ப்ரெண்ட்ஸ்,
ஐடி தான் புதுசு, ஆள் பழசு .
மெயின் ஐடி Restriction ல இருப்பதால்,
இங்கே இருந்து சங்கி/ஜோம்பிகளை பொழக்கிறேன்
இன்னும் 3 பேர் வந்தால் 1k வந்துடும்
Meanwhile
என்னை ஃபாலோ செய்து
நான் திருப்பி ஃபாலோ செய்யாதவர்கள்
ஒரு கமெண்ட் செய்யவும்
100% ஃபாலோ பேக் confirm
🖤❤️
MTC to deploy 625 e-buses from 5 depots.
Govt will have their own conductors and all facilities like govt buses.
Buses will be owned/operated/maintained by Private companies.
Govt will provide space in the depot for parking and charging stations.
வடக்கு நோக்கிய காவல் தெய்வங்கள்
தமிழகத்தில் மாரியம்மன், கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்கள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன.
வடக்கிலிருந்து வந்த அசோகர், முகலாயர், மராத்தியர் படையெடுப்புகளை எதிர்க்கும் ஆன்மீக பாதுகாப்பாக இது உருவானது. தமிழகம் வலுவாக எதிர்த்து நின்றது.
சீட்டு வேணுமா? நோட்டு வேணுமா?
நாடகமாக்கல் : @grok
பெரிய மாங்கா:
தைலாபுரம் பேட்டி வெறும் நாடகம்டா அதிமுகவோட கூட்டு வந்தாதான் நோட்டு கிடைக்கும் காஜபாவோட போனா ஒண்ணும் கிடைக்காது
சின்ன மாங்கா:
ஆனா அய்யா வழக்கை காட்டி பயமுறுத்துவாங்களே நான் பயப்படுறேன் என்ன பண்ணலாம்
At Christ the King School in Meyyampuli near Rameswaram, a female-shaped AI robot teacher speaks 27 Indian and 23 global languages, answering students’ queries.
This aligns with CM M.K. Stalin’s 2026 plan to add AI to school curricula.
Tamil Nadu’s next revolution begins!
THIS IS NOT THE OLD TPTC OF VILLUPURAM.
This Ashok Leyland Bus is the
Public transport in Mauritius 🚌
Ashok Leyland is the 4th largest vehicle manufacturer in the world?
MADE IN TN WANDERING AROUND WORLD
NORTH INDIANS MIGRATE TO TAMIL NADU FOR:
IT & manufacturing jobs (NITI Aayog 2022)
Top education hubs (QS Rankings 2023)
Great infrastructure & quality of life (India Today 2021)
Advanced healthcare (WHO 2020)
Vibrant cities like Chennai (Census 2011)
திமுக மற்றும் கலைஞர் மீதான வன்ம குடோன்களை இனி வரும் காலங்களில் தூங்க விடாமல் செய்யப் போகும் நீண்ட பகுப்பாய்வை @grok சுருக்கி தந்திருக்கிறது படியுங்கள் பகிருங்கள்
'காமராசர், அண்ணா, கலைஞர் ,எம்ஜி ராமசந்திரன், ஜெயலலிதா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்
பிஎம் ஸ்ரீ பள்ளிகள்னா?
புதுசா கட்டுவாங்களா?
சாதா ரயிலுக்கு பெயிண்ட் அடிச்சு எப்படி வந்தேபாரத் ரயில்னு பேர் வச்சாகளோ அதே மாதிரி, மாநில அரசு பள்ளிகளில் சேர் டேபிள் வாங்கி போட்டுட்டு இதெல்லாம் நாங்க கட்டுனதுன்னு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்.
பணத்தை கொடு நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்றால் உருளுகிறார்கள்
ஒன்றிய கல்வி அமைச்சர் - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம், இரண்டில் எது சரி?
மூலக்கட்டுரை : ஷாஜகான்
தற்போதைய சர்ச்சை, ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு பள்ளிக் கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை வழங்க மறுப்பதாக எழுந்த குற்றச்சாட்டிலிருந்து தொடங்கியது.
ஒன்றிய அமைச்சர் என்ன சொல்கிறார்? தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்கிறார்.
தமிழ்நாடு அரசு இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என்கிறது.
ஒன்றிய அமைச்சர் கூறுகிறார்: தமிழ்நாடு முன்பு இதை ஏற்கிறோம் என்று சொல்லிவிட்டு, இப்போது மறுக்கிறது. அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தைக் காட்டுகிறார். முதலில் ஒப்புக்கொண்ட பிறகு, தேசிய கல்விக் கொள்கை பற்றிய பகுதியை நீக்கி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தயாரித்ததாகக் குறிப்பிடுகிறார்.
இரண்டு கடிதங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப ஒன்றிய அமைச்சரையோ அல்லது தமிழ்நாடு அரசையோ விமர்சிக்கின்றனர்.
இந்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள, அதன் பின்னணியை படிப்படியாகப் பார்க்க வேண்டும்.
முன்பு சர்வ சிக்ஷா அபியான் என்ற திட்டம் இருந்தது உங்களுக்குத் தெரியுமா? பின்னர் நடுநிலைக் கல்விக்காக மத்யமிக் சிக்ஷா அபியான் வந்தது. ஆசிரியர் பயிற்சிக்காகவும் ஒரு திட்டம் இருந்தது. இவை அனைத்தையும் உள்ளடக்கி, ஒன்றிய அரசு சமக்ர சிக்ஷா என்ற திட்டத்தை 2018-ல் அறிமுகப்படுத்தியது. இது மழலையர் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒருங்கிணைந்த கல்வித் திட்டமாகும்.
இதற்கான நிதியை ஒன்றியமும் மாநிலமும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ளும்.
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது.
2022-ல் ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. சமக்ர சிக்ஷா திட்டத்தில் பிரதமரின் உயரும் இந்தியாவுக்கான பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. (பிரதமர் என்ற பெயர் அவரை இணைப்பதற்காக இருக்கலாம், ஆனால் அதை இப்போது விட்டுவிடுவோம்.)
பிரதமரின் உயரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம் என்றால் என்ன? ஒன்றிய அரசு, மாநில அரசு, ஒன்றியப் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளிலிருந்து 14,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும்.
நீங்கள் கேட்கலாம்: ஏற்கெனவே மத்திய பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்றவை இருக்கும்போது, புதிய பள்ளிகள் ஏன்? இவர்களின் பழக்கம், ஏற்கெனவே உள்ளவற்றை மாற்றி பெயர் வைப்பதுதான். பல மாநிலங்களில் மத்திய பள்ளிகளுக்கு பிரதமரின் உயரும் இந்தியாவுக்கான பள்ளிகள் என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்டுவிட்டது. அதையும் விட்டுவிடுவோம்.
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு நிதி வர வேண்டும் என்பதைப் பார்த்தோம்.
பிரதமரின் உயரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம் வந்தபோது, தமிழ்நாடு அரசு ஒரு கடிதம் எழுதியது: "தமிழ்நாடு அரசு பிரதமரின் உயரும் இந்தியாவுக்கான பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆர்வமாக உள்ளது. இதை ஆய்வு செய்ய, கல்வித்துறைச் செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்."
தமிழ்நாடு அரசை விமர்சிப்பவர்கள் இதைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள்—முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகச் சொல்லிவிட்டு, பின்னர் மறுப்பதாகக் கூறுகிறார்கள்.
ஒன்றிய அமைச்சரும் இதையே சொல்கிறார். மார்ச் 15 அன்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு அரசு பிரதமரின் உயரும் இந்தியாவுக்கான பள்ளிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகக் கூறியது. அதன்படி, ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒரு வரைவு ஒப்பந்தத்தை அனுப்பியது. ஆனால், தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம் என்ற பகுதியை நீக்கி, திருத்திய வரைவை அனுப்பியது. இதுதான் ஒன்றிய அமைச்சரும் அவரது கட்சியினரும் முன்வைக்கும் விமர்சனம்.
இங்கு கவனமாகப் பார்க்க வேண்டியது இதுதான்:
தமிழ்நாடு அரசு பிரதமரின் உயரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தை மறுத்துவிடவில்லை.
அதை ஆய்வு செய்ய ஒரு குழு அமைப்போம், அதன் பரிந்துரைகளின்படி முடிவு செய்வோம் என்றது.
அதன்படி, பிரதமரின் உயரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தை ஏற்கிறோம், ஆனால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று திருத்திய ஒப்பந்தத்தை அனுப்பியது.
ஒன்றிய அரசு அனுப்பியது ஒரு வரைவு ஒப்பந்தம்தான். வரைவு என்றால், அதை ஆய்வு செய்து மாற்றலாம்.
மிகவும் எதிர்பார்த்து இருந்திருப்பார் போல.
வெற்றி பெற்ற அடுத்த நிமிஷம் ஜி கிட்ட இருந்து வாழ்த்து டுவீட் வந்துருச்சு..
டைம் வேஸ்ட் பண்ணி போட்டியை காணாமல் இங்கு இருந்தே தன் ஆன்ம பலத்தில் வெற்றி பெற வச்சது ஜி தான்
இந்திய அணியை ஊரு ஊராக ஓட விடாமல் ஒரே இடத்தில் தங்க வச்சு கடுமையா ட்ரில் கொடுத்து
ஜி யின் ஆன்ம பலத்துக்கு வலு சேர்த்தது ஜெய்ஷாவின் கேம் ப்ளான்
கும்பமேளா, சாம்பியன் கோப்பை, அடுத்து ஐபிஎல் என மக்களை சந்தோஷத்திலேயே வைத்திருக்கும் ஜீயின் வேட்கையை உணர்ந்து
முதல் ஆளாக நானும் ஓடிப்போய் ஜியை வாழ்த்திட்டு வந்துட்டேன்
நேற்றைய வெற்றிக்கு யாரெல்லாம் ஜியை வாழ்த்தினீர்கள்?
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான டாப் 10 மெட்ரோ வகை 1 வகை 2 என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்துவது தமிழ்நாட்டு நகரங்கள்
பக்கத்திலேயே இன்னொரு மேப் அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நிகழும் மாநிலங்கள்
தமிழ்நாட்டின் சராசரியையும் இந்தியாவின் சராசரியையும் புத்தி உள்ளவர்கள் ஒப்பிட்டுக் கொள்ளவும்
மூன்றாவது மேப்பில் மாநகர அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள். அதிலையும் நம்ம சென்னை மற்றும் கோவை ஒன்றுக்கு கீழ் இருக்கு
நான்காவது தான் முக்கியமான மேப்
நிகழும் குற்றங்களில் முக்கால்வாசி காவல் நிலையங்களில் எஃப் ஐ ஆர் பதிவதே இல்லை
வட மாநிலங்களில் வழக்கு தொடுத்த பெண்ணின் வீட்டையே கொளுத்துவார்கள்.
அப்புறம் எப்படி வட மாநில பெண்களின் குடும்பத்தார்கள் காவல் துறையை அணுகுவார்கள்?
அதேநேரம், தமிழ்நாட்டில் ஒரு வழக்குப் பதிய ரெண்டு மணி நேரம் தாமதம் ஆனால் கூட இந்த எச்சை மீடியாக்கள் என்ன ஆட்டம் ஆடுவார்கள்?
இதையெல்லாம் பரப்பி விடுங்க மக்கா
ஒரு ட்ரைன்ல சராசரி waiting list dropped அதிகபட்சம் 50 - 60. அதுல etkt 55 (அவன் வரவே மாட்டான்), 5 கவுன்டர் டிக்கட். இந்த 5 பேரை உள்ள விடலைன்னா கூட்டம் வராதுன்னு சொன்னவனை நான் பார்க்கணும்.
அப்போது இவர்கள் கவுன்டரில் விற்கும் 2000 முன்பதிவில்லா டிக்கெட் (முன்பதிவில்லா பெட்டிகளின் கொள்ளளவு 200 என்று தெரிந்தும்) வைத்திருப்பவர்கள்?
அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்..
வெண்ண மவனுங்களா.. அவங்கதான் இந்த கூட்டமே.. இது உண்மையா உங்களுக்கு தெரியாது இல்லை?
போங்கடா போக்கத்தவனுங்களா 😡
@smvasu
தமிழர்கள் உலகம் முழுவதும் வியாபிக்க காரணம் அவர்கள் பெற்ற ஆங்கில அறிவு.
100 ஆண்டுகளாக இதனை சாதிக்க தமிழ்நாடு கடந்து வந்த பாதை பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதிய இந்த கட்டுரை புக் மார்க் செய்து பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்
அன்புள்ள யோகேந்திரா…
சில நாட்களுக்கு முன்பு மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு ட்வீட் தொடர்பாக யோகேந்திர யாதவ் என்னும் அறிவு ஜீவியும், பர்கா தத் என்னும் ஊடகரும், என்மோஜோ என்ற தளத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்தினார்கள்.
அந்த உரையாடல், ஸ்டாலினின் நிலைப்பாடு எவ்வளவு தவறானது என்றும், மும்மொழிக் கொள்கை எப்படி மாணவர்களின் வாழ்க்கைக்கு முக்கியமானது என்பதாகவும் அமைந்திருந்தது. அந்த உரையாடல் என்னுள் பல சிந்தனைகளை உருவாக்கியது. அவற்றை எழுத்தில் வடிக்க விரும்பியதன் விளைவே இக்கட்டுரை.
கதை மாந்தர்களின் பின்னணி!
இந்தக் கட்டுரையின் மையக் கருத்துகளுக்குச் செல்வதற்கு முன்பு, யோகேந்திரா, பர்கா மற்றும் எனது பின்புலங்களை சொல்வது முக்கியம் எனக் கருதுகிறேன்.
யோகேந்திரா ஒரு கல்விசார் பின்புலத்தில் இருந்து வருபவர். அவரது தாத்தா பள்ளி ஆசிரியர். தந்தை பொருளாதாரப் பேராசிரியர். பள்ளியில் மூன்று மொழிகள் பயின்ற யோகேந்திரா, ஜவஹர்லால் மற்றும் பஞ்சாப் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பயின்றவர்.
பர்காவின் தந்தை ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்தவர். தாய் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் பணிபுரிந்த பிரபலமான பத்திரிக்கையாளர். பள்ளியில் மூன்று மொழிகள் பயின்ற பர்கா, தில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் மற்றும் ஜாமியா மிலியா கல்வி நிறுவனங்களில் பயின்றவர்.
என் பெற்றோர் கையெழுத்து போடத் தெரிந்த அளவு மட்டுமே படித்தவர்கள். உள்ளூர் அரசுப் பள்ளிகளில் பயின்றேன். பள்ளியில் இரண்டு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்பட்டன. இளமறிவியல் வேளாண்மையும் (இட ஒதுக்கீட்டில்), முதுநிலை ஊரக மேலாண்மை (இட ஒதுக்கீடு இல்லாமல்) படித்தேன். பணிநிமித்தம் இந்தியும், கன்னடமும் பேசக் கற்றுக் கொண்டேன்.
இந்தப் பின்புலம் ஏன் முக்கியமென்றால், உலகத்தில் உள்ள பல விஷயங்களைப் பற்றிப் பேசுகையில், நமது கருத்துக்கள் இந்தப் பின்புலத்தில் இருந்துதான் வருகின்றன என்பதனால். இந்தக் கட்டுரையை படித்து முடிக்கையில், இது மேலும் தெளிவாகப் புலப்படும்.
புறக்கணிக்கப்பட்ட பள்ளிக் கல்வியின் வரலாறு!
இந்த நேர்காணலில் நான் எதிர்கொண்ட முதல் அதிர்ச்சி என்பது, யோகேந்திரா, பர்கா இருவருமே ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும் பள்ளிகளில் மூன்று மொழி கற்பது என்பன எப்போதுமே இருந்து வரும் விஷயங்கள் என்பதான ஒரு அனுமானத்தில் இருந்து பேசியதுதான்.
பள்ளிக் கல்விக் கொள்கையின் வரலாறு தெரிந்தவர்கள், 1976 ஆம் ஆண்டு வரை பள்ளிக் கல்வித்துறை என்பது மாநில அரசுகளின் கீழ் வரும் ஒரு துறையாக இருந்தது என்பதையும், நெருக்கடி நிலை காலத்தில் 1976 ஆம் ஆண்டுதான், இது ஒன்றிய-மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்பதையும் அறிவர். தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே கற்பிப்பது மாநில அரசின் கொள்கையாக இருந்து வருகிறது என்பதையும்.
ஒரு துறை, ஒன்றிய-மாநில பட்டியலில் இருந்தால், ஒன்றிய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளே இறுதியானது என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், சட்டம் பயின்ற என் நண்பர்கள், அது உண்மையல்ல என்கிறார்கள். ஒரு துறை, ஒன்றிய-மாநில பட்டியலில் இருந்தால், ஒன்றிய அரசின் சட்டங்களுக்குத்தான் அது பொருந்துமே தவிர, கொள்கை முடிவுகளுக்கு அது பொருந்தாது என்கிறார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மூன்று வழக்குகளில் சொன்ன தீர்ப்புகள் இதை உறுதி செய்திருக்கின்றன என்கிறார்கள். இது தொடர்பான மேலதிக விவரங்கள் என்னிடம் இல்லை. இது உறுதி செய்யப்பட வேண்டிய ஒன்று.
ஆனால், ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். பள்ளிக் கல்வியை நேரடியாக பெரும்பாலான மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பொறுப்பு என்பது மாநில அரசுகளிடம்தான் உள்ளது. அங்கே ஒன்றிய அரசின் பங்களிப்பு என்பது தனித்துவமான திட்டங்கள் வழியே மாநிலங்களுக்கு நிதியளிப்பது மட்டுமே. நேரடியாக பள்ளிக் கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் அளிப்பது என்பது ஒன்றிய அரசால் இயலாத காரியம்.
கல்வியில் தமிழ்நாட்டின் தனித்துவமான அணுகுமுறை
தமிழ்நாட்டுக் கல்விமுறை சமூக நீதிக் கோட்பாட்டுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்தப் பயணம் 1920 களில் நீதிக்கட்சி ஆட்சியுடன் தொடங்குகிறது. முதன்முதலாக சென்னையில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. ஆனால், அதீத வறுமை, பட்டினியின் காரணமாக, பள்ளிக்கு மாணவர் வருகை குறைவாக இருக்கிறது. இதைச் சரி செய்ய மாநகர நிர்வாகம் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதனால் மாணவர் வருகை அதிகரிக்கிறது.
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
The world will praise only a kingdom that is simple in its appearance and possesses a sweet culture free from harsh words
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.
புரட்டாவும், பாக்கெட் மாவும் பின்னே புளித்த சிந்தனையாளர்களும்
மூலக்கட்டுரை :
ஆண்டனி வளன்
எழுத்தாளர்களுக்கும் தோசை மாவுக்கும் என்ன ஒரு பிணைப்பு என்று புரியவில்லை.
ஒரு பக்கம் நாகர்கோவில் ஆசானுக்கு புளிச்ச மாவு சிக்கலாக இருந்தது என்றால், இப்போது ராஜேஷ் குமாருக்கும் அதே நிலை போல தெரிகிறது.
கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் தோசை மாவு எவ்வளவு பெரிய உதவியாக இருக்கிறது என்பதை யாராவது இவர்களுக்கு விளக்கினால் நல்லது. பழங்காலத்தில் போலவோ அல்லது தங்கள் அம்மாக்கள், அப்பத்தாக்கள் செய்தது போலவோ ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து, பக்குவமாக புளிக்க வைத்து தோசை சுட்டு சாப்பிட வேண்டும் என்பவர்கள் அதை செய்து சாப்பிடலாம்.
ஆனால், இப்போது பெண்கள் வேலை செய்யவில்லை, மாவு அரைப்பதில்லை, மசாலாவை அம்மியில் அரைப்பதில்லை, உலக்கையில் மாவு இடிப்பதில்லை, அதனால் தான் உடல்நல பிரச்சினைகள் வருகின்றன என்று பேசுபவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. அப்படிப்பட்டவர்கள் ஏழு கடல்களையும் மலைகளையும் தாண்டி தனித்தீவுகளில் வாழ்ந்தால் சிறப்பாக இருக்கும்.
சமையல் கட்டுகளிலேயே வாழ்க்கையை செலவழிப்பதில் நாம் தான் முதலிடத்தில் இருப்போம் போல. பலவிதமான சமையல் பாத்திரங்களை கழுவுவது, துணி துவைப்பது என்று ஆயுளில் பெரும்பகுதி இதிலேயே முடிந்துவிடும். கையால் துவைத்து, வெயிலில் காயவைத்து, மடித்து வைத்தால் தான் சரி என்று நாம் மட்டும் பேசிக் கொண்டிருப்போம் என்று தோன்றுகிறது.
வெள்ளைக்காரன் டிஷ் வாஷரில் பாத்திரங்களையும், வாஷிங் மெஷின், ட்ரையரில் துணிகளையும் ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுகிறான். இது ஒரு பெரிய தலைப்பு, ஆனால் நாம் புளிச்ச மாவுக்கு வருவோம்.
கடைகளில் 50, 60 ரூபாய்க்கு நல்ல தரமான மாவு கிடைக்கிறது. அதை வாங்கி தோசை ஊற்றினால் பத்து நிமிட வேலை. தரமற்ற மாவுகளும் வருவது உண்மை தான், அதை மறுக்க முடியாது. ஆனால், அதற்காக கடை மாவு வாங்கவே கூடாது, அது ஆரோக்கியமற்றது என்று சொல்வது சரியல்ல.
கோதுமையை வாங்கி, வெயிலில் காயவைத்து, அரவை எந்திரத்தில் அரைத்து, சப்பாத்தியோ, கோதுமை தோசையோ செய்து சாப்பிட விரும்புபவர்கள் செய்யலாம். ஆனால், கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கோதுமை மாவு உடலுக்கு நல்லதல்ல என்று பேசுவது சரியில்லை. எல்லாவற்றிலும் தரமுள்ளவையும் தரமற்றவையும் இருக்கின்றன.
ஆணும் பெண்ணும் பணிக்கு செல்லும் குடும்பங்களுக்கு கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் தோசை மாவு பெரிய உதவி. மணமாகாத இளைஞர்களுக்கும், வயதான தம்பதிகளுக்கும், சிறிய குடும்பங்களுக்கும் இது பல வகைகளில் நன்மை தருகிறது. பண ரீதியாக பார்த்தாலும் நஷ்டமில்லை.
இரண்டு அல்லது மூன்று பேர் உள்ள வீடுகளில் அரிசி, உளுந்தை ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து, பதம் பார்த்து, கிரைண்டரை கழுவுவது போன்ற வேலைகளை ஆணும் பெண்ணும் பகிர்ந்து செய்ய விரும்பினால் பரவாயில்லை. ஆனால், மாவு அரைப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பெரும்பாலான ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் இது பெண்களுக்கு கூடுதல் சுமையாகிறது.
வீட்டம்மா பணிக்கு செல்பவராக இருந்தால், வார இறுதியில் ஓய்வெடுக்கலாம், கடையில் மாவு வாங்கலாம் என்று சொன்னாலும், ஞாயிற்றுக்கிழமை ஒரு வாரத்துக்கான மாவை கிரைண்டரில் அரைத்து முடிப்பேன் என்று செய்வார். கோதுமை, கேழ்வரகு போன்றவற்றை வாங்கி, காயவைத்து, அரைத்து வரச் சொல்வார். பணிகளை இணைந்து செய்வோம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.
இது மட்டுமே ஆரோக்கியம் என்று ஒருபோதும் ஏற்க மாட்டேன். கடை மாவை விட தரத்தில் சிறப்பாக இருக்கலாம் என்றாலும், அதற்கான உழைப்பும் நேரமும் பார்க்கும்போது இது அவசியமில்லை என்று தோன்றுகிறது.
முன்பு போல வீட்டு வேலைகள் மட்டுமே செய்யும் பெண்கள் இல்லாத நிலையில், பணிக்கு சென்று வரும் சூழலையும் பார்த்த பிறகும் பழைய கதைகளை பேசுவது சரியல்ல.
இதையெல்லாம் தாண்டி, இட்லி, தோசை, சோறு போன்றவற்றை குறைத்து, உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று உலகம் சென்று கொண்டிருக்கும்போது, இன்னும் புளிச்ச மாவு, விறகடுப்பு, அம்மி, ஆட்டுக்கல் என்று பேசுவது சிரமமாக இருக்கிறது.
பெண்கள் வேலை செய்யவில்லை என்று பேசுபவர்கள், தங்கள் உடல்நிலையை முதலில் பார்க்க வேண்டும். மாவு அரைக்க வேண்டுமெனில் அவர்களே கற்றுக்கொள்ளலாம். மனைவி உடல் எடை அதிகரித்ததாக வருத்தப்படும் ஆண்கள் பெரும்பாலும் சிறந்த உடலமைப்பு உள்ளவர்களாக இருப்பதில்லை.
ஒரு காலத்தில் பத்திரிகைகளில் பெரிய எழுத்தாளர்களாக பார்க்கப்பட்டவர்களின் பிம்பங்கள், சமூக ஊடகங்கள் வந்த பிறகு மாறிவிட்டது ஒரு பரிதாபமான விஷயம்.