நவோதய பள்ளிகள் வேண்டும் வேண்டாம் என அரசியல் கட்சிகள் முடிவு செய்வது ஏற்புடையதா இல்லை பொதுவாக படிக்கும் குழந்தைகளில் இருந்து வளர்ந்த தற்சமயம் வேலைக்கு செல்லும் வயதுடையோர் என்று குறிப்பிட்ட வயது உள்ளவர்களிடம் கருத்து கேட்கலாமே
BHIM, Gpay, Phonepay உள்ளிட்ட எந்தவொரு UPI செயலி வழியாகவும் மீள் பரிவர்த்தனைக் கட்டளை (recurring payment mandate) கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை இந்த படத்தில் உள்ள இணைய தளத்தில் உள் நுழைந்து சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஃபேஸ்புக்கில் சில விளம்பரங்கள் ஒரு ரூபாய் செலுத்தினால் உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முழுக்க கண்டுகளிக்கலாம் என்பது போன்ற விளம்பரங்கள் வருகின்றன. அதில் உள் நுழைந்தால் UPI மூலமாக ஒரு ரூபாய் செலுத்தச் சொல்கின்றன. “அட.. அதான் 4 இலக்க பின் கோடு போட்டால்தானே தொகை போகும்” என்று நினைத்து அந்த ஒரு ரூபாய்க்கு மட்டுமே என்று நினைத்து தொகை செலுத்தினால் போச்சு! அது மாதா மாதம் ஒரு பெருந்தொகையை உங்கள் கணக்கிலிருந்து தானாகவே குறிப்பிட்ட தேதியில் எடுத்துக் கொள்ள நீங்கள் கொடுக்கும் ஒப்புதல்!
மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டளைப்படி அப்படி தொகை எடுப்பதற்கு ஒர் சில தினங்களுக்கு முன்பே குறுந்தகவல் மூலம் அது குறித்துத் தகவல் அனுப்ப வேண்டும். என்றாலும் அந்தக் குறுந்தகவல் எல்லாம் இன்னமும் ஆங்கிலத்தில் மட்டுமே வருகின்றன. தவிர அவற்றைப் பலரும் பார்ப்பதில்லை.
இது போல நமக்குத் தெரியாமலும், அல்லது நமக்குத் தெரிந்தே உருவாக்கியிருக்கும் mandateகளை இங்கே சென்று சரிபார்த்துக் கொள்ள முடியும். எதுவும் பிரச்னை என்றாலும் இந்தத் தளத்தின் வழியே புகாரளித்து சரி செய்து கொள்ளவும் முடியும். இது டிஜிடல் பணப்பரிவர்த்தனைக்காக ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் வங்கிகள் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள National Payments Corporation of India என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டது.
What started as change is now momentum. Millions of actions. One seamless experience. India didn’t just adopt our tech — it made it its own. From UPI to RuPay and FASTag, our products power everyday life — shorter waits, smoother journeys, easier access.
Ayushman Vay Vandana Yojana - 70 வயது மேற்பட்டவர்களுக்கான ஒரு மருத்துவ காப்பீடு - ரூ 5,00,000
ஆயுஷ்மான் வய வந்தனா திட்டம் (Ayushman Vay Vandana Yojana), ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB PM-JAY) என்ற அரசு ஆதரவு சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் உள்ள ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை, 5 லட்சம் ரூபாய் வரை சுகாதார காப்பீடு வழங்குகிறது.
வய வந்தனா (Vay Vandana card) அட்டை என்றால் என்ன?
வய வந்தனா அட்டை என்பது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 2024 அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சுகாதார அட்டையாகும். இந்த அட்டை வைத்திருப்பவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவைகளைப் பெறலாம்.
இந்த அட்டைக்கு வருமான வரம்பு இல்லை, எனவே எல்லா வருமான நிலைகளைச் சேர்ந்தவர்களும் இதன் பயன்களைப் பெறலாம். மேலும், முதியவர்களின் சொந்த செலவுகளையும் இந்த அட்டை ஈடுகட்டும் என்று அரசு நவம்பர் 18, 2025 அன்று தெரிவித்தது.
சுகாதார அமைச்சகம், ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையை உருவாக்குவதற்கான வழிமுறைகளை விளக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதை இங்கே இணைத்துள்ளேன். உங்களது circle ல் யாராவது முதியவர்கள் இருந்தால், இதனை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும்.
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையின் பயன்களைப் பெறுவதற்கான படிகள்:
1⃣ பிளே ஸ்டோர் பயன்பாட்டில் ஆயுஷ்மான் பாரத் செயலியை பதிவிறக்கவும்.
2⃣ பயனாளியாகவோ அல்லது ஆபரேட்டராகவோ உள்நுழையும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
3⃣ கேப்ட்சா, மொபைல் எண், அங்கீகார முறை போன்ற விவரங்களை உள்ளிட்டு உள்நுழையவும்.
4⃣ பயனாளியின் விவரங்களை, மாநிலம் மற்றும் ஆதார் அட்டை விவரங்கள் போன்றவற்றை பூர்த்தி செய்யவும்.
5⃣ பயனாளி கண்டறியப்படவில்லை என்றால், eKYC செயல்முறையைத் தொடரவும் மற்றும் OTP-க்கு ஒப்புதல் அளிக்கவும்.
6⃣ தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஒரு பிரகடனத்தை சமர்ப்பிக்கவும்.
7⃣ பயனாளியின் மொபைல் எண்ணையும் OTP-யையும் சேர்க்கவும்.
8⃣ வகை மற்றும் பின் கோடு உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
9⃣ குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
🔟 e-KYC முடிந்து அனுமதிக்கப்பட்ட பிறகு, ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையை பதிவிறக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, 1800 11 0770 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.
*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
*◈ ━━━━━🄲🅁🄺━━━━━ ◈*
*🔹🔸பட்டாவில் புதிய பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய புதிய வசதி அறிமுகம்*
- *பொதுமக்கள் வசதிக்காக புதிய முன்னெடுப்பு..!*
*✍️. பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க https://t.co/cl4wTtl2Qh என்ற இணையதளம் அல்லது இ - சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்!*
*▪️. இதுகுறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளியிடவும், இணையதளம் மூலம் பெற்றப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கவும் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்*
#Patta | #TNGovt
பட்டா மற்றும் சிட்டா – அதைப் பற்றிய முழுமையான விளக்கம்
நமது நாட்டில் நிலம் என்பது மிக முக்கியமான சொத்து. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு உள்ளது, அந்த நிலம் எப்படி பயன்படுகிறது என்பதனைப் பதிவு செய்வதற்காக அரசு சில முக்கிய ஆவணங்களை வழங்குகிறது. அதில் முக்கியமான இரண்டு ஆவணங்கள் தான் பட்டா மற்றும் சிட்டா. இவை இரண்டும் எதற்கென்ன என்பது பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வோம்.
---
1. பட்டா (Patta) என்றால் என்ன?
பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமையை அரசு அங்கீகரிக்கும் சட்டபூர்வ ஆவணம்.
அதாவது, அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும் முக்கியமான ஆவணம் இது.
பட்டாவில் அடங்கும் தகவல்கள்:
● நில உரிமையாளர் பெயர்
● நிலத்தின் பரப்பளவு (Acre / Sq.ft / Hectare போன்ற அளவுகள்)
● நிலம் அமைந்துள்ள இடம் – கிராமம், வட்டம், மாவட்டம்
● Survey Number மற்றும் Sub-division Number
● நிலம் விற்பனை ஆனால் புதிய உரிமையாளருக்கு பெயர் மாற்றம் செய்யலாம்
பட்டாவின் முக்கியத்துவம்:
● சொத்து உரிமையை சட்டபூர்வமாக நிரூபிக்க உதவும்
● கடன் பெற, வீடு கட்ட அனுமதி பெற, பட்டா முக்கிய ஆவணம்
● அரசு நலத் திட்டங்களில் பயனடைய பயன்படும்
● நீதிமன்றத்தில் உரிமை தொடர்பான வழக்குகளுக்கு ஆதாரமாக இருக்கும்
---
2. சிட்டா (Chitta) என்றால் என்ன?
சிட்டா என்பது நிலத்தின் வகை மற்றும் வருவாய் விவரங்களை குறிக்கும் ஆவணம்.
நிலம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது (உழவுக்கா, வீடுகளுக்கா?) என்பதை இதில் பதிவு செய்கின்றனர்.
சிட்டாவில் உள்ள விவரங்கள்:
● நிலம் உழவு நிலமா (Wetland) அல்லது உலர்நிலமா (Dryland)
● நிலத்திற்கு யார் வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பதிவு செய்திருக்கும்
● நிலத்தின் பயன் நிலை – பயனடைகிறதா அல்லது வெறிச்சோடிய நிலமா
● கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படுகிறது
● அரசுக்கு நில வரி செலுத்தும் பதிவுகள் இதில் அடங்கும்
சிட்டாவின் முக்கியத்துவம்:
● நிலத்தின் பயன்பாட்டை தெரிந்து கொள்ள
● நில வரி கணக்கீட்டில் உதவும்
● அரசு திட்டங்களில் நில வகை அடிப்படையில் உதவிக்கான தகுதியைப் பெற
● நில நிலைமையை நிரூபிக்க பயன்படும்
முடிவாக:
பட்டா மற்றும் சிட்டா இரண்டும் நிலம் தொடர்பான இரண்டு முக்கிய ஆவணங்கள். ஒரு நிலத்தின் உரிமையை நிரூபிக்க பட்டா தேவைப்படும் போது, அந்த நிலம் எப்படி பயனடைகிறது என்பதைப் புரிந்து கொள்ள சிட்டா பயன்படுகிறது. இவை இரண்டும் ஒரே நிலத்திற்காகவே இருந்தாலும், அவை வெவ்வேறு நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம்
#பட்டா #சிட்டா
#நில_ஆவணங்கள்
#LandRecordsTamil
#PattaChitta
ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள
🟢🔴🟢
நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..
சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :
1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.
2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).
3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.
4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.
5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.
6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.
7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.
நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்
ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.
நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடி
1 ஏக்கர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்டர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்கர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்கர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்
ஏக்கர்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ
செண்ட்
1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ
ஹெக்டேர்
1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ
ஏர்ஸ்
1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை
• 10 கோண் = 1 நுண்ணணு
• 10 நுண்ணணு = 1 அணு
• 8 அணு = 1 கதிர்த்துகள்
• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
• 8 துசும்பு = 1 மயிர்நுனி
• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
• 8 சிறு கடுகு = 1 எள்
• 8 எள் = 1 நெல்
• 8 நெல் = 1 விரல்
• 12 விரல் = 1 சாண்
• 2 சாண் = 1 முழம்
• 4 முழம் = 1 பாகம்
• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
• 4 காதம் = 1 யோசனை
• வழியளவை
• 8 தோரை(நெல்) = 1 விரல்
• 12 விரல் = 1 சாண்
• 2 சாண் = 1 முழம்
• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
• 4 குரோசம் = 1 யோசனை
• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)
நிலவளவை குழிக்கணக்கு வருமாறு
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா...1/2
My play list.... 30 பாடல்கள் இருக்கு, இரண்டாவது பல்லவில இருந்துதான் தொடங்கும், பிடிச்ச பாடல்களை முழுசா டவுன்லோட் போட்டுக்கோங்க.
ராஜா ராகம்... Happy weekend
தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலோனோருக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை Gratuity என்று பிடித்தம் செய்வார்கள்.
Gratuity என்பது பலருக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
Gratuity பணத்தை பெறுவது எப்படி?
குறிப்பு:
நிறுவனம் Gratuity தொகையை கொடுக்க மறுத்தால், விரைவில் Labour Court-ல் முறையிடலாம். நிறுவனம் மூடப்பட்டாலும், அந்த உரிமையாளர் அல்லது Receiver மூலம் Gratuity வாங்கலாம்.
தொடர்புடைய ஆவணங்கள்:
•Form I (Gratuity Claim Form)
•பணிநிறைவு கடிதம் (Relieving Letter)
•சம்பளச் சான்றிதழ் (Salary Slip)
•நியமன ஆவணம் (Appointment Letter)
•ஆதார் / PAN / வங்கி கணக்கு விவரங்கள்
Gratuity என்பது ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அவர்களது சேவையின் அடிப்படையில் வழங்கப்படும் ஒரு தொகையாகும். இது Payment of Gratuity Act, 1972 என்ற சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
Gratuity பணத்தை பெறுவதற்கான தகுதிகள்:
1. குறைந்தது 5 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருக்க வேண்டும்.
ஓய்வு, பணிநீக்கம், மரணம், உடல் ஊனமடைதல் போன்ற காரணங்களுக்காக வேலைவிடும் போது 5 ஆண்டுகள் கட்டாயம் இல்லை.
2. நிறுவனம் Gratuity Act உடன் உடன்படிக்கையில் இருக்க வேண்டும்.
10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம் கட்டாயமாக gratuity வழங்க வேண்டும்.
Gratuity பெறுவதற்கான செயல்முறை:
1. நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கவும் (Application Form – I)
• பணிநிறைவு (Retirement), ராஜினாமா (Resignation), அல்லது ஏனைய தகுதிகளுக்காக gratuity பெற, Form I (Gratuity Claim Application) நிரப்பி உங்கள் நிறுவனத்தின் Human Resources (HR) அல்லது Accounts Department-க்கு வழங்க வேண்டும்.
• பணிநிறைவு/ராஜினாமா செய்த 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
• பணியாளர் இறந்தால், அவரது நியமிக்கப்பட்ட குடும்பத்தினர் அல்லது வாரிசுகள் Form J மூலம் விண்ணப்பிக்கலாம்.
2. நிறுவனத்தின் சரிபார்ப்பு & gratuity கணக்கீடு
• நிறுவனம் உங்கள் சேவை ஆண்டுகள், இறுதிப் சம்பளம் போன்ற விவரங்களை ஆய்வு செய்து, 30 நாட்களுக்குள் gratuity தொகையை கணக்கிடும்.
கணக்கீடு:
Gratuity 🟰 ( Last Drawn Salary ✖️ 15 ✖️ Completed Years of Service ) ➗26
Last Drawn Salary = (மூல சம்பளம் + பசிகட்டண கொடுப்பனவு DA)
Maximum Gratuity: ₹20 லட்சம் வரை வழங்கப்படும்.
3. தொகை செலுத்தல்
• நிறுவனம் 30 நாட்களுக்குள் gratuity தொகையை செலுத்த வேண்டும்.
• தாமதமானால், வட்டியுடன் (Simple Interest) வழங்க வேண்டும்.
4. நிறுவனத்திடம் இருந்து மறுப்பு அல்லது தாமதம் என்றால்?
• நீங்கள் Controlling Authority (Labour Commissioner Office)-க்கு புகார் அளிக்கலாம்.
• Labour Court-ல் வழக்கு தொடரலாம்.
Gratuity தொடர்பான சில முக்கிய அம்சங்கள்:
✅ 5 ஆண்டுகள் நிறைவு செய்யப்படாதாலும், மரணம் அல்லது நிரந்தர அங்கவீனம் ஏற்பட்டால் gratuity வழங்கப்படும்.
✅ Private & Government நிறுவனங்கள் இரண்டிற்கும் பொருந்தும்.
✅ Gratuity தொகைக்கு ₹20,00,000 வரை வரிவிலக்கு (Tax Exemption) கிடைக்கும்.
✅ பணியாளர் இறந்தால், குடும்பத்தினர் நியமிக்கப்பட்ட நபர் (Nominee) மூலம் பெறலாம்.
குறிப்பு:
நிறுவனம் Gratuity தொகையை கொடுக்க மறுத்தால், விரைவில் Labour Court-ல் முறையிடலாம். நிறுவனம் மூடப்பட்டாலும், அந்த உரிமையாளர் அல்லது Receiver மூலம் Gratuity வாங்கலாம்.
தொடர்புடைய ஆவணங்கள்:
• Form I (Gratuity Claim Form)
• பணிநிறைவு கடிதம் (Relieving Letter)
• சம்பளச் சான்றிதழ் (Salary Slip)
• நியமன ஆவணம் (Appointment Letter)
• ஆதார் / PAN / வங்கி கணக்கு விவரங்கள்
#KHByte #Gratuity #Claim #Process