உறைந்த சாதியமும் அதை உருக விடாத சுப. வீரபாண்டியன்களும்:
பேராசிரியர் ச��ப.வீரபாண்டியன் அவர்கள் கருஞ்சட்டைத் தமிழர் இணைய இதழில் இன்று எழுதியுள்ள குறும் கட்டுரையில், த.வெ.க பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்கும் பிரதிநி��்துவத்தை பாஜக வழங்கியிருக்கும் பிரதிநித்துவத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். “இவற்றை நாமும் பாராட்டுகிறோம்” என்று ஒரு வரியில் குறிப்பிட்டுவிட்டு, அந்த மாற்றத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதங்கமும் அதில் வெளிப்படுகிறது.
நீதிக்கட்சி காலத்திலிருந்தே, வெள்ளாளர் மற்றும் இடைநிலைச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோ���். அதன் நீட்சியாகத்தான் திமுகவையும் விமர்சிக்கிறோம். திமுக என்பது ஒரு தேர்தல் அரசியல் அதிகாரம். நம் விமர்சனத்தை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாதது போல தோன்றினாலும், அந்த விமர்சனங்கள் அவர்களது அரசியலில் தாக்கம் ஏற்படுத்தாமல் போவதில்லை. குறிப்பாக இந்தத் தேர்தலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், பழைய திமுக அரசியலுக்கு ஒரு முக்கியமான படிப்பினையாக அமைந்துள்ளன. பழைய குறுநில மன்ன���் அரசியலைத் தாண்டி, பிரதிநித்துவ அரசியலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உருவாகியுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டின் OBC அரசியலை சமூகநீதி அரசியலாக முன்வைத்து வந்த பல முற்போக்கு வட்டாரங்கள், அந்த அரசியலின் எல்லைகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் தற்போதைய த.வெ.க பிரதிநித்துவத்தை கூட, நேரடியாக எதிர்கொள்ளாமல் பாஜக அரசியலோடு ஒப்பிட்டு பேச வேண்டிய நிலை உருவாகிறது.
சுப.வீரபாண்டியன் அவர்களிடம் சில கேள்விகள்:
பிரபஞ்ச அளவில் ஒப்பிட்டுப் பார்த்தாலும், “எங்கள் சமூகநீதியே சிறந்த சமூகநீதி” என்று நம்பும் திமுக, ஏன் இதுவரை இப்படியான பிரதிநித்துவத்தை சாத்தியப்படுத்தவில்லை?
தேசிய காங்கிரஸ் கட்சி, அகில இந்திய தலைவராக ஒரு தலித்தை தேர்வு செய்து அவருக்கு உரிய அதிகாரத்தையும் வழங்கியிருக்கிறது. ஆனால், திராவிட இயக்க அரசியலில் தலித்துகள் தலைமை நிலைக்கு வருவது ஏன் இன்னமும் சாத்தியப்படவேயில்லை?
தேசிய காங்கிரஸ் தன் குடும்பத்திற்கு வெளியிலிருந்து பல பிரதமர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் குடும்பத்திற்கு வந்த அதிகாரம், ஏன் அங்கேயே தேக்கம் கண்டிருக்கிறது?
அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்கள் உட்பட ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மட்டுமே துணை முதல்வராக முடிகிறது. இது எந்த வகையான ஜனநாயக மாதிரி?
கருணாநிதி மாவட்ட அளவில் தலித்துகளுக்கு துணைப் ���ொதுச்செயலாளர் பதவியை வழங்கும் திருத்தத்தை கொண்டு வந்தார். ஆனால் அந்த அமைப்பிலிருந்து, துரைமுருகன், பொன்முடி, MRK பன்னீர்செல்வம், ஐ. பெரியசாமி, எ.வ.வேலு, கே. என்.நேரு, ஆவுடையப்பன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, கதிர் ஆனந்த், கௌதம சிகாமணி, த.மோ அன்பரசன், பெரியகருப்பன் , RD சேகர், சேகர் பாபு போன்ற மாநிலம் முழுக்க அறியப்பட்ட ஆளுமைகள் உருவானது போல, எத்தனை ஆளுமைமிக்க வட்டார தலித் தலைவர்கள் உ��ுவாகியிருக்கிறார்கள்?
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பங்காக இருக்கும் பட்டியலின மக்களிலிருந்து, 72 மாவட்ட செயலாளர்களில் பத்து பேரைக் கூட திமுக தொடர்ந்து உருவாக்க முடியவில்லையென்றால், இந்தக் கட்சியின் சமூகநீதி அரசியல் யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இது போன்ற ஏராளமான கேள்விகளை வரலாற்றின் பல பக்கங்களில் இருந்து முன்வைக்க முடியும். அவற்றை ஆரோக்கியமான விமர்சனமாக எடுத்துக்கொண்டு, ஆதிக்கச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்தை உடைத்து, புதிய மாற்றங்களை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கிறது.
பாஜகவை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி எல்லா விமர்சனங்களையும் திசைதிருப்பும் அரசியல் நீண்ட காலம் நீடிக்காது. நேர்மையான விமர்சனங்களையும், புதிய தலைமுறையின் பிரதிநித்துவக் கோரிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய காலம் இது.
முன்முடிவுகளற்ற ஒரு புதிய பிரதிநித்துவ அரசியல் உருவாகத் தொடங்கியுள்ளது. அதுவும் இத்தனை ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களின் விளைவே. அந்த மாற்றங்களை வளர்த்தெடுக்க வேண்டும். முற்போக்கு அரசியலுக்குள்ளேயே உறைந்து கிடக்கும் சாதி மனநிலைகளை, புதிய தலைமுறை உருவாக்கும் மாற்றங்கள் கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கின்றன.
பாரதிய ஜனதா என்கிற ஒரு வார்த்தையை நீக்கி விட்டால், உங்கள் கட்டுரை ஆதிக்கச் சாதியின் குமுறல் மட்டுமே, அதன் பொருட்டே இந்த ஒப்பீடு உங்களுக்கு தோன்றுகிறது என்பதை லட்சக்கணக்கான தலித் இளைஞர்கள் அறிவர். அவர்களது நம்பிக்கையை பெற முன்முடிவுகளற்று பேசும் நேர்மையை பெறுங்கள்.
Testimonies of Dalits contribution to the history of education.
#Intelectualhistoryofdalits#dalit_education
How Scheduled Castes in Tirunelveli empowered themselves by establishing schools - https://t.co/p9gpkDizFy
“வெகுஜன இதழ்கள் நமக்காக சில பத்திகளை மட்டுமே ஒதுக்குவார்கள், நம் பிரச்சினைகளை நாம் விரிவாக பேச நமக்கான பத்திரிக்கை வேண்டும்”
இதைச் சொல்லித்தான் பாபசாகேப் தொடர்ந்து இதழ் நடத்தினார். அதில் ஒரு இதழ் 'பஹிஷ்கிரித் பாரத்'
தமிழில் முதல் முறையாக நீலம் வெளியிடுகிறது❤️
மொழிபெயர்ப்பு: சிவசங்கர் எஸ்.ஜே
புத்தகம் வாங்க 1000 ரூபாய் கொடுங்கள்
தமிழ்நாடு அரசின��� புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின்கீழ் பயன்பெறும் கல்லூரி மாணவர்கள் சென்னைப் புத்தகக் காட்சியில் தாம் விரும்பும் நூல்களை வாங்குவதற்கு தலா 1000 ரூபாய் மதி��்பிலான டோக்கனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். சென்னைப் புத்தகக் காட்சியில் வாங்க முடியாதவர்கள் தமது மாவட்டங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் வாங்கிக்கொள்ள அனுமதிக்கலாம்.
தமிழ்நாட்டின் இளைய தலைமுறையை அறிவுத் தலைமுறையாக உருவாக்குவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கையை���் பரிசீலிக்க வேண்டும்.
அரசாங்கம் வழங்கும் டோக்கனில் புத்தகம் வாங்குவோருக்கு 25% கழிவு தருமாறு பதிப்பாளர்களையும் அறிவுறுத்தலாம்.
- ரவிக்குமார்
Removal of the Derogatory Designation “Colony”
===
Thanks to the Hon’ble Chief Minister @CMOTamilnadu for upholding the spirit of the Constitution of India.
Earlier, the word colony was associated with colonial rule and was used in a derogatory sense to describe the alleged policy of exploiting backward or weaker peoples by a dominant power. After independence, the word came to be used to identify the habitation of Dalits, indirectly marking these settlements as those of an enslaved people.
For a long time, the VCK has been raising its voice demanding the removal of derogatory designations that demean the settlements of Scheduled Castes from revenue records.
Our leader, @thirumaofficial, urged the Hon’ble Chief Minister on this matter. I also wrote a letter 06.08.2021 to the Chief Minister requesting the same. VCK MLAs Sinthanai Selvan and Panaiyur Babu spoke insistently about this demand in the Legislative Assembly.
The Madras High Court had also delivered a verdict on this issue as early as 2018.
Article 17 of the Constitution declares that untouchability is abolished and that any practice of it is a punishable offence. However, despite this constitutional guarantee, untouchability continues to manifest in government documents and procedures. One such manifestation is the use of terms like colony and cheri to describe Scheduled Caste settlements—terms that inherently denigrate these communities. Such identification is a violation of Article 17 and constitutes a punishable offence. The government must reflect on the injustice of continuing such practices.
Accepting the long-standing demand of the VCK, the Hon’ble Chief Minister has now announced that the word colony will be removed. This is a significant step, but it should not stop here. The Government Order No. 1531 dated 03.10.1978, issued during the centenary celebrations of Thanthai Periyar, must be fully implemented.
I also urge the Tamil Nadu government to fulfill the VCK’s demand that the derogatory use of the ending ‘n’ in the names of Scheduled Castes be replaced with ‘r’, in accordance with constitutional values.
•Ravikumar, MP
‘எங்களை கொன்று விடுங்கள்’ என்பது, மனசாட்சியுள்ளவர்களை நிலை குலைய வைக்கும் வார்த்தைகள். அதை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
வேங்கைவயல் அநீதியை, ஜனநாயகத்தில் உண்மையான நம்பிக்கை உள்ளவர்களோடு சேர்ந்து, எதிர்த்து நாம் வென்றெடுக்க ��ேண்டும்!
சகோதரர் இரா.சரவணன் அவர்களுக்கு நன்றி.
சென்னை புத்தகக் காட்சியில் புதிதாக வெளிவந்துள்ள டாக்டர். அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் வாசகர்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.
https://t.co/ukwyZNnCIQ
Get Unlimited Access to All Vikatan magazine worth ₹250 for FREE. Install Vikatan APP https://t.co/nH1f8iqPqp