என்னுடைய வீட்டு சம்ப் உள்ளே தண்ணீர் மிகவும் குறைவாக வந்து கொண்டிருந்ததால் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தில் புகார் அளித்தேன். அவர்கள் என்னுடைய புகாரை சரி செய்ய செய்த முயற்சி மிகவும் ஆச்சரியத்தை தந்தது. சாலையை தோண்ட அனுமதி இல்லை என்பதால் வீட்டு அருகே இருக்கும் குழாய் இணைப்பில் இருந்து தண்ணீரை உள்ளே செலுத்தி அடைப்பை எடுக்க முயற்சி செய்தார்கள். முழு பலன் இல்லாவிட்டாலும் முன்பை விட அதிக தண்ணீர் உள்ளே வருகிறது. சாலை தோண்ட அனுமதி கிடைக்கும் வரை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
ஆனால் அந்த புகாரை அவர்கள் கையாண்ட விதம் அருமையாக இருந்தது. இந்த புகார் என்று இல்லை, இதற்கு முன்பு கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் கொடுத்த புகார்களையும் பொறுமையாக சரி செய்தார்கள். ஒப்பந்ததாரர்களை சரியாக கையாளுகிறார்கள். மெட்ரோ வாட்டர் AE அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். வேலை செய்ய வந்தவர்களில் ஒருவர் கூட பணம் கேட்கவில்லை என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்.
கொட்டிவாக்கம் | ஸ்ரீராம் அவன்யூ
@CHN_Metro_Water@CMOTamilnadu@TVKVijayHQ
நான் சோலார் பவர் கம்பெனி நடத்துவதாகவும் அதன் அனுமதிக்கு பல பேர் மூலம் முயற்சி செய்ததாகவும் மின் துறை அமைச்சர் சொல்கிறார். அதனை அவர் நிரூபித்தால் அடுத்த நிமிடமே நான் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்கத் தவறினால் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? கேட்டுச் சொல்லுங்கள் சிஎம் சார் - முன்னாள் சபாநாயகர் அப்பாவு
#Appavu #CMVijay #dmk
Small becomes significant when items are positioned in the proper location.
70 Sft Study cum Bed for Students.
Contact us for Design and Execution.
7904515499
ரெய்டுகள் தொடரட்டும்.
மக்களே விரும்பி கொடுத்தால் கூட லஞ்சம் வாங்க அரசு ஊழியர்கள் பயப்படும் நிலை வரும் வரை விடாமல் தொடரட்டும். என்ன அடுத்த தேர்தலில் ஊழல் அரசு ஊழியர்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவாங்க. ,கடந்த முறையும் திமுக/ அதிமுகவுக்கு தான் வாக்களித்திருப்பார்கள்.
ஆனால் இந்த ரெய்டுகள் தொடர்ந்து நடந்து அரசு அலுவலங்கள் லஞ்சம் இல்லாத பகுதிகளாக மாறும் போது மக்கள் உங்களுக்கு திரண்டு வந்து வாக்களிப்பார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்கி நம்மை அரசு ஊழியர்கள் விழுங்கிவிடுவார்கள் என்ற பயத்திலேயே உங்களுக்கு வாக்களிப்பார்கள்.
ஆகையால் ரெய்டுகள் தொடரட்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
இது தான் எலைட் மனநிலை. இவருக்கு வீட்டை 7 படி உயர்த்தி வீடு கட்ட பணம் இருக்கு. அப்படியே வீடு பள்ளத்தில் போய் விட்டால் அதை ஜாக்கி வைத்து பல லட்சங்கள் செலவு செய்து உயர்த்திக் கொள்ளவும் காசு இருக்கு. அதனால இந்த பேச்சு.
சரி, பள்ளத்தில் இருக்கும் பகுதிகளில் மட்டுமா சாலைகளை உயர்த்துகிறார்கள்? மேடான பகுதிகளிலும் கூட சாலை உயரங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அங்கே இருக்கும் வீடுகள் பள்ளத்தில் தள்ளப்படுவதை இவர் எப்படி தடுக்க போகிறார்?
சாலைகளை உயர்த்துவதன் மூலம் தாழ்வான பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றி விடலாம் என்றால் மழை நீர் வடிகால் எதற்கு? பம்ப் செட் எதற்கு? இந்நேரம் சாலைகள் வழியாகவே மழைநீர் தானாக வடிந்து விடுமே.
சரி, தாழ்வான பகுதிகளில் சாலைகளை உயர்த்தினால் பக்கத்தில் இருக்கும் பகுதி தாழ்வாகி விடுமே. அப்புறம் அந்த பகுதி சாலையை உயர்த்தினால் மீண்டும் இந்த பகுதி தாழ்வாகி விடுமே. இப்படியே உயர்த்திக் கொண்டே போனால் மக்கள் எப்படி தைரியமாக வீடு கட்டுவார்கள்?
மக்கள் பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை தாங்கள் ஆதரிக்கும் கட்சியின் செயல்பாடுகளை யாரும் குறை சொல்லிவிட கூடாது என்பது மிகவும் மோசமான மனநிலை. சீக்கிரம் குணமாகட்டும்.
சாதாரணமாக இதை வாசித்தால், சரியாகதானே அறப்போர் பேசுகிறது என்று தோன்றும்.
ஆனால் -
சாலைகளின் உயரம் உயர்த்தப்படாவிட்டால் பள்ளமான பகுதிகள், தாழ்வான பகுதிகளாகவே இருக்கும். மழைக்காலங்களில் வெள்ளம் வரும்.
உதாரணத்துக்கு -
எங்கள் வீட்டையே சொல்லலாம்.
சென்னை மடிப்பாக்கத்தில்தான் பிறந்ததிலிருந்தே வசிக்கிறேன்.
80களில் மழை வந்தால் சில நாட்கள் வீட்டுக்குள்ளேயே முழங்கால் வரை தண்ணீர் நிற்கும். மேஜை, நாற்காலி, கட்டிலிலேயே உயிர் வாழ்ந்துக் கொண்டிருந்தோம். எங்கள் பகுதியில் இருந்த வீடுகள் ஏறத்தாழ 90 சதவிகிதம் இந்த நிலைமைதான்.
அதனாலேயே 30 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டும்போது 7 படிக்கட்டுகள் வைத்து கட்டினோம். வீட்டுக்குள் நுழைவது என்பதே பால்கனிக்கு போவது மாதிரி இருக்கும்.
இதற்குப் பிறகு வீட்டுக்குள் வெள்ளம் வந்ததில்லை. ஆனால், மூன்று அல்லது நான்கு படிக்கட்டுகள் வரை வெளியில் தண்ணீர் தேங்கியதுண்டு.
காலப்போக்கில் சாலையின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க எங்கள் நிலத்திலும் மண் கொட்டி உயரம் அதிகரிக்க ஆரம்பித்தோம். கேட் காம்பவுண்டு முழுக்க இப்போது நிலத்துக்குள் போய்விட்டது. இப்போது எங்கள் வீட்டுக்குள் வர ஒரு படி கூட கிடையாது. கிட்டத்தட்ட நிலத்துக்கு சமமாகி விட்டது வீடு.
அதே சமயம் எங்கள் பகுதியில் இப்போது மழை பெய்தால் தண்ணீர் தேங்குவதில்லை. கடந்த 30 ஆண்டுகளில் எங்கள் ஒட்டுமொத்தப் பகுதியுமே கிட்டத்தட்ட 5, 6 அடிகள் உயர்ந்துவிட்டன.
சாலையை உயரப்படுத்தினால் பழைய வீடுகளுக்குள் தண்ணீர் போகும் என்பது உண்மைதான். ஆனால், உயரப்படுத்தாமலேயே இருந்தால் தாழ்வான பகுதிகள் நிரந்தரமாகவே தாழ்வான பகுதிகளாகதான் இருக்கும். மழை வந்தால் வீட்டுக்குள் மட்டுமல்ல, சாலையிலும் வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கிதான் கிடக்கும்.
அறப்போர் போன்ற அரைவேக்காடுகளுக்கு இதையெல்லாம் உணரக்கூடிய அளவுக்கு அறிவோ, அனுபவமோ இல்லை. இதுபோன்ற என்.ஜி.ஓ.க்களுக்கு இதுவொரு பிராஜக்ட். இதை பெரிய பிரச்சினையாக விளம்பரப்படுத்தினால் நன்கு கல்லா கட்டலாம்.
சரி, சாலை உயர்ந்து வீட்டுக்குள் தண்ணீர் வருகிறதென்றால் என்னதான் தீர்வு?
மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதியில் பல வீடுகள், அஸ்திவாரத்தில் ஜாக்கி வைத்து House lifting technology மூலம் உயரம் ஏற்றப்பட்டிருக்கின்றன. பழைய வீடுகள் இடிக்கப்பட்டு உயரம் ஏற்றி புதுவீடாக கட்டியிருக்கிறார்கள்.
அரைவேக்காடு அறப்போர்களால் இப்போது தாழ்வான பகுதிகளிலும் சாலையை சுரண்டி, உயரம் அதிகரிக்காமல் சாலை போடுகிறார்கள். அடுத்த மழையில் அந்த சாலையில் தண்ணீர் வந்து, சாலையை அடித்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அப்பகுதி நிரந்தரமாகவே தாழ்வான பகுதியாக - வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவே அமைந்து விடுகிறது. Obviously, வீட்டுக்குள்ளும் தண்ணீர் வரத்தான் செய்கிறது.
நம் வீட்டுக்குள் வெள்ளம் வருகிறது என்பதற்காக, பகுதி மொத்தமுமே வெள்ளத்தில் மிதக்க வேண்டும் என்று விரும்பினால் அது சைக்கோத்தனம். சென்னையின் பல பகுதிகள் (குறிப்பாக தென்சென்னையில்) கடல் மட்டத்தைவிட குறைவான உயரம் கொண்டவை. சாலையின் உயரத்தை அதிகரிக்காமல் அப்பகுதிகளுக்கு வெள்ளப் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லை.
இந்த ரீல்ஸ் கலாச்சாரத்தை பிரபலப்படுத்தி இப்படிப்பட்ட சமூக சீரழிவுக்கு வித்திட்டவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது ?
யாரைப் பார்த்து இவர்களுக்கு இவ்வளவு தைரியம் வருகிறது …?!
THINK .
தவெக அரசு அமைந்த பிறகு மிகவும் தீவிரமாக பணியாற்றும் துறையாக
@tnpoliceoffl -ன் DVAC மாறியிருக்கிறது..
தமிழ்நாட்டில் உள்ள Anti Corruption and Vigilance காவல்நிலையங்கள் மொத்தம் 46
இந்த காவல்நிலையங்களில்
மிகக்குறைவான எண்ணிக்கையில்
Police Strength இருந்தாலும் பிற மாவட்ட DVAC காவல்நிலையங்களையும் ஒருங்கிணைத்து
அரசு அலுவலகங்களில் நடத்தும் திடீர் சோதனைகள் அதிகரித்துள்ளன
நிர்வாக ரீதியில் DVAC-ன்
இந்த சோதனைகள்
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மத்தியில்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
நிச்சயம் அதை பாராட்டியாக வேண்டும்
வாழ்த்துக்கள் @CMOTamilnadu விஜய் 💐
சாதி பாகுபாடு பார்த்ததால் ஒரு சிறுவன் தற்கொலை செய்து கொண்ட அந்த பள்ளியின் பெயர் கே.கே. நாயுடு மேல் நிலைப் பள்ளி.
இப்படி இன்னும் எத்தனை சாதி பள்ளிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது? பள்ளி பெயரிலேயே சாதியை வைத்துக் கொண்டு சாதிகள் இல்லையடி பாப்பான்னு பாட்டு பாடுவது எல்லாம் சரியான கிறுக்குத்தனம். இதுக்கெல்லாம் எந்த கட்சியும் போராட்டம் செய்யாது.
நடைமுறையை தானே பின்பற்ற சொல்கிறார்கள்? அதில் என்ன தப்பு? உங்க 25 கோடி திமுக ஆட்சி போல அமைச்சர்கள் பணம் வாங்கிக் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று சொல்கிறீர்களா?
அடுத்தது கடவுளிடம் கோரிக்கை வைத்தாலும் தண்டனையா?
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை அமைச்சர் அவர்களிடமோ @CMOTamilnadu
அவர்களிடமோ முறையிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
Weekend trip turns into a nightmare for tourists heading to #Kodaikanal!
Heavy rains & floods have cut off roads to the hill station, leaving cars and buses stranded for nearly two hours.
#TNRain#TamilNaduRain#TamilNaduWeather#Kodaikanal
தமிழ்நாட்டை இத்தனை வருடங்களாக நாங்கள் செதுக்கினோம் என்று சொல்லி பெருமை பேசுபவர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? கடந்த 6 மாதங்களாக தான் தமிழ்நாடு கெட்டு குட்டிசுவராக போய் விட்டதாக தினமும் பேசுபவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?
பிள்ளைகளுக்கு பாடத்தையும், ஒழுக்கத்தையும் சொல்லித்தரக்கூடிய ஒரு பள்ளி ஆசிரியரும், 16 வயதே ஆன மாணவர்களும் சாதி பாகுபாடு பார்த்ததால் ஒரு அப்பாவி மாணவன் தன்னுடையை உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு சென்று விட்டான். இதை விட ஒரு கொடுமை சமூகத்தில் இருக்க முடியுமா? காலம் காலமாக சாதி வாக்குகளுக்காக, சாதி பெருமை பேசும் எருமைகளை வளர்த்து விட்டதால் வந்த விளைவு தானே இது!!
யார் வீட்டிலாவது கொலுசு திருடு போனால் கூட தமிழ்நாடு நாசமா போகுது என்று கதறி ஒப்பாரி வைப்பவர்கள், இந்த பிரச்சினை குறித்து ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்?
திமுக ஆட்சியில் இருக்கும் போது தான் SIR தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் ஒருத்தரும் இங்கே போராட்டம் செய்யவில்லை. திமுக ஒரு படி மேலே போய் SIR மூலம் எந்த மோசடியும் நடைபெறாமல் நாங்கள் தடுத்துவிட்டோம் என்று தம்பட்டம் வேறு அடித்தார்கள்.
இப்போ தங்கள் தோல்விக்கு காரணம் சொல்ல எந்த காரணமும் கிடைக்கவில்லை என்பதால் SIR ஒழிக என்று கோஷம் போட்டு வருகிறார்கள். உண்மையிலேயே SIR மூலம் பல லட்சம் பேர் தங்கள் வாக்குரிமையை இழந்திருந்தால் இந்நேரம் இந்த போராட்டங்களுக்கு மிகப்பெரிய மக்கள் கூட்டம் திரண்டிருக்கும். ஆனா 100 பேருக்கு மேல் எங்கேயும் கூட்டம் இல்லை.
திமுகவுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் SIR மூலம் வாக்குரிமை இழந்தவர்களை கண்டறிந்து வெளியே கொண்டு வரட்டுமே. அதை விட்டுவிட்டு ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, ஆட்சியை இழந்த பிறகு ஒரு பேச்சு என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
For the proposed elevated corridor from Light house to happen, the Srinivasapuram slums (Encroachments on the Adyar River) has to go. Previous DMK Govt tried and stayed away due to vote bank politics. TVK Govt could take the same route..🤧
தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிப்பதா? இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழ்நாடு காவல்துறையினர் தங்களது சீருடையில் அணியும் கொடி நாள் வில்லையில் தமிழ்மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழுக்கே தமிழ்நாடு காவல்துறையில் இடமில்லாத நிலையை தவெக அரசு ஏற்படுத்தியிருப்பது வெட்கக்கேடானது.
கடந்த 29.09.2026 அன்று இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, 04.10.2026 அன்று தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சுற்றறிக்கை வெளியிட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ள வில்லையை அணிய அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழைத் தவிர்த்துவிட்டு இந்தியை மட்டும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற ஒன்றிய அரசின் முடிவை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டது ஏன்? இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா? இந்தியும் ஆங்கிலமும்தான் தவெக ஆட்சியின் இருமொழிகொள்கையா? தமிழ்நாட்டின் காவல்துறையினர் அணியும் ஒரு சிறிய வில்லையில்கூடத் தமிழுக்கு இடமளிக்க முடியாதென்றால், தவெக அரசுக்கு தமிழ் உணர்வு என்ற ஒன்று அணுவளவாவது இருக்கிறதா? தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் பாதுகாக்கப் பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் போராடி உயிர் ஈகம் செய்துள்ளனர். மொழிப்போர் ஈகியர்களின் ஈகத்தால் காக்கப்பட்ட தமிழ்மொழியை, ஒன்றிய அரசின் ஒரு கடிதத்திற்காகப் புறக்கணிப்பது அப்போராளிகளின் ஈகத்திற்குச் செய்யும் பெருந்துரோகமாகும்.
தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமளிப்பதற்குக்கூட ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டுமா? தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு காவல்துறையின் சீருடையில் தமிழ் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசுக்கு என்ன உரிமையிருக்கிறது? தமிழ்நாடு காவல்துறை என்பது தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட, முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள முதன்மையானத் துறையாகும். அத்துறையில்கூடத் தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட முடியாமல், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் விஜய் அடிபணிந்துள்ளது தமிழ்நாட்டிற்கு நிகழ்ந்துள்ள மிகப்பெரிய தலைகுனிவும், அவமானமுமாகும். தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் அன்னைத் தமிழ்மொழியைப் புறக்கணித்துள்ள வரலாற்றுப் பிழைக்கு தவெக அரசு தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக மன்னிப்புகோர வேண்டும்.
ஆகவே, இருமொழிகொள்கையின்படி, கடந்த திமுக ஆட்சி வரை உறுதியாக கடைபிடிக்கப்பட்டுவந்த, தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமே இடம்பெற வேண்டும். தமிழ் இடம்பெறாத வில்லையை அணிய அறிவுறுத்தும் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்மொழிக்கு முதன்மையளிக்கும் வகையில் புதிய வில்லையை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி