நடந்துமுடிந்த தேர்தலில் சாதிபார்த்து வாக்களிக்கும் முறையை ஒழித்து விட்டதாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்
ஆனால் சமூகத்தில் நிலவும் இந்த சாதிக்கொடுமைகளை எப்படி ஒழிப்பது ?
சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்கும் சட்டத்தை இயற்றுங்கள்
சட்டம் இயற்றும் அதிகாரம் உங்களிடம் தான் உள்ளது @TVKVijayHQ
#JustNow || ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு இது ஏதோ Clerical Error போல தவெக அரசு கடக்க முயற்சி.. கோயில் நில ஊழலில் பின்னால் யார் அந்த Powercenter? சிபிஐ விசாரிக்க வேண்டும் - இபிஎஸ்
#Palani | #Land | #Issue | #TVKGovt | #EPS | #PolimerNews
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
#தவெக அரசு அதிரடி 🔥🔥🔥
ஊழலற்ற தூய ஆட்சியின் அடுத்த எபிசோடு
பழனி சார் பதிவாளர் சஸ்பென்ட்
இதுல முக்கியமான விஷயம்
அவர் கொடைக்கானல் ஆப்பீசில இருந்து இந்த பத்திர பதிவு செய்யுறதுக்காக ஒரு நாள் மட்டும் பழனிக்கு டிரான்ஸ்பரல அனுப்பி நிலத்தை பதிவு பண்ணி இருக்காங்க. பக்கா பிளானிங்.
👏👏👏
ஆனா செய்தி வெளியில் தெரிஞ்சதால் அந்த அதிகாரி மீது மட்டும் ஆக்ஷன். 😌😌
அவரை டிரான்ஸ்ஃபர் செய்தவர் மீது ஆக்ஷன் இருக்கா தெரியல!
கோவில் நிலத்தை எழுதி கொடுத்த அறநிலைய துறை அதிகாரிகள் மீது ஆக்ஷன் இருக்கா தெரியல!
அந்த நில விற்பனை பத்திரம் ரத்து ஆச்சா தெரியல!
100 கோடி ரூபாய் சொத்தை விற்பது, துறை அமைச்சருக்கு எப்படி தெரியாமல் போச்சு? அந்த நிலத்தை வாங்கியவர்கள் யார்? அரசே ஒரு அதிகாரியை அவர்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்து அனுப்பும் அளவுக்கு அவர்களுக்கு என்ன செல்வாக்கு?
அண்ணன் தப்பு செஞ்சாலே தட்டி கேட்போம் என சொன்ன #தவெக நண்பர்கள் இதெல்லாம் அமைச்சர்களை கேப்பாங்க இல்லே? "மக்கள் பணத்தை தொடவும் மாட்டோம் தொட்டவனை விடவும் மாட்டோம்" டயலாக் இனி ஆக்ஷனா மாறுமா?
கேளுங்க நண்பா..
"சும்ம வந்தவர கூப்டு அடிச்சிருக்காங்க... கம்ப்ளைன்ட் கொடுத்தா போலீகாரங்க முன்னாடியே இன்னும் 2 நாள்ல உன்ன என்ன பண்றேன் பாருனு மிரட்டுறான்..."
சென்னை கோடம்பாக்கத்தில் கஞ்சா போதையில் இளைஞனை அடித்து தகராறு... அதிகரித்து வரும் போதை பொருள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள்
#Kodambakkam | #Youngster | #Atrocity | #Police | #PolimerNews
ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?
1.) தலைக்கவசம் அணியாவிட்டால்... அபராதம் ₹1,000/-
2.) வாகனங்களை நிறுத்தக்கூடாத இடத்தில் (No-parking zone) நிறுத்தினால்... அபராதம் ₹3,000/-
3.) காப்பீடு (Insurance) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,000/-
4.) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்... அபராதம் ₹10,000/-
5.) நுழையக்கூடாத பாதையில் (No-entry zone) சென்றால்... அபராதம் ₹5,000/-
6.) வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசினால்... அபராதம் ₹2,000/-
6.) மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Certificate) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,100/-
7.) இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால்... அபராதம் ₹2,000/-
ஆனால்:
1.) பழுதான போக்குவரத்து சிக்னல்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
2.) சாலையில் உள்ள பள்ளங்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
3.) ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
4.) தெரு விளக்குகள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
5.) சாலை முழுவதும் பரவியிருக்கும் குப்பைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
6.) சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்கள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
7.) தோண்டப்பட்டுச் சரி செய்யப்படாமல் விடப்பட்ட சாலைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
8.) பள்ளத்தில் விழுந்து காயமடைந்தால்... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
9.) தெரு மாடுகள் அல்லது விலங்குகள் வாகனத்தின் மீது மோதினாலோ அல்லது நாய் கடித்தாலோ... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
10.) சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவுநீர்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
பொதுமக்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றும், அபராதம் செலுத்துவதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என்றும் தோன்றும் நிலை இது. நிர்வாகம், நகராட்சி மற்றும் அரசு — இவர்களில் யாருமே ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை.
அவர்களுக்கு எந்த விதிகளும் பொருந்தாது. எந்தவொரு அலட்சியத்திற்கும் அவர்கள் பொறுப்பாக்கப்படுவதில்லை.
அவர்களும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டாமா???
குடிமக்கள் கடினமாக உழைக்க வேண்டும், இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும், வரிகளைச் செலுத்த வேண்டும், அபராதங்களைச் செலுத்த வேண்டும், அரசு கஜானாவை நிரப்ப வேண்டும்; அதன் பிறகு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்.
எஸ்.ஜானகி மறைவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!
இந்திய திரை இசையின் இணையற்ற இசைக்குயில் எஸ்.ஜானகி அம்மா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், இந்தி உட்பட 17 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசை பாடல்களை பாடிய பெருமைக்குரியவர் எஸ்.ஜானகி அம்மா ஆவார்கள். மனித வாழ்வின் அனைத்து உணர்வுகளையும் தன்னுடைய குரலின் வழியாக பதிவு செய்த மகத்தான கலைஞர் அவர்.
சிங்கார வேலனே தேவா செந்தூரப்பூவே மாதா உன் கோயிலில் உட்பட அவர் பாடிய பாடல்கள் காலத்தை கடந்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தவை. பல்வேறு மாநில மொழிகளில் பாடியதற்காக தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
2012 ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டபோது தன்னுடைய இசை சாதனைக்கு இந்த விருது காலம் கடந்த அங்கீகாரமாக உள்ளது என்று கூறி அந்த விருதை ஏற்க மறுத்த சுயமரியாதை மிக்கவராகவும் எஸ்.ஜானகி திகழ்ந்தார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு #CPIM சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களை வஞ்சிக்க துடிக்கும் கேடு கெட்ட மோடி அரசு...
விளிம்பு நிலை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த மதவாத கும்பல் எதிர்த்து மிக பிரிய போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்...
#வேண்டாம்_பாஜக#ModiFailsIndia
2026 ஜூன் 29 அன்று மாநகர மேயர், துணை மேயர் மற்றும் 60 கவுன்சிலர்கள் முன்னிலையில் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு தனியார்மயமாக்குவதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இன்று தவெக அரசு, மாநகராட்சி ஆணையரின் ஒப்புதலை மட்டுமே வைத்துக்கொண்டு, தலைமைச் செயலகத்தில் இருந்து 4135 கோடி மதிப்புள்ள விநியோக ஒப்பந்தத்தை "சூயஸ் நிறுவனத்திற்கு" வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இது முழுக்க முழுக்க மக்கள் நலனுக்கு எதிரானது மற்றும் உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயலாகும்.
தவெக அரசு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் போராட்டங்கள் தொடரும். - *DYFI சேலம்*
#Dyfi
#அறிவோம்_தவெக
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த மாதம் அம்மோனியா கேஸ் கசிவால் 18 தொழிலாளர்கள் உயிரிழந்த மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இன்னமும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் நேற்று அந்த ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
#WATCH | அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் ரயிலில் மது அருந்தியபடி இருவர் பயணித்ததால் அதிர்ச்சி..புறநகர் ரயிலில் புகைபிடித்தவாறும் அத்துமீறலில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
#train#alcoholconsumption#News18TamilNadu
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியை ஒப்பந்த முறையில் மேற்கொள்ளும் அவர்லேண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.
அந்நிறுவனம் குப்பைகளை அள்ளாமல் மண்ணை அள்ளி போலி எடைக்கணக்கின் மூலம் பல கோடி ரூபாய் இழப்பீட்டினை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் ஊழல் , அரசுக்கு வருவாய் இழப்பு என சட்டவிதிகளை மீறியுள்ளது.
மாநகராட்சி ஆணையரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட அந்நிறுவனம் மீண்டும் தனது முறைகேட்டை தொடர்கிறது.
தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
#Madurai_Corporation
#Clean_Madurai