@TVKVijayHQ வுக்கு தெரிந்தது ஒன்று பழிவாங்கும் அரசியல், இன்னொன்று பழிபோடும் அரசியல்!
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
#TVKScams#TVKExposed
@TVKVijayHQ வுக்கு தெரிந்தது ஒன்று பழிவாங்கும் அரசியல், இன்னொன்று பழிபோடும் அரசியல்!
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
#TVKScams#TVKExposed
அது எப்படிங்க கரெக்டா முதலமைச்சர் வரதுக்கு 10 நிமிஷம் முன்னாடி வந்து சேர்ந்துச்சு அந்த சோஃபா?
எல்லா ஆபீஸுக்கும் பார்த்தீங்கன்னா ஒரே மாதிரி சோஃபா, எல்லாரும் ஒரே மாதிரி ஆர்டர் பண்ணிருக்காங்க போல!
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKExposed#TVKScams
இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல்; ஆளுங்கட்சியினுடைய குதிரைபேர அரசியலால, இங்கே ஏற்கனவே வெற்றி பெற்ற வேட்பாளர் ஆளுங்கட்சிகிட்ட விலைப் போன காரணத்தினால, இன்னைக்கு மதுராந்தகத்தில் இந்த ஒரு இடைத்தேர்தல் வந்திருக்கு
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKExposed #TVKScams
தமிழ்நாடு சட்டமன்றத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியுடன் ஒப்பிடும் அளவுக்கு அதன் மாண்பை குறைத்துவிட்டார்கள்!
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்.
#TVKScams#TVKExposed
இந்த தொகுதி மக்களுக்கு அவங்க செஞ்ச துரோகத்தை நாம ஒவ்வொருத்தரும் இந்த தொகுதி முழுக்க ஒவ்வொரு வீடா எடுத்துட்டு கொண்டு போய் சேர்க்கணும். இந்த புதிய ஆட்சி அமைஞ்சு கெடுத்துட்டு நான்கு மாசம் ஆகுது. இந்த நான்கு மாசத்துல அவங்க ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடி எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்தாங்களே ஏதாவது ஒன்னு செஞ்சிருக்காங்களா?
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKExposed #TVKScams
மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்: யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது?
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவு கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவைக் கோரி, மீனவச் சங்கத்தினர் இன்று என்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். இதற்கு எதிராக மீனவ மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவைத் தருவதோடு, தனது முடிவில் இருந்து த.வெ.க. அரசு பின்வாங்கும் வரை மீனவச் சகோதரர்களுடன் உறுதியாகத் துணைநிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம் கட்ட எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே, தலைமைச் செயலகப் பயன்பாட்டுக்கெனத் தலைவர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகமும் இருக்கிறது. வேண்டுமென்றால், அங்கே செயல்பட்டு வரும் மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, மீண்டும் அதைத் தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம். ஆனால், கடற்கரையைப் பார்த்தபடி முதலமைச்சரின் அலுவலகம் அமைய வேண்டும் என ஜோதிடர் ஒருவர் சொன்னதாலேயே முதலமைச்சர் பட்டினப்பாக்கத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
ஒருவரின் ஆசைக்காக ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், தமிழ்நாடு அரசு தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ளன. இது கடுமையான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாகும். இங்கு தலைமைச் செயலகம் அமைந்தால் மாணவர்களும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாக நேரிடும்.
மேலும், பட்டினப்பாக்கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டவுள்ள பகுதிக்குத் தெற்கில் முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. வடக்குப் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமில் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் என மொத்தம் 12 குடியிருப்புப் பகுதிகள் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ளன. முள்ளிக்குப்பம் பஞ்சாயத்து மற்றும் மீனவ மக்கள் அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.
இந்த ஆட்சி அமைய ஆதரவு தந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமையாது என நினைத்தோம். ஆனால், அவர்களது எதிர்ப்பினையும் போராட்டங்களையும் மீறித் த.வெ.க. அரசு இதில் விடாப்பிடியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க.வும் இந்தப் போராட்டத்தில் வீரியத்துடன் இணைய வேண்டிய சூழலை ஆளும் த.வெ.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த திராவிட மாடல் ஆட்சியில், பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டி வாழும் மீனவ மக்களுக்கெனப் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தந்தோம். சீனிவாசபுரம் பகுதியில் உள்ள 1,356 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் சிதிலமடைந்து உள்ளதோடு, இப்பகுதியில் ஆயிரம் குடிசைகளும் இருக்கின்றன. கடல்சீற்றத்தால் இவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குப் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தருவதற்கு முந்தைய கழக ஆட்சியில் பரிசீலனையில் இருந்த இடத்தில்தான் தற்போது 1,200 கோடி ரூபாயில் தலைமைச் செயலகம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அரசாணையையே மறைத்துவிட்டு, “விரிவான திட்ட அறிக்கை மட்டுமே கோரியிருக்கிறோம், இதில் முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை” எனத் த.வெ.க. அமைச்சர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசுவது மக்களை ஏமாற்றும் மோசடிச் செயலாகும். அரசாணை வெளியிட்ட பின்னர் முடிவெடுக்கவில்லை எனச் சொல்லும் அளவுக்குத்தான் இவர்களின் நிர்வாக அறிவு இருக்கிறதா? அல்லது, வாக்களித்த மக்களும் எதிர்க்கட்சிகளும் இவர்கள் எந்தப் பொய்யைச் சொன்னாலும் நம்புவார்கள் என நினைக்கிறார்களா?
மீனவர்களின் அழுகுரலுக்குத் த.வெ.க. அரசு செவிமடுத்து உடனடியாகத் தனது அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதலமைச்சர் அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்பகுதியில் மீனவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும்.
அராஜகப் போக்குடனும் ஆணவ எண்ணத்துடனும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால், மீனவர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரிய போராட்டத்தினை முன்னெடுக்கும் என மீனவர் விரோத த.வெ.க. அரசினை எச்சரிக்கிறேன்.
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?
இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார்.
இந்த சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே திறந்து வைத்தார்.
தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கன அடி என குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது.
இதனால் கடை மடை வரை தண்ணீர் சேருவதும் - பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியை திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறுவை சிறப்பு தொகுப்புக்கும் – வறட்சி நிவாரணத்தும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதலமைச்சர், இன்றைக்கு @dt_next பேப்பரை படித்திருந்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும்.
ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வைத்துள்ளது இந்த Circus அரசாங்கம்.
அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறப்பேன் என்று வெற்று வசனங்களை பேசிய முதலமைச்சருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளை சந்திக்ககூட மனம் வரவில்லை.
திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களை கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில் தான் இந்த Reels வெறி ஆட்சி இருக்கிறது.
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனே வழங்க வேண்டும்.
#DeltaFarmers
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - பாக இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம்.
#SofaModel ஆளுங்கட்சியின் குதிரை பேர அரசியலால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அன்பு சகோதரர் பரந்தாமன் அவர்களை வெற்றி பெற செய்திட அயராது உழைக்க வேண்டும் உரையாற்றினோம்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - மின்வெட்டு - விலைவாசி உயர்வு என அனைத்து வகையிலும் தமிழ்நாட்டு மக்களை வதைக்கும் #Dummy முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டும் வகையில் தேர்தல் பணிகளை அமைத்துக்கொள்வோம் என ஆலோசனைகளை வழங்கினோம்.
@evvelu@regupathymla@thamoanbarasan #GSundar @gselvam_mp@Joel_Dmk@AbdulmalikDmk@Prabhugajendran@ilaiyadmk@GprMadurai
பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?
அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?
முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!
ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.
மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!
#Pattinapakkam #Secretariat #FishermenProtest
மிசா பற்றி பேசுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். என் மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனது தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி இல்லை.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#MupperumVizha
ரீல்ஸ் வெறி பிடித்த ஆளுங்கட்சியினரால், நூற்றாண்டு கால புகழ்பெற்ற சட்டமன்றம் தனது மாண்பை இழந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடந்த கொடுமைகளை எல்லாம் பார்க்கும்போது, கொளத்தூர் மக்களே, கோடானகோடி நன்றி
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#MupperumVizha
தவெக ஆட்சியில் இந்த ரெண்டே ரெண்டுக்கு இடையில்தான் போட்டி ஒன்னு மின்வெட்டு, இன்னொன்னு அரிவாள் வெட்டு
பட்டப்பகல்ல கொலைகள், துப்பாக்கி சூடுகள், ஆளுங்கட்சியினரே போதை பொருட்களை விற்பனை செய்வது, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது, இப்படி குற்றவாளிகளின் வேட்டைக்காடா தமிழ்நாடு மாறியிருக்கு.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#MupperumVizha
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா? அப்படின்னு மேடையில கத்தினாரு. இப்போ தமிழ்நாட்டு மக்கள் அவரை பார்த்து, கேக்குறாங்க சிஎம் சார் இந்தியாவிலிருக்கிற கம்பெனிக்கு எதுக்கு லண்டன்ல போய் கையெழுத்து போடுறீங்க?" அப்படின்னு சத்தமா கேட்கிறாங்க.
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#MupperumVizha
இது நம்முடைய களம். இந்த களத்திலே நாம் வென்றாக வேண்டும். எனவே, நீங்கள் பழைய திமுககாரனாக மாறுங்கள்.
கழக பொதுச்செயலாளர் திரு துரை முருகன் அவர்கள்.
#MupperumVizha
கழக முப்பெரும் விழாவில், முரசொலி அறக்கட்டளை சார்பில் ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ப.திருமாவேலன் அவர்களுக்கு “முரசொலி செல்வம் விருது” வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்.
#MupperumVizha
கழக முப்பெரும் விழாவில், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. நா. இளையராஜா அவர்களுக்கு "மு.க.ஸ்டாலின் விருது" வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்.
#MupperumVizha
கழக முப்பெரும் விழாவில், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பி அவர்களுக்கு "பேராசிரியர் விருது" வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
#MupperumVizha