5 லட்சம் கோடியில் வெறும் 14000 கோடி தான் வேளாண் பட்ஜெட்டா? இதுலாம் பாத்தா மனசுக்கு வேதனையா இருக்கு - புள்ளிவிவரத்துடன் சௌமியா அன்புமணி கேட்ட கேள்விகள்
#TNAssembly | #AgriBudget | #TVK | #PMK | #SowmiyaAnbumani
அவமானத்தை தாங்கும் சென்டிமென்ட் வேண்டாம்.
'மேகதாதுவை கட்ட விடமாட்டேன். அதை கர்நாடகா மீற நினைத்தால்.. தவெக சார்பில்.. முன்னின்று போராடுவேன்.
வருடா வருடம் தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமையை உறுதி செய்வேன்' என கூறுக.
உங்கள் கோபமெல்லாம் திமுகவிடம் மட்டும் இருப்பதில் பயனில்லை.
"என் அண்ணன் விஜய், தன் சொந்தப் பணத்திலிருந்தே செலவு செய்து பணம் தருவார்” என்று சொன்ன அந்தப் பெண்ணை அழையுங்கள்... ஈபி பில் தொகை எகிறிக்கொண்டிருக்கிறது; என்ன, எங்கள் வீட்டில் பணம் காய்க்கும் செடியா இருக்கிறது? பில்லைக் கட்ட மகளிர் தொகை ₹2500-ம் இல்லை, அண்ணனும் இல்லை; எங்கள் வங்கிக் கணக்கில் இப்போது ஒரு பைசா கூட இல்லை. - தமிழ்நாடு மக்கள்
விஜய் Vs உதயநிதி
இன்று சட்டமன்றத்தில் பேசியது என்னவோ சினிமா படம் போல பேசப்படுதே ஒழிய என்ன சொன்னார் உதய்? என்ன பதில் கொடுத்தார் விஜய் ? என்ற உருப்படியான விளக்கத்தை மீடியாக்கள் முன்வைக்கவில்லை.
உதயநிதி கேட்டது குறுவை சாகுபடி வறட்சி நிவாரணம் பற்றி இந்த அரசு திட்டமிட்டுள்ளதா என.
விஜய் சொன்னது பேப்பர் படிப்பீங்களா.. அது அறிவித்துவிட்டோம் முன்பே. குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு என்று..
யார் சொல்வது சரி ?
சிறப்பு தொகுப்பு என்பது : குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள அவர்களுக்கு ஆதரவாக உரிய உபகரணம் ஆரம்பித்து உரம் தேவை வரை எல்லாவற்றிற்கும் உதவிகரமாக இருக்க ஒதுக்கப்படும் தொகை... இது ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும். ஆனால் உதய நிதி கேட்டது முற்றிலும் வேறு. அவர் கேட்டது வறட்சி நிவாரணம் - Drought Relief.
விஜய் சொல்வது Investment Support என்பது வேறு உதயநிதி கேட்கும் Compensation என்பது வேறு... குறுவை சாகுபடிக்கு Investment Support நிதி வேளாண் பட்ஜெடில் இருந்து ஒதுக்குவார்கள் - அதுவே இழப்பீடு என்பது Compensation - பேரிடர் மேலான்மை வாரியத்தின் நிதியில் இருந்து ஒதுக்குவது... இரண்டுமே வேறு வேறு துறைகள் ஆனால் விவசாயிகள் சார்ந்தது.
சென்ற வாரம் இதற்காக தெலுங்கானா அரசு தன் விவசாயிகளுக்கு சுமார் 800 கோடி ஒதுக்கீடு செய்தது.. வறட்சி நிவாரணத்திற்கு என்பது கூடுதல் செய்தி.
ஆகவே முதலில் விஜய்-க்கு கேள்வி புரியவில்லை. இரண்டாவது 2 நிதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை... அதை தாண்டி விஜய் தினமும் செய்திதாள் படிப்பது கூட இல்லை என நினைக்கிறேன். அப்படி படித்திருந்தால் தெலுங்கான அரசு முன்னெடுப்பு என்னவென்று தெரிந்திருக்கும்... சென்ற வாரம் hindu பேப்பர் பார்க்கவும்.
இது ஆரோக்கியமாக விவாதமாக சென்று இருந்தால் இன்னேரும் ஒரு முக்கிய பிரச்சனைக்கு விடை கிடைத்திருக்கும். ஆனால் விஜய் பேப்பர் படிக்க சொல்லிட்டார் பிரண்ட் என்று வழக்கம் போல சினிமா காட்சி போல் ஆக்கிவிட்டார்கள் சட்டமன்றத்தை...
இப்படியே போனால் எதற்கும் தீர்வு இருக்காது - எல்லாமே ரீல் தான் சினிமா தான்.
”100 ஏக்கர் பஞ்சமி நிலம்... ஊழலை ஒழிக்கிறேன் என்கிற தவெக அரசு.. சில அமைச்சர்களின் உதவியோடு அங்கு ரியல் எஸ்டேட் பிளாட் போட முயற்சி நடக்குது” - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
#Velmurugan | #TVK
சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும்,
விதைப்புக்கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் என்ற தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
கோட் சூட் போட்ட விவசாயி @actorvijay அவர்களே?
#TNAgribudget2026_27