தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்!
#DravidianModel அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.
தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!
மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்!
வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!
#தென்காசி #மலையடிப்பட்டி
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு எதுவும் நடக்கவில்லை என்று நா கூசாமல் பொய் பேசுகிறார் அமைச்சர் நிர்மல் குமார். பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து குதிரை பேரம் செய்துகொண்டிருக்கும் முதல்வர் திரு.விஜய் அவர்களும், நிழல் முதல்வராக செயல்படும் ஆதவ் அர்ஜுனாவும் ஒன்றை உணர வேண்டும்.
உங்களின் பித்தலாட்ட்டங்கள் மக்களுக்கு தெரிந்துவிட்டது. உங்கள் சாயம் வெளுத்துவிட்டது.
#TVKFails
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (19.5.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி அவர்கள் தி.மு.கவில் இணைந்தார்.
அதுபோது எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின், செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
#DMK
Dear நண்பா நண்பீஸ் 🔥 🔥 விடுவோமா
திமுக ஆட்சியில் இரவு 10மணிக்கு மூடப்பட்ட மதுபான கடைகளை மீண்டும் இரவு 10 மணிக்கு மூட உத்தரவிட்டார்
முதலமைச்சர் @actorvijay அவர்கள்
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
மன்னார்குடியில் கஞ்சா போதையில் தாத்தா, பாட்டியை எரித்துக் கொன்ற பேரன்! தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு முழுவதுமாக கேள்விக்குறியாகி உள்ளது.
#TVKFails
VIDEO | Tamil Nadu polls: Minister I Periyasamy casts vote in Dindigul.
#AssemblyPollsWithPTI#TamilNaduPollsWithPTI
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)
வெல்லட்டும் தமிழ்நாடு! முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையில் மீண்டும் ஒரு திராவிட மாடல் ஆட்சி! திருவண்ணாமலை முதல் விழுப்புரம் வரை அலையெனத் திரண்ட மக்களின் பேராதரவு, தமிழ்நாட்டில் மீண்டும் உதயசூரியன் உதிப்பதை உறுதி செய்கிறது!
#VoteForDMK