கள்ளக்குறிச்சி விவகாரம் வெறும் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொடர்புடையது மட்டும் கிடையாது கடந்த 100 நாட்களுக்கு மேலாக இந்த புகாரை ஒட்டுமொத்தமாக மறைக்க பல செயல்கள் செய்யப்பட்டுள்ளது
அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் இதில் நேரடியாகவே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் அனைவருமே விசாரிக்கப்பட வேண்டும்
தகுதியற்ற நபர்களின் பிடியில் தமிழ்நாடு காங்கிரஸ்
கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தவெக எம்.எல்.ஏ.வின் நடத்தை பற்றித் தெரிந்தவர்கள் என்பதாலோ என்னவோ, "புகார் அளிக்கப்படவில்லை", "புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்" எனப் பட்டும் படமால் பேசி நழுவப் பார்த்தனர்.
ஆனால், அவர்களை எல்லாம் மிஞ்சும் விதத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற “More loyal than the king” ஆக மாறி வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது யார் தெரியுமா?
த.வெ.க. அரசு தூக்கிப் போட்ட 2 அமைச்சர் பதவிக்காக த.வெ.க.வின் முரட்டு பக்தனாக மாறிய திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள்தான்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலேயே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி போன்றோர் அருள் விக்னேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்தினர்.
ஆனால், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரோ "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே த.வெ.க. அடிவருடிகளாகத்தான் மானஸ்தன் மாணிக்கம் தாகூர், மூளைவீங்கி பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் செயல்பட்டனர். அதற்கான பரிசுதான் மாநிலத் தலைவர் பதவியும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும்.
கூட இருந்தே குழிபறித்த இந்த நயவஞ்சக நரிகளின் துரோகம்தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. இனியும் வீழ்த்தப் போகிறது.
பனையூர் வாயிற்கதவருகே பாதுகாவலராக நிற்க வேண்டியவர்கள் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினால் அந்தக் கட்சி முட்டுச் சந்தில்தான் போய் நிற்கும்!
தவெக அரசு -
எல்லாவகையிலும் உண்மையே பேச வராத - உறுதிப்பாடு இல்லாத- நேர்மையற்ற அரசு.
இன்று மாலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், சர்ச்சைக்குரிய இடத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றுவோம் என பொய் சொல்லியிருக்கிறது. பொய் சொன்னவர் மதுரை கலெக்டர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர். நாளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர்தான் ஆஜராக நேரிடும்.
வரலாற்றில் பதிந்திருக்கிற We will face the Consequences - என்பது ஒரு அரசின் உறுதிப்பாடுமிக்க வரிகள். ஆனால் தவெக அரசு சொன்னது பொய். செய்தது கோழைத்தனமான செயல்.
'சர்ச்சைக்குரிய தூண் தீபத்தூண் இல்லை. நில அளவைக்கல்தான். உச்சநீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசின் முடிவை தெரிவிப்போம்' என்பதே ஒரு அரசின் உறுதிப்பாடாக இருக்க முடியும். அந்த உறுதிப்பாடு தவெக அரசின் எந்த எல்லையிலும் இல்லை.
கள்ளக்குறிச்சி கலெக்டர் செய்தி திசைதிருப்பலுக்காக
மதுரை கலெக்டரை கூண்டில் ஏற்றியிருக்கிறது தவெக.
நீதிமன்றத்தில் பொய் சொல்லிக்கொள்ளலாம் என்கிற தவெக அரசின் இதே உத்திதான், ஆபாச செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது கள்ளக்குறிச்சி கலெக்டர் புகாரே கொடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக சொன்னது.
மூன்று மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி கலெக்டர் கொடுத்த புகாரை முதலமைச்சர், தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் அத்தனை பேரும் கூட்டாக சேர்த்து மக்கள் மன்றத்தில் சொன்ன பொய் 'அப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை'என்று.
முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கான அரசாணையை மறைத்து வைத்து இப்போதுவரை வெளியிட மறுப்பதும் நேர்மையற்ற செயல். அந்த செயலையும் அதிகாரிகளை வைத்தே செய்யவைக்கிறார்கள்.
அதிமுக வழக்கு தொடராவிட்டால் விஎஸ் பாபு உடல் இன்னும் எப்படி ஊதிப் போயிருக்கும் என்பது இங்குள்ள மருத்துவர்களுக்கு தெரியாதா? பிற்பகல் 02:24க்கு இறந்தவரின் உடலா அது? கேக் கொடுக்கும் நிகழ்வு முடியும்வரை கொளத்தூர் வாக்காளர்களுக்கு சொன்ன பொய் அது.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஒட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என பொய் சொல்லி, அதற்கு ஆதாரமாக எடிட் செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். இப்போது மதுரை டிஎஸ்பி இறந்தவரின் மனைவியிடம் 3 லட்ச ரூபாய் தருவதாக பேரம் பேசியிருக்கிறார். இது காவல்துறை சொன்ன பொய்.
யூனிட் 47 ரூபாய் மின்சாரக் கொள்முதல், பாட்டிலுக்கு 20 ரூபாய் தொடங்கி, அண்டை மாநில முதல்வர்கள் சந்திப்பு, முதலீட்டாளர்கள் மாநாடு வரை தங்களது ஆட்சி நீட்டிப்பிற்காக, அரசியல் லாபத்துக்காக நீதிமன்றங்கள், மக்கள் மன்றங்கள், ஊடகம் என எல்லா தரப்பிலும் நேர்மையற்ற அணுகுமுறை, உறுதிப்பாடு இல்லாத, கொள்கை தேவையில்லாத இந்த அரசின் எல்லா செயல்பாடும் கேள்விக்குள்ளாக்க வேண்டியது. சந்தேகிக்கப்பட வேண்டியது.
அதிகாரிகளை பகடைக்காயாக்கி நேர்மையற்ற வழியில் எல்லாவற்றையும் அணுகும் இந்த அரசின் எந்த ஒரு முடிவுக்கு பின்னாலும் ஒருபோதும் கொள்கையும் லட்சியமும் இல்லை. இல்லவே இல்லை.
தொட்டதெல்லாம் பொய்.
தொட்டதற்கெல்லாம் பொய்.
தொட்டதே பொய்.
தொடாததும் பொய்.
இந்த அரசு யாரிடம் சொல்வது பொய்? யாரிடம் சொல்வது உண்மை ? என்று தெரியும் வரை ஒரு துளி Transparency இல்லாத, ஒரு அடி Accountability இல்லாத, தவெக அரசின் எந்தவொரு நிகழ்விற்கும் பாராட்டுபத்திரம் எழுத தயாராய் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன் திடீரென ஒருநாள் மதுரை சிக்கந்தர் மலையில் இருக்கிற சர்வே கல்லை தீபத்தூண் என இந்து அமைப்புகள் வழக்கு தொடுக்கின்றன.
இந்துத்துவ அரசியலை புரிந்துவைத்திருந்த தமிழ்நாடு இந்தப் பிரச்னையை ஆவணபூர்வமாக, சட்டபூர்வமாக அணுகியது. முதலமைச்சர்கள் ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் என எல்லோருடைய ஆட்சிக் காலத்திலும் இந்த வழக்கு வந்து வந்து ஓய்ந்தது. ஆனால் இந்துத்துவ சக்திகளால் எதையும் மாற்ற முடியவில்லை.
ராமர் தமிழ்நாட்டில் போனி ஆகமாட்டார் என்று தெரிந்து பாஜகவிற்கு கிடைத்த தேல்பத்ரிசிங்தான் முருகப்பெருமான்.
1. பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தொடங்கிய வேல் யாத்திரை
2. திட்டமிடப்பட்ட கந்தசஷ்டிகவச யூடியூப் சர்ச்சைகள்
3. திருப்பரங்குன்றத்தை அடுத்த அயோத்தியாக்குவோம் என்ற ஹெச். ராஜாவின் பகிரங்க மிரட்டல்
4. வாட்ஸ்ஆப் வழியாக பரப்பிய கந்தசஷ்டி பாராயணக் கூட்டங்கள்.
5. முருக வழிபாடுகளின் முக்கியத்துவத்தை கட்சி ஜோதிடர்கள் வழியாக பரப்பிய தமிழ்நாடு பாஜக.
6. மதுரையில் பாஜக நடத்திய முருகபக்தர்கள் மாநாடு.
7. பரவலாக கவனம் பெறத்தொடங்கிய சஷ்டி விரதம்
8. டிஜிட்டல் உலகில் நீக்கமற நிறைந்த முருகன்.
திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தடையின்றி நடந்துவந்தது. 2025 கார்த்திகை. திமுக ஆட்சி. மதுரையில் நீதியரசர் சுவாமிநாதன் எபிசோட். திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவர்கள் ஆசைப்படும் இடத்தில் இரண்டாவது' தீபம் ஏற்ற சொன்னார்கள். மு க ஸ்டாலின் அரசு உறுதியாக மறுத்தது. துணை ராணுவப்படையை அனுப்பினார்கள். முடியவே முடியாது என தைரியமாக சொல்லி திருப்பி அனுப்பியது திமுக அரசு.
2026 கார்த்திகை. தமிழ்நாட்டில் இப்போது பாஜக கூட்டணி ஆட்சி. கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், இடதுசாரிகள், மதிமுக உள்ளன. உச்சநீதிமன்றம் வழியாக ஆகமவிதிகளுக்கு மாறாக இரண்டாவது' தீபத்தை சிக்கந்தர் தர்கா அருகே உள்ள சர்வே கல்லில் இன்று ஏற்றப் போகிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் சாதிக்க முடியாததை, சூழ்ச்சியால் பாஜக ஆட்சியில் சாதித்திருக்கிறார்கள்.
நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று நிச்சயம் வருவார். சர்வே கல்லில் இரண்டாவது தீபம் ஏற்றப்படும். இதையே காரணமாக சொல்லி இனி அதை மரபாக்குவார்கள். அதுவே பின்னர் வேதமாக மாறும்.
நீதியரசருக்கு வாழ்த்துகள். இந்துத்துவ அமைப்புகளுக்கு வாழ்த்துகள். பாஜக கூட்டணி கட்சிகளான தவெக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மதிமுகவிற்கு வாழ்த்துகள்.
மோடிக்கு PR வேலை செய்ய ராமர் கிடைத்தார்.
விஜய்க்கு PR வேலை செய்ய முருகன் கிடைத்திருக்கிறார்.
ராமரையும் முருகரையும் இவர்கள் இருவரிடமிருந்து காப்பாற்றுவதே உண்மையான பக்தி.
ஓம் சரவண பவ.
அண்ணா ஆட்சிக்கு வந்து ஒரு வருசத்தில ஒரு கூட்டத்தில கீழ எழுதிருக்கிற மாதிரி பேசுனாரு
நான் ஆட்சிக்கு வந்து ஒர் ஆண்டு ஆயிருக்கு..
1.தமிழ்நாடுனு பேர் வைத்திருக்கிறேன்
2.சுயமரியாதை திருமணத்தை சட்ட அங்கீகாரம்
3.இந்திக்கு இடம் இல்ல
இம்மூன்றையும் மாற்ற நினைத்தாலே ஒரு அச்சம் வரும்.. அந்த அச்சம் இருக்கும் வரை அண்ணாதுரை தான் ஆள்கிறான்னு சொல்லுவாரு
அந்த மாதிரி திருப்பரங்குன்றம் சர்வே கல்லுல தீபம் ஏத்த கூடாது.,ஏத்தவும் முடியாது.. நீதிமன்றமே சொன்னாலும் “we ll face d consequences”னு சொன்னவர் ஸ்டாலின்
அத மாத்த முடியாது..
ஆட்சி மாறலாம்.. ஆனா காட்சி மாறாது
அப்படி மாத்தணும்னு நினைச்சா.,ஒரு பயம் வரும்
அந்த பயம் இருக்கும் வரை அண்ணாதுரை தான் ஆள்கிறான்னு அண்ணா சொன்ன மாதிரி பயம் இருக்கும் வரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் ஆள்கிறான்💥💥
ஒண்ணு கவனிச்சிங்களா friends.
கிட்டதட்ட புகார் செய்தி வந்து 12 மணி நேரம் ஆச்சு ?
FIR போட்டு 5 மணி நேரம் ஆச்சு ..
MLA வெளிய பூட்டை மாட்டிவிட்டு தலைமறைவாக இருப்பதா சொல்லப்படுது,
கல்லாபெட்டி கும்பல்ல உள்ள ஏதாவது ஒரு கட்சியாவது ..
இன்னும் ஏன் வக்கிர MLA வை கைது செய்யல என பதிவு போட்டு , கேள்வி கேட்டு யாராவது பார்த்தீங்களா ??
எல்லாரும் தீபம் மேட்டருக்கு ஆர்கஸம் அடைந்து
,
விஜய்க்கு பல்லாக்கு தூக்கிட்டு இருக்கானுங்க.,
அவ்வளவு நேர்மை ?!!
பாலியல் பொறுக்கிகளுக்கு,
இப்பேர்பட்ட வெளிப்படையான ஆதரவு ,
இதுதான் இவர்கள் கூட்டணியின் மகத்துவம் ,
இவர்கள் கட்சி , கொள்கை,
கல்லாபெட்டி மற்றும் Sofa
கோட்பாட்டின் ரகசியம்
//அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம்//
🔥🔥🔥🔥🔥🔥
தலைவரே @mkstalin இப்பத்தான் நிம்மதியா இருக்கு.. 🥰🥰
அப்படியே அந்த வளவளன்னு உளறின்னு இருக்கிற சோபாவளவருக்கும் இதே மாதிரி ஒரு பொங்கலை வெச்சிட்டீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் 🫰🏼🫰🏼🫰🏼
@Udhaystalin
திமுக அடிச்ச அடில பதறி ஒரு பொடி மாஸ் அறிக்கை எழுதி இருக்கான் டம்மி காங்கிரஸ்
எவனும் அத கண்டிக்க கூட இல்லை
@arivalayam வெளுத்த வெளு தான் எல்லா இடமும் பேசு பொருள் 💥 ஒத்த ஓட்டு னு இருக்க உனக்கே இவ்வளவுனா 1967 ல இருந்து உங்கள மிதிச்சு வக்கார வச்ச எங்களுக்கு எவ்வளவு இருக்கும்💥
இனி எங்கள் வழி, தனி வழி!
பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி!
- திராவிட முன்னேற்றக் கழகம் அறிக்கை!
#DMK #DMK4TN #Tamilnadu #KalaignarSeithigal
நேற்றிலிருந்து ஒரு நூறு முறையாவது தலைமை கழகத்தின் அறிக்கையை படித்திருப்பேன் இப்படி ஒரு அறிக்கை இதுவரை நாம் பார்த்திருக்கவே முடியாது. ஒவ்வொரு வரியும் செரு*ப்பை எடுத்து அ*டிப்பது போல இருக்கிறது.🤣👌🔥
விஜயை கேள்வி கேட்க வக்கு வகையில்லை!
பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார்.
- காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு, திமுக பதிலடி.
#DMK #ManickamTagore #TVKFails #CMVijayFails #CongressFails #Tamilnadu #KalaignarSeithigal