உயிரிழந்த தன் குழந்தைக்கு சமூகம் கேட்கும் செலவுகள் செய்ய இயலாத நேரத்தில் ,
பிறந்த நேரத்திலும் உடன் இல்லாமல் செய்துவிட்ட பெருமழை தந்த சோதனையில்,
புதைக்கும் இடம் வரை வந்துவிட்டோம் என்று கனத்த இதயம் கொண்டு வந்��� அந்த அப்பாவின் நெஞ்சம் அட்டைப் பெட்டியை திறந்த போது வெடித்து அல்லவா போயிருக்கும்?
சலனம் எதுவும் இல்லாமல் துணியை கொண்டு வா என்று இவர்களையே துரிதப்படுத்திய அந்த அதிகாரத்தின் குரல் வெறும் அலட்சியத்தின் குரலல்ல.. அவமானக்குரல்..
குழந்தையை தூக்கிக் கொண்டு அலைந்த போது பணம் கேட்டவர்கள் துணிக்கும் கேட்டிருந்தால் பிச்சை எடுத்தேனும் அ��்த அப்பா கொடுத்திருப்பாரே !
ஆனால், அதைக்கூட தராமல் வெற்றுடல் அட்டைப் பெட்டியில் கிடந்தது !
"அட்டைக் கத்திகள் யார்" என்பதை அது அடையாளம் சொன்னது !