@polimernews ChatGPT-இடம் திட்டமிட்டு துண்டித்துக் கேட்ட கேள்விகளை வைத���து, அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பேச்சை திரித்து அவதூறு பரப்பியுள்ளனர்.
✅ IAS எண்ணிக்கை
✅ ஹூண்டாய் ஏற்றுமதி
✅ வட இந்தியர் புள்ளிவிவரம்
மூன்று "அவதூறு"களுக்கும் முழுமையான பேச்சு, சூழல், ஆதாரம் இணைத்து பதில் அளித்துள்ளோம்.
காணொளியையும் செய்தி ஆதாரத்தையும் நேரடியாக QR குறியீட்டில் ஸ்கேன் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
சொற்களை வெட்டி ஒட்டி அவதூறு பரப்புவது ஊடக நேர்மை அல்ல.
#NTK #Seeman #PolimerNews #FactCheck #TamilNadu
அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத் தொழிலாளி ‘கள்’ இறக்கக்கூடாதா? கள்ளுக்க��ன தடையைத் தவெக அரசு நீக்க மறுப்பது பனை தொழிலாளர்களின் வாழ்வினை அழிக்கும் கொடுஞ்செயல்!
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டில் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
‘கள்’ தமிழர்களின் தொன்மையான வாழ்வியலோடும், பண்பாட்டோடும் இரண்டற கலந்ததாகும். பதநீர், பனங்கருப்பட்டி, பனைவெல்லம் உள்ளிட்ட பல்வேறு பனைப் பொருட்களை ஊக்குவிக்கும் அரசு, அதே பனையிலிருந்து பெறப்படும் கள்ளுக்கு மட்டும் தடையைத் தொடர்வது ஏன்? தமிழ்நாட்டின் மாநில மரம் பனை என்பது தவெக அரசுக்கு தெரியுமா? தெரியாதா? ‘கள்’ போதைப்பொருள் என்றால், அரசு டாஸ்மாக்கில் விற்பது என்ன புனிதத்தீர்த்தமா? அரசு விற்கும் மலிவு விலை மதுதான் மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கிறதே அன்றி, நம் நாட்டு ‘கள்’ அல்ல; மது விற்பவர்களுக்கு சீருடை, ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிப்பதும், உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களைத் திறப்பதும், இணையம் வாயிலாக மதுவிற்பனை செய்வதும்தான் தவெக அரசு மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் முறையா? அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம்; நம் நாட்டுப் பனைத்தொழிலாளி ‘கள்’ இறக்கக்கூடாதா?
‘கள்’ உற்பத்தியில் கலப்படம் ஏற்படும் ஆபத்து மற்றும் விற்பனையை கண்காணிப்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றை தமிழக அரசு தடைக்கான காரணங்களாக முன்வைத்துள்ளது வெட்கக்கேடானது. உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையையும், தரத்தையும் ஒழுங்குபடுத்த முடிகிற அரசால், ‘கள்’ உற்பத்தியை மட்டும் உரிய உரிமம், தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு முறைகளின் கீழ் கொண்டுவர முடியாதா? கலப்படம் நடைபெறுகிறது, சட்டவிரோத விற்பனை நடைபெறுகிறது என்றால் அவற்றை அரசு தடுக்க வேண்டும். அதற்கு மாறாக, ���ள்ளுக்கு தடை விதித்து பனை தொழிலை நம்பி வாழும் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது கொடுங்கோன்மை இல்லையா? கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக அரசால் மலிவு விலையில் மதுவிற்க முடியுமென்றால், கலப்படக் கள்ளை தடுக்க, அரசால் தூய கள்ளை விற்க முடியாதா? கள்ளுக்குத் தடையை நீக்காமல், பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் என்று தவெக அரசு கூறுவது அப்பட்டமான ஏமாற்றாகும்.
பனை விவசாயிகள் பயன்பெறும் ‘கள்’ விற்பனைக்கு அரசு ஏன் செயல் திட்டம் வகுக்கக்கூடாது? என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நட���்திய, ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையமும் தனது ஆய்வறிக்கையில், இயற்கை பானமான ‘கள்’ விற்பனையை அனுமதிக்கப் பரிந்துரைத்தது. நாம் தமிழர் கட்சியும், பனைதொழிலாளர்களும் ‘கள்’ தடையை நீக்கப் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, தவெக அரசு கள்ளின் மீதான தடையை நீக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தாக���கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உடனடியாக திரும்பப்பெற்று, பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ‘கள்’ மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அதிகம் பகிரவும் 🔁
தமிழர்களின் பாரம்பரிய உணவு கள்ளுக்கு அனுமதி கொடுக்க கூடாது என தவெக அரசு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது..
அதே திருட்டு திமுக வழியில்.. தனிப்பெரும் சாராய முதலாளிகளுக்காக..
அவன் தீயசக்தினா நீ திருட்டுசக்தியால இருக்க
@actorvijay@TVKVijayHQ
கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 9 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ளது, அரசுக்கு 10 இலட்சம் கோடி கடன் உள்ளது, ஆண்டுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உள்ளது, அதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தொடர்ந்து கூறிவரும�� தவெக அரசு, வட்டி கட்டவே கடன் வாங்க வேண்ட���ய அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், 1200 கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் புதிய தலைமைச்செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?
தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்பதாலேயே புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுகிறது என்றால், அதைவிட அதிக இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ���ள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டிய தேவை என்ன? மக்களின் தேவைக்கா? அல்லது முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்கா? பரந்தூர் கிராம மக்களின் எதிர்ப்பினை ஏற்று, புதிய வானூர்தி நிலையத்தைக் கைவிட்ட நீங்கள், பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாதது ஏன்? 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைவிடவும் உங்களின் தனிப்பட்ட வசதிதான் முதன��மையானதா? இதுதான் மீனவ மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறையா முதல்வர் விஜய் அவர்களே?
உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவ மக்களின் வியாபாரத்தலங்கள் எனப் பட்டினப்பாக்க குறுகிய சாலைகளை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இ��்போதே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலகமும் அங்கு அமைக்கப்பட்டால் பட்டினப்பாக்கம் பகுதியே கடுமையாகத் திணற நேரிடும். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள், சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதிகள், பொதுமக்கள் காத்திருப்புக்கான இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இத்தனை குறுகிய இடத்திற்குள் எப்படி அமைக்க முடியும்? அப்படியே வலிந்து திணித்து அமைத்தாலும், ம���ண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல அடுத்த 100 ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கு இக்குறுகிய இடம் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா?
எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியானது கடந்த 2004 ஆம் ��ண்டு சுனாமி பேரலை தாக்கிய ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். எதிர்காலத்திலும் சுனாமியால் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உண்டு. மேலும், புவிவெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால், எதிர்வரும் 2040-2070 வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டம் 30 செமீ அளவிற்கு உயர்ந்து சென்னை கடற்கரை பரப்பில் 1.6 கிமீ அளவிற்கு (ஏறத்தாழ 71ச.கீ நிலப்பரப்பு) கடல்மட்டத்திற்கு கீழ் சென்று, நிரந்தரமாக வெள்ளம் சூழ் பகுதியாக மாறும் என்று "காலநிலை மாற்றத்திற்கான சென்னை செயல்திட்ட அறிக்கை"குறிப்பிடும் பகுதிக்குள்ளும் பட்டினப்பாக்கம் வருகிறது என்பதால், அடுத்த 100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் தலைமைச்செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் எப்படி சரியான தேர்வாக இருக்க முடியும்?
தான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சந்தித்த முதல்வர் விஜய�� அவர்கள், தற்போது தலைமைச்செயலகத்தையே தன் வீட்டிற்கு அருகில் அமைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே அங்கு வாருங்கள் என்று துக்ளக் தர்பார் நடத்த முயல்வது வ���ட்கக்கேடானது.
ஆகவே, முதல்வர் விஜய் அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இல்லையென்றால், பாதிக்கப்படும் பட்டினப்பாக்கம் 9 கிர���ம மீனவமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 9 மீனவ கிராம மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நீங்கள் எது குறித்தும் அச்சம் கொள்ள வேண்டாம்; விளைநிலங்களை அழித்து சேலம் எட்டுவழிச்சாலை அமைக்கவிடமாட்டோம் என்று கூறினோம். அமைக்கவில்லை. விளைநிலங்களை அழித்து பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கவிடமட்டோம் என்றோம். அமைக்க முடியவில்லை; சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சிலை வைக்கவிடமாட்டோம் என்றோம்; வைக்க முடியவில்லை. அதுபோல 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக��கையோடு இருங்கள்!.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பத்து படம் நடித்து��ிட்டு, கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ண ரசிகர் கூட்டத்தை பின்னால் இணைத்து அரசியலுக்கு வந்த திரை நாயகன் அல்ல சீமான் , சிறையில் வதைப்பட்டு , போராட்ட கள��்தில் நின்று வியர்வை சிந்தி வளர்ந்த மக்கள் தலைவன் சீமான் !!
நீ பாட்டுக்கு ஜிம்முக்கு போனா ஜாலியா படம் நடினா குடும்பத்தோடு சந்தோஷமா இருனா 15 வருடமாக இந்த #நன்றி கெட்ட மக்களுக்காக நீ போராடியது போதும் எப்போ #விஜய்யெல்லாம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தாரோ அப்போதே அரசியல் மேல் வெறுப்பு வந்துவிட்டது இந்த ஜனங்களின் வாழ்க்கை ஆண்டவனின் கையில் 👍
தவெக அரசு மீது கருத்து ரீதியா கேள்வி வைங்க , விமர்சனம் வைங்க , தவறை சுட்டி காட்டுங்க..
ஆனா ஒரு போதும் திருட்டு திமுக மீது சாப்ட் கார்னர் எடுக்காதீங்க..
அத்தனை தீமைக்கும் விதை திருட்டு திமுக தான்..!
அனைவரின் கவனத்திற்கு ...
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பி திருச்சி சரவணன் அவர்களின் உடல்நலம் மற்றும் அவருக்குத் தேவையான உதவிகள் குறித்து தேவையற்ற, தவறான மற்றும் உறு���ிப்படுத்தப்படாத தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது
தம்பி சரவணன் அவர்களின் உடல்நலம் மற்றும் பொருளாதாரத் தேவைகள் குறித்து, அவர் மீது அக்கறையும் அன்பும் கொண்ட கட்சி உறவுகளும், நாம் தமிழர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள பலரும், குறிப்பாக அண்ணன் சீமான் அவர்களும், நேரடியாகக் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எனவே, உண்மை நிலவரத்தை அறியாமல் நாம் தமிழர் கட்ச���யை பற்றியும் அண்ணன் சீமான் அவர்கள் பற்றியும் வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் பரப்ப வேண்டாம்.
தங்கள் ��ொந்த நலனுக்காக அல்லாமல், இனத்தின் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கும் தம்பி சரவணனின் உடல்நிலையை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்புவதும், தனிப்பட்ட வெறுப்பினை வெளிப்படுத்துவதும், இந்த சூழ்நிலையை வன்மத்தை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக கருதுவதும் அயோக்கியத்தனம்.
மணி செந்தில்.
உன்னை நன்கு புரிந்து உணர்ந்தவர்களிற்கு தெரியும் அண்ணா நீ சொக்கத்தங்கம் என்று 💯
என்ன நடந்தாலும் என்றும் உன்னோடுதான் என் அரசியல் பயணம் 💯✊🏽
@Seeman4TN 🫶🏼🥰✊🏽💯
தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்துவதா?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்��ோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?
தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?
வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?
இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?
இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும்
துணிவு எங்கிருந்து உங்களுக்கு
வந்தது?
குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை;
காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா?
மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை;
காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா?
சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்;
ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் ��து வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?
ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த ��ாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது. அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. "ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்சொல்லால் தரப்பட்டவள்..."- ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல்,
இதை எல்லாம் அறியாமல்,
அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல்,
அந்த மண்ணின் வரலாற்றை உணராமல்,
“இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா?
அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்�� நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?
“எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!” என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்?
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” என்று சொல்வீர்களா?
ஒரு மக்கள் நல���்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டதிற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா?
மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?
தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர��களுக்கு நல்லாட்சி தர முடியாது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல;
அது எமது மண்ணின் அடையாளம்!
அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல;
மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு!
(1/2)
நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
@CMOTamilnadu@Tnpcbofficial@TPRDtCollector@Chief_Secy_TN@moefcc@byadavbjp@BussyAnand
திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் (Quarry), திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி (Solid Waste Management Rules, 2026) கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெ��ுத்தல் (Source Segregation), சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் (Micro Composting Centres) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது.
"குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம்" என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள், மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விள���யாடும் ஆபத்தான போக்க���கும்.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன. சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு ���ுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம், 'பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு' என்ற சட்டமன்ற உறுப்பினர் ���ாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எ��ுகிறது.
இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் (Leachate) மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்வது ‘ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை’ என்பதையே காட்டுகிறது.
எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர��வமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு, இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிற��ன்.
ஒற்றைப் பெண் சிங்கமாய் சட்டமன்றத்தில் கர்ஜித்து கொண்டிருக்கும் எங்கள் அண்ணியாருக்கு புரட்சி வாழ்த்துக்கள்..
விவசாயிகளைப் பற்றியும் தமிழர் நலம��� பற்றியும் தொடர்ந்து போராட எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்..
💪💪💪
@Sowmiyanbumani 🔥🔥🔥
ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஒர் எம.எல்.ஏ.
நீர் பங்கீடு பற்றியும் கூட அவரது பேச்சு, தரவுகளின் சான்றோடு இருந்தது வரவேற்புக்குறியதே.
இது போலவே சட்டசபையில் எல்லோரிடமிருந்தும் ஆக்கபூர்வ முன்னெடுப்புகளும் ஆலோசனைகளும் வந்தால், இவர்களை எம்.எல்.ஏ ஆக்கிய நமக்கு நிம்மதி.
Kudos Smt. @Sowmiyanbumani
Ma'am 👏🏼👏🏼💐🤘🏽