#நான்_சொன்னதற்கு#மட்டுமே_நான்_பொறுப்பு
திரிபும் புரிதலும் இன்றைய அரசியலின் அபாய முகம்
இன்றைய அரசியல் சூழலில் கருத்து சொல்லுவது ஒரு ஜனநாயக உரிமை அல்ல
அது ஒரு #ஆபத்தான_செயல் ஆக மாற்றப்பட்டிருக்கிறது.
ஒருவர் பேசினால், அவர் சொன்ன கருத்தின் அரசியல் சாரம் விவாதிக்கப்படுவதில்லை.
மாறாக, அவர் #சொல்லாததைச் #சொன்னதாகக்_காட்டும்_முயற்சியே முதன்மை விவாதமாகிறது.
இந்தச் சூழலில் தான் ஒரு எளிய, ஆனால் அடிப்படையான உண்மை மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட வேண்டியுள்ளது
நான் சொன்னதற்கு மட்டுமே நான் பொறுப்பு.
நீங்கள் புரிந்துகொண்டதற்கு அல்ல!”
தோழமை வட்டத்தில் உள்ளவர்கள் அவரவர்கள் கிராமத்திலிருந்து, அவர்களின் நட்பு வட்டத்தில் எழுகின்ற பிரச்சனைகளில் இருந்து அல்லது அவர்களுக்குள் எழுகின்ற காதல் போன்ற மென்மையான உணர்வுகளில் இருந்து அல்��து, அன்றாடம் நடைபெறும் பிரச்சனைகளில் இருந்து,சமூக தாக்கங்களிலிருந்து அல்லது அன்று பார்க்கின்ற திரைப��படங்களில் இருந்து,
அவர்கள் படிக்கின்ற புத்தகங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை அவர்கள் காட்சிகளாக அல்லது பதிவுகளாக சமூக ஊடகங்களில் பதிவிடும்போது
எதிர் நடவடிக்கை கொண்டவர்கள் அல்லது திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுவார்கள் அந்த பதிவுகள் தனக்கான கருதிக் கொள்கிறார்கள்
குறிப்பாக உலகத்தில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளும், இரட்டை அர்த்த காமெடிகளும் கூட அவர்களுக்கானதாக அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள்
எல்லா கெட்ட வார்த்தைகளும் உங்களுக்குச் சொந்தமா அல்லது திட்டமிட்டு ஒருவர் குறித்து அவதூருக்காக பொய் பரப்புரை செய்கிறீர்களா..?
அறிவார்ந்த சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதாரங்களுடன் யாரிடமும் வாதாட தயாராக இல்லை தற்காலிகமாக மின்னலாம் நியாயங்கள் என் பின்னால் அணிவகுகின்றன.
#கருத்தும்_திரிபும் – #அரசியல் #களத்தின்_புதிய_யு��்தி
அரசியலில் இன்று திரிபு என்பது விபத்து அல்ல.
அது திட்டமிட்ட யுக்தி.
ஒரு உரையிலிருந்து ஒரு வரி மட்டும் வெட்டி எடுக்கப்படுகிறது.
அந்த வரியிலிருந்து வசதிக்கேற்ற அர்த்தம் உருவாக்கப்படுகிறது.
பின்னர் அந்த அர்த்தத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு கட்டமைக்கப்படுகிறது.
இதன் மூலம் என்ன நடக்கிறது?
1உண்மையான அரசியல் விவாதம் மறைக்கப்படுகிறது
கருத்துச் சொல்பவன் தற்காப்பு நிலையில் தள்ளப்படுகிறான்
அதிகாரம் கேள்விக்குட்படாமல் தப்பிக்கிறது
இந்த அரசியல் சூழலில்,
சொல்லியவனை விட, புரிந்துகொண்டதாகக் கூறுபவனுக்கே அதிகாரம் அதி��ம்.
சொல்லுதல் – ஒரு எல்லை கொண்ட செயல்
ஒரு மனிதன் பேசும்போது,
அவன் தனது அனுபவம், அறிவு, சமூகப் பின்னணி, அரசியல் புரிதல்
என்ற எல்லைகளுக்குள் தான் பேசுகிறான்.
அவன் சொற்கள் தெளிவாக இருக்கலாம்.
அல்லது கடுமையாக இருக்கலாம்.
ஆனால் அவை — #அவனுடையவை.
அந்தச் சொற்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பது,
கேட்பவரின் அரசியல் நோக்கத்தைப் பொறுத்தது.
அதனால் தான்,
சொல்லுதல் பேசுபவனின் பொறுப்பு.
புரிதல் கேட்பவனின் அரசியல் பொறுப்பு.
இந்த வேறுபாட்டை ஏற்க மறுக்கும் அரசியல் தான்
கருத்துச் சுதந்திரத்தை அடக்குமுறையாக மாற்றுகிறது.
புரிதல் குறையும் இடத்தில் அடையாள அரசியல்
புரிதல் குறைந்த சமூகங்களில் தான்
அடையாளங்கள் கூர்மையடைக��ன்றன
நாம் – அவர்கள் என்ற பிரிவுகள் வலுப்பெறுகின்றன
மதம், ஜாதி, கட்சி ஆகியவை மனிதனை வரையறுக்கும் கருவிகளாக மாறுகின்றன
ஆனால் அரசியல் வரலாறு சொல்லும் உண்மை ஒன்று உண்டு:
புரிதல் முழுமையடைந்த இடத்தில்
அடையாளங்கள் வீழ்கின்றன.
அங்கே மனிதன்,
தான் விரும்பும் அர்த்தத்தைச் சொற்களில் திணிக்க மாட்டான்.
சொல்லப்பட்டதை அப்படியே ஏற்கத் தயாராக இருப்பான்.
கருத்துச் சுதந்திரம் உரிமை��ா? பொறுப்பா?
கருத்துச் சுதந்திரம் என்பது,
வசதிக்கேற்றுப் புரிந்துகொள்ளும் உரிமை அல்ல.
அது
முழுமையாகக் கேட்கும் பொறுப்பு
திரிக்காமல் புரிந்துகொள்ளும் அரசியல் நேர்மை
கருத்தை கருத்தாக எதிர்கொள்ளும் முதிர்ச்சி
இந்தப் பொறுப்பை ஏற்காத சமூகம்,
சிந்தனையாளர்களை உருவாக்காது
மௌனத்தையே உருவாக்கும்.
ஒரு கருத்தை நீங்கள் ஏற்காமல் இருக்கலாம்.
அதற்கு அரசியல் எதிர்வினை அளிக்கலாம்.
ஆனால் சொல்லாத அர்த்தத்தை திணித்து,
அதன் அடிப்படையில் ஒருவரை குற்றவாளியாக்குவது
ஜனநாயகம் அல்ல — அது அரசியல் அநியாயம்.
அதனால் தான் இன்றைய அரசியல் வெளியில்
இந்த வரி ஒரு தற்காப்பு அல்ல
ஒரு அறிவார்ந்த அறிவிப்பு
நான் சொன்னதற்கு மட்டுமே நான் பொறுப்பு.
நீங்கள் புரிந்துகொண்டதற்கு அல்ல!
தோழமையுடன்:-
வழக்கறிஞர் ஞானம் மு.அறிவுடைநம்பி
எதிர் நடவடிக்கைகளும்,
நியாயமில்லாத அதிருப்தியும்,
என்னை சீண்டும் சுடு சொற்களும்
என்னை ஒன்றும் செய்துவிடவில்லை.
அவர்கள் என் கொள்கைகளைத் தாக்குகிறார்களே தவிர
என்னைத் தாக்கவில்லை.
அவர்களை நான் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்.
ஏனெனில் எனக்கு
புரட்சியாளர் அம்பேத்கர்
மற்றும்
அண்ணன் திருமாவளவன்
கொடுத்த அரசியல் மருந்து இருக்கிறது.
நான் யாருடைய அபிப்பிராயமும் பெரிது என���று எண்ணி
என்னைத் தாழ்த்திக்கொண்டும்,
பிறர் கூறும் பாராட்டையும், புகழையும்,
அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து
என் பணியையும், கடமையையும் செய்ததில்லை.
அப்படி எதிர்பார்த்து பணி செய்வது
பிறரால் ஆட்டுவிக்கப்படும் பாதையில்
பயணிப்பதற்குச் சமம் என்பதை நான் அறிவேன்.
ஆகவே
புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் தத்துவமும்,
என் அண்ணன் திருமாவின் கொள்கையும் கோட்பாடுகளுமே
என்னை வழிநடத்துகின்றன.
என் எண்ணம் எதுவோ
அதுவே என் சூழ்நிலை.
அதற்குரிய குணநலன்களுடன்
நான் எமது போராட்டப் பாதையில் செல்கிறேன்.
சில தோழர்களை
நான் வேண்டுமென்றே எதிர்க்கிறேன் என
பிறர் நினைக்கக்கூடும்.
தோழர்களே,
உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக
என் நடைமுறையை மாற்றிக்கொள்ள முடியும்.
ஆனால் அப்ப��து
நான் உண்மையானவனாக இருக்கமாட்டேன்.
அதை நீங்கள் —
உண்மையை விரும்பும் சரியானவர்கள் —
விரும்பமாட்டீர்கள்.
சில சூழ்நிலைகள்
எனக்கு எதிராக இருக்கலாம்.
ஆனால் அவை நிரந்தரமல்ல.
இத்தகைய சூழ்நிலைகளை வெல்லும்
அறிவியலையும் அரசியலையும்
நான் என் அண்ணனிடமிருந்து
கற்றுக்கொண்டுள்ளேன் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
வெறும் விவாதங்களாலோ,
ஆதாரங்களை அடுக்கிக் காட்டுவதாலோ
இந்தச��� சூழ்நிலையை வெல்ல
இது சரியான நேரமல்ல.
ஏனெனில்
எதிரிகளும்,
சில நண்பர்களும் கூட
எந்த வாதத்தையும்
ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
அவர்கள் மனங்களில்
அறிவுக்கு முன்பே
ஒரு சுவர் எழுப்பி அமர்ந்துள்ளனர்.
இந்நிலையில்
அவர்களின் அங்கீகாரத்தைப் பெற முயல்வது
வீண்வேலையாகும்.
இருப்பினும்
தோழமை கூறுகளை செழுமைப்படுத்த
நான் தொடர்ந்தும் பாடாற்றுவேன்.
என் செயல்களின் நடைமுறையில்
தவறுகள் இருப்பின்
அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
ஏனெனில்—
“விமர்சனம் என்பது
அறிவின் உணர்ச்சி அல்ல;
உணர்ச்சியின் அறிவு.
அது ஒரு பெரிய ஆயுதம்.”
எப்போதும் நாம்
நுட்பமான, யதார்த்த நிலைமைகளை
ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும்.
அத்தகைய பரிசீலனைகளின் அடிப்படையில்
நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என
காரல் மார்க்ஸ்
கூறியிருக்கிறார்.
ஆகவே
என்னை செழுமைப்படுத்தும்
விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்வேன்.
தோழமையைப் போற்றுவேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…
தோழமையுடன்,
வழக்கறிஞர் மு. அறிவுடைநம்பி
மாவட்ட செயலாளர்
கடலூர் வடக்கு மாவட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
டாக்டர் எழுச்சித் தமிழர் @thirumaofficial ஆணைக்கிணங்க
கடலூரில் இன்று 31-10-2025 காலை 10 மணிக்கு கடலூர் வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும்
பஞ்சமி நில உரிமை மீட்பு
பேரணி-ஆர்ப்பாட்டத்திற்கு சிறுத்தைகள் அ��ைவரும் வருகை தரும்படி அன்புடன் அழைக்கின்றேன்.
டாக்டர் எழுச்சித் தமிழர் ஆணைக்கிணங்க
கடலூரில் நாளை 31-10-2025 காலை 10 மணிக்கு கடலூர் வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும்
பஞ்சமி நில உரிமை மீட்பு
பேரணி-ஆர்ப்பாட்டத்திற்கு மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர், முகாம் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முன்னணி தோழர்கள், முன்னாள் பொறுப்பாளர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியின் மூத்த முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் வருகை தரும்படி அன்புடன் அழைக்கின்றேன்.
தங்க மங்கை கார்த்திகா அவர்களுக்கும், தங்க மகன் அபின��ஷ் அவர்களுக்கும் ஊக்கத்தொகை அறிவிப்பதில் அரசுக்கு ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை.
குறிப்பு:- செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் அவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக 5 கோடி ரூபாய் அறிவித்தது
@CMOTamilnadu @Udhaystalin
இதே கபடிக்காக பூஜா நார்வால் என்ற வீராங்கனைக்கு அம்மாநிலத்தின் அரசு 3 கோடி ரூபாய் ஊக்க பரிசு அளித்துள்ளது.
இத்தனைக்கும் ஹரியானாவை ஆள்வது பாஜக. ஆனால் சமூகநீதி மண் என்று கூறிக் கொள்கின்ற நமது தமிழ்நாட்டில்,
சமூக மாற்றத்தின் குரலாக
இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் திகழ்கிறார்...
சாதியச் சிக்கல்களை தீர்ப்பதற்கு மிகப்பெரிய மக்கள் தொடர்பு சாதனமான திரைத்துறையின் ஊடாக — சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, பாலின வேறுபாடு, மண்ணுரிமை, பூர்வகுடிகளின் வரலாறு போன்ற பிரச்சனைகள் குறித்தெல்லாம் ஒரு பெரும் விவாதத்தை உருவாக்கி, திரைத்துறையில் அடுத்த கட்ட முற்போக்கான வளர்ச்சியை நோக்கி எடுத்துச் சென்றவர் அறிவுகுடி இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களே.
ரஞ்சித்திற்கு முன்பாக திரைத்துறையில் முற்போக்கு பேசியவர்கள் பெரும்பாலும் காந்திய சிந்தனையுடையவர்கள். ஆகவே அவர்கள் காந்தியம் பற்றியே பேசினர்; அதுவே அவர்களின் வரம்பாக இருந்தது.
ஆனால், இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் — “நான் மட்டும் இல்லாமல், என்னால் இன்னொருவரும் உருவாக வேண்டும்; அதன் மூலம் பலரும் உருவாக வேண்டும்; இந்த சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும்” என்ற ஆழமான புரிதலோடு வாழ்பவர்.
தன்னுடைய திறமை, உழைப்பு, சம்பாதித்த அனைத்தையும் சமூக சமத்துவத்திற்காக அர்ப்பணித்து வருகிறார். ஒரு திரைப்பட இயக்குநராக ���ருந்தாலும், அவ்வப்போது மக்களுக்கான போராட்டக் களத்திலும், பண்பாட்டு தளத்திலும், சாதி ஒழிப்பு களத்திலும் உறுதியுடன் நிற்பவர் ரஞ்சித் அவர்கள் மட்டுமே.
சாதி இந்துக்கள் மற்றும் சாதி வெறியர்களின் கைக்கூலிகளும் சிலர் வேண்டுமென்றே விடுதலைச் சிறுத்தைகளோடு இயக்குனர் ரஞ்சித்தின் உறவை குலைக்க பல முரண்களை உருவாக்குகின்றனர். இருந்தாலும், டாக்டர் எழுச்சித் தமிழர் அவர்களின் மீது ரஞ்சித் அவர்கள் வெளிப்படுத்தும் அன்பு தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
ஒரு பேட்டியில் கூட, “அரசியல் களத்தில் எங்களுக்கான தலைவர் அண்ணன் திருமாவளவன் தான்; அவர் பின்னால் நாங்கள் இருப்போம்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார். ஆகவே, ரஞ்சித் போன்ற சமூகப் பொறுப்புள்ள நபர்களை நாம் கொண்டாடவில்லை என்றாலும், அவரின் செயல்களை பாராட்டுவது நமது கடமை.
பாராட்டுக்கு பஞ்சமான இந்த சமூகத்தில் நல்லவர்களை பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்துவதில் நாம் முன்னிலையாக வேண்டும்.
இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் அவருக்குத் தெரிந்த மொழியில் ஒரு பிரச்சனையை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லி, சமூக சமத்துவத்திற்கும் மனித மன மாற்றத்திற்கும் உரையாடல்களை நிகழ்த்தி வருகிறார் — இது மிகவும் பாராட்டத்தக்கது. அவருக்கு வாழ்த்துக்கள்.
ஆனாலும், ரஞ்சித்தை மறந்து மாரி செல்வராஜை மட்டுமே பாராட்டுவது — பிரித்தாலும் சூழ்ச்சி எனலாம்.
ஓர் ஊடகவியலாளர் கேள்விக்கு, டாக்டர் எழுச்சித் தமிழர் அவர்கள் இப்படிப் பதிலளித்திருப்பார்:
> “ரஞ்சித் அவர்களும், மாரி செல்வராஜ் அவர்களும் எனது இரு கண்கள்.”
ஒரு தந்தையிடம் எந்த பிள்ளை பிடிக்கும் என்று கேட்டால், அவர் “இர���்டு பிள்ளைகளும் எனக்கு பிடிக்கும்” என்று சொல்வார். அதுபோலவே தலைவரும் கூறியிருப்பார். ஆகவே, சமூகத்தை நேசிப்பதில் தலைவரை போல நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள், மாரி செல்வராஜ் அவர்களைப் போல இன்னும் பலரை உருவாக்க வேண்டும்.
இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அதேபோல் சமூக நல்லிணக்கத்திற்கான உரையாடலை நிகழ்த்தி, பைசன் திரைப்படத்தை பாடத்தை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இவண்:
வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி
கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மற்றவர்களிடம் நம்மை நிரூபிக்கும் தேவையை விடுவிப்பது மன முதிர்ச்சியின் ஒரு பகுதியாகும். அதற்குப் பதிலாக, நமது செயல்களின் மீது கவனம் செலுத்தி, மன அமைதியுடன் வாழ்வதே சிறந்தது,
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை நாமது சிந்தனையில் இருந்து அகற்ற வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர், அண்ணன் தி.வேல்முருகன் அவர்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் இன்று தமிழக முதல்வர் தளபதி மு. க.ஸ்டாலின் அவர்கள் பண்ருட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவிட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் பெரும் மகிழ்ச்சி, நன்றி...
மாணவி: சார், தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?
ஆசிரியர்: எதற்காக கேட்கிறாய்?
மாணவி: தமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.
ஆசிரியர்: அதனால் என்ன?
மாணவி: இப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?
ஆசிரியர்: கிர��ஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள்.
இஸ்லாமியர்கள் மிலாடி நபி கொண்டாடுகிறார்கள். அதைப் போலத்தான் இதுவும்.
மாணவி: தமிழர்களின் பண்டிகைப் பற்றிப் பேசும்போது நீங்கள் மற்ற மதத்தின் பண்டிகைகள் பற்றி பேசுறீங்களே?!
அப்படினா தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்பது தெளிவாகிறது. அது இந்துமத பண்டிகை என்று புரிகிறது.
ஆசிரியர்: 🥺
மாணவி: சரி, கிறிஸ்துமஸ் கிறிஸ்து பிறந்த நாள், மிலாட��� நபி
முகமதுநபி பிறந்தநாள். தீபாவளி யாருடைய பிறந்த நாள் சார்?
ஆசிரியர்: தீபாவளி - நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்.
மாணவி: 🤔 மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத் தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது இந்துமதம் மட்டும் நரகாசுரனின் இறந்த தினத்தை ஏன் இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுகிறது?
ஆசிரியர்: நரகாசுரன் என்கிற கருப்பான பயங்கரமான அசுரன், பார்ப்*பனர்கள் யாகம் செய்யவிடாமல் தடுத்தான். அதனால் பார்ப்பனர்களும் தேவர்களும், பகவானிடம் சென்று முறையிடவே கிருஷ்ண அவதாரம் எடுத்து நரகாசுரனை கொன்றாராம்.
மாணவி: இந்தக்கதையில் பார்ப்*பனர்கள் என்பது யாரென்று புரிகிறது சார். பார்*ப்பனர்கள் இன்றும் கூட இருக்கிறார்கள். அப்படியானால் அந்த அசுரர்கள் யார்? எங்கு இருக்கிறார்கள்?
ஆசிரியர்: புராணங்களில் வரும் வருணனைகளை வைத்துப் பார்த்தால் பெரும்பாலான அசுரர்கள் என்பவர்கள் தமிழர்கள் தான்.
மாணவி: அப்படியானால் தீபாவளி பார்ப்*பனர்களின் வெற்றி விழா. தமிழர்களை வீழ்த்திய நாள் 😾😾
ஆசிரியர்: 🥺
மாணவி: பார்*ப்பனர்களுக்கு ஆதரவாக தமிழர்களை அழித்தக் கடவுள் எப்படி தமிழர்களுக்கு கடவுளாவார்?
பிராம*ணர்கள் தங்களைக் காத்த அந்தப் பிரா*மணக் கடவுளை நினைத்து பெருமையுடன் தீபாவளி கொண்டாடலாம்.
ஆனால் தமிழர்களான நாம் நம் தன்மானத்தை இழந்து எப்படி தீபாவளியை கொண்டாட முடியும்? இது நமக்கு அவமானம் இல்லையா!
ஆசிரியர்: 🥺
மாணவி: நரகாசுரனின் பிறந்த நாளை அல்லவா தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடவேண்டும்.
ஆசிரியர்: நரகாசுரனின் பிறந்த நாள் தான் தெரியாதே?!
மாணவி: நரகாசுரன் இறந்த நாளைக் கண்டுபிடித்த ஆரியப் வைதீக மதத்திற்கு அவரின் பிறந்த நாள் தெரியாதா? இது அயோக்கியத்தனமில்லையா?
தமிழ் அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் ஏன் இதுபற்றி ஒருபோதும் பேசியதில்லை? ஏன் சார் ?
ஆசிரியர்: 🥺 உனக்கு ஏம்மா இவ்ளோ கோவம்?
மாணவி: இனிவரும் தலைமுறைக்காவது சரியான விளக்கத்தைச் சொல்லி இனமானமிக்க தமிழர்களை உருவாக்க வேண்டும் சார்!
ஆசிரியர்: நீ சொல்வது சரி தான் மா.🥺🥺🤔
"கடைசி மனிதனுக்கும் சனநாயகம்!
எளிய மக்களுக்கும் அதிகாரம்!
ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி " -
@thirumaofficial
விஜய் "அரசியல் எதிரி" என்று யாரை நேரடியாக அறிவித்தாரோ,
அவர்களே விஜயை நேரடி��ாக எதிர்க்க வேண்டும்.
வாடைக்கு வாய் தேட கூடாது!
@actorvijay @thirumaofficial