த வே க அரசால் தான்தோன்றித்தனமான வழங்கப்பட்ட 31 அரசு பணியை சரியான நபர்களுக்கு சென்றடைய உழைத்த நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்களுக்கும்,
மாண்புமிகு நீதியரசருக்கும் நன்றி !
@_kabilans அழுத்தம் கொடுத்து வாழ்த்து ��ெய்தியை நீக்கியதாக சொல்கிறாய்;
சமாதானம் பேசியும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் கட்சியை விட்டு விலகியதாய் சொல்கிறாய்;
யாருடா நீ...
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அறப்போராளி சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் நலனை உறுதி செய்வதோடு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
@narendramodi@AmitShah@dpradhanbjp@EduMinOfIndia
தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 18 நாட்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் தனது உடலை வருத்தி, சாவின் விளிம்பில் நின்று அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் லடாக் மண்ணின் கல்விப் புர��்சியாளரும், சூழலியல் அறிஞருமான மதிப்புக்குரிய சோனம் வாங்சுக் அவர்கள். ஒரு நாட்டின் எதிர்காலமாகத் திகழக்கூடிய கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காப்பதற்காக, தன்னுயிரைத் துச்சமென மதித்து அவர் மேற்கொண்டு வரும் இந்த உண்ணாநிலை அறப்போர், ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் ஆன்மாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நாட்டின் ஆளும் வர்க்கமோ எவ்வித சலனமும் இன்றி, ஒரு மனிதனின் உயிர் போகும் நிலையைக் கண்டும் காணாமல் மௌனம் சாதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒன்றிய பாசக அரசு கொண்டு வந்த இந்த 'நீட்' (NEET) போன்ற ஒற்றைச் சாளரத் தேர்வு முறையானது, தகுதி, திறமை என்ற பெயரால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் ஒரு பெரும் பகற்கொள்ளை என்பதை நாம் தொடக்கம் முதலே எச்சரித்து வருகிறோம். இந்த ஆண்டு அரங்கேறிய வினாத்தாள் வெளியீடுகளும், முறைகேடுகளும் நமது ��ச்சரிக்கையை முற்றிலும் உண்மையாக்கியுள்ளன. மாதக்கணக்கில், ஆண்டுகணக்கில் தூக்கத்தைத் தொலைத்து, படித்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு மாபெரும் கல்விச் சந்தையாக இந்தத் தேர்வு வாரியம் மாறியிருக்கிறது. இது வெறும் நிர்வாகத் தோல்வி அல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் நடத்தப்பட்ட ஒரு வன்முறை.
இந்த அநீதிக்கு எதிராகவும், வினாத்தாள் வெளியீட்டிற்குப் பொறுப்பேற்று ஒன்றிய பாசக அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும்தான், டெல்லியில் போராடும் இளம்தலைமுறையினரோடு கைகோர்த்து சோனம் வாங்சுக் களம் கண்டுள்ளார். 18 நாட்களைக் கடந்த உண்ணாநிலையின் காரணமாக அவரது உடல் எடை 9 கிலோவுக்கும் மேல் குறைந்து, தசை இழப்பு ஏற்பட்டு, இதயம் பலவீனமடைந��து கவலைக்குரிய நிலையில் உள்ளார். அவருடைய வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட '3 Idiots' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, "கல்வி என்பது மனப்பாடம் செய்வதல்ல, அது சிந்தனையைத் தூண்டு��து" என்று கைதட்டி இரசித்த இந்த நாடு, உண்மை வாழ்க்கையில் அதே சிந்தனைக்காக ஒரு மாமனிதன் சாவின் விளிம்பில் போராடும்போது, தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது பெரும் அவமானம். அதே படத்தின் தமிழாக்கத்தில் நடித்து வெற்றிகண்ட முதலமைச்சர் விஜய் அவர்கள் பாசக அரசின் கொடுங்கோன்மைக் குறித்து அமைதி காப்பதும், சோனம் வாங்சுக் குறித்து குரல் எழுப்பாததும் பெரும் ��ருத்தமளிக்கிறது.
ஒன்றிய அரசு இனியும் காலங்கடத்தாமல், ஜந்தர் மந்தரில் போராடி வரும் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நீட் போன்ற ஆதிக்கத் தேர்வு முறைகளை முற்றிலும் கைவிட்டு, வினாத்தாள் வெளியீட்டிற்குக் காரணமானவர்கள் மீதும், அதற்குப் பொறுப்பான கல்வி அமைச்சகத்தின் மீதும் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்��ும் என நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
கல்வி என்பது வர்த்தகப் பண்டமல்ல அது எளிய மக்களின் வாழ்வாதார உரிமை! உண்ணாநிலை போராட்ட முறையை கைவிட வேண்டும் எனும் கோரிக்கையோடு நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்கப் பாடுபடும் சோனம் வாங்சுக் அவர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்குகிறது.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்க��ணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
I urge the Union Government to immediately hold talks with activist Sonam Wangchuk, who is on a hunger strike protesting against the NEET exam irregularities, to ensure his well-being, and take measures to fulfill the students' demands.
@narendramodi@AmitShah@dpradhanbjp@EduMinOfIndia
In the Jantar Mantar area of the capital city, Delhi, for more than the past 18 days, Sonam Wangchuk - an educational revolutionary and environmentalist from the land of Ladakh - has been putting himself through immense suffering without consuming food, standing on the brink of death to wage a righteous protest. This fasting protest he is undertaking, disregarding his own life to protect the educational rights of crores of poor, simple, and middle-class students who represent the future of this nation, is shaking the very soul of the entire Indian Union. However, the ruling class of this country remaining silent and indifferent, feigning ignorance even while witnessing a man's life hanging in the balance, is highly condemnable.
Naam Tamilar Katchi has been warning from the very beginning that this Nationwide examination system like 'NEET' propagated by the Union BJP Government is a massive daylight robbery that shatters the medical dreams of poor and simple students. The question paper leaks and irregularities that unfolded this year have proven our warnings absolutely true. This exam board has turned into a massive educational marketplace, ruining the future of lakhs of students who lost their sleep studying for months and years. This is not just an administrative failure; it is an act of violence inflicted upon the entire educational system of this country and its future generation.
It is against this injustice, and by insisting that the Union BJP Government's Education Minister Dharmendra Pradhan must immediately resign taking responsibility for the question paper leak, that Sonam Wangchuk has taken to the field, joining hands with the youths protesting in Delhi. Due to the hunger strike exceeding 18 days, his body weight has dropped by over 9 kg, resulting in muscle loss and a weakened heart, leaving him in a critical condition. It is a matter of great shame that this nation, which watched the movie '3 Idiots' inspired by his life and clapped in admiration saying "education is not about rote learning, it is about stimulating thought," is now changing TV channels and watching silently when the real-life great man is fighting on the brink of death for that very same ideology.
It is also deeply regrettable that Chief Minister Vijay, who acted and succeeded in the Tamil adaptation of the same movie, remains silent on the tyranny of the BJP government and has failed to raise his voice for Sonam Wangchuk.
Without delaying any further, the Union Government must immediately hold talks with Sonam Wangchuk and the student representatives protesting at Jantar Mantar. On behalf of the Naam Tamilar Katchi, I urge the Union Government to completely scrap dominant exam systems like NEET and take strict legal action against those responsible for the question paper leak and the Ministry of Education that oversees it.
Education is not a commercial commodity; it is the livelihood right of ordinary people! While appealing to him to end his hunger strike, Naam Tamilar Katchi extends its absolute support to the righteous struggle of Sonam Wangchuk, who is striving to protect the future of our children.
- Senthamizhan Seeman
Chief Coordinator | NTK
'கள் தடை நியாயமானது என நிரூபித்தால் ரூ.10 கோடி தருகிறோம்.''
"கருணாநிதி, ஜெயலலித���, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் கள் இயக்கத்தைக் கண்டு ஓடியவர்கள்" - விவசாய சங்கத் தலைவர் நல்லசாமி.
Nallasamy | FarmersAssociation | Toddy | Agriculture
#Newstamil24x7 #Secretariat
மதச்சார்பின்மைக்கு எதிரான, ‘வந்தே ��ாதரம்’ பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்குவதா? ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்காது தவெக அரசு அமைதி காப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
அரசின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டுமென ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மதச்சார்பின்மையை அடிநாதமாகக் கொண்டு, பன்மைத்துவத்தை நாட்டின் அடையாளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
1882ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட 'ஆனந்தமடம்' புதினத்தின் மூலம் புகழ்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடல் நாட்டுப்பற்றை வலியுறுத்துவது எனக் கூறப்பட்டாலும், அப்பாடலில் இந்து மதத்தின் கடவுளர்களைப் பற்றிய வரிகள் இருப்பதால், எல்லா சமயத்தவரும் அதனை ஏற்க முடியாது என்பதைக் கருதியே, அப்பாடல் நாட்டுப்பண்ணாக அறிவிக்கப்படாது தவிர்க்கப்பட்டது. அப்படியிருக்கையில், அதனை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கித் திணிப்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் கொடுஞ்செயலாகும்.
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய, ‘ஜன கண மன’ எனும் பாடல் நாட்டுப்பண்ணாக இருக்கையில், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வலியத் திணித்துப் பாடக் கோருவது தேவையற்ற சிக்கலை உருவாக்குவதாகும். ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் இத்தகைய எதேச்சதிகாரப்போக்கு நடவடிக்கைக்கு ��மிழ்நாட்டை ஆளும் தவெக அரசு குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட பதிவுசெய்யாது அமைதிகாப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ என்பதைக் கொள்கையாக அறிவித்துவிட்டு, மதச்சார்பின்மைக்கு ஒன்றிய அரசால் அச்சுறுத்தல் வரும்போது அதனை எதிர்க்காது முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது.
ஆகவே, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, ‘வந்தே மாதரம்’ எனும் மதச்சார்புக் கொண்டப் பாடல��� அரசு நிகழ்வுகளில் கட்டாயமாக்கும் முடிவைப் பின்வாங்க வேண்டுமெனவும், அதனைச் செய்யக்கோரி தவெக அரசு எதிர்ப்புத் தெரிவித்து, அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழினம் தன்னை மறந்து,
தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை, உயர்ந்த நாகரீகத்தைப் பற்றியெல்லாம் எண்ணாத காலம். தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு எண்ணினர் தமிழர்.
அந்நியர் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவது சிறப்பு, ப���ருமையென்று நினைத்தனர்.
இத்தகைய இருண்டகாலத்தே இருள்கிழித்து எழும் கதிரவனாய்த் தோன்றினார் நமது ஐயா 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் அவர்கள்.
தமிழகமெங்கும் சென்று, செந்தமிழின் சிறப்பு, தமிழர்ப் பண்பாடு, சைவச் சமயத்தின் உயர்வு போன்ற பலவகைப் பொருள்பற்றிப் பாங்குறப் ப��சி, தமிழரிடையே ஒரு பெரும் விழிப்பினை ஏற்படுத்திய பெருந்தகை.
திருக்குறளே தமிழர்த் திருமறை, தமிழர் மறை நூல் அதுவே தமிழர் அறநூல் அதனைத் தமிழர் அனைவரும் கற்கவேண்டும், வாழ்வில் ஏற்றுப்போற்றவேண்டும், திருக்குறள் தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டும் என்றார்.
திருவள்ளுவர் ஆண்டைத் தமிழர் வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தமிழர்!
தனித்தமிழ் அறிஞர் நம்முடைய ஐயா மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மு��்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
ம��்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்த�� சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி
3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே
வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள��கிய
நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத��தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
திமுக, விசிக ஏவல்நாய்களாக இருந்த வன்னியரசு, சுந்திரவள்ளி போன்றோர் எந்த காரணமும் இன்றி 24 மணிநேரமும் சீமானை இழிவாக பேசிக்கொண்டு இருந்தனர்! விகடன் பேட்டியில் அவர்களை தம்பி, தங்கை என்று பெயர் குறிப்பிட்டு பேசினார்! எனக்கு கோபம்! ஆனால் அந்த மாண்பு தான் சீமான்!
@AllAbout90sLife@akshay5137 Answer is my favorite all-rounder, who can hold this bowling pose in the air for about one second.
Shaun Pollock is also one of the best all-rounder.
2024 செயற்குழுக்கூட்டத்தில் IREL அணுக்கணிம சுரங்கத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது தவெக...
இப்போ ஆட்சிக்கு வந்ததும் அதே திட்டத்தை செயல்ப���ுத்த தற்குறி social media influencer களை வச்சு வீடியோ போட்டுக்கிட்டு இருக்கானுங்க 😤😤
நான் மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! நாம் தமிழர் மீதும், சீமான் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள் சேர்ந்து நில்லுங்கள், நம்பிக்கை இழந்தவர்கள் விலகி சீமான் செய்ய தவறியதாக சொல்லும் செயல்களை தாங்கள் தனி கட்சியோ,இயக்கமோ ஆரம்பித்து செயல்படுத்���ுங்கள்! நன்றி 🙏