வான்புகழ் கொண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழிச்சோழன், ஆடி திருவாதிரை நாளில் பெற்றெடுத்த புவி ஆண்ட புலி மைந்தன் நம்முடைய பெரும்பாட்டன் பேரரசர் அரசேந்திரச் சோழன் பிறந்த ஆடி திருவாதிரை திருநாள் இன்று!
கடற்போரில் சிறந்து விளங்கிய கடற்புலி! வடநாடு வரை படையெடுத்து வங்காளத்தை ஆண்ட மகிபாலனை வென்று கங்கை கொண்டச் சோழன்!
இன்றைய இந்தியப் பெருநிலத்தில் சட்டீஸ்கர், ஒரிசா வரை இருந்த எண்ணற்ற தேசங்கள், மலேயா, சிங்கப்பூர் சுமத்ரா தீவுகள், கம்போடியா, இந்தோனேசியா என தென் கிழக்கு ஆசியா முழுவதும் சோழப் பேரரசை விரியச் செய்து, தெற்காசியப் பெருங்கண்டத்திலேயே அதிகப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பினை வென்றெடுத்து ஆளுகை செய்த செந்தமிழ்ச்செல்வன்!
நீர் மேலாண்மையை வெற்றிகரமாகக் கையாண்டு வேளாண்மையை செழிக்கச்செய்து பஞ்சம் தீர்த்து மக்கள் வறுமை போக்கிய அருந்தமிழ் அரசன்!
வறண்ட நிலப்பகுதியாக காட்சி தரும் அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் மாபெரும் தலைநகரை உருவாக்கி அதற்கென ஏறக்குறைய இருபது மைல் நீளமுடைய, பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய ஏரியினைக் கட்டி பல்லுயிர் சூழல் காத்த உயிர்மநேயர் மாமன்னர் அரசேந்திரச் சோழன்!
இன்றளவும் நம் கண்கள் முழுக்க ஆச்சரிய கனவாக விரிந்து வானை முட்டி உயர்ந்து நின்று, தமிழர்களின் படைப்பாற்றலை உலகிற்குப் பறை சாற்றி ஆயிரமாயிரம் பிறை கண்ட கருங்கல் அதிசயத்தை, தமிழர் மெய்யியல் தேடலை விளக்கும் கலைப்பெட்டகமான பெருவுடையார் கோயிலை மிகச்சரியாக 1000 ஆண்டுகளுக்கு முன் கி.பி1025 ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் எழுப்பி காலத்தை வென்று நின்ற பெருமாவீரன்!
அலைகடல் மீது படைபல நடத்தி, கங்கையும், கலிங்கமும், கடாரமும், இலங்கையும் வென்று, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின் கீழ் கொண்டுவந்து, உலகின் நான்காவது பெரும் பேரரசை நிறுவிய தமிழ்ப்பெரும்பாட்டன் மாமன்னன் அரசேந்திரச்சோழனின் பிறந்தநாளில், போற்றி வணங்குவதில் பெருமிதமடைகிறோம்!
தமிழர்களின் வீரத்தையும், தீரத்தையும், அறத்தையும், அறிவையும், ஆற்றலையும் பார்போற்றப் பறைசாற்றி, தமிழினத்தைப் புகழின் உச்சியில் ஏற்றிய தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளில் வீரப்பாட்டனின் பெரும்புகழ்போற்றுவோம்!
அன்றைக்கு #Delimitation மக்கள் பிரச்சினையே இல்லை என்றவர், இப்போது எதற்கு அதனைக் காரணமாகக் காட்டி, அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டுகிறார்?
காவிரிச்சிக்கலுக்காக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டாது மடைமாற்றம் செய்யத்தானே!
இதெல்லாம் ஒரு பொழப்பா முதல்வரே? @TVKVijayHQ
தூயசக்தி கொடுத்த பதவி!
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), இசக்கி சுப்பையா [தென்காசி) ஆகியோருக்கு அவரவர் மாவட்டங்களில் கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
#TVKVijayFails#TVKFails
மக்களே உங்கள் உரிமை, பாதுகாப்பான வாழ்க்கை, தமிழகத்தின் தன்மானம், தமிழ் மொழி, வரலாறு எல்லாமே உங்கள் கையில்தான்..
அரசியல் உங்க வாழ்கையின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கும்..
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்காக அன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஐயா @mkstalin அவர்களே, ஏன் வாக்கு சேகரித்தீர்கள்?
ஒரு சொட்டு நீர்கூட தமிழ்நாட்டிற்கு இல்லை என்கிறார்களே, அதற்காகவா?
#ntk#seeman#dmkfails
நாம் தமிழர் கட்சி சார்பில் உலக பழங்குடியினர் நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம்
முன்னிலை:
கேப்டன் துரை
மாநிலத் தலைவர் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை
எழுச்சி உரை:
கல்வியாளர் மு.இ.ஹுமாயூன் கபீர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இடும்பாவனம் கார்த்திக்
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
வழக்கறிஞர் கரிகால பாண்டியன்
மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்
நாள்: (ஆடி 24)09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்: தேனி - பெரியகுளம்
(கே. எஸ். கே உணவகம் எதிரில்)
நேரம்: மாலை 4 மணி
பாஜக வந்தாலும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை.
காங்கிரஸ் வந்தாலும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை.
இருவருக்கும் ஒரே கொள்கைதான்; கட்சியின் பெயர்தான் வேறு.
#ntk#seeman#bjpfails#congressfails#tvkfails
வருங்காலங்களில் இந்த சிக்கல் வரும் போது நமது முன்னோர்கள் வேடிக்கை பார்த்து நின்றார்கள் என்ற வருங்கால தலைமுறை சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டம்!
செந்தமிழன் சீமான்
காவிரியில் மேகதாதுவில் அணையை கட்டினால் ஏற்படப் போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து சரியான தரவுகளை சட்டமன்றத்தில் எடுத்துப் பேசிய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் @Sowmiyanbumani 👏
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதி, கப்பியரை பேரூராட்சி நாம் தமிழர் கட்சியின் கவுன்சிலர் ஆன்சி சோபா ராணி அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில், நகர்ப்புற அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதம் ₹1,500 நிதி 2024ஆம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டதால், அதை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.