#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள்.
சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள்.
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
அறிக்கை!
-------------------
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன்.
இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.
அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் எழுச்சித் தமிழர் உள்ளிட்ட
8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளூர் ஷாநவாஸ்
01.04.2026
விடுதலைப் போராட்ட வீரரும், சமத்துவப் போராளியும், பொதுவுடைமை இயக்கத் தலைவருமான தோழர் ஆர்.நல்லகண்ணு ஐயா அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. 101 ஆண்டுகள் நிறைவான வாழ்வு வாழ்ந்தாலும் அவரின் பிரிவு பெரும் துயரைத் தருகிறது. கடந்த கால் நூற்றாண்டாக அவரோடு நெருங்கிப் பழகி வழிகாட்டுதல்களைப் பெற்றவன் என்ற முறையில், என் குடும்பத்தில் மூத்தவரை இழந்த வலியில் துடிக்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்திலும், சி.ஐ.டி நகர் மற்றும் நந்தனம் இல்லங்களிலும் ஐயாவை சந்தித்து உரையாடி அவரிடம் இருந்து அரசியலைக் கற்றுக் கொண்டதை நினைத்து நெகிழ்கிறேன். எளிய மக்களுக்காகப் போராடும் அரசியலையும், நயத்தகு நாகரிக அரசியலையும், எதிரியும் மதிக்கும் கண்ணிய அரசியலையும், எந்த நிலையிலும் வழுவாத கொள்கை அரசியலையும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டோம்.
விசிக சார்பில் 'அம்பேத்கர் சுடர் விருது வழங்கி ஐயாவைப் போற்றினோம். தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களின் மீது மிகுந்த அன்பும் விசிகவும் ஒரு இடதுசாரிக் கட்சிதான் என்ற பார்வையும் கொண்டவர் ஐயா நல்லகண்ணு அவர்கள்.
2021-இல் சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் ஐயாவிடம் வாழ்த்து பெறச் சென்றிருந்தேன். அவருக்கு ஆடை போர்த்த முயன்றபோது அதைத் தடுத்து எனக்கு ஆடை போர்த்தி வாழ்த்தினார். அது நான் பெற்ற பேறு
வரலாறாய் எம்மை வழிநடத்துவீர்கள் ஐயா!
#AloorShanavas #VCK #Nallakannu
#Nallakannu101 #RIPNallakannu
@sidique_dmk ன் எழுச்சியுரை 🔥
கோவையில் நடைபெற்ற 1.5 லட்சம் இளைஞர்கள் கலந்துகொண்ட மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் , இளந்தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திராவிட இயக்கத்தின் பெருமைமிகு தளபதியாக திகழ்கிறார் என்பதனையும், இந்திய ஒன்றியத்தின் அரசியல் வரலாற்றில் இவ்வளவு இளைஞர்களை கொள்கை நெறிப்படுத்திய அரசியல் இயக்கத்தின் இளைஞர்களின் தலைவராக கழக இளைஞர் அணி செயலாளர் உள்ளார் என்பதனையும் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு விளக்கிய , கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் வழக்கறிஞர் சித்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🖤❤️
@arivalayam@mkstalin@Udhaystalin@dmk_youthwing
எனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்.
கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார்என்பது
பெருந்துயரமளிக்கிறது.
பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்! வீட்டில் மூத்த மகன் என்பதால் 'பெரியதம்பி, பெரியதம்பி' என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய்! நான் பட்டவகுப்பை முடித்த காலத்திலிருந்து, 'படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா' என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும் எப்போதாவது நான் ஊருக்குச் செல்லும்போது, என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் பொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது.
அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை.
அம்மாவுக்கு எனது வீரவணக்கம்!
காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது; கண்டிக்கத்தக்கது. அப்பாவி மக்களை கொன்றவர்கள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். பிரதமர் @narendramodi இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும். பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
#Pahalgam#JammuKashmirAttack
தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களின் வழிகாட்டுதலின் படி, மராட்டிய மாநில தேர்தல் பரப்புரைக்காக, சட்டமன்ற உறுப்பினர் தோழர் பனையூர் பாபு, தலைமை நிலையச் செயலாளர் தோழர் பாலசிங்கம் ஆகியோருடன் அவுரங்காபாத் வந்தடைந்தோம். மராட்டிய மாநில விசிக தோழர்கள் வரவேற்பு அளித்தனர்.
#விசிக #VCK #AloorShanavas