எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.
நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, அண்ணாவின் லட்சியத்தையும், கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திமுக உதயசூரியன்
#VoteForDMK
சிலிண்டர் விலை உயர்வு மற்றும் நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் பிரதமர் மோடியின் கண்களுக்கு மக்கள் படும் வேதனை தெரிகிறதா? மக்களின் குரல் பிரதமர் காதுகளுக்கு கேட்கிறதா?
#EmptyCylinderModi
Tamil Nadu has connected 1.12 crore rural homes (90%) with tap water under #JalJeevanMission.
However, Rs.3,112 crore due to the State remains pending, even as Tamil Nadu has advanced Rs.2,550 crore from its own funds to sustain the works.
I have written to Hon’ble @PMOIndia urging the immediate release of the pending funds.
தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல!
இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரர் சிவா திலீபன் அவர்களையும், உடனிருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. @Thiruja2009 அவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சகோதரர் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எண்ணமும்,
“பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்” என்று மொழிப்போரின்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது.
இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!
தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம்!
எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் சிவா திலீபன் அவர்கள் நலம் பெற்றுத் திரும்ப அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
When the United States decides to allow India to purchase Russian oil for just 30 days, it raises a fundamental question. Why should India need another country’s approval to secure its own energy needs?
Equally troubling is the sinking of the unarmed Iranian warship IRIS Dena by the United States soon after it participated in the International Fleet Review 2026 naval exercise hosted by India in Visakhapatnam. When a ship that came to India as part of a multinational exercise meets such a fate, India cannot appear silent or passive.
The Union BJP Government looks totally compromised on India’s long standing tradition of strategic autonomy and an independent foreign policy. India’s dignity in the international arena needs to be protected and the nation’s sovereignty and interests need to be defended.
“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு @TThenarasu அவர்கள்!
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!
ஜூலை மாதம் #DravidianModel 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!
நமது #DravidianModel அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்…
#TNInterimBudget
தமிழ்நாட்டு மகளிருக்கு நான் கொடுத்த உறுதிமொழிதான் ‘மகளிர் உரிமைத் தொகை’. அதற்கு தடை போட நான் விடுவேனா? அதனால்தான் மக்களுக்கு Surprise கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு Shock கொடுத்தோம்.
இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஸ்டைல்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#ஸ்டாலின்_தொடரட்டும்
அடுத்த ரெண்டு மாசம் எந்தப் பக்கம் திரும்பினாலும் எந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சாலும் DMK BRAND தான் தெரியனும்!
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#ஸ்டாலின்_தொடரட்டும்