"எங்கயோ இடிக்குதே"
மின்சாரம் வாங்குறதுல ஊழல்
மின்சார பில்லுல ஊழல்
கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வழக்கு, சட்ட ஒழுங்கு சீர்கேடு
17 சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம்...
மின்சாரத்துறை, சட்டத்துறை, சிறைத்துறைனு எல்லாத்தையும் நிர்வகிக்குற அமைச்சர் @CTR_Nirmalkumar
எங்கயோ இடிக்குதுல?
#WATCH | "ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கணும்னு சொன்னாரு.. ஆனா இங்க ஊழல் மட்டும்தான் இருக்கு.."
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனி ரத்தினத்தை கண்டித்து தவெக-வினர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
#SunNews | #TVK | #Kanchipuram
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN
ஐயப்ப பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திண்டுக்கல் - சபரிமலை இடையே ரயில் பாதை அமைக்க நாடாளுமன்றத்தில் நான் தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து தற்போது இத்திட்டத்திற்கு முதற்கட்டமாகத் தேனி முதல் எருமேலி வரை சுமார் 95 கி.மீட்டருக்கான அகல ரயில் பாதை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளுக்கான ஆய்வினை மேற்கொள்ள ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#DMKTHENI
MP பதவியை ராஜினாமா செய்ய தயார்!
மேகமலை மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, நீதிமன்றத்தின் உத்தரவு சுட்டிக்காட்டி மேகமலை மக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு என் மக்களோடு போராட்டத்தில் நிற்பேன் என உறுதியளித்தேன்.
#MegamalaiProtest #Theni
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
உருட்டுக்கட்டை மரிய வில்சன் today👇
மகளிருக்கு மாதம் 2500
~இல்லிங்க
ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்
~இல்லிங்க
அனைத்துப் பேருந்துகளிலும் இலவச பயணம்
~இல்லிங்க
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் வேலையின்மை உதவித்தொகை
~இல்லவே இல்லிங்க