TN ku Orey Thalaivan @TVKVijayHQ
He single handedly exposed each political parties. Especially DMK true colour.
Well done Thalaiva 🙏
ONLY RT - #DMKbetrayedTN
“டெல்லி அணியா தமிழ்நாடு அணியா?” ; “பா.ஜ.க.வை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள்தான்” ; “பா.ஜ.க.வுடன் ஒட்டோ உறவோ இல்லை” “கறுப்புக்கொடி ஏத்தி டெல்லி ஆணவத்த எதிர்ப்போம்” “தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதுதான் நமது சுயமரியாதை. தேர்தல் எல்லாம் பிறகுதான்” என்றெல்லாம் வாயால் வடை சுட்டதுதான் தி.மு.க.வும் அதன் தலைமையும்.
ஆனால், இந்த பஞ்சரான பஞ்ச் வசனங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்துவிட்டவை. இப்போது, தமிழக மக்கள் அவர்களை ஆட்சியில் இருந்து விரட்டி விட்டதால் அவர்களின் வசனங்கள் எல்லாம் எப்படி மாறி உள்ளன என்பதைப் பார்த்து உலகமே உமிழ்நீரைத் தூவிச் சிரிக்கின்றது.
பா.ஜ.க.வின் தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதுதான் சுயமரியாதை என்று சொன்னவர்கள், இப்போது அதே பா.ஜ.க.வின் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளனர். அதற்கு திமுக சொல்வது என்ன தெரியுமா?. “திட்டங்கள் சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே?” என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்லி தங்களின் சரிவுக்கு சாய்வுக்கும் சப்பைக் கட்டு கட்டுகிறது தி.மு.க.
“இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல” என்றும் திமுக ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. நம் வெற்றித் தலைவர் தேர்தல் பிரசாரத்தின்போதே சொன்னதுபோல, பா.ஜ.க.வின் காலடியில் தி.மு.க. கவிழ்ந்துள்ளது. இது தேர்தல் தோல்வியின்போதே எடுக்கப்பட்ட முடிவு என்பதைத்தான் “இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல” என்று திமுக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
“We maintain full consistency” என்று தனது இன்னொரு முகமூடியையும் தி.மு.க. கழற்றிக் காண்பித்து, தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது. பா.ஜ.க.வுடன் மறைமுக உறவில் இருந்து இன்று நேரடி உறவிற்கு வந்துள்ளதைத்தான் maintaining full consistency என்று தி.மு.க.வே ஒப்புக்கொண்டு உள்ளது.
நாங்கள் எப்போதும் இப்படித்தான். ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சைப் பேசுவோம். ஆட்சியில் இருந்து விரட்டப்படும்போது வேறு பேச்சைப் பேசுவோம். இப்படி வெட்கமே இல்லாமல் வேடம் போடுவதுதான் எங்கள் வாடிக்கை. இது குறித்து கேள்வி கேட்கவே, “what is your problem?” என்று மக்களைப் பார்த்துக் கேட்டுள்ளது.
1999ல் இருந்தே நாங்கள் பா.ஜ.க.வின் மறைமுகக் கூட்டில்தான் இருந்து வந்துள்ளோம். அது தெரியாத அப்பாவிச் சிறுபான்மை சகோதரர்கள்தான் எங்களை நம்பி ஏமாந்து எங்களுக்கு வாக்களித்து வந்தனர். ஆனால், அவர்கள் நம்பினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய?. நாங்கள் எப்போதும்போல எங்கள் சுயநல மற்றும் ஆதாய அரசியல் குணத்தின்படியே கடபடதாரிகளாகத்தான் இருந்து வருகிறோம். எங்களுடைய இரட்டை வேடத்திலோ ஆதாய அரசியலிலோ ஒருபோதும் “No Deviation and no departure at all” என்றும் பெருமையாக வெளிப்படையாகக் கூச்சநாச்சமே இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளது.
“அதிமுகவின் ரிங் மாஸ்டராக பிரதமர் மோடி செயல்படுகிறார்” என்று பேசிய தி.மு.க. தலைமை இப்போது பா.ஜ.க.வின் காலடியில் வீழ்ந்துள்ளதன் மூலம் தங்களுக்கும் ரிங் மாஸ்டர் பா.ஜ.க.தான் என்பதை முழுமனதுடன் ஒப்புக்கொண்டுள்ளது.
இப்படி ஓர் அரசியல் சூதாட்டம் ஆடுவதற்குப் பெயர்தான் கொள்கையா?. இப்போது எங்கே போனது பெரியாரின் சுயமரியாதை?. இப்போது எங்கே போனது அறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையைப் பின்பற்றுவது?. இப்போது எங்கே போனது திமுகவின் கெத்து?. இப்போது எங்கே போனது திமுகவின் தெம்பு திராணி?. உங்களின் சுயநல ஆதாயத்திற்குத்தான் பெரியார், அண்ணாவின் பெயர்களா?. இப்படி செய்வதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காதே. சிறுபான்மை சகோதரர்களும் தமிழக மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள்.
இத்தனை மோசடிகளையும் செய்துவிட்டு, “எப்போதெல்லாம் வாள் எடுக்க வேண்டும் ; எப்போதெல்லாம் கேடயம் எடுக்க வேண்டும் என்று தங்களுக்குத் தெரியும்” என்று தி.மு.க. தலைமை சொல்லி உள்ளது. தமிழக மக்களுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் அவர்தம் நலன்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக தி.மு.க. தங்களின் முனை மழுங்கிய மொக்கை வாளை எடுத்துச் சுழற்றத் தொடங்கி உள்ளது. தங்கள் குடும்பத்திற்கும் தங்கள் அமைச்சர்களுக்கும் எதிராக உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து காப்பதற்காக சுயநலக் கேடயத்தையும் எடுத்துள்ளதை தி.மு.க.வே அம்பலபடுத்திக் கொண்டு விட்டது. இவை அத்தனையையும் பா.ஜ.க.வின் காலடியில் விழுந்து வணங்கி செய்கிறது என்பதை மக்கள் பார்த்துகொண்டுதான் உள்ளனர். இதற்கான பரிசாக, இனி வருகிற எல்லா தேர்தலிலும் திமுகவிற்கு அதலபாதாளத் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
#DMKBetrayedTN
Person Is So Goated So That Entire BJP ,RSS,Sanghis,Right Parties, Regional Partys , Cinema Haters, Religion Haters, Vijay Personal Haters Are Waiting For His Downfall 🔥🥵 @TVKVijayHQ@actorvijay ..
Proud to Be Your Fan 💪