ஈவெரா நாயக்கர்,
G.D.நாயுடு,
நாராயணசாமி நாயுடு வரிசையில்
பாக்யராஜ் நாயுடு.
இதை முன்னெடுப்பவர் பார்த்திபன் நாயுடு.
மணவாடு செத்துப் போயிட்டா எங்க சிலை வைக்கலாம்,எந்தெந்த திட்டங்களுக்கு,தெருவுக்கு பேர் வைக்கலாம் என எவ்வளவு வேகமா சாதிவெறி,இனவெறில கூச்சமே இல்லாம செயல்பாடுறானுங்க.
@tnnews24air@CMOTamilnadu@Vijayabaskarofl தமிழக முதல்வர் கறை படாத கரங்களுக்கு உரிமையாளர்.
ஊழல்வாதிகளை ஒருபோதும் சந்திக்க மாட்டார்.
(ஆனால் கட்சியில் இணைத்துக் கொள்வர்)
TVK அரசின் முதலாவது மெகா ஊழல் -
அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல்... புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பெயரில் இந்த ஊழலை கூட்டாக செய்துள்ளனர் TVK மாவட்ட செயலாளர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் நடந்துள்ளது. இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் 120 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்..
இதில் மாவட்ட செயலாளர்கள் பங்கு பிரித்தது போக எவ்வளவு தலைமைக்கும் அமைச்சரக்கும் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 100% ஊழல் நடந்துள்ளது.
இதன் மீது CBI விசாரனை தேவை..
வந்த 40 நாளில் கொள்ளை அடிக்க கிளம்பிட்டானுக அதுவும் கூட்டமா... இதுக்கு பெயர் மாற்றம்? இன்னும் 400 நாள் விட்டா இவனுக என்ன என்ன அடிப்பானுக?
இவனுக எளிய பிள்ளைகள் கிடையாது - திருட வாய்ப்பு கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த பிள்ளைகள்... வாய்ப்பு கிடைத்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் சம்பாரிப்பது தான் திட்டம் என சுற்றி கொண்டு இருக்கானுக.
CBI வசம் வழக்கு சென்றால்
புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது.
மக்கள் எதிர்க்கும் திட்டத்திற்கு, மக்கள் அச்சப்படும் திட்டத்திற்கு, அதுகுறித்த விரிவான ஆய்வறிக்கைகளோ, கருத்து கேட்புகளோ இல்லாமல் அவசரம் அவசரமாக தவெக அரசு அனுமதி அளிப்பது யாருக்காக?
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளை சுரண்டும் IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணையை புதுப்பித்திருக்கிறது மக்கள் விரோத தவெக அரசு
இந்த விரிவாக்கத்தால் ஏற்படும் சூழலியல் விளைவுகளை தாண்டி நம் மக்கள் சந்திக்கப் போகும் இன்னல்கள் ஏராளம். ஏற்கனவே பாறைகளை கடத்தும் கனரக வாகனங்களால் விபத்துகளும் மரணங்களும் தொடர்கதையான நிலையில் இப்போது மற்றுமொரு பேராபத்து காத்திருக்கிறது.
முழு காணொளி
https://t.co/PhXtnCrTvr
பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் நடத்தும்,
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் !
நாள்: ஆனி 20 சனிக்கிழமை | 04-07-2026
மாலை 05 மணிக்கு.
இடம்: பரங்கிப்பேட்டை (வண்டிக்காரத் தெரு)
@Seeman4TN@NaamTamilarOrg
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றவதை தேர்தலுக்கு முன்பு எதிர்த்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்.
இன்று அதே பெயர் மாற்றத்தை ஏற்று அரசாணை வெளியிடும் தவெக அரசு!
தேர்தலுக்கு முன்பு எதிர்த்த #VBGRAMG வேலைத்திட்டதை தேர்தலுக்கு பின்பு ஏற்றுக்கொள்வது தான் தவெக மாற்று அரசியலா!?
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@moefcc@byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Seeman4TN@NaamTamilarOrg
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கும் தவெக அரசு.
கன்னியாகுமரிமாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணை காலாவதி ஆகும் நிலையில்,அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கன்னியாகுமரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய செயற்குழு கூட்டத்தில்இதே தவெக, இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நாடகம் அரங்கேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான அழிவுத்திட்டங்களை திணிக்கும் பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி நிற்கும் தமிழ்நாடு தவெக அரசின் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
முழு காணொளி மனிதி வலையொளியில்.
https://t.co/PhXtnCrTvr