மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் #NationalDoctorsDay-இல் போற்றுகிறேன்.
இந்தியாவின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவத் தலைநகராகத் திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது.
#NEET போன்ற சதிகளால் இதனைத் தகர்த்திடப் பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம்.
@MedicalwingDMK
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று: ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்!
ஆரம்பிக்கலாங்களா......
#LOP#TNassembly
திருவாரூர் மாவட்டக் கழகத்தின் தூணாக விளங்கி - நம் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் பூண்டி கே.கலைச்செல்வம் - மல்லிகா ஆகியோரின் அன்பு மகள் மருத்துவர் க.கலையழகி - மருத்துவர் ந.ராம்பாலாஜி இணையேற்பு விழா தஞ்சாவூரில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றபோது அதில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினோம்.
பெரியாரும் பகுத்தறிவும் போல, அண்ணாவும் அழகுத்தமிழும் போல, கலைஞரும் போர்க்குணமும் போல மணமக்கள் என்றென்றும் வாழ்க, வளர்க! @kalaivanandmk
தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!
சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை.
ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்!
ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
#திராவிட_மாடல் 2.0 ஆட்சிக்கான வலுவான பரப்புரையை முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாரூர் மாவட்டத்திலிருந்து எழுச்சியுடன் தொடங்கினார் நம் திராவிட நாயகன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
மின்னும் மன்னைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை தந்து, டெல்டா விவசாயிகளின் நலன் காத்து, மகளிரின் உரிமையையும் மாண்பையும் பேணிக்காக்கும் பல திட்டங்களை வழங்கிய திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியாக, version 2.0வில் நிறைவேற்ற உள்ள சிறப்பான திட்டங்களை 'சூப்பர் ஸ்டார்' தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து, தமிழ்நாட்டின் ஒப்பற்ற தலைவராக உயர்ந்துள்ள நம் டெல்டா காரர் கழகத் தலைவர் அவர்கள் இன்றைய பரப்புரை கூட்டத்தில் மன்னார்குடியின் வேட்பாளராக மக்கள் முன் என்னை அறிமுகம் செய்து வைத்து வெற்றி உறுதி என வாழ்த்தினார்.
மன்னார்குடி தொகுதியின் வெற்றியை
கழகத் தலைவரின் கரங்களில் ஒப்படைப்பேன் என உறுதி ஏற்று, மன்னை மக்களின் தொண்டனாக களம் காண்கிறேன்.
வெல்வோம் ஒன்றாக.
வாக்களிப்பீர் உதயசூரியன்🌄🙏🏾
#ஸ்டாலின்_தொடரட்டும்