பொதுவாக வாரத்திற்கு ஒருமுறையாவது நூலகம் சென்றுவிடுவது வழக்கம். ஒரு நிகழ்வில் பேசுவதற்காக நேற்றைய தினத்தின் பெரும்பாலான நேரத்தை நூலகத்தில் செலவிட வேண்டியிருந்தது.
எனக்குத் தேவையான நூல்களை எடுத்துக்கொண்டு, வாசிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில்போய் வாசிக்கலாம் என்று சென்றேன். பத்து-பனிரெண்டு வயது ஆண் குழந்தைகள் நிறைய பேர் எந்த நூல்களையும் எடுக்காமல், கையில் செல்போன் வைத்துக்கொண்டு கேம் விளையாட்டிக்கொண்டும், வீடியோ பார்த்துக்கொண்டும் அங்கே அமர்ந்து இருந்தனர். நூலகத்தில் வைஃபை இணையம் இலவசம் என்பதால் அங்கே வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. இத்தனை இலட்சம் நூல்களுக்கு நடுவில் அமர்ந்து அலைபேசியில் சுயத்தை இழக்கிறார்களே என்று கவலையாக இருந்தது.
அந்தச் சிறுவர்களிடம் இருந்து கவனத்தைத் திருப்பி நூல்களில் மூழ்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் யாரோ பேசுவதைப் போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். அந்த சிறுவர்களுக்கு அருகில் நூலகர் அமர்ந்தார்.
“நீங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டார் அந்தச் சிறுவர்களிடம்.
“வீடியோ பாக்குறேன்” என்றார்கள் ஒருசிலர்.
“கேம் விளையாடுறேன்” என்றார்கள் இன்னும் சிலர்.
“சரி, நீங்க இவ்ளோ நேரம் வீடியோ பாத்தீங்கல்ல. அதுல புதுசா தெரிஞ்சிக்கிட்ட எதையாவது சொல்லுங்க” என்று கேட்டார்.
நூலகத்தை விட்டு வெளியே துரத்திடுவாரோ என்கிற பயத்தால் அச்சிறுவர்கள் பதில் சொல்லத் தொடங்கினர்.
அவர்கள் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல, பெரும்பாலும் ஃபேக் நியூசாகவே இருந்தது. அந்த ஒவ்வொன்றையும் அழகாக விளக்கினார் நூலகர்.
இறுதியாக, “சரி நாங்க வீடியோ பாத்து ஒன்னும் கத்துக்கல. சரி நீங்க வீடியோ பாக்காம என்ன தெரிஞ்சிக்கிட்டீங்க சொல்லுங்க பாப்போம்” என்று ஒரு சிறுவன் சொல்லிவிட்டான்.
அந்த சிறுவர்கள் எல்லோரையும் நூலகர் இப்போது வெளியே துரத்தப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அப்படிச் செய்யாமல், அவர் மெதுவாக எழுந்து நின்று, குதித்து, நடித்து, ஓடி, ஆடி ஒரு கதை சொன்னார். அடுத்த அரை மணி நேரத்திற்கு அத்தனை குழந்தைகளையும் கதைசொல்லிக் கட்டிப் போட்டார் அந்த நூலகர். அந்தக் குழந்தைகளுடன் சேர்த்து நானும் கதையில் மூழ்கிப் போனேன்.
“சரி. இப்ப இந்த மாதிரி கதை உங்களுக்கும் தெரியனும்னா, இந்த நூலகத்தில் நிறைய நூல்கள் இருக்கு. அதைப் படிக்கலாம் நீங்க” என்று சொல்லிவிட்டு, அவர்களைக் கூடிக்கொண்டு, எந்தெந்த நூல்கள் எதைப்பற்றியெல்லாம் இருக்கு என்று காட்டினார். அதன்பிறகு அவர்கள் ஆளுக்கொரு நூலை எடுத்துக்கொண்டு, ஆங்காங்கே உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினர்.
மாற்றத்தை நிகழ்த்தும் எளிய மனிதர்கள் மிக இயல்பாக எந்த விளம்பரத்தையும் தேடாமல் செய்துவிட்டுக் கடந்துவிடுகிறார்கள்.
அந்த நாள் மகிழ்வானதாக மாறியது.
-Chinthan
Software Engineers in 2026:
1. Get up at 6AM.
2. Stand in long queues in petrol pumps.
3. Spend 2 hours in traffic.
4. After reaching office, check for 2 emails.
4.1. Am I still in job or laid off?
4.2. Is WFH announced?
5. Go for lunch and have discussions on both.
6. Come back and again check for these 2 emails.
7. Go for tea break and have discussions on both.
8. Come back and again check for these 2 emails.
9. Leave office at 7PM to reach home at 9PM.
10. Sleep with a wish my job is safe and I will WFH from tomorrow.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் 23 லட்சம் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அடுத்து அந்தத் தேர்வுக்கு தயார் செய்வது அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும் ஒரு விஷயம்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், நீட் தேர்வு எழுத வருபவர்கள் பெரும்பாலும் தங்கள் நான்கு சக்கர /இரு சக்கர வாகனங்களில் வருவார்கள். பொது போக்குவரத்தில் வருபவர்கள் குறைவான சதவிகிதமே இருப்பார்கள்.
நீட் தேர்வு மையங்களுக்கு சென்றால் பார்த்திருக்கலாம். நிறைய மாணவர்கள் குடும்பத்தில் ஒருவருடனாவது அதுபோல வந்திருப்பார்கள். பார்க்கிங் வசதி அதிகம் உள்ள சென்டர்களைத் தான் அவர்களும் பார்த்துக் கொடுப்பார்கள்.
எனவே பாதிக்கு பாதி என்றாலும் கிட்டத்தட்ட 10 லட்சம் பயணங்கள் இந்த மறு தேர்வுக்காக நிகழ்த்தப்படும். பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு எதிர்பார்க்கப்படும் காலத்தில் இது தேவையில்லாத சுமை
ஆயிரக்கணக்கான சென்டர்களில் இந்த டூட்டிக்கு வருபவர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் மின்சார செலவு என ஒரு பெரிய செலவினமே காத்து இருக்கிறது.
Work From Home, வீட்டிலிருந்தே online classes என்ற நடைமுறை மீண்டும் பெரிய அளவில் வந்துவிட்டால் அது IT employees அல்லது students வாழ்க்கையை மட்டும் மாற்றப் போவது இல்லை. அதனால் பாதிக்கப்படப் போவது drivers, auto drivers, office cab drivers, hotel workers, tea shop owners, PG owners, small restaurants, roadside food stalls, office cleaners, security guards, housekeeping staff, petty shop owners, stationery shops, courier staff, daily wage workers என்று நகரங்களை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள்.
ஒரு office இயங்கும்போது அதை சுற்றி ஒரு பெரிய பொருளாதார சங்கிலி இயங்குகிறது. அதேபோல் schools மற்றும் colleges இயங்கும்போது அதனை நம்பி நிறைய குடும்பங்கள் வாழ்கின்றன. மீண்டும் மக்கள் வீட்டுக்குள் சென்று விட்டால் முதலில் பாதிக்கப்படுவது இந்த middle class மற்றும் daily wage மக்கள் தான்.
அடுத்த சில மாதங்களில் உலகளவில் பெரிய economic crisis வரலாம் என்று பிரதமர் Narendra Modi மட்டுமல்லாமல் சில உலக தலைவர்களும் தொடர்ந்து எச்சரித்து வருவது கவனிக்க வேண்டிய விஷயம். அவர்கள் பேசுவதைக் கேட்டால் இந்த போர் சீக்கிரம் முடிவடையாது, அதன் தாக்கம் உலக பொருளாதாரத்திலும் வேலை வாய்ப்புகளிலும் பெரிய பாதிப்பை உருவாக்கும் என்ற கணிப்புகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு சில்லறை அரசியல் பிரச்சனைகளில் நேரம் செலவிடாமல், long-term vision உடன் செயல்பட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நிலைமை வந்தால் வேலை இழப்பு, small business collapse, daily wage impact, migration issues போன்றவற்றை எப்படி handle செய்வது என்பதற்கான திட்டங்களை இப்போதே தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஒரு crisis வந்த பிறகு react செய்வதை விட, அது வருவதற்கு முன்பே prepare ஆகி இருந்தால் நன்றாக இருக்கும். @TVKVijayHQ
IT sector employees தான் அடுத்த பெரிய பாதிப்பை சந்திக்க போறாங்க போல.
ஏற்கனவே AI disruption இந்திய market-ல ஆரம்பிச்சிருச்சு. பல நிறுவனங்கள் “efficiency”ன்னு சொல்லி high salary வாங்குற experienced IT employees-ஐ quietly replace பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.
இப்ப Work From Home restriction, fuel cost increase, economic pressure எல்லாம் சேர்ந்தா first target private sector IT தான்.
அதிலும் வருத்தம்னா, அரசு AI-ஐ எப்படி இந்திய growth, productivity, manufacturing, agriculture, education காக பயன்படுத்தலாம் என்று focus பண்ணுறதுக்கு பதிலா… AI-based foreign companies மேல depend ஆகுற மாதிரி தான் தெரிகிறது.
நாளைக்கு software எழுதுறவங்க கூட AI tool manage பண்ணுற நிலைக்கு வந்துடுமோன்னு IT employees பயப்படுறது உண்மை.
ஸ்கிரீன் டைமை குறைக்கும் பொருட்டு எண்டமூரி வீரேந்திரநாத் புக்ஸ் படிக்க ஆரம்பிச்சுருக்கேன்.
"தூக்கு தண்டனை" ஏற்கனவே படிச்சிருக்கேன்.
இந்த ஒரே வாரத்துல துளசி தளம், காதல் செக் ரெண்டும் முடிச்சிருக்கேன். பட்டாசு.🧨
Started "பர்ண சாலை". இனிமே நாமளும் Book fair போய் photo போடணும்.😌