🌿 வீ தி லீடர்ஸ் ஃபவுண்டேஷன்
ஆகஸ்ட் மாதம் முழுவதும், வீ தி லீடர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதம்” கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் நாம் அனைவரும் உறுதியேற்போம்:
🌱 மரங்களை நட்டு வளர்ப்போம்.
♻️ ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்.
💧 நீரையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்போம்.
🧹 நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம்.
🌍 சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்.
“இன்று நாம் பாதுகாக்கும் இயற்கையே, நாளைய தலைமுறையின் வாழ்க்கை.”
வாருங்கள்… ஒன்றிணைவோம்!
பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
@annamalai_k@WTLFoundation
வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் கடற்கரை தூய்மை இயக்கம் நடைபெற்றது - வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை இதனைத் தொடங்கி வைத்தார்.
We The Leaders | Annamalai | Beach Cleanup Drive
#EnvironmentalAwareness#Newstamil24x7
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அண்ணாமலை - உற்சாக வரவேற்பளித்த We The Leader அமைப்பினர்.!
#Annamalai | #WeTheLeader |
Answering @annamalai_k Annas call for environmental protection, today marks the beginning of our August mission🌿
@wtl_dharapuram and @WTL_USA joined hands to remove invasive Seemai Karuvela trees from village water bodies and sow native palm seeds @Kundadam for a greener future.
தமிழகத்தின் 1,076 கி.மீ கடற்கரையையும், அப்பகுதியில் வாழும் மீனவர்கள் மற்றும் கடல் உயிரினங்களையும் அனைத்து வகை கழிவுகளிலிருந்தும் பாதுகாக்கும் நோக்கத்தோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமான ஆகஸ்ட் மாதத்தில் 14 கடலோர மாவட்டங்களிலும் பிரம்மாண்ட கடற்கரை தூய்மை இயக்கத்தை முன்னெடுக்கிறது “We The Leaders” அமைப்பு.
மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கடலின் இயற்கை வளத்தை மீட்க ஒன்றுபடுவோம்! இணைந்து பணியாற்றுவோம்!
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்!
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
நமது இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பழக்கத்திற்கு எதிராக, ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரில் இருந்து, ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் வரை, 135 கிலோமீட்டர் தொலைவு, விழிப்புணர்வு நடைபயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சகோதரர் திரு. அன்பரசு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது வெறும் நடைபயணம் அல்ல; லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை காக்கும், சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடு. வெயில், களைப்பு என அனைத்துத் தடைகளையும் கடந்து, "போதை இல்லாத தமிழகம்" என்ற உயரிய இலக்கை, மக்களிடம் கொண்டு சென்ற சகோதரர் திரு. அன்பரசு அவர்களின் இந்த முயற்சி அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
நமது சமூகம் போதையிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான மற்றும் பொறுப்புள்ள சமூகமாக உருவாக, நாம் அனைவரும் உறுதியேற்போம். இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம்.
காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, நிலுவையில் இருந்த ஏப்ரல், மே, ஜூன் 2026, மூன்று மாதங்களுக்கான ஊதிய நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ள தவெக அரசுக்கு, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இத்திட்டத்தின் பணிகள் எந்தத் தடையும் இன்றித் தொடரவும், இந்தத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளின் பணிக்காலத்தை 31.12.2027 வரை நீட்டித்து, அதற்கான அரசாணையை விரைவில் வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
Here’s the policy paper prepared by We the Leaders Foundation for a clean and sustainable Tamil Nadu, drawing inputs from experts in the fields of environment and health.
https://t.co/sZhjewHRWp
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation
Hearty congratulations to Thiru Praveen Chitravel avl and Thiru Selva Prabhu Thirumaran avl on their stellar performance at the Commonwealth Games 2026, winning Silver and Bronze in the Triple Jump.
It makes every Indian, and especially all of us in Tamil Nadu, immensely proud to see two of our very own shine on the world stage. Their dedication, hard work, and relentless spirit inspire our youth. Wishing both of our champions even greater success ahead.
இன்றைய தினம் காலை, கன்னியாகுமரியில், @WTLFoundation சார்பில் "சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்குவோம்" இயக்கத்தை, கடற்கரை தூய்மைப் பணி நிகழ்வுடன் தொடங்கி வைத்தோம். ஏராளமான இளைஞர்களும், தன்னார்வலர்களும், தங்கள் குடும்பங்களுடன் உற்சாகமாக இணைந்தது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. மாற்றத்தின் முன்னோடிகளாக இன்றைய இளைஞர்கள் நிற்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.
இயற்கை நமக்குக் கிடைத்த செல்வம் அல்ல; வருங்கால தலைமுறையிடமிருந்து நாம் கடனாகப் பெற்றிருக்கும் பொறுப்பு. கடலைக் காப்பதும், நிலத்தைக் காப்பதும், மரங்களை வளர்ப்பதும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.
இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலைக் காக்கும் பணிகளில் அனைவரும் இணைவோம். சிறிய செயல்களே பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதை முழுமையாக வளர்க்க உறுதியேற்போம். நம் இயற்கையைப் பாதுகாப்போம்; நம் தமிழ்நாட்டை பசுமையாக்குவோம். (1/2)