கேரளாவில் மலைகள் இல்லையா? தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா?
கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
குறிப்பாக, மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டின் போது, கேரள முதலமைச்சர் திரு.சதீசன், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் கேரளாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அதற்கு, கேரளாவை இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக கேரள முதலமைச்சர் அலுவலகமே தெரிவித்துள்ளது. இது உண்மையா ?
கேரளாவில் மலைகள் இல்லையா?
அங்கு கல், பாறை, கட்டுமானத் தேவைக்கான கனிம வளங்கள் இல்லையா?
கேரளாவின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டின் மலைகளையும் பாறைகளையும் ஏன் அழிக்க வேண்டும்?
தமிழ்நாட்டின் கனிமவளம் என்பது, பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கை உருவாக்கிய அரிய வளம். ஒரு முறை மலைகளையும் பாறைகளையும் அகழ்ந்து எடுத்துவிட்டால் அவை மீண்டும் உருவாகப் போவதில்லை.
ஒரு குவாரியில் இருந்து கல் மட்டும் வெளியேறுவதில்லை.
ஒரு மலையின் இயற்கைச் சமநிலை சிதைக்கப்படுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. நிலத்தடி நீரின் நிலை மாறுகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் சீர்குலைகிறது. இறுதியில் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிறது.
இத்தகைய சூழலில், தமிழ்நாட்டிற்குள்ளேயே சாலை, பாலம், வீடமைப்பு, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு கட்டுமான மூலப்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நமது தேவையை முழுமையாக உறுதி செய்யாமல் பிற மாநிலங்களின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வத்தை அனுப்புவது எந்த வகையிலும் தொலைநோக்கான நிர்வாகமாக இருக்க முடியாது.
அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் நல்லுறவு என்ற பெயரில் தமிழ்நாட்டின் மலைகளை இழக்க முடியாது.
கேரளமாக இருந்தாலும், கர்நாடகமாக இருந்தாலும், ஆந்திரமாக இருந்தாலும், எந்த மாநிலத்தின் கட்டுமானத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையை அழிப்பதை ஏற்க முடியாது.
எனவே, கேரளாவுக்கு தனிப்பட்ட விலக்கு அளிப்பது குறித்த பரிசீலனையை, தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டின் உள்நாட்டுத் தேவையை முதலில் முழுமையாகக் கணக்கில் கொண்டு, இயற்கை வளத்தின் இருப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் தேவைகளை உறுதி செய்த பின்னரே கனிமவளப் பயன்பாடு தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும்.
வெளிமாநிலங்களுக்கு கனிமவளங்களை எடுத்துச் செல்வதில் விதிவிலக்குகளுக்கு இடமளிக்காமல், சட்டவிரோதக் குவாரிகள், அதிகப்படியான அகழ்வுகள் மற்றும் கனிமவளக் கடத்தலை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#TamilNaduMinerals #ProtectTamilNaduResources
#tamil
#தமிழக_கனிமவளத்தை_காப்போம்
#StopMineralLoot #ProtectTamilNaduResources #கனிமவளம்தமிழகத்திற்கே
1,040 கோடி ரூபாயைத் தனது தனிப்பட்டச் சொத்து மதிப்பாகவும், ஏறக்குறைய 6,000 கோடி ரூபாயைக் குடும்பச் சொத்து மதிப்பாகவும் வேட்பு மனுவில் கணக்குக் காட்டியிருக்கும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில், எந்த வருமான உச்சவரம்பும் அளவுகோலாக வைக்கப்படவில்லை.
அதேசமயம், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் ஒரு குடும்பத்தின் வருமானம் இருந்தாலே அக்குடும்பத்துக்கு இலவச எரிவாயு உருளைக்கான தொகையைப் பெற தகுதியில்லை.
சூப்பரான மாற்றம்ல!
கேதார்நாத் பாண்டே(ராகுல் சாங்கிருத்தியாயன்) பிறப்பால் ஒரு
பிராமணர்.
ரஷ்யாவின் #வால்கா நதிக்கரையில்
தெடங்கிய ஆரிய நாடோடி மேய்ச்சல் சமூகம் சுடாத கதைகளே இல்லை.
நெருப்பு குளிரில் இருந்து அவனைக் காப்பாற்றியது.அது அவனுக்குப் புனிதம்.அந்த வழிபாட்ட நம்ம தலையில் கட்டிவிட்டான்.
😂😂
அண்ணன் சீமான் அவர்களை ஆதரித்து திருமா அவர்களை விமர்சித்ததுக்கு சகோதரர் குபேந்திரன் அவர்களை "#விசிக_ரவுடிகள்" தாக்கியுள்ளனர்.
இதுதான் உங்க வளர்ப்பா திருமாவளவன் @thirumaofficial அவர்களே.. 📉🙎
#VCK | #NTK
Karl Marx famously said you can't have Capitalism and Democracy.
And you see it is impossible, as he knew, to have Democracy when all your Politicians are bribed and all your Media is owned by the richest.