சினிமாவுல நேரடியா கதாநாயகனாகவும் கதாநாயகியாவும் நடிச்சவங்க தான் தமிழ்நாட்டை அதிகமா ஆண்டிருக்காங்க..
கணக்கு சொல்லனும்னா 33 ஆண்டுகள்..
தொடக்க காலத்தில் பெரியாரோட முழுஆதரவோட பல அணைகளையும் அரசு பொது நிறுவனங்களையும் ஆரம்ப பள்ளிக்கூடங்களையும் கொண்டு வந்த காமராஜர் ஆட்சிக் காலமான பத்து ஆண்டுகளையும் சேர்த்து காங்கிரஸ் ஆண்டது மொத்தம் 20 ஆண்டுகள்.
திமுகவில் அண்ணா கலைஞர் ஸ்டாலின் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஆண்ட காலம் 25 ஆண்டுகள்.
இப்போது விஜய் எத்தனை ஆண்டு/ மாதங்கள் ஆளப்போகிறார் என்று தெரியாது.
எப்படி பார்த்தாலும் நேரடி சினிமா நடிகர்கள்தான் தமிழ்நாட்டை மிக அதிக காலம் ஆண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கொண்டு வந்த மாற்றங்கள் என்று எதையுமே சொல்லமுடியாது.
இருந்ததை கெடுத்து விடாமல்..அவர் காலம் வரை கலைஞர் பார்த்துக் கொண்டார். பிறகு ஸ்டாலின் பார்த்துக் கொண்டார்.
யாராவது எம்ஜிஆர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்று லிஸ்ட் போட்டால் என்ன தேறுமோ அந்த அளவுக்கு கூட இப்போது இருக்கும் நடிகர் செய்யப்போவது தேறாது.
ஆனால் வெறும் 25 ஆண்டுகளில் திமுக என்ன செய்தது என்று பட்டியலிட்டால் அதை ஆயிரம் பக்கத்திற்கு ஒரு புத்தகமாக போடலாம்.
கொள்ளையடித்தார்கள் என்று சொல்வார்கள்.
அப்படி கொள்ளை அடித்திருந்தால் இன்றைக்கு தமிழ்நாடு இத்தனை வளமாக எப்படி இருக்க முடியும?
கண்ணுக்கு முன் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் என்ன மாற்றம்...என்ன வளர்ச்சி.. என்ன சம்பள உயர்வு.. என்ன வேலை வாய்ப்பு ..என்ன தொழில் வாய்ப்பு நமக்கு கிடைத்தது?
அதே கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை எத்தனை மாற்றங்கள் எத்தனை எத்தனை வளர்ச்சிகள் எத்தனை சம்பள உயர்வு எத்தனை வேலை வாய்ப்பு
எத்தனை தொழில் வாய்ப்பு...
எத்தனை திட்டங்கள் எத்தனை உதவிகள்.. எழுதினால் இந்த பதிவை முடிக்கவே முடியாது.
அப்படி இருந்தும் இந்த மக்கள் மீண்டும் ஒரு நடிகனைப் பார்த்து மயங்கி விட்டார்களே...!
அந்த காலத்தில் படிப்பறிவில்லாத மக்கள்தான் நடிகன் நடிகைகளைப் பார்த்து மயங்கி ஓட்டு போட்டார்கள் என்றால்
இந்தக் காலத்தில் அதுவும் எத்தனை வாய்ப்பு வசதிகளும் கல்வியும் அறிவும் பெருகிவிட்ட இந்த காலத்தில் எப்படி இவர்கள் மயங்கினார்கள்.
ஆக நடிகர்களை பார்த்து கவர்ச்சியை பார்த்து ஏமாறுவது என்பது தமிழன் ரத்தத்திலேயே இருக்கிறது என்பது தானே பொருள்?
இப்படித்தானே அன்று ஆரிய பார்**&ப்பனர்களை பார்த்து ஏமாந்தார்கள்..? இப்படித்தானே என்று வெளிநாட்டு அரசர்களை பார்த்து ஏமாந்தார்கள்? இப்படித்தானே அன்று ஐரோப்பிய ஆட்சியாளர்களை பார்த்து ஏமாந்தார்கள்?
சிங்கப்பூரில் மக்களும் நாடும் மலேசியாவால் அனாதையாக்கப்பட்டபோது..
அங்கிருந்த அத்தனை மக்களுக்கும் முன்னேற வேண்டும் என்ற வெறி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கனன்று கொண்டு இருந்தது.
அதே எண்ண ஓட்டத்துடன் வந்த தலைவர் அவர்களை வழிநடத்தி முன்னேற்ற பாதையில் எடுத்துச் சென்றபோது மக்கள் அவருக்கு முழு ஆதரவை கொடுத்து சிங்கப்பூரை உலக அரங்கில் சிறிய நாடாக இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றிக் காட்டினார்கள்.
ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாட்டை சிங்கப்பூர் போல அழகான முன்னேறிய நவீனமான நாடாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேயரான காலம் தொட்டே இருந்து வந்தது..
முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தன் சக்திக்கு மீறி தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு நாள் கூட விடுப்பெடுக்காமல் இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் உழைத்திருக்கிறார்.
அவர் கொண்டு வந்த மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை ..?
பூங்காக்கள், சாலைகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், நூலகங்கள், அறிவகங்கள், படைப்பகங்கள், மைதானங்கள்,
ஹைடெக் பேருந்துகள், கிராமங்களெல்வாம் சாலைகள், நலிந்தோருக்கான உதவிகள்,
வீட்டுக்கு ரேஷன் பொருட்கள், வீட்டுக்கு தேடி வரும் மருத்துவர்கள்,
காலை உணவு திட்டம், புத்தகங்கள், லேப்டாப்கள்,இலவச பேருந்து, பயணம், உரிமைத்தொகை மாணவர்களுக்கான உதவித்தொகை, பெண்களுக்கான உதவித்தொகை, ஆதரவற்றோருக்கான உதவித்தொகை, பிச்சைக்காரர்களுக்கு கூட தங்குவதற்கு இடம்,
மெட்ரோ திட்டங்கள்,
புதிய முதலீடுகள், ஆலைகள்..
நகரெங்கும் அழகான ஓவியங்கள் பூங்காக்கள் என்னென்னவெல்லாம் செய்தார் ஸ்டாலின்...
ஆனாலும் இந்த மக்கள் அவருடைய எண்ணத்தையும் தொலை நோக்கையும் புரிந்து கொள்ளவே இல்லையே..!
புரிந்து கொள்வார்கள் என்று தான் ஸ்டாலின் நம்பினார்.
ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை...
காரணம் மேற்சொன்னது தான்.
லீ குவான் யூ சிங்கப்பூரை சிங்கப்பூர் ஆக மாற்ற சிங்கப்பூர் காரர்கள் அத்தனை பேரும் அவருக்கு துணை நின்றார்கள் உழைத்தார்கள் அவர்கள் தங்களின் தலைவரை முழுவதுமாக நம்பினார்கள்.
1/2
எஜமான விசுவாசத்தோடு வாலாட்டும் இடதுசாரிகள்!
கட்டிப் போடப்பட்ட உயரதிகாரிகள் யார் யார் என்று சொல்லுங்கள் @SuVe4Madurai
குற்றம் சுமத்தும் உங்களுக்கு உண்மையை முழுமையாக எடுத்து வைக்கும் பொறுப்பு உள்ளது!
"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
அநாகரிகமான, அசிங்கமான விர்ச்சுவல் வாரியர்ஸ் என்றாலும், குற்றமிழைக்கும் கட்சி நிர்வாகிகள் என்றாலும், நடவடிக்கை எடுக்க மறுக்கும் தூய சக்தி 🤦🏾
#TVKVijayFails
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் அதே நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்ற பெண் அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி மரியா லீலாவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரில். அரசாங்க வேலை வாங்கித் தருவதாக மரியா லீலா வாக்குறுதி கொடுத்ததாகவும். இது பற்றி மரியா லீலா அமைச்சராக இருக்கும் தனது கணவர் ராஜ்மோகன்னிடம் கூறியதாகவும். நடப்பது TVK ஆட்சிதான் அதனால் கண்டிப்பாக என்னால் வாங்கித் தர முடியும் என்று அவர் கொடுத்த நம்பிக்கையின் பெயரில். அமைச்சரின் மனைவி மரியா லீலா பல தவணைகளில் சுமார் 11,00,000 ரூபாய் வெற்றி செல்வியிடம் இருந்து பெற்றதாகவும். ஆனால் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திரும்பி தராமல் ஏமாற்றியதாகவும். மேலும் இது பற்றி புகார் கொடுப்பேன் என்று வெற்றி செல்வி கூறிய பிறகு வெற்றி செல்விக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில். மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்பி அலுவலகம் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு TVK அரசிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவும், கிடப்பில் போட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசையிலும் எஸ்பி அலுவலகம் மனுவை கிடப்பில் போட்டதாக வெற்றிச்செல்வி தரப்பு கூறுகிறது.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு தலைவர் @mkstalin அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🏻
இன்று அமைச்சர் கில்லி சரத் அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆதரவாக காணொளி வெளியிட்டதை தொடர்ந்து திமுக சார்பாக போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நடைபெற்று வந்த நிலையில்.. ஆளும் TVK அரசு ஆங்காங்கே போராட்டத்தில் இருந்த திமுகவினரை கைது செய்தது..
இந்த கைது நடவடிக்கையின் போது திமுக இளைஞரணி திமுக ஆண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் திமுக மகளிர் அணியை TVK அரசு கைது செய்துள்ளது... மேலும்
குடிநீர்
உணவு
இயற்கை உபாதைகளுக்காக வாகனத்தை நிறுத்துவது
என்று எதையும் செய்யாமல் திமுக மகளிர் அணியை வேண்டுமென்றே பல மையில் தூரத்திற்கு வாகனத்தை காவல்துறை செலுத்தியுள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். அன்பு தலைவர் @mkstalin அவர்களுக்கு சிரம் தாழ்ந்து நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும் பொழுது இன்று திமுக மகளிர் அணியை கைது செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை 🙏🏻..
எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுக மகளிர் அணியை கைது செய்து அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻
@YousufRiaz86@Anbil_Mahesh@AnbilMahesh4evr பாஜகவோ... தவெகவோ...
கட்சிக்கு அடியாட்களைப் பயிற்சி பெறும் இடமாக இனிமேல் பள்ளிக் கூடங்கள்...
இந்தக் கல்வி ஆண்டின் தொடக்க முதலே பள்ளிகளில் கல்விக்கான முதன்மை இடம் கிடையாது!
ஆசிரியர்களும் வேலைப் பளு இல்லாமல் சௌகரியமாக வாழலாம். தொடர்ந்து விசிலடிக்கலாம்.
இந்த parkingல் மேனாள் அமைச்சர் சேகர் பாபு அவருடைய கார்களையா கொண்டு வந்து நிறுத்தப்போகிறார்?
இல்லையே,பிறகு யார் நிறுத்துவார்கள்?
சுற்றுலா பயணிகள்தானே, அதற்கும் வில்லங்கம் பேச கூடிய ஆள் அன்றோ,ஆதலால் தெளிவாகச் சொல்கிறேன் அங்கு கார்களை நிறுத்தி பயன்படப் போகின்றவர்கள் மக்கள்தான்,அதாவது உங்களுக்கும் வாக்களித்த மகா கணம் பொருந்திய மக்களில் ஒரு சாரர்தான்.
இந்த செய்தி உண்மையென்றால் [ இப்போதெல்லாம் எது உண்மை செய்தி என்பதை அறிய முடிவதே இல்லை] இது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி என்பதனை விட இனி இந்த அரசின் கொள்கை இந்துத்துவ வளையமைப்பில் உள்ள தத்துவார்த்த பின்னணியினை நெகிழ்வாக மக்களிடையே புகுத்தும் செயல் தொடக்கமே!
வாழ்த்துக்கள் மகாசனங்களே!
உங்களுக்கு இனி பொற்காலம் இல்லை,கற்காலம்தான்,ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இதெல்லாம் கற்காலச் சிந்தனையோட்டம் தானே!
ஆனால் கோயில் சொத்தை என்ன செய்ய வேண்டுமென எங்கள் பாட்டனார் பெரியார் சொல்லிட்டு போயிருக்காப்ல.
// ஆயிரக்கணக்கான வருடங்களாக மூட நம்பிக்கைகளிலும்-குருட்டுத்தனமான பழக்கவழக்கங்களிலும் ஈடுபட்ட ஜன சமூகத்திற்கு கொஞ்சம் வேகமான மருந்து கொடுத்துத்தான் வியாதியை தீர்க்க வேண்டியிருக்கிறது.
இவ்வளவு கெடுதிகளுக்கு இருப்பிடமாக இருக்கும் இந்து கோவில்களை எப்படி கல்விக்கழகங்களாக ஆக்குவது?
முதலாவதாக கோவிலின் உட்புறத்தில் சரியான ஜன்னல்கள்,பெரிய வாசல்கள் முதலியன வைத்து அங்கு படிப்பே இல்லாமல் ஆயிரக்கணக்கான வருடங்களாக மேல் சாதிக்காரர்கள் என்பவரால் அழுத்தப்பட்டு கிடக்கும் ஆதித்திராவிடர்களுக்கு இலவசக் கல்வி சொல்லிக்கொடுக்க வேண்டும்.
அந்த பணத்திற்கு சர்க்காரிடத்தில் பல்லைக் காட்டிப்பணம் கேட்க வேண்டியதில்லை.
எங்கும் பரந்திருப்பதாகச் சொல்லப்படும் கடவுளுக்கு அவசியமில்லாத தங்க வாகனங்களையும்,ஆசையற்ற கடவுளுக்கு அவசியமில்லாத நகைகளையும் விற்று ஆதிதிராவிட குழந்தைகளுக்குக்குத் துணி,புத்தகம் வாங்கிக் கொடுக்க வேண்டும்.செப்புப் பொம்மைக்கு குடம் குடமாக ஊற்றும் பாலை,பாலே பாத்திராத பாமரக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
வாணவேடிக்கைக்கு விரயமாகும் பணத்தை கொண்டு health exhibition துவங்கி சுகாதாரத்தை போதிக்ககூடிய காட்சிகளை காண்பிக்க வேண்டும்.பார்ப்பதற்கு சகல மதத்தினரையும் அனுமதிக்க வேண்டும்.
உற்சவங்களுக்கு செலவழிக்கப்படும் லட்சக்கணக்கான திரவியத்தை கொண்டு பெரிய நூலகங்கள் வைக்க வேண்டும்.
உண்டியலில் வியாதிக்காகவும்,பிற காரிய வேண்டுதலுக்காகவும் ஜனங்கள் கொண்டு வந்து கொட்டும் பணத்தைக் கொண்டு கோயில் நிலங்களிலேயே அனைத்து வித விஞ்ஞான வசதி கொண்ட ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்.பெரிய கல்வி நிலையங்கள் கட்ட வேண்டும்.
" கோவில் சொத்தை மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பயன்படுத்துவதால் எந்த கடவுளுக்கும் கோபம் வந்துவிடாது.
மனிதனுடைய அறிவு வளர்வது கண்டு எந்த கடவுளாவது கோபித்துக் கொண்டு தனக்கு சர்ச் வேண்டும்,பள்ளிவாசல் வேண்டும்,கோவிலும் கோபுரமும் வேண்டுமென்றால் அந்த பேராசை கடவுள் நமக்குத் தேவையில்லை.
- தந்தை பெரியார் -
- குடிஅரசு -
- 9.10.1932 - //.
@vikatan சட்டமன்றத்திற்கு இருந்த மதிப்பு, மரியாதையே போய் விட்டது.
இன்னமும் நடிகராகவே இருக்கிறார். முதல்வராக மாறவில்லை.
நாகரீகம் இல்லாமல் விதிகளை மீறி பேசுகிறார்.
இதுவரை தமிழ்நாடு சட்டமன்றம் கண்டிராத மிகவும் கேவலமான முதல்வர்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களையும், போதைப் பொருள் விற்பனையாளர்களையும், கொலை-கொள்ளை குற்றவாளிகளையும் கைது செய்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் திறனற்ற தவெக அரசு, நள்ளிரவு 12 மணிக்கு Gen Z DMK நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அறிவானந்தம் அரியப்பனை கைது செய்ய காவல்துறையை அவரது வீட்டில் குவித்துள்ளது.
எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த காவல்துறையை பயன்படுத்தும் இந்த அராஜகப் போக்கு கண்டிக்கத்தக்கது.
When governments start treating dissent as a crime, they are simply borrowing a page from the RSS-BJP playbook of authoritarianism.
GENZ DMK கூட்டங்களை தமிழ்நாடு முழுக்க ஒருங்கிணைத்து வரும் இளைஞர்களில் ஒருவரான ‘அன்பாநந்தன் அரியப்பன்’ஐ கைது செய்ய நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது கிராமத்தில் குவிந்திருக்கிறது தவெகவின் காவல்துறை.
என்ன அராஜகம் @CMOTamilnadu விஜய் சார்?
மோடி அரசு கூட இப்படியொரு அடக்குமுறையை கையாண்டதில்ல... மோடிக்கு விசுவாசம் காட்ட தவெக அரசு பயங்கர விசுவாசத்தோட இருக்கு...