வாக்குறுதியை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தபோது, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்தார்.
அப்போது, அவர்களின் நிலையை அறிந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தாமாக முன்வந்து அவர்களிடம் ஏதேனும் உதவி தேவையா என கேட்டறிந்தார்.
தாங்கள் பயன்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், புதிய வாகனம் வழங்கினால் தங்களின் அன்றாட பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையைக் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்தார்.
அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலி வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
I thought Vijay will never hate any religion will do proper good politics without any hate moments
But here he proved wrong to us showed his true colours @TVKVijayHQ 💔
Secularism is good but never wants one side secularism 🙏