படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
#WATCH | "இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் அமித்ஷா மட்டுமே.. இதுதான் அவர்களின் கணக்கு.." -ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் பேச்சு
#SunNews | #SukiSivam | #DMK | #BJP
@arivalayam உடன்பிறப்புகளே!!! என் பதிவுகள் எப்படி உள்ளது!
நன்றாக இருந்தால் RT 🔁பண்ணுங்க...
பிடித்திருந்தால் follow🚶🚶🚶 பண்ணுங்க.. கண்டிப்பா நானும் உங்களை follow செய்கிறேன்..!!
திருத்தம் தேவைப்பட்டால் Comment பண்ணுங்க.!! திருத்திக் கொள்கிறேன்..!!
தலைவருடன் கைகோர்த்து ஒன்றாக களமாடுவோம்..
@DMKITwing
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை தோற்கடிக்க முடிந்தது.
மதுரை மத்தியில் பிடிஆரை தோற்கடிக்க முடிந்தது.
ஏனைய 14 முக்கிய அமைச்சர்களையும் தவெக வேட்பாளர்கள் தோல்வியடைய செய்த நிலையில், இந்த 8 மாவட்டங்களில் மட்டும் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறவில்லையே...? ஏன்..?
அனைவருமே ஒப்புக்கொள்ளும் ஒரே உண்மை.....'எந்த தொகுதியின் வேட்பாளர்களின் வரலாறும், பெயரும் கூட' தவெக வாக்காளர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ரெண்டு விஷயம் மட்டுமே...ஒன்று, விஜய், இன்னொன்று விசில் சின்னம்.
எந்த தவெக வாக்காளனும் 'இந்த திமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும்' என திட்டம் போட்டு வாக்களித்திருக்க வாய்ப்பே இல்லை.
இப்படி இருக்கும்போது, ஸ்டாலின் உள்பட 14 அமைச்சர்களை சொல்லி வைத்தது போல் தோற்கடிக்கப்பட்டது எப்படி...?
இவர்களையே தோற்கடிக்க முடிந்த தவெக வாக்காளர்களுக்கு கீழே உள்ள 8 மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளிலும் எப்படி தோல்வியை சந்தித்தார்கள்...?
இது மிக முக்கியமான நெருடலாக இல்லையா...?
முதல்வர் உட்பட முக்கிய அமைச்சர்களையே தோற்க வைத்த தவெக இளைஞர்களின் செல்வாக்கு இந்த 8 மாவட்டங்கள் முழுவதுமே இல்லை என்றால் அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா...?
ஆக, மு.க.ஸ்டாலினும் ஏனைய முக்கிய அமைச்சர்களையும் திட்டம் போட்டு EVM இயந்திரத்தில் குளறுபடி செய்து தோற்கடிக்க வைத்துள்ளனர் என்பதை மறுக்க முடியுமா..?
ஒரு காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் நிறைந்த கால்வாய் முழு பலத்துடன் மீண்டும் குதித்துள்ளது.
பிச்சாவரம் கிராமத்தில் தமிழ்நாட்டின் காலநிலை தாங்கும் கிராமம் முயற்சியின் கீழ் எழுச்சியூட்டும் மாற்றம். 750 கிலோ பிளாஸ்டிக், புரோசோபிஸ் போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி, பிச்சாவரம் மறுநீரில் இயற்கையான நீர் பாய்ச்சலை மீட்டெடுக்க கரையை பலப்படுத்தியதன் மூலம் 3 கிலோமீட்டர் தூரம் அடைபட்ட கிராம கால்வாயை புதுப்பித்துள்ளோம்.
அதன் கரையோரங்களில், 3,000 சதுப்புநிலங்கள் 600 உள்ளூர் சமூக உறுப்பினர்கள் பங்கேற்புடன் நடப்பட்டுள்ளன, இதன் மூலம் ஒரு செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை மீண்டும் உருவாக்கி, கரையோர பின்னடைவை வலுப்படுத்துகிறது.
Dravidain Model ...
@mkstalin
#StalinWave2026
அந்த வீட்ட பார்த்தா தான் எனக்கு பொறாமையா இருக்கு..! இன்னைக்கு நாம எப்படி எப்படியோ வீடு கட்டிட்டு வந்துட்டோம் ஆனா அந்த மாதிரி வீட்டில் வாழ்ந்தது பசுமையாக நினைவில் உள்ளது.