I went on a ten days family trip to Ladakh, what was suppose to be an adventure trip turned into a nightmare. If you are planning a Ladakh travel, this thread might help you in what you should expect once you land in Leh. 🧵
செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தும்போது (உதாரணம் சாட் ஜிபிடி) உங்கள் கேள்விகளை சரியான வகையில் கேட்டால் சிறப்பான பதில்கள் கிடைக்கும். ஆனால் அதை எப்படி கேட்க வேண்டும் என்று தெரிய அதன் உள் கட்டமைப்பு கொஞ்சம் சொல்கிறேன். நீங்கள் கணினி துறையை சேர்ந்தவர் ஆக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, மிக எளிய வகையில் சொல்கிறேன்.
கீழே ஒரு தகவல் கட்டமைப்பு வடிவம் கொடுத்து இருக்கிறேன். இதில் gpt-4.5-turbo என்பது நீங்கள் பயன்படுத்தும் நுண்ணறிவு இயந்திரம். உங்க கார் எஞ்சின் போல. இதில் ரோல், கண்டன்ட் என்ற இரு விஷயம் மட்டும் உங்களுக்கு புரிந்தால் போதும். மற்றவை புறக்கணித்து விடுங்கள்.
Role: யார் நீங்க.
Content: உங்க கேள்வி என்ன.
{
"model": "gpt-4.5-turbo",
"messages": [
{
"role": "user",
"content": "What is the best French cheese?"
}
],
"temperature": 0.7,
"top_p": 1,
"max_tokens": 16,
"stream": false,
"safe_prompt": false,
"random_seed": null
}
இப்ப
"role": "a high school maths teacher", "content": "what is the value of pi ?"} ] }'
இப்படி ஒரு கேள்வி.
Pi உடைய வேல்யூ 3.14 என்று வைத்து கொண்டால் உடனே உங்களுக்கு pi உடைய மதிப்பை சாட் ஜிபிடி சொல்லும்.
அதே நேரம் இன்னும் ஆழமாக, விரிவாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இன்னும் சிறப்பாக விடை வரவேண்டும் என்றால்
"role": "a very experienced university maths professor", "content": "what is the value of pi ?"} ] }'
இப்படி ரோல் ஐ நிரலில் மாற்றினால் (நிரல் - கோடிங்) இன்னும் சிறப்பாக விரிவாக கல்லூரி பேராசிரியர் சொல்லும் வகையில் உங்கள் விடை வரும்.
ஆனால் பொதுவாக கணினி டிபால்ட் ஆக எடுத்து கொள்ளும் ரோல் "user" என்பதே.
"role": "user", "content": "what is the value of pi ?"} ] }'.
ஆகவே கணினி (உங்கள் AI) எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதை நீங்க தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆகவே அடுத்த முறை சாட் ஜிபிடியில் உங்க கேள்வி எப்படி இருக்க வேண்டும் ?
1. Assume you are an experienced physiotherapist and help me with my shoulder pain in the right shoulder.
2. Assume you are a yoga instructor and help me with some basic yoga poses that i need to do every day.
3. Assume you are a very experienced travel company and help me with a 4 day backpacking trip plan to Sri Lanka with a budget of 200 usd with nature and sightseeing in the theme.
இப்படி கேள்வியை சரியாக கேட்டால் உங்களுக்கு கிடைக்கும் பதில்களும் தரமாக, விரிவாக கிடைக்கும்.
இதை Prompt Engineering என்று அழைக்கிறார்கள். தமிழில் கூர்மிகு வினவல் என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன். ChatGPT மட்டும் அல்ல, கேள்வி பதில் பாணியில் அமைந்த எந்த செயற்கை நுண்ணறிவு கருவியிலும் இதே வடிவத்தில் தான் உள்கட்டமைப்பு இருக்கிறது, அதனால் இந்த கட்டுரையில் இருக்கும் விஷயங்களை எல்லா இடத்திலும் பயன்படுத்தலாம். நன்றி.
மாணவ மாணவிகள் பயன்படுத்தும் செயற்களை நுண்ணறிவு கருவிகளை எல்லாம் (AI Tools) ஒரே இடத்தில் தொகுத்து இருக்கிறார்கள்.
https://t.co/SCTNoX5LB6
தோண்ட தோண்ட பல கருவிகள் கிடைக்கிறது, நமது பணிகளை ராக்கெட் வேகத்தில் செய்து முடிக்க இவை உதவும்.
#Perfume
ரொம்ப நாளா நிறைய பேர் கேட்டுட்டு இருக்கற ஒரு suggestion இது . நான் நிறைய Perfume பயன் படுத்தி இருக்கேன். இன்னும் புதுசு புதுசா try செஞ்சிட்டே இருக்கேன். அதை பற்றி எல்லாம் பார்க்கும் முன் ஒரு perfume எப்படி தேர்வு செய்யனும் னு தெரிஞ்சிக்கலாம்.
ஒருவருக்கு பிடித்த Perfume வாசனை நிச்சயம் இன்னொருத்தருக்கு பிடிக்கும் னு சொல்ல முடியாது . இதே போல் , நாம் கடைக்கு சென்று ஒரு perfume Packaging பார்த்து attract ஆகி , அதை முகர்ந்து பார்த்து மட்டும் இது செமையா இருக்குனு வாங்கிட்டு வந்திர கூடாது . அது என்ன composition ல தயார் செஞ்சதுனு பார்த்து தான் தேர்வு செய்யனும் . ரொம்ப technical ஆ எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டாம். முடிந்த அளவு சுலபமா சொல்றேன்.
Preparation of Perfumes :
முதலில் நாம் கவனிக்க வேண்டியது - ஒரு perfume எப்படி தயார் செய்யறாங்கனு தான் . பொதுவா Perfume oil ல Ethanal (Alcohol) கூட dilute செய்வாங்க அப்போ ஒருவித நறுமணம் உண்டாகும். அதற்கு பெயர் தான் Perfume . இதுல எத்தனை சதவீதம் perfume oil சேர்கறாங்க என்பதை பொருத்து தான் ஒரு perfume strong, mild என்பது எல்லாம் முடிவு செய்யப்படும் .
ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் பாருங்க. விலை குறைந்த perfume ல இந்த perfume oil மிக மிக மிக குறைவா தான் இருக்கும். அதனால தான் நாம் முகர்ந்து பார்க்கும் போது செம வாசனையா இருக்கும், நம் வீட்டுக்கு வந்து பயன் படுத்தும்போது அந்த வாசனை சீக்கிரமே போயிடும் அல்லது அதிக நேரம் வராது (Not Long Lasting) .
Concentration of Perfumes :
இந்த perfume oil ல Ethanal Alcohol கூட dilute செய்யும் process பெயர் தான் "EAU" இந்த வார்த்தையை நீங்க எல்லா perfume packaging லையும் பார்க்கலாம். இந்த EAU வகைகள் பொருத்து தான் ஒரு perfume விலை நிர்ணயம் செய்யபடுது. சரி இது என்ன என்ன வகையான EAU இருக்கு னு பார்ப்போம் (See Picture)
1. EAU FRAICHE - Maximum 1 Hour to 2 Hour
2. EAU de Cologne (EDC) - 2 to 3 Hours
3. EAU de Toilette (EDT) - 3 to 4 Hours
4. EAU de parfum (EDP) - 4 to 5 Hours
5. Pure Perfume ( Parfum) - Lasts for 24 Hours
இந்த 5 வகை தான் நம் perfume விலை, எவ்ளோ நேரம் வாசனை இருக்கும் என்பதை எல்லாம் தீர்மானம் செய்கிறது . இன்னும் Notes னு எல்லாம் இருக்கு. அவ்ளோ deep ஆக எல்லாம் தெரிஞ்சிக வேண்டியதில்லை . இந்த அளவுக்கு நாம் தெரிந்து கொண்டால் ஒரு நல்ல perfume நாம் கொடுக்கும் காசுக்கு வாங்க போதுமானது .
இந்த 5 வகையில் நாம் எதை தேர்வு செய்யனும் ?
Short ஆக சொல்லனும்னா - நாம் அதை எங்க பயன் படுத்த போகிறோம் என்பதை பொருத்து தேர்வு செய்யுங்க . இப்போ உதாரணத்துக்கு wedding reception function போகறோம்னா அங்க maximum 2 to 3 hours தான் இருப்போம் . அதற்கு EDC அல்லது EDT போதுமானது.