எந்த advocate வீரமணி க்கு ஆஜர் ஆனாலும் அவங்க வீட்டு பெண்களை அந்த இடத்தில் நினைத்து பார்க்கவும்... தயவுசெய்து அந்த நாய்க்கு துணை போகாதிர்கள்... எல்லாரும் boycott பண்ணுங்க
ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில்
தொடர்புடைய அனைவரையும் குற்றக் கூண்டில் நிறுத்தி
தண்டிக்க விசாரணையை விரைவுப்படுத்துக!
வைகோ அறிக்கை
இளம் பிஞ்சுகளை நாசப்படுத்திய ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணையும் வேகம் எடுத்திருக்கிறது.
"குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்"
எனும் குறளுக்கு ஒப்ப தொழிலத���பர் வீரமணியால், தமிழ்நாட்டிற்கு இழிவையும், தலைகுனிவையும் ஏற்படுத்தி இருக்கும் இந்த வழக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் முறையாக சென்று கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
பல ஆண்டு காலமாக குழந்தைகளை இக் கொடூரத்திற்கு இரையாக்கிய தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி மட்டுமில்லாமல், இதற்குத் துணை போனவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் கண்டறிந்து கைது செய்து குற்றக் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில், “தொழிலதிபர் வீரமணியின் வழக்கை ஆழக் குழி தோண்டிப் புதைப்பதற்கு ��ிட்டம் தீட்டிய காவல்துறை அதிகாரிகள், அரச பீடத்திலிருந்து உதவிய பெரிய மனிதர்கள், இடைத்தரகர்கள் எவரும் இந்த வழக்கில் தப்பித்து விடக்கூடாது என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்” என்ற செய்தி நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
இந்த வழக்கில் எவ்வித அழுத்தங்களுக்கும் விஜய் அரசு இடம் தராது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் வழிகாட்டுதலில் இந்த வழக்கின் விசாரணை சரியான திசையில் நடத்தப்பட்டு வரும்போது, விசாரணை ஆணையம் மற்றும் சிபிஐ விசாரணை என்பது தேவையற்றது. அத்தகைய கோரிக்கைகளை நிராகரித்து, ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் விரைந்து விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
���றுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
24.09.2026
🚨Breaking -)
வீரமணி வழக்கில் closure report யார் கூறி தாக்கல் செய்தீர்கள்? என காவல்துறை உதவி ஆணையர் #யாஸ்மின் உட்பட மூன்று பேருக்கு #சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
யாரையும் விடாதீங்கணா @CMOTamilnadu
தமிழக அரசு, #ஜெம்கிரானைட்ஸ் வீரமணி சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு அதில் குற்றம் செய்த அனைவருக்கும் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்
தமிழகத்தில் #பாலியல்_வன்கொடுமைகள் நடைபெறக்கூடாது என்பதற்கு ஏற்�� விசாரணையும், நடவடிக்கையும், தண்டனையும் அவசியம் தேவை
1.5 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு ��ள்ளி ஆசிரியை பெண் என்பதால் அரசு பேருந்து இலவசமாக செல்கிறார் .
அதே பேருந்தில் ஒரு 65 வயதான ஆண் கூலித் தொழிலாளி, நாள்தோறும் பத்து ரூபாய் பணம் செலுத்தி செல்கிறார் .
இது என்ன முரண்பாடு ?
Kudos 🎉 🎉 🎉
Big Salute sir @chennaipolice_@tnpoliceoffl
சென்னை மாநகர காவல் ஆணையர் திரு அமல்ராஜ் சார் போன்ற நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு எங���கள் ராயல் சல்யூட்.
உண்மையான பாட்ஷா பாய் அமல்ராஜ் சார் அவர்கள்.
கோவையில் நான் பத்தாம், பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், பேரூரில் வசித்த என் பள்ளி சீனியரும் நெருங்கிய நண்பரும���ன கிருஷ்ணகுமார் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். வார இறுதி நாட்களில் அங்கே நண்பர்கள் பலரும் கூடுவோம். அரசியல் முதல் சினிமா வரை மணிக்கணக்கில் விவாதங்கள் நடக்கும்.
அப்படியொரு மாலை, ராஜேஷ் கண்ணா என்ற எங்கள் சீனியரும், கிருஷ்ணகுமாரும், நானும் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ராஜேஷ் கண்ணா, கமல்ஹாசனின் நடிப்பைப் பற்றி பேசத��� தொடங்கினார். பேச்சு “மகாநதி” திரைப்படத்தை நோக்கி நகர்ந்தது.
கமல்ஹாசனின் ரசிகனாக இருந்த எனக்கும் அந்த விவாதம் இயல்பாகவே ஆர்வத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் மகள் உறங்கிக்கொண்டிருக்கும்போது கமல்ஹாசன் வெளிப்படுத்தும் வலி, வேதனை, கண்ணீர் ஆகியவற்றைப் பற்றி ராஜேஷ் நீண்ட நேரம் பேசினார்.
ஆனால், அந்தப் படத்தை மீண்டும் பார்த்தபோது என்னை அதிகம் ��லுக்கியது கமல்ஹாசனின் நடிப்ப�� மட்டும் அல்ல.
“வெங்கடாச்சலம்” போன்ற ஒரு மனிதன் இந்த சமூகத்தில் உண்மையிலேயே இருக்க முடியுமா? என்ற கேள்விதான்.
சிறுமிகளை பாலியல் ரீதியாக சுரண்டும் ஒரு பணக்கார மனிதன். பணத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தனது அருவருப்பான இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு கயவன். குற்றம் வெளிச்சத்திற்கு வந்தாலும் பணத்தை முன்வைத்து பிரச்சினையை “முடித்துக்கொள்ளலாம்” என்று நினைக்கும் ஒரு ���னநிலை.
அப்போது அது ஒரு திரைப்படக் கதாபாத்திரமாகத் தோன்றியது.
இன்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் அளவுக்கு ஒரு கொடூரமான வழக்கு நம் கண்முன்னே நிற்கிறது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் மேலும் பல சிறுமிகள் தொடர்பாக தகவல்கள் ��ெளியாகியுள்ளதாக காவல்துறை தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
இது ஒரு தனி மனிதனின் குற்றச்சாட்டாக மட்டும் பார்க்கப்படக்கூடாது.
சிறுமிகளின் பாதுகாப்பை பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் பேரம் பேசும் எந்த அமைப்பும், எந்த மனிதரும், எந்த அதிகாரமும் இந்த நாட்டின் சட்டத்தின் முன் நிற்க வேண்டும்.
ஒரு குழந்தையின் வாழ்க்கையை சிதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும்��ோது, குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு கொண்டவராக இருந்தாலும் சட்டத்தின் முன் அவருக்கு எந்த சிறப்பு வாசலும் இருக்கக்கூடாது.
பணம் குற்றத்திற்கு கவசமாக மாறக்கூடாது. அதிகாரம் குற்றத்திற்கு கேடயமாக மாறக்கூடாது. அரசியல் தொடர்புகள் குற்றவாளிக்கு தப்பிக்கும் பாதையாக மாறக்கூடாது.
இதில் மிக முக்கியமான கேள்வி இன்னும் ஒன்று உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வழக்கை முடிக்க முயற்சி நடந்ததா? அப்படி நடந்திருந்தால், அதற்குப் பின்னால் யார் இருந்தார்கள்? எந்த அதிகாரிகள் முடிவெடுத்தார்கள்? என்ன காரணம் கூறப்பட்டது? யார் யாருக்கு அழுத்தம் கொடுத்தார்கள்? யாருடைய செல்வாக்கு பயன்படுத்தப்பட்டது?
இந்தக் கேள்விகளுக்கு ��வ்வொன்றாக பதில் கிடைக்க வேண்டும்.
ஏனெனில், குற்றம் செய்தவன் மட்டும் குற்றவாளி அல்ல; குற்றம் தெரிந்தும் அதை மறைக்க உதவிய ஒவ்வொருவரும் சட்டத்தின் முன் விசாரிக்கப்பட வேண்டியவர்களே.
வீரமணி மீதான விசாரணை இப்போது தீவிரப்படுத்தப்பட்டிருப்பதையும், தொடர்புடையவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவதையும் வரவேற்கிறேன். முதலமைச்சர் விஜய், வழக்கை விரைவுபடுத்தவும் தொடர்புடைய அனைவரிடமும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் இது இத்துடன் முடிந்துவிடக் கூடாது.
இந்த வழக்கில் பணம் எங்கு சென்றது? அதிகாரம் எங்கு பயன்படுத்தப்பட்டது? யார் மௌனம் காத்தார்கள்? யார் உதவினார்கள்? யார் விசாரணையை பலவீனப்படுத்த முயன்றார்கள்? எல்லாம் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
அரசியல் சார்பின்றி, எந்தத் தலையீடும் இன��றி, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற வேண்டும். தேவையான சூழலில், விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
��ேலும், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் POCSO உள்ளிட்ட பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வயது, பணம், பதவி, அரசியல் தொடர்பு, சமூக அந்தஸ்து - எதுவும் ஒரு குழந்தைக்கு எதிரான குற்றத்திற்கு மன்னிப்புச் சீட்டாக இருக்கக்கூடாது.
“மகாநதி” திரைப்படத்தில் கற்பனை செய்யப்பட்ட வெங்கடாச்சலம் போன்ற மனிதர்கள் உண்மையில் சமூகத்தில் இருப்பார்களா என்று நான் சிறுவனாக இருந்தபோது கேட்ட கேள்விக்கு, இன்றைய இந்த வழக்கு மிகவும் வேதனையான பதிலை நம் முன் நிறுத்துகிறது.
ஒரு திரைப்படம் நம்மை அழ வைத்திருக்கலாம்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு குழந்தையின் கண்ணீருக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் - அவர்களை சட்டத்தின் கூண்டில் நிறுத்தி, உண்மை முழுவதையும் வெளிக்கொண்டு வந்து, சட்டம் அனுமதிக்கும் உச்சபட்ச தண்டனையை பெற்றுத்தருவதே அந்தக் குழந்தைகளுக்கான உண்மையான நீதி.
The Tamil Nadu police department, once celebrated as the best in our country, has become, over the past few years, a corrupt and incompetent department that does the politicians’ bidding. The initial investigation of the POCSO case against GEM Veeramani, the pedophile who had reportedly sexually exploited many young children, is an example of what the TN police department has transformed into.
Despite the existence of video evidence of the alleged sexual abuse of a minor, the police sought to close the investigation, as they could not identify the victim and the perpetrator. The court refused to accept the report and ordered further investigation.
After reopening the investigation, the police arrested GEM Veeramani and his accomplices and have since identified the minor in the video. More significantly, the investigation has reportedly uncovered multiple survivors, including several who were minors at the time, suggesting that the abuse may have continued over many decades. This case is a stark reminder of the difference that a few upright and determined police officers can make. The swift action taken by the TVK Government following the court's intervention deserves appreciation.
Yesterday, the State police department arrested a former employee of GEM Granites who was in possession of an obscene video involving GEM Veeramani. The investigation cannot stop with GEM Veeramani and his accomplices. Every police officer, politician and influential individual who helped shield him for the past many years must also be brought to justice. It is also reported that a huge sum of money was exchanged in this process. A Special Investigation Team must be constituted immediately to uncover the entire network that allowed this to continue for so long.
It is also important that the TN Police do not repeat past mistakes and that the identities of all victims are safeguarded.
முந்தைய திமுகவின் ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும் வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு, கைதுசெய்யாதுவிட்டது, போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, நீதிமன்றத்தில் காவல்துறை கைவிரித்து, வழக்கை விசாரித்துச் சென்றது கடும் கண்டனத்திற்குரியது.
பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படும் காணொளி ஆதாரம் சமர்பிக்கப்பட்டது, ஜெம் வீரமணி உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்து, அவர்களது முகத்திரையைக் கிழித்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது. மேடைகளில் பெண்ணுரிமை, சமத்துவம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கானச் செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகமாகும்.
- அண்ணன் சீமான்
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பான விசாரணையில் தெரியவரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
சமூகத்தில் தனக்குள்ள அந்தஸ்து மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி இவ்வளவு கொட��ரமான குற்றத்தில் இருந்து ஒருவர் இத்தனை ஆண்டுகாலம் தப்பித்திருக்கிறார் என்பது சாதாரணமாக கடந்து போய்விடக் கூடிய விசயமல்ல.
ஒரு சிறுமியின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு தனிநபருக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல; நமது சமூகத்தின் பாதுகாப்பையும் நீதியின் மீதான நம்பிக்கையையும் சோதிக்கும் மிகக் கடுமையான குற்றமாகும்.
பிஞ்சுக்குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொ��ுப்பும், கடமையும் உள்ள அமைப்புகள், மிக முக்கியப் பொறுப்பில் இருந்து அதை வழிநடத்தியவர்கள் அக்குழந்தைகளை இரக்கமற்று கைவிட்டதோடு மட்டுமல்லாமல் கொடும் குற்றவாளியை தொடர்ந்து காப்பாற்றியிருக்கிறார்கள் என்பது மன்னிக்கமுடியாத குற்றம்.
எனவே, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு முழுமையான பாதுகாப்பும் நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும். குற்றத்தில் நேரடியாகவோ மறைமுகமாக���ோ தொடர்புடைய எவராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு இக்கொடூரமான குற்றத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி குற்றவாளியை கைது செய்திருப்பது பாராட்டுக்குரியது. குற்றத்தின் தன்மையைப் பார்க்கும் ��ோது இக்கொடூரமான குற்றத்தை விசாரிப்பதற்காக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து,காலம் தாழ்த்தாமல் உடனடியாக குற்றவாளிகள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இன்னும் எவ்வளவு காலம் பெண்களும், குழந்தைகளும் இந்தக் கொடூரங்களை எதிர்கொள்ள நேருமோ என்று நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது. பெண்களின் பாதுகாப்பிற்கு ஒரு சமூகமாக நாம் என்ன
செய்யப் போகிறோம் என்கிற கேள்வியை ஒவ்வொரு முறையும் கேட்காமல் கடந்து செல்ல முடியவில்லை.
பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியையும், பின்புலத்தில் உடந்தையாக இருந்த குற்றவாளிகளையும் கண்ட��ிந்து, விசாரணையையும், வழக்கையும் துரிதமாக நடத்தி, மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu @Chief_Secy_TN @jagadeshwarioff @VanniTamizhVCK @tnpoliceoffl
சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்களும், அதுதொடர்பாக அடுத்தடுத்து வரும் செய்திகளும் பேரதிர்ச்சி தருகின்றன. உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் போல, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கோரப் பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டையே உறைய வைத்திருக்கின்றன; பெரும் அதிர்வை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கின்றன. கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி, விளிம்பு நிலையிலிருக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.
முந்தைய திமுகவின் ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும் வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு, கைதுசெய்யாதுவிட்டதும், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, நீதிமன்றத்தில் காவல்துறை கையைவிரித்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் கடும் கண்டனத்திற்குரியது. பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படும் காணொளி ஆதாரம் சமர்பிக்கப்��ட்டும், ஜெம் வீரமணி உள்ளிட்டக் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும், அவர்களது முகத்திரையைக் கிழித்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது. மேடைகளில் பெண்ணுரிமை, சமத்துவம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கானச் செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகமாகும். இவ்வன்கொடுமை வழக்கில், முந்தைய அரசின் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்காது, நடவடிக்கை கோரிய சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் செயல்பாடே வழக்கில் நீதியை நோக்கிய முன்நகர்வைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
ஜெம் வீரமணி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பல ஆண்டுகளாக செய்து வந்ததும், அதன் பின்புலத்தில் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது என்பதுவுமான ��ெய்திகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இதில் தொடர்புடைய அத்தனைக் குற்றவாளிகளும், துணைபோன முந்தைய அரசின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பேரவலம் நிகழ்த்தப்பட்டது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனைப் பேர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டியது பேரவசியமானதாகும். இந்த வழக்கை அரசியல் சண்டையாகவோ, தேர்தல் காலப் பரப்புரைக் கூச்சலாகவோ மட்டும் பயன்படுத்திவிட்டு முடித்துவிடக் கூடாது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து நபர்கள், உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக மேலாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதில் முற்றிலுமாகத் தோற்றுப்போய்விட்டன. பொள்ளாச்சி பாலியல் கொடூரம், சிவகங்கைச்சம்பவம் முதல் நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் பிஞ்சுக்குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வரை தமிழகத்தில் நிலவும் மிக மோசமான நிலையை எடுத்துக் காட்டுகின்றன. குற்றம் செய்தால் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும��� பயன்படுத்தி மிக இலகுவாகத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே ஜெம் வீரமணி போன்றவர்கள் துளியும் பயமின்றி, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடக் காரணமாக அமைந்திருக்கிறது.
ஒரு தொழிலதிபர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண் குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது எவ்வளவு மோசமான ஒரு இழிநிலை? இந்த 40 ஆண்டுகாலத்தில் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும், காவல்துறையினரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பெண் குழந்தைகளின் பாதுகாப்பையே முழுமையாகக் கேள்விக்குறியாக்கிவிட்டு, வாக்கு வங்கி அரசியலுக்காகப் பெண்களைப் போற்றி மேடைகளில் பேசியதெல்லாம் எவ்வளவு போலித்தனமானது? என்பதை நாட்டு மக்கள் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
திமுக, அதிமுக, தவெக எனும் மூன்று கட்சிகளுமே பெண்களுக்கு மாதா மாதம் தொகையை வழங்குவதை மட்டுமே தங்களது அதிகபட்சமான பெண்ணுரிமைச்செயல்பாடு எனக் கருதிக் கொண்டு, செயல்படுவது மிக மோசமானப் போக்காகும். ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று, பயமின்றிப் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான புறச்சூழலை உருவாக்குவதே அவர்களுக்கு அளித்திட வேண்டிய அடிப்படை உரிமையாகும். இத்தோடு, பெண்களுக்கும், பிஞ்சுக்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய வேண்டுமானால், அக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
ஆகவே, பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி, உடந்தையாக இருந்த குற்றவாளிகளான சாந்தி, மகேந்திரசிம்மன் மட்டுமின்றி, இதற்குப் பின்னால் வலைப்பின்னலில் இருக்கும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் கொண்ட ஒட்டுமொத்த குற்றச் சங்கிலியையும் கண்டறிந்து, அத்தனைப் பேரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும், இவ்வன்கொடுமை வழக்கையும், விசாரணையையும் துரிதமாக நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகள் அத்தனைப் பேருக்கும் மரணத்தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
OMG..... உடம்பு புல்லரிக்குது 💔
Gem வீரமணி idiot.
🚨சென்னை சுற்று வட்டார... குடிசை பகுதி சிறுமிகள் தான் குறி....
🚨படிக்க வைப்பதாக கூறி...
பாலியல் வன்கொடுமை..
🚨அந்த சிறுமிகளின் வறுமையை பயன்படுத்தி இருக்கிறான்
🚨தேனாம்பேட்டை வீடு,
முட்டுக்காடு சோழா ஹோட்டல் அருகில் உள்ள
அலுவலகங்களில் வைத்து பாலியல் வன்கொடுமை....
🚨கைது செய்யப் படுவதற்கு சில நாட்கள் முன்பு வரை...
பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்
🚨7 சிறுமிகள் நீதிபதி முன் ஆஜராகி வாக்குமூலம்...
Heartfelt birthday greetings to the Hon’ble Prime Minister Shri @narendramodi Ji, a leader who has dedicated his public life to the service of the nation.
From assuming office as the Chief Minister of Gujarat in 2001 to serving today as the Prime Minister of India, Shri Narendra Modi Ji’s 25-year journey in positions of governmental leadership has been marked by a sustained focus on national interest, development and governance.
Strengthening India’s relations with nations across the world and enhancing India’s voice and contribution on global platforms; promoting domestic manufacturing, technology, defence production and innovation through the vision of Atmanirbhar Bharat and setting the goal of #ViksitBharat 2047 to build a stronger India for future generations his governance journey has encompassed multiple dimensions of national development.
Amid global challenges, his government has continued to focus on economic growth while expanding opportunities in manufacturing, infrastructure, the digital economy, startups and entrepreneurship. Initiatives supporting farmers through direct financial assistance, irrigation, crop protection, modern technology and rural development reflect an effort to take the benefits of development to different sections of society.
Similarly, with a focus on the poor, women, youth, farmers and the last person in society, various welfare initiatives covering housing, drinking water, healthcare, banking access, social security and skill development have been pursued under the approach of “Sabka Saath, Sabka Vikas”, with the objective of ensuring that the benefits of development reach everyone.
On his birthday, I pray to the Almighty to bless Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji with good health, a long life and continued strength to serve the people and the nation.
May this journey towards a Viksit Bharat continue with renewed goals, renewed energy and a new chapter of MODI 2.0.
#HappyBdayPMModi
தேசத்தின் நாயகர் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
2001-ல் குஜராத் முதல்வராகத் தொடங்கிய அரசுத் தலைமைப் பயணம் முதல், இன்று உலக அரங்கில் இந்தி��ாவின் குரலை வலிமையாக ஒலிக்கச் செய்யும் பிரதமராகத் தொடரும் பயணம் வரை 25 ஆண்டுகால பொதுவாழ்வின் ஆட்சிப் பொறுப்பில் தேச நலனை முன்னிறுத்தி வளர்ச்சி, நிர்வாகம், ஆகியவற்றை மையப்படுத்திய ஒரு நீண்ட பயணத்தை பிரதமர் மோடி அவர்கள் மேற்கொண்டு வருகிறா��்.
உலக நாடுகளுடனான உறவுகளை விரிவுபடுத்தி, சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் பங்களிப்பையும் குரலையும் முன்னிறுத்துவது, தற்சார்பு இந்தியா என்ற இலக்கின் மூலம் உள்நாட்டு உற்பத்தி, தொழில்நுட்பம், பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிப்பது, 2047 வளர்ச்சி பாரதம் என்ற இலக்கை முன்வைத்து அடுத்த தலைமுறைக்கான இந்தியாவை உருவாக்குவது என பிரதமரின் ஆட்சிப�� பயணம் வளர்ச்சி என்பதை இலக்காக கொண்டு பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது சிறப்பிற்குரியது.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது, உற்பத்தி, உட்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, விவசாயிகளுக்கான நேரடி நிதியுதவி, பாசனம், பயிர் பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது என நாட்டின் வளர்ச்சியை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்லும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் நல்ல���ட்சியின் முயற்சிகள் தொடர்கின்றன.
அதேபோல் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் கடைக்கோடி மக்களை மையப்படுத்தி வீடு, குடிநீர், சுகாதாரம், வங்கிச் சேவை, சமூகப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காகவும் என்ற அணுகுமுறையுடன் வளர்ச்சியின் பயன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற இலக்குடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய இலக்குகளுடன் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழிநடத்தி வரும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்.
வளர்ந்த பாரதத்திற்கான புதிய இலக்குடன், புதிய அத்தியாயம் எழுதும் மோடி 2.0 என்றும் தொடரட்டும்.