ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை!
தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்.
“இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்” எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் அவர்களின் நெஞ்சுரம் இந்த ஆட்சியாளர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல் தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும்.
இது கற்பனை தான் இருந்தாலும் இப்படி நடந்தா எப்படி இருக்கும்????
உங்க அப்பா எங்க காணோம் அப்படின்னு கேட்டதுக்கு...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி என்ன செய்யணும்னா....
தன்னோட பொண்டாட்டி புள்ளைய கூட்டிட்டு,
நேரா ஆழ்வார்பேட்டையில் இருக்கிற சித்தரஞ்சன் சாலை வீட்டுக்கு போயி, தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து
அதை வீடியோ எடுத்து, எங்க அப்பாவ காணும்னு, சி எம் விஜய் அவர்கள் சொன்னாரு, ஹலோ இதுதான் எங்க அப்பா, மு க ஸ்டாலின் அவர்கள் எங்க அம்மா துர்கா ஸ்டாலின் அவர்கள்....
என்னுடைய மனைவி கிருத்திகா உதயநிதி இவங்க தான், என்னுடைய பையன் இன்ப நிதி....
இதேபோல தமிழக முதல்வர் அவருடைய அப்பாவையும் அவங்களுடைய குடும்பத்தையும் அறிமுகப்படுத்த முடியுமா?
அப்படின்னு ஒரு சவால் விட்டா...
ஒரு வீம்புக்காவது தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் விஜய் அவர்கள், தன்னுடைய மனைவி சங்கீதா தன்னுடைய மகன் ஜேசன் மற்றும் மகள் திவ்யா அனைவரையும் அறிமுகப்படுத்தி ஒரு வீம்புக்காவது அவர் ஒரு வீடியோ வெளியிடுவார்....
அப்படி வெளியிடாமலும் இருக்க வாய்ப்புகள் நிறைய அதிகம்....ஸ்கிரிப்ட் பேப்பர் அதுக்கும் வேணும்..அதனால பேசாமலே இருக்க வாய்ப்பிருக்கு,
ஒருவேளை அப்படி நடந்துச்சுன்னா, ஒரு குடும்பத்துல முக்கியமாக, தன்னுடைய அப்பா முதலமைச்சராக இருந்தாலும், அவர்களோடு சந்திக்கவே முடியாத, அல்லது வெளிப்படுத்திக்க முடியாத சூழலில் இருக்கும் அந்த குழந்தைகளுக்கு அது ஒரு வாய்ப்பாக அமையும்...
அப்படி ஒருவேளை நான் சொன்னது போல நடந்தால்,
அவங்க கூடாரத்துல நிறைய சலசலப்பு உருவாகும்... அது என்ன சலசலப்பு பின்னூட்டங்களை தெரியப்படுத்துங்க...
நான் ஏற்கனவே சொன்னது தான்... எதிராளி எடுக்கும் ஆயுதத்தை வைத்தே நாம் பதில் சொல்ல வேண்டும்....
உங்க அப்பாவ காணோம் அப்படின்னு ஒரு கேவலமான அரசியல் செய்கிறார் இல்ல... அதுக்கு இது போலான பதிலடிகள் தான் சரியா இருக்கும்...
என்ன நான் சொல்றது கரெக்ட் தானே 🤣
ஜாக்கிசேகர்