அந்த கை என்னை பிடித்து இழுத்தது
இந்த இயக்கத்திலேயே தொடர்வதற்கான காரணம்
என்னால் நம்ப முடியவில்லை இன்று வரையில்
நான் அடிப்படையில் Masters in General Medicine படித்து ஒரு தனியார் மருத்துவமனையில் Consultant Physician ஆக வேலை செய்து வருகிறேன்
இன்று மாற்றுக் கூட்டணியில் இணைந்திருக்கும்
IUML உள்ளிட்ட
சிறுபான்மை சமூகத்தினருக்கான இயக்கங்களில் கல்லூரி காலங்களிலிருந்து செயற்பாட்டாளராக களமாடி இருக்கிறேன்
தலைவர் கலந்து கொள்ளும் இப்தார் விழாவில் தலைவர் மேடையில் இருக்கும் போதே பேசி பாராட்டை பெற்றிருக்கிறேன்
அரசியல் இயக்கத்தில் சேர வேண்டும் என நினைத்து எனக்கான சரியான இயக்கமாக திமுக தான் இருக்கும் என நம்பி என்னை இணைத்துக் கொண்டேன்
(இது ஒரு மாபெரும் கடல்)
என்னால் என்ன செய்ய முடியும் என தெரிந்து எனக்கு செய்தி தொடர்பு துணை செயலாளர் பொறுப்பை தலைவர் வழங்கினார்
அந்த வேலையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்துக் கொண்டே இருந்தேன்.
ஒரு முழு நேர மருத்துவராகவும் அதே நேரத்தில் செய்தி தொடர்பாளராகவும் என் கடமைகளை செய்துக் கொண்டே இருந்தேன் .அது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை.
நேரம் கிடைக்கும் போது அறிவாலயம் போவேன். அப்படி போகும் போது by luck தலைவர் அங்கு வந்திருந்தால் காத்திருந்து தலைவர் கிளம்பும் போது இருப்பவர்கள் மத்தியில் நானும் நின்று வணக்கம் வைத்து வழியனுப்புவேன்
கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு களத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
தொகுதி பொறுப்பாளராக களமாடினேன்
தொடர் கூட்டங்கள் பயணங்கள்
சேலத்தில் ஒரு கூட்டம் அப்போது பயங்கர வலி
நொண்டி நடந்ததை பார்த்து
DR Tarun IT wing PRESCRIBE செய்தார். கூட்டம் முடித்துவிட்டு வரும் வழியில் கால் வீக்கம்
வீட்டில் யாருக்கும் சொல்லாமல் இரயில் நிலையத்திலிருந்து நேராக மருத்துவமனை சென்றேன் - cellulitis வந்திருந்நது அவசரமாக
Cellulitis infection க்கான அவசர PROCEDURE செய்தார்கள்(இது வரை இந்த விவகாரத்தை கட்சியில் நான் யாருக்கும் சொன்னதில்லை)
PROCEDURE நடந்து முடிந்து தான் என் வீட்டுக்கே தகவல் சொன்னேன்.
அது வரை நான் வேலை செய்யும் மருத்துவமனை என்பதால் ஒரு team முழுமையாக பார்த்துக்கொண்டது .
When health is gone somwthimg is gone எனும் பழமொழி தலைல ஓட்டிக்கிட்டு இருந்தது
ஒரு சோர்வுடன்
வடிவேலு modulation ல
"இவன் இதுக்கு (politics)சரிபட்டு வரமாட்டான்" என சொல்லியது என் MIND VOICE.
இங்கே ரெண்டே பேருக்கு மத்தில போட்டியே
ஒன்னு உருப்படியாக டாக்டர் வேலையா?
இல்லை முழு நேர அரசியலா?
முடிவு எடுத்துவிட வேண்டும்
இந்த இயக்கம் ஒரு மாபெரும் கடல்
அதில்
Hafeez எனும் ஒரு செய்தி தொடர்பாளர் நான்,அவ்வளவே.
ஆனால் ஒரு டாக்டராக என் பொறுப்பு அதை விட பெரிது
மனதிலே குழப்பங்கள்
ஒரு மூன்று நாள் கழித்து தான் zoom காலில் தலைவர் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அப்போது என் பொறுப்பில் இருக்கும் தொகுதியை பற்றி விவரிக்க சொல்லி முதல் முதலில் என் பெயரை குறிப்பிட்டதை என் காதால் கேட்டேன்
"வாணியம்பாடி Hafeezullah"
என்றார்
தொடரும்.....
Pic was taken some time in june 2025
நக்கீரனின் 'யுத்தம்'
....................
மு.தமிமுன் அன்சாரி MLA
....................
சமீபத்தில் நக்கீரன் அலுவலகத்திற்கு பேட்டிக்காக சென்றிருந்தேன்.
ஆசிரியர் அண்ணன் கோபால் அவர்கள், அந்த அரங்கிற்கு வருகை தந்து எனது வெற்றிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.
அப்போது அவர் அங்கு இருப்பார் என்று எனக்கு தெரியாது.
அப்போது தனது புகழ்பெற்ற யுத்தம் என்ற நூலை வழங்கினார். ஏற்கனவே நக்கீரனில் அது தொடராக வந்த போது நான் வாசித்திருக்கிறேன்.
2011-ஆம் ஆண்டு நான் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட காலத்திலிருந்து அண்ணன் அவர்கள் பழக்கம் அப்போது நக்கீரன் பத்திரிக்கையின் தலைமையகம் அங்கு தான் இருந்தது.
அவ்வப்போது சந்திப்பதும், உரையாடுவதும் தொடர்கிறது
அன்றைய சந்திப்பில் சுமார் 45 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
அதில் பெரும்பாலும் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் குறித்து தான் அதிகமாக பேசினோம்.
வலம்புரிஜான் அவர்கள் பல அரசியல் தலைவர்களுக்கு வகுப்பெடுத்தவர். வழிகாட்டியவர்.
பலர் உரையாற்றுவதற்கு குறிப்புகளை கொடுத்தவர்.
சிறந்த பேச்சாளராகவும், மிகச் சிறந்த எழுத்தாளராகவும் அறியப்பட்ட அவர், சிறந்த நாடாளுமன்ற வாதியாகவும் திகழ்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது.
பன்முக ஆளுமைக்கு சொந்தக்காரரான வலம்புரி ஜான் அவர்களின் பேச்சுக்கும், எழுத்துக்கும் தனி ரசிகர் கூட்டமே இருந்தது.
அரசியலையும் கடந்து அவரது தமிழை எல்லோரும் ரசித்து மகிழ்வார்கள்.
அப்படிப்பட்ட ரசிகர்களில் நானும் ஒருவன்.
அவரது புத்தகங்களை படிக்க தொடங்கினால் கடைசி பக்கம் வரை ஓய்வின்றி படிக்க தூண்டும் வகையில் அவரது எழுத்துகள் இருக்கும்.
நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபால் அவர்களை, அவர்தான் முதன் முதலில் தாய் பத்திரிக்கையில் பயன்படுத்தினார்.
அந்த வகையில் அண்ணன் கோபால் அவர்கள் இன்று வரை அவர் மீது பற்றும், பாசமும் வைத்திருக்கிறார்.
எங்களுடைய இந்த சந்திப்பிலும் கூட வலம்புரி ஜானின் அறிவையும், தமிழையும் தான் புகழ்ந்து பேசினோம்.
பொதுவாக தமிழின பற்றாளர்கள் பலரையும், ஊக்கப்படுத்துவதிலும், வளர்த்து விடுவதிலும் அண்ணன் கோபாலுக்கு அலாதியான ஆர்வம் உண்டு.
அந்த வகையில்தான் என்னைப் போன்ற இளம் அரசியலாளர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
நக்கீரனின் ஊடக சேவையும், ஆசிரியர் அண்ணன் கோபால் அவர்களின் பண்புகளும் ஒரு சேர வெற்றிகரமாக தொடர்கிறது.
அண்ணணின் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி!
பிரிட்டனின் மதிப்புமிக்க 'ராயல் சொசைட்டி' (Royal Society) அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி திருமதி. செளமியா @doctorsoumya சுவாமிநாதன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்!
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam
#Sowmiyaswaminathan #Scientist #BirtainRoyalSociety
யாருடைய சதி ? எச்சரிக்கையாக இருப்போம்.
திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.
கண்டிப்பாக இது தவெகவின் வேலை மட்டுமல்ல.
சட்டமன்றத்தில் உதயநிதி பேசியதைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும் தோல்விக்குப் பிறகான அரசியலுக்கு திமுக தயாராகி விட்டதென்று.
இதற்கான எதிர்வினை தான் தோழமைக்கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதென்பது. திமுக மீண்டுவரக்கூடாது. மக்கள் மத்தியில் விஜய் தடுமாறுவது போன்ற செய்தி போகக்கூடாது என்பது தான் திட்டம். இது ஒரு பெர்ஷப்சன் வார் (perception war). நிஜத்தை விட தோற்றங்கள் தான் சக்தி மிக்கவை. பங்கு சந்தை போல, யார் மேலே, யார் கீழே என்கிற விளையாட்டு காட்சிப்பொருளாக நடக்கிறது.
இப்போதாவது தமிழக மக்கள் புரிந்துகொள்ளவேண்டியது, இங்கு நடப்பது நீங்கள் வாக்களித்தது போல, பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சட்ட ஒழுங்குப் பிரச்சனை அல்ல. அது வெறும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கற்கள்.
இங்கு நடப்பது திராவிட மாடல் போன்ற ஆட்சியை திமுகவை அகற்றிவிட்டு, தவெக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தொடர்வது என்பதே. அதனால் தான் விஜய், எடப்பாடியைச் சந்திக்கவில்லை. ஆனால் அதிமுக பிரிவினரைச் சந்தித்தது, திமுகவின் தோழமைக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கவே.
இதை யார் செய்கிறார்கள்?
கண்டிப்பாகத் திமுக எனும் கட்சியை எதற்கோ தடையாகப் பார்க்கிற சக்திகள் தான் இந்த கண்ணுக்குத் தெரியாத காய் நகர்த்தலைச் செய்கின்றனர்.
கண்டிப்பாக இவர்களுக்கு திமுக குடும்ப ஆட்சி, பண்ணையார் கட்சி, சில ஜாதிகளே அந்தக் கட்சியை வழிநடத்துகின்றன என்பதல்ல பிரச்சனை.
திமுக எதையோ ஒன்றை அல்லது ஒரு தொகுப்பை உறுதியாகக் கடந்த ஐந்தாண்டுகளில் செய்திருக்கிறது. அது இந்த ஆளும் வர்க்கத்திற்கும், இந்தி, இந்து, இந்தியாவிற்கும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.
இந்தச் சதியில் காங்கிரசும் உடந்தை என்பது, கேரளாவில் அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றி நிரூபித்திருக்கிறது. ஏனெனில் திமுக அணியின் தோல்வியை சீட்டுப் பேரச் சிக்கல் மூலம் தொடங்கி வைத்தது காங்கிரஸ் தான். அவர்கள் தவெகவுடன் போகாமல் திமுக அணியை மூழ்கடித்தது வெளிப்படை.
சோஷியல் எஞ்சினியரிங் அரசியலை பாஜக பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் - பட்டியலின மக்கள் வெளியேற்றம், கவுண்டர்கள் - வன்னியர்கள் ஒருங்கிணைப்பு, சசிகலாவை சிறையிலடைத்தது, பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, அதிமுக அழிப்பு - என பல கட்டங்களில் செய்தது.
அதன் ஒரு அங்கமாக, தோழர் திருமா அவர்களை திமுக அணியிலிருந்து பிரித்தெடுக்க பல முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருந்தன. அந்த முயற்சியை எதிர்கொள்வதில் தோழர் கடும் நெருக்கடிக்கு உள்ளானார் என்பதை நாம் பார்த்தபடி தான் இருக்கிறோம்.
திமுகவுடன் உறவைத் தொடர்வதற்காக திருமா கடும் எதிர்ப்பை அவரது ஆகரவாளர்களிடம் இருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்ததையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம். எட்டு சீட்டுகளைப் பெற்றதற்கே அவர் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார் (ஆறிலிருந்து எட்டு என்பது வளர்ச்சி தான்; ஆனால் அது பெரும் குற்றமாகச் சித்தரிக்கப்பட்டது; அதற்கு முன்பு தான் நான்கு உறுப்பினர்களை முதன்முறையாகப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விசிக தம்மை நிறுவியிருந்தது; அதற்கு திமுக கூட்டணி மிக முக்கியமான பங்கு வகித்திருந்தது). ஆளூர் ஷாநவாஸ் ஓரங்கட்டப்பட்டது இந்த அரசியலின் ஒரு பகுதி தான். திமுகவை நட்போடு விசிகவில் யாரும் பார்க்கக்கூடாது என்கிற வாதம் பரவத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து ஊடகங்கள் தோழர் திருமா அவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டபடியே இருந்தனர். ஆட்சியில் பங்கு தருகிறாரே அவர், நீங்கள் ஏன் போகக்கூடாது? என்று அவர் தொடர்ந்து அழுத்தப்பட்டார். திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டதற்காக அவர் பூடகமாக மன்னிப்புக் கோரியபடியும் விளக்கம் கொடுத்துக்கொண்டும் இருந்தார்.
இப்போது, "தீயசக்தி" என்று நடிகர் விஜய்யால் அழைக்கப்பட்ட திமுகவின் ஆதரவால் வெற்றி பெற்ற கூட்டணிக்கட்சிகள் ஏறக்குறைய அனைவரும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததும், இப்போது விசிக மந்திரிசபையில் பங்கேற்பதும், இந்த "தொலைநோக்குப் பார்வையின்" ஒரு அங்கம் தான்.
திமுக இதனால் உற்சாகம் தான் அடையவேண்டும். அது தமது அரசியலை இன்னும் சுதந்தரமாக, துணிச்சலாக வெளிப்படுத்தலாம். திமுகவின் முக்கியத்துவத்தை, இந்த grand spectacle நமக்குக் கூடுதலாக வெளிப்படுத்தியிருக்கிறது.
திமுக மீண்டும் வெற்றி பெற்றிருந்தால், இந்தியா கூட்டணிக்கே மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். அதை "அன்பர்கள்" உணர்ந்திருக்ககூடும்.
1/2
90-91-வீரபாண்டி ஆறுமுகம்
91-96-கு ப கிருஷ்ணன்
96-01- வீரபாண்டி ஆறுமுகம்
01-06- k P அன்பழகன்
06-11- வீரபாண்டி ஆறுமுகம்
11-12-செங்கோட்டையன்
12-14- தாமோதரன்
14-15-அக்ரி கிருஷ்ணமூர்த்தி
15-16-வைத்தியலிங்கம்
17-20- துரைக்கண்ணு
20-21-kp அன்பழகன்
21-26- mrk பன்னீர்செல்வம்
கடந்த 35 வருசத்துக்கு திமுக-அதிமுகவின் வேளாண் துறை அமைச்சரவை பட்டியல் இது
அக்ரி கிருஷ்ணமூர்த்தி தவிர அத்தனை பேரும் விவசாயிகள்… அவரும் வேளாண் பட்டதாரி… அதுக்கு முன்னாடி data எடுத்தாலும் அத்தனை பேரும் விவசாயிகளா தான் இருப்பாங்க
முதல்முறையா விவசாயம்னா என்னனு தெரியாத நகைக்கடை வச்சிருக்க ஒரு நபர் வேளாண் துறை அமைச்சர்🥺🥹
கிட்டதட்ட 1.5கோடி ஏக்கர் நிலம்.. டெல்டா மட்டும் 28 லட்சம் ஏக்கர்… 1 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்த விவசாயம்னா என்னனு தெரியாத ஒரு ஆளுகிட்ட குடுத்திருக்கானுக😒😭
மத்த துறைகள் மாதிரி மேம்போக்கா இருந்தா system பாத்துக்கும்னு இருந்திடாம கூடிய சீக்கிரம் கத்துகிட்டு விவசாயிகள ரோட்ல இழுத்து விடாம பாத்துகிட்டா போதும்😒
அடுத்த 5 வருசம் வேளாண் துறை என்னலாம் ஆக போகுதோ😒
- விஜயபாரதி
Breaking:
நேற்று CM அறைக்குள் selfie வீடியோ எடுத்து சர்ச்சையான பிறகு எடுக்கப்பட்ட போட்டோ.. இதில் வட்டமிட்டிருக்கும் பெண் ஸ்மிதா சதாசிவன்.. இவர் சனாதனி RN.ரவியின் ஜிகிடி தோஸ்து.. நெருங்கிய நட்பு.. மேலும் ஸ்ரீஸ்ரீ.ரவிசங்கர் எனும் மொரட்டு சங்கியின் follower.. வட்டமிட்டிருக்கும் இன்னொருவர் சிம்மச்சந்திரன்.. இவரை எந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போராட்டத்திலாவது பாத்து இருக்கிறீர்களா?? பார்த்திருக்கவே முடியாது.. ஆனால் நிறைய மடங்கள் சாமியார்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்.. சங்கிகள் சவகாசம்.. மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை கடத்தி பாலியல் வல்லுறவு புகார், மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளிப்பு இப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலமை குறித்து பேசாமல் பதவி வாங்குவதற்கு சென்றிருக்கிறார்கள்.. தயவுகூர்ந்து மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு குறித்து பேசுங்கள்.. மௌணம் கலையுங்கள்..
Breaking news!
Dr Soumya Swaminathan @doctorsoumya has been elected as FRS, Fellow of Royal Society, one of the highest global hours that a scientist can receive.
@royalsociety
With her father Bharat Ratna Prof Swaminathan also being elected as FRS, this is the first daughter-father FRS duo from India.
Also she is the second Indian woman scientist being elected in 365 years history of Royal Society, the first being Prof Gagandeep Kang.
Very proud moment for Indian Science & indeed for us Indians.
Heartiest congratulations dear Soumya!
@PMOIndia@DrJitendraSingh@PrinSciAdvOff@CSIR_IND@ICMRDELHI@IndiaDST@DBTIndia@PuneIntCentre
Hindu trader
"Why is the BJP not allowing us to sell our cows to Muslim,I've taken a loan of 5 lakh to rear &sell these animals for Bakrid,muslims never harm us
Why is BJP stopping us from selling & trading with Muslims,Give us poison then."
BJP will destroy Bengal for sure.
என்ன நடத்துக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக விளக்கும் காணொளி இது. பெரும் உண்மையை ஒரு நடிகர் பேசியிருக்கிறார்.
இருந்தாலும் இதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் பதிவேற்றம் செய்யக்கூடாது எனத் தேடிப் பார்த்தேன். இதன் முழுக் காணொளி youtube ல் கிடைக்கவில்லை. AI மூலமாக தேடியபோது இதற்கான முழு காணொளியும் நீக்கப்பட்டுள்ளது என்னும் தகவல் கிடைத்தது.
அதேநேரம் Operation Dravida actor sivaji எனத் தேடச் சொல்லியது AI செயலி. அந்தப் பெயரில் தேடியபோது 8 வருடங்களுக்கு மேலான தெலுங்கு காணொளிகள் எல்லாம் கிடைக்கப் பெற்றன.
அவை அனைத்திலும் இந்த ஒரு விடயத்தை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். மிக நுட்பமான பார்வையையும் கொடுத்து, அவற்றை வகுப்பாகபே எடுக்கும் பல காணொளிகள் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் பார்த்தப் பிறகே இந்தக் காணொளியை பதிவு செய்கிறேன். நாம் ஒரு காணொளியைப் பதிவு செய்ய எத்தனை மெனக்கெடல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு கூட்டம் மிக எளிதாக பல காணொளிகளையும் பொய்ப் பரப்புரைகளையும் மிக எளிதாக பெருங் கூட்டமாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
என்னத்த சொல்வது. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. குறைந்தபட்சம் ஒரு சிலராவது புரிந்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையைத் தவிர வேறு இல்லை.
#இனியன்
Separate ideology from politics,
and you don’t get neutrality - you get absolute power.
And absolute power will absolutely corrupt!
When anti-corruption narratives grow loud and ideology is sidelined, Hindutva forces consolidate.
History shows Tamil Nadu must tread carefully now.