இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
இப்படியும் சில மனிதர்கள் 😍❤️❤️
பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும், அந்த வீட்டிற்குள் சென்று சாப்பிடலாம்; தேவைப்படும் உடைகளை எடுத்து அணிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் செய்து உள்ளது பற்றி, டாக்டர் சூரிய பிரகாஷ் விஞ்சமூரி - டாக்டர் காமேஸ்வரி தம்பதி 👇👇👇
"ஒரு நாள் காலை, 11:30 மணி இருக்கும். பசியோடு ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். உணவு சமைத்து பரிமாறினோம். வேக வேகமாக அந்த உணவை வாயில் போட்டு, தட்டில் இருந்தவற்றை, ஒரு சில நிமிடங்களில் காலி செய்து விட்டார்.
அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. 'ஏன் சார் அழுகிறீர்கள்' என்றோம். 'சாப்பிட்டு, இரண்டு நாட்கள் ஆகி விட்டன' என்று கூறி, சாப்பிடாமல் இருந்ததற்கான காரணத்தையும் கூறினார்.
அப்போது தான் எங்கள் மனதில், இந்த வீடு பற்றிய எண்ணம் உதித்தது.
பசியோடு, யார் வேண்டுமானாலும் வந்து, தேவையானதை சாப்பிட்டு செல்ல வசதி ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணம் வந்தது.
அதுபோல, தேவைப்படுபவர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், தங்கியிருந்து சாப்பிடவும் செய்யலாம் என நினைத்து, 2006ல், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், கொத்த பேட்டையில், இந்த வீட்டை உருவாக்கினோம்.
இங்கிருக்கும் சமையல் பொருட்களை பயன்படுத்தி, சமைத்து, யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். தயாராக வைத்திருக்கும் சாப்பாட்டை எடுத்து, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அது மட்டுமின்றி, இங்கு இருக்கும் உடைகளையும் எடுத்து அணிந்து கொள்ளலாம்.
இந்த இல்லத்தின் பெயர், 'அந்தரி இல்லு!' காலை, 5:00 மணியிலிருந்து, நள்ளிரவு, 12:00 மணி வரை, யார் வேண்டு மானாலும் இங்கு வந்து சாப்பிட்டு செல்லலாம்; இல்லம் திறந்திருக்கும்.
எங்கள் சொந்த வீட்டில் அரிசி, சமையல் காஸ் தீர்ந்து போயிருக்கும். ஆனால், எங்களின் இந்த வீட்டில், ஒருபோதும், எந்த பொருளும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்கிறேன்.
டாக்டராக இருக்கும் நானும், என் மனைவியும் சம்பாதிக்கும் பணத்திலிருந்து மட்டுமே இந்த வீட்டை நடத்துகிறோம். அது மட்டுமின்றி, மன நிம்மதிக்காக வருபவர்களுக்கும் இங்கு இடம் உண்டு. இங்குள்ள மணியை அடித்து, அவர் வந்திருக்கிறார் என்பதை தெரிவித்தால், அவர் முன் உட்கார்ந்து, அவர் பேசுவதை பொறுமையாக கேட்போம்.
அதிலேயே பலரின் மன அழுத்தங்கள் தீர்ந்து போகும். அது மட்டுமின்றி, இங்கு சிறிய நுாலகமும் உள்ளது. இங்கேயே சமைத்து, சாப்பிட்டு, தங்கி, புத்தகங்களை எடுத்து படித்து, வேலைக்கு சென்ற இளைஞர்கள் பலர் உள்ளனர். பல லட்சம் பேரின் பசியை போக்கியுள்ள இந்த வீடு, எங்களுக்கு பிறகும் இயங்கும் வகையில் செய்துள்ளேன். பல இடங்களில், இதுபோன்ற இல்லங்களை திறக்கவும் ஆசை உள்ளது...
நல்ல மனங்களை வாழ்த்துவோம்.🙏🙏🙏🙏❤️❤️❤️
வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன்... இப்போது என் வீட்டிலும் ஏஸி, பிரிட்ஜ் இருக்கிறது. நம்ப மாட்டீர்கள்... வாங்கிய நாளிலிருந்து, இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை ...
அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து,
வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை... அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு,
வீட்டிலிருக்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி..
சோஃபாவும் அப்படித்தான்..
பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்..
8 GB RAM, Quardcore processor,
128 GB built-in memory என்று அனைத்துமே பார்த்து அதிக காசைப்போட்டு வாங்கிய மொபைல் போனில் வெறுமனே Facebook, WhatsAppல் மூழ்குவதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன் ...
ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்த பிறகு வாங்கி வைத்தேன் ஒரு தொலைக்காட்சி பெட்டி.. ஆனால்
இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு, இல்லை இல்லை .. வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம் ..
கால மாற்றம் ....
இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது .. அதற்காக ஒரு வருடத்திற்கு சந்தா கூட செலுத்தியாகி விட்டது... எல்லாம் இருந்தும், எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை... பயன்படுத்துவதும் இல்லை ... வெத்து பந்தான்னு கூட சொல்லுவேன். அப்படித்தான் ஆகிப்போச்சி பொழப்பு ...
அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்த முடிகிறது ...
எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...
எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது ...
இது ஒரு Duplicate வாழ்க்கை என்று நன்றாகவே உணர முடிகிறது ...
வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்ச நேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில், தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடுகிறது ...
இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன ...
உணர்த்தவும் செய்தது ..
இப்போது பண வரவு, சகல வசதிகளோடு இருந்தாலும், வாழ ஆசைப்படுவது என்னவோ நமது பழைய மனதுக்குப்பிடித்த
நெருக்கமான வாழ்வைத்தான் ...!
ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்.... நோ பீஸ் ஆப் மைண்ட் ...
இதை படிச்சவங்களுக்கு புரியுதோ, புரியலையோ.. ஆனா
அனுபவிச்சங்க இதை கண்டிப்பா உணருவாங்க ...!
ஒருவர் உன்னை மதிப்பதால் நீ உயர்ந்து விடப்போவதில்லை.!!
இகழ்வதாலும் நீ தாழ்ந்து விடப்போவதில்லை.!!
என்றுமே நீ நீயே என்பதை வாழ்க்கையில் புரிந்துகொள்!!
வாழ்க வளமுடன்!!🌚
எவரையேனும் ஒரு பிம்பத்திற்குள் அடைத்து விட்டு காலப்போக்கில் அவர் மாறி விட்டதாய் புலம்பாதீர்கள்
யாரும் மாறவில்லை உங்களுக்கு அவரின் உண்மையான இயல்பு தெரிய வந்த காலம் தான் தாமதமானது.
வாழ்க்கை கணிக்க முடியாதது.
நீங்கள் சுற்றுலா சென்ற இடத்தில் சுடப்படலாம்.
கோப்பை வென்ற ஊர்வலத்திலும் நசுங்கி இறக்கலாம்.
வேலையோ,விடுமுறைக்கோ சென்ற விமானம் விபத்தாகலாம்...
இல்லை சும்மா hostel la இருக்கும் போது ஒரு விமானமே உங்கள் மீது விழலாம்.
இருக்கும் வாழ்வை ரசித்து வாழ்வோம் 🫰