@Keerthana4VNR மேடம் உங்களது பதிவில் தமிழிலேயே நிறைய சந்திப்பிழைகளைச் சுட்டிக்காட்ட முடியும். அதனால் உங்கள் ஆங்கில அறிவைத்தான் எல்லாரும் கேலி செய்வதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.
இது போன்ற சிறிய விஷயங்களை வீடியோ எடுத்து விளம்பரம் தேடுவதில் இருக்கு பிரச்சனை..
@Alien18R நிறைய சுயபரிசீலனை செய்ய வேண்டிய நேரம்னு புரியுது..
பெண்கள், சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டோர், புது வாக்காளர்கள் என எல்லா பல்வேறு தரப்புகளிடமும் நம்பிக்கை இழந்திருக்கிறோம் என்பது அச்சமுறச் செய்கிறது. தமிழ்நாட்டு மோடி-விஜய், ராகுல்- உதய்? என்றொரு நிலைக்குப் போயிவிட்டால்??😢
@mkstalin@PWilsonDMK இருமொழிக்கொள்கை அடிப்படையிலான, மற்ற மாநிலங்களில் அனைத்துக்கும் முன்னுதாரணமான ஒரு மாநிலப் பாடத்திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும்.. நீங்கள்தான் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தின் ஒரே நம்பிக்கை ஐயா..
@mkstalin@PWilsonDMK தனியார்ப் பள்ளிகள் demandக்கு supply செய்கின்றன. பொதுமக்களின் நாட்டம் சிபிஎஸ்இ பக்கம் இருப்பதால் மெட்ரிக்கில் இருந்த பள்ளிகள் மாறிவிட்டன. அரசுப் பள்ளிகளின் தரம் குறித்த விமர்சனமாக இதை நீங்கள் கருதக் கூடாது. ஆனால் சமீப ஆண்டுகளில் CBSE தேர்வெழுதும் மாணவர் % அதிகரித்திருக்கிறது..
வந்த தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.
கரூர் செல்வதற்கு இந்த நிமிடம் வரை முயற்சிகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற தகவல்.
ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
பல இடங்களில் அனுமதி கேட்டுள்ளார்கள். காலையில் அனுமதி என்று சொல்கிறார்கள். மாலை அனுமதி மறுப்பு என்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் உணர்வுப் பூர்வமாக மனம் விட்டு நீண்ட நேரம் பேச வேண்டும் என்று திட்டம் வகுத்து வேலை செய்து வருகிறார்கள்.
அந்த சூழலை தடுக்க பல வழிகளில் தடை செய்து வருகிறார்கள்.
இடம் கொடுத்தவர்களையும் மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களும்
கரூரில் அனுமதி கிடைக்கவில்லை என்றாலும்,
வேறு எங்கு சரியான இடம் கிடைத்தாலும் சந்திக்க வருகிறோம் என்று மக்களும் தெரிவித்து உள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.
சந்திக்கும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் பாதுகாப்பு சூழல் நிறைந்த இடத்தை தேடி வருகிறார்கள்.
சென்னை உட்பட ஏனைய எந்த மாவட்டத்தில் இடம் கிடைத்தாலும் உள்ள உணர்வோடு மக்களை சந்தித்து விட வேண்டும் என்று வீரியமாக செயல்பட்டு வருகிறார்கள்.
கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் இடம் தேடும் பணியில் வேகமாக செயல்பட்டு வருகிறார்கள்.
கரூரில் மக்களை சந்திக்கும் பாதுகாப்பு சூழல் தற்பொழுது வரை இல்லை என்று சொல்லப்படுகிறது.
கரூரில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடம் கொடுத்துள்ளார்கள். அந்த இடம் மக்கள் சந்திப்பை நடத்த கூடிய உகந்த இடமாக இல்லை.
சிறிய இடமாக உள்ளது. 6 மணி நேரம் மக்கள் சந்திப்பை நடத்த கூடிய இடமாக இல்லை.அந்த இடத்தில் மக்களை சந்திக்க முடியாத நிலை என்று தகவல்.
மக்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம்.
எந்த பிரச்சனையும் யாருக்கும் நடந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
பலரின் அழுத்தம் சொல்ல முடியாத துயரத்தை தருவதாக தகவல் வருகிறது.
கரூர் மக்களை சந்தித்து விடக் கூடாது என்று பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள்.
எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மனது விட்டு பேச வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள்.
கரூர் மட்டுமில்லாமல் திருச்சி, நாமக்கல் என்று பல மாவட்டங்களில் இடம் கிடைத்தாலும் அனுமதி கிடைப்பதில்லை. அனுமதி கிடைத்தாலும் சரியான இடம் கிடைக்கவில்லை.
காலம் தாழ்த்த கூடாது.
கூடுமானவரை விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்துவிட்டு அடுத்த கட்ட மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என்று வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.
பிரச்சனை இல்லாத பாதுகாப்பு சூழல் நிறைந்த சரியான இடம் கிடைத்த உடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க கூடிய நேரம், இடம் ஆகியவற்றை தலைமை சார்பாக அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வரும் என்ற தகவல் எனக்கு வந்தது.
சென்னையை தாண்டி வேறு எங்கேனும் ஒரு இடத்தில் மக்களை சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு நடந்து வருவதாக தகவல்.
சட்ட விதி முறைகளின் படி இந்த சந்திப்பு நிகழ்வை நடத்த வேண்டும் என்று பொறுப்புணர்வுடன் ஆலோசித்து வருகிறார்கள் என்ற தகவல்.
நல்லதே நடக்கும்.
@Alien18R@Pa_Siva விகடன் முதல்வருக்கு கடிதம்னு வரிசையா ஏர்ஷோ, கள்ளக்குறிச்சின்னு லிஸ்ட் பண்ணி ஏன் ஒரு எழவுக்குக் கூட போகலன்னு எழுதி இருக்கான். ஆனா எல்லாருக்கும் இதே போல நிவாரணங்கள் அறிவித்து வழங்கப்பட்டது. அவனுங்க காண்டு ஏன் முதல்வர் கரூர் போனாரு நாம இன்னும் போகலையேன்றதுதான்.
பெயரில்லை என்பதால் மரியாதை தரணுமா என்ற கேள்வியே சுத்த அபத்தம். மரியாதை எல்லாருக்குமான உரிமை. ஒருவருக்கு மரியாதை தர அவர் பெயரோ வயதோ பாலினமோ ஒரு factor ஆகக் கூடாது. அவமரியாதை மட்டுமே செயல்கள் மூலம் சம்பாதிப்பது.
@googo654 திமுக அகற்றப்பட வேண்டியதுன்னு மக்கள் விரும்புறாங்கன்னா, அதுக்கு நேரடியா அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களித்தாவே போதுமே. தவெக கூட எதுக்கு கூட்டணி வைக்கணும்? கூட்டணி வெச்சுட்டு பாஜகவுக்கு அழுத்தம் குடுக்குறது பதிலா, தவெக, திமுக கூடவே கூட்டணி வெச்சுட்டு நேர்மையா சண்டை செஞ்சு பாக்கலாமே