறுபாடு.
5.ஒரே நாடு” என்ற கருத்தின்
உண்மையான நிலை .
ஒரே நாடு என்று சொல்வது வெறும்:
ஒரே கொடி
ஒரே அரசியலமைப்பு
ஒரே நிலப்பரப்பு
ஒரே அரசாங்கம்
சவுதி அரேபியாவில் தண்டனையை எதிர்கொண்டுவரும் அம்பாறையைச் சேர்ந்த சிவராஜா அனோஜனுக்கு விடுதலையையும் மன்னிப்பையும் கோரி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மெழுகுதிரி ஏந்தி போராட்டம்
#ஈழத்தின்குரல்
ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும், தமிழின அழிப்புக்கும் நீதி கோரி சென்னை நடைபெற்ற கருத்தரங்கில் குரல் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி! ❤️
சர்வதேசமே! நீதி கொடு! ✊
அனோஜனின் விடுதலையை கோரி திருகோணமலையில் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு..!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட்டு, சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உரிய ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கவனயீர்ப்பில் சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவரின் விடுதலைக்காக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இளைஞர்கள் பங்கேற்றனர்.
#ஈழத்தின்குரல்
வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்..!
அநுர ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் மக்களின் காணி மக்களுக்கே .. என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என கண்டித்தும், தமது காணிகளை விடுவிக்கக்கோரியும் வலி. வடக்கு மக்கள் பலாலி சந்தியிலும் மற்றும் வசாவிளான் சந்தியிலும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தி மற்றும் வாசாவிளான் சந்தி ஆகிய இருவேறு இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
#ஈழத்தின்குரல்
"இந்தியாவோடு அடிபடப்போகினமாம்" என்ற அப்போதைய சொல்லாடலுக்குள் ஆச்சரியம், நையாண்டி, அச்சம், ஏமாற்றம், எனப்பலவித உணர்வுகள் கலந்திருந்ததாகப் பலர் கூறுவதுண்டு.
எங்களது மண்ணில் நின்று இந்தியாவை எதிர்த்த நம்மவர்கள் பஞ்சுக்கு ஒப்பானவர்கள். மென்மைக்காக இதைச் சொல்லவில்லை, பெருமளவு பலமற்ற நிலை, பெருமளவு நிலப்பரப்பு அற்ற திலை, அந்நியப்படையொன்றோடு மோதிய அனுபவமற்ற நிலை, ஏனைய தமிழ்க் கட்சிகள்/இயக்கங்கள் என அனைத்துமே இந்தியாவோடு கைகோர்த்து நின்று காட்டிக்கொடுப்பில் ஈடுபட்ட நிலை என. இவையனைத்தோடும் ஒப்பிட்டால் புலிகள் அப்போது "எடைகுன்றிய" இயக்கமே.
ஆனால் யாரிடமும் இல்லாத பலம் புலிகளிடம் இருந்தது. அதுதான் மனவுறுதி, இந்தியாவோடு மோதமுடிவெடுத்த தலைவரின் முதல் படைக்கலன் திலீபம்.
அவன்முன்னே எம்மைத் தீண்ட வந்த தீநாக்குகளால் எதுவும் செய்ய இயலவில்லை . இந்தியாவின் மொத்தப் பலத்தையும் அநாயாசமாகத் திரட்டி உட்செரித்தான் திலிபன்.
ஒரு வெண்பஞ்சு தீயைவிழுங்கிய வரலாறு எம்மண்ணில்தான் நிகழ்ந்தது.
#ஏழாம்நாள்
#தியாகதீபம்_லெப்கேணல்_திலீபன்
தியாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் புனிதப் பயணம்!
தியாக தீபம் திலீபன் அண்ணையின் 39 ஆவது நினைவேந்தலை முன்னிட்டுப் பயணிக்கும் நினைவூர்திப் பவனி இன்றைய தினம் மன்னார், மாந்தை பகுதிகளில் பயணிக்கின்றது .பொதுமக்கள் பூமாலைகள் சூட்டியும், மலர்கள் தூவியும் உணர்வுபூர்வமாகத் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தி வருகின்றனர்.
#தியாகதீபம்_திலீபன்
#ஈழத்தின்குரல்
போர்க்களத்தில் எதிரிக்கே உணவளித்த பெருமை
உலக போரியல் வரலாற்றில் இது ஒரு சுவாரஸ்ய சம்பவம்.
படத்தில் உயரமாக சீருடையுடன் நிற்பவர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதி கப்டன் கொத்தலாவல. யாழ்ப்பாணம் கோட்டைஇல் நிலைகொண்டிருந்த இராணுவத்திற்கு தலைமைதாங்கியவர்.
கோட்டை கிட்டு தலைமையில் முற்றுகையிடப்பட்டது. கொத்தலாவல தலைமையிலான பல நூற்றுக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் கோட்டைக்குள் முடக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு, தண்ணீர் என்பன தடைப்பட்டது. விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு பயந்து ஹெலிகாப்டர்கள் கோட்டையில் தரையிறங்குவதில்லை. கோட்டைக்குள்ளிருந்த இராணுவத்தினர் பசியில் வாடினர்.
கப்டன் கொத்தலாவலவிடமிருந்து கேணல் கிட்டுவுக்கு வாக்கிடோக்கி மூலம் அழைப்பு வருகிறது. கொத்தலாவலயின் குரல் தழுதழுக்கிறது. "சாப்பாடு இல்லாமல் துடிக்கிறோம். தண்ணீரும் இல்லை. சமைப்பதற்கு விறகும் இல்லை. எங்களுக்கு சாப்பாடு தருவதற்கு எங்கள் ஹெலிகாப்டர்களை அனுமதிப்பீர்களா?"என்று கேட்கிறார்.
கிட்டுவுக்கு நெஞ்சு கனத்தது. எதிரி என்றாலும் அவன் பஞ்சத்தில் வாடுவதை விரும்பாத தமிழன் அல்லவா. "உங்கள் ஹெலிகாப்டர்களுக்கு இங்கே அனுமதி இல்லை. வேண்டுமானால் நாங்கள் உங்களுக்கு சாப்பாடு தருகிறோம். ஒரு லாரியில் உணவுப் பொருட்களும் விறகும் அனுப்புகிறேன். உங்கள் உறுப்பினர்களை தாக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்" என்றார் கிட்டு. கொத்தலாவல சம்மதித்தார்.
சற்று நேரத்தின்பின் கிட்டு அனுப்பிய லாரி கோட்டைக்குள் சென்று உணவுகளை கொடுத்துவிட்டு வருகிறது. கப்டன் கொத்தலாவல நெகிழ்ச்சியோடு கிட்டுவுக்கு நன்றி கூறுகிறார். அதன் பின்னரும் அதே இடத்தில் சண்டை ஆரம்பிக்கிறது. சண்டை நடந்துகொண்டிருக்கும்போதே கிட்டுவும் கொத்தலாவலவும் அடிக்கடி சண்டையை நிறுத்திவிட்டு நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். பல இடங்களிலும் சாவடைந்த இருதரப்பு சடலங்களும் இவர்களின் சந்திப்பினூடாக பரிமாறப்பட்டன.
பின் நாட்களில் கேணல் கிட்டு இந்திய-இலங்கை கூட்டு இராணுவச் சதியில் அகப்பட்டு இயக்கத்தின் மரபிற்கமைய பத்து சகாக்களோடு தற்கொலை செய்கிறார். கப்டன் கொத்தலாவல விடுதலைப் புலிகளின் போராட்ட நியாயத்தை உணர்ந்து ஸ்ரீலங்கா இராணுவத்திலிருந்து விலகி வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்கிறார்.
#ஈழத்தின்குரல்