ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
உள்ளாட்சித் தேர்தலுக்கு இப்பவே துண்டு போட்டு வைக்கிறானுங்க..!
உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடக்கும், இஷ்டத்துக்கு இந்திய தேர்தல் கமிஷன் டியூன் செய்யக்கூடிய EVM மிஷின் இடம் பெறாது என்பது தற்குறிகள் போலவே ஓடுகாலிகளுக்கும் தெரியல
இந்த ஒத்தை அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு இத்தனை வருசம் கட்சியை நடத்தியதற்குப் பதில் ஏதோ ஒரு பெரிய கட்சியில் இணைந்திருந்தால் இன்னும் பெரிய பொறுப்புகள் எப்போதோ கிடைத்திருக்குமே? ஏன் U turn எல்லாம் போட்டு tableஐ உடைக்கணும்?
1998 Coco Cola Cup Sharjah
தனது முதல் ஓவர் முதல் பாலில் சச்சின் டெண்டுல்கரை போல்ட் ஆக்கினார் சிம்பாப்வே வீரர் ஹென்றி ஓலங்கா.
மிகப்பெரிய வீரர் என புகழப்பட்ட சச்சின் புதிய ஆளிடம் ஒரு பாலுக்கு கூட தாக்கு பிடிக்க முடியவில்லை என உலகமே கிண்டல் செய்தது
சச்சின் அவுட்டானதுக்கு காரணம் சச்சின் திறமை இல்லாதவர் என்பதோ ஹென்றி ஓலங்கா மிக திறமையான பவுலர் என்பதோ காரணம் அல்ல.
ஹென்றி ஓலங்கா கொண்டு வந்த புதிய டெக்னிக் சச்சினுக்கு அப்போது புரியவில்லை என்பது மட்டுமே அவரது தோல்விக்கு காரணமா இருந்தது.
இந்த சம்பவம் கழிச்சு ரெண்டு நாளில் final match. அதே சிம்பாப்வே உடன்.
இந்த மேட்சில் ஹென்றி ஓலங்காவால் சச்சினை அவுட் ஆக்க முடியவில்லை. சச்சின் 92 பாலில் 124 நாட் அவுட். இந்தியா வென்றது.
முதல் முறை வித்தியாசமான டெக்னிக் உபயோகித்து ஜெயித்ததால் மட்டுமே ஹென்றி ஓலங்கா பெரிய வீரர் ஆகிவிடவில்லை. அந்த புது டெக்னிக் புரியாமல் அவுட் ஆன சச்சின் கேலிக்கு உரியவரும் இல்லை.
டெக்னிக் என்ன என தெரிந்தபிறகு ரெண்டாவது நாளே அவரை வெச்சு வெளுத்து விட்ட சச்சின் கடைசி வரை சூப்பர் ஹீரோ தான். அதிரடி காட்டிய ஹென்றி ஓலங்கா பிறகு என்ன ஆனார் என தெரியவே இல்லை.
அதனால் நான் என்ன சொல்ல வர்றேன்னா ..
புதுசா ஒரு டெக்னிக் வெச்சு ஜெயிக்கிறது எல்லாம் விஷயமே இல்லை.. அதனாலேயே ஒரு சூப்பர் ஹீரோ வரலாற்றில் மொத்தமா முடிஞ்சிட மாட்டார்
களமும் விளையாட்டும் தெரிந்த சூப்பர் ஹீரோ திரும்பவும் வீரியமா எழ முடியும். புது ஆட்களால் நிலைத்து இருக்க கூட முடியாது.
புரியுதா நண்பா??
இன்றைய காலக்கட்டத்திற்கு உளவுத் துறை, strategy நிறுவனம் எல்லாம் தேவையில்லை. அன்றாட செய்தித் தாள் படித்தால் கூட நாட்டு நடப்பு அறிய முடியும். ஒரு ஆட்சியாளர் எல்லோரின் நம்பிக்கைக்கும் உரியவராக இருக்க வேண்டும். ஆனால், யாரையும் நம்பக் கூடாது.
திமுகவுக்கு வெளியே என்னைப் போன்ற திமுக ஆதரவாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் இருவர் .
ஒருவர் தன் சொந்த கட்சியே தன்னை முன்னிறுத்த தயங்கிய காலகட்டத்தில் தன்னை முன்னிறுத்திய ஒரு கட்சியை தனக்கு தேவையான தேர்தலில் தடுப்பை எகிறிக் குதித்து சுவீட் பாக்ஸ் வாங்கிக் கொடுத்து சகோதரர் என கட்டி அணைத்து விட்டு தான் அதற்கு நன்றிக்கடன் செய்ய வேண்டிய தேர்தலில் கூட இருந்தே குழி பறித்து விட்டு , நாங்கள் இதுவரை உங்களோடு இருந்தோம் , இப்போது அரசியல் சூழ்நிலையால் வெளியேறுகிறோம் என ஒரு அடிப்படை மாண்பைக் கூட காட்டாமல் பல்டி அடித்து இவரையா பலர் பப்பு என கேலி செய்த போது நாம் தாங்கிப் பிடித்தோம் என ஆச்சரியப்பட வைத்தவர் .
இன்னொருவர் 2016 ல் 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பை இழக்க ஒரு காரணமாக இருந்தவர் என்பதையும் தாண்டி , அரவணைக்கப்பட்டு கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட உறுதுணையாக இருந்த பின்னரும் , இப்போது முன்னுக்கு பின் முரணான செய்திகளை சொல்லி அதே கழுத்தறுப்பு வேலையை செய்ய முற்படுகிறார் என்றே தோன்றுகிறது .
இருவரும் வாழ்க வளமுடன் !
இன்றைய GenZ-க்கு இது கொஞ்சம் Old School Politics தான்.
இன்று காலை 10 மணிக்கு ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்துக்கு அருகில் NEET தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நேரில் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. YouTube-ல் முடிந்தால் பாருங்கள். கட்டாயம் இல்லை.
அங்கே பேசப் போகும் விவகாரங்களை கவனியுங்கள். அது வாக்குகளாக மாறுமா எனத் தெரியாது. ஆனால் பொறுமை இருந்தால் அரசியல் என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளலாம்.
மலை குலைந்தாலும் நிலை குலையாதவன் திமுக தொண்டன். அவனது மன உறுதியையே கழகத் தலைவரின் தோல்வி கலைத்துப் போட்டு விட்டது.
கடுமையான நடவடிக்கைகளும், உறுதியான சீரமைப்புகளும்தான்
தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
இன்றைய மா.செ கூட்டம் அதன் முதல் படியாக இருக்க வேண்டும்.
@mkstalin 🙏
இந்த திமுக காரன்க ! தோத்தா ஒரு கூவத்தூர் கிடையாது , பாண்டிச்சேரி கிடையாது , புது சோபா செட்டு கிடையாது , மூஞ்ச மூடுறது கிடையாது .. கமுக்கமா ரெண்டு நாள் அழுதிட்டு மூஞ்ச கழுவிட்டு வந்து , என்னமோ இவனுங்க தான் இப்ப ஆளும்கட்சி மாதிரி ரவுசு உட்டுட்டிருக்கானுங்க . என்ன கட்சியோ ! என்ன டிசைனோ !
அதுவும் இதுவும் கூட்டணி இதுவும் அதுவும் கூட்டனினு இஷ்டப்படி அனத்தட்டும். தேர்தல் முடிந்துவிட்டது; திமுகவுக்கு இப்போது இழப்பதற்கு ஒன்றுமில்லை. எதற்கும் பதில் சொல்லி சீவனிழக்க வேண்டாம். ஓரிரு வாரங்களில் பாஜக அஜெண்டாவில் எவரெவர் நடக்கிறார்கள் என்பதை செயல்பாடுகள் காட்டப் போகின்றன.
நீங்கள் கூறுவதைப்போல் எனக்கு மற்ற வகைகளில் திறமை இருக்கிறதோ இல்லையோ – ஒன்றில் மட்டும் எனக்கு ஆற்றல் இருக்கிறது. அதாவது எதிலும் உடனுக்குடன் கோபப்பட மாட்டேன். ஆத்திரப்படமாட்டேன். அவசரம் காட்டமாட்டேன் மிதமிஞ்சிய நம்பிக்கை கொள்ளமாட்டேன்.
• பேரறிஞர் அண்ணா
திராவிடநாடு 10.12.61
திமுக ஒரு பகுத்தறிவு இயக்கம். சமூகத்தில் பகுத்தறிவு குறையக் குறைய, திமுகவுக்கான ஆதரவும் குறையும். வெறும் நலத்திட்டங்களோடு நின்றுவிடாமல், தமிழர்களை ஒரு அறிவுசார் சமூகமாக மாற்றுவதும் திமுக செய்ய வேண்டிய அரசியல் பணியே. அதைத்தான் பெரியாரும், அறிஞர் அண்ணாவும் செய்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin