ஒரு TiKTok வீடியோவிற்கு தீவிரவாதி பட்டம்.
கொஞ்ச நெஞ்சம் உணர்வோடு இருக்கும் என் ஈழ சொந்தங்களுக்கு இன்னும் அடக்குமுறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அந்த மண்ணில் பிறந்து உணர்வை இழந்து தற்குறிக்கு கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் இருப்பது நம் இனத்தின் சாபக்கேடு.
தமிழர்களுக்காக வாழ்ந்த ஒரு பெருமகன்!
தொடக்கத்தில் ரெலோவின் முன்னணி உறுப்பினராகச் செயற்பட்ட சிவாஜிலிங்கம் அவர்கள், பின்னாளில் தேசியத் தலைவரையும் போராட்டத்தையும் முனைப்புடன் ஆதரித்து வந்தார். தேசியத் தலைவரின் முதிர்ந்த பெற்றோரைப் பொறுப்பேற்று, பல இடையூறுகளுக்கிடையிலும் இறுதிவரை அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பேணிக் காத்தமையே அவரது முதன்மையான பங்களிப்பாகும். ஏனையோர் தயங்கியபோதும், அவர்களுக்காகச் சிவாஜிலிங்கம் அவர்கள் துணிந்து நின்றார். அவர்கள் உடல்நலம் குன்றியபோது, மேலதிக மருத்துவத்திற்காகப் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டதுடன், அயல்நாடுகளுக்கும் அழைத்துச் சென்றிர���ந்தார். அவர்கள் இயற்கை எய்தியபோது, அவர்களின் ஈமக்கடன்களை அவரே முன்னின்று நடத்தினார். டென்மார்க்கில் உள்ள மனோகரன் தன் கடமைகளைச் செய்ய முன்வராமல் புறக்கணித்தபோதும், சிவாஜிலிங்கம் அவர்கள் அப்பெற்றோருக்கான கடமைகளைச் செவ்வனே செய்து முடித்தார்.
அன்னார் ஆற்றிய கைம்மாறு கருதாப் பேருதவியையும், தன்னலமற்ற ஈகத்தையும் இத்தமிழ்ச் சமூகம் தன் நெஞ்சத்து நிறுத்தி, செய்நன்றி மறவாது போற்றுவதே தலையாய அறமாகும். பெருமதிப்பிற்குரிய சிவாஜிலிங்கம் அவர்களுக்கு உற்ற அரணாக நின்று உதவுவதென்பது அறநெறி, செய்நன்றி மற்றும் மாசற்ற மனிதநேயம் ஆகிய சீரிய மாண்புகளின் அடிப்படையில் நாம் ஆற்றவேண்டிய இன்றைய ஈடில்லாக் கடமையாகும். அதுமட்டுமன்றி, இது தமிழ்த் தேசியத் தலைவரையும், தாயகக் கனவான தமிழீழத்தையும் நெஞ்சிலேந்திப் பற்றுறுதியோடு ஆதரிக்கும் ஒவ்வொருவரதும் முதன்மையானதும் இன்றியமையாததுமான கடமையாகவும் முன்னிற்கின்றது.
-பிரதி பதிவு
Name - M.K Sivajilinkam
Ac no:774688
Bank of Ceylon
saving account
Bambalapitiya branch
Contact: 0777729020
இயலுமானவர்கள் தயவுசெய்து உதவுங்கள்
நமக்காக வாழ்ந்த ஒரு மனிதர்
முதல்முறையாக தனக்காக கேட்கிறார்
என்னால் முடிந்த செய்து விட்டேன் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்