வீட்டுக்குள்ள இருந்தா கரண்டு இல்ல..இல்லாத கரண்டுக்கு பில் எகிறது.வெளிய வந்தா அரிசி சக்கரைன்னு எல்லாம் விலைவாசியும் ஏறிக்கிடக்கு.ஊருக்கு போகலாம்னா ட்ராபிக் ஜாம், பஸ் இல்ல..பிரியாணி விலை 400 ஐ தொடுது.அதை திங்கவும் ஒரு மணி நேரம் க்யூல நிக்க வேண்டி இருக்கு.எங்க போனாலும் கூட்டம், சிவிக் சென்ஸ் இல்ல, யாரும் ரூல்ஸ பாலோ பண்றதில்ல..டாஸ்மாக்ல அரை கிலோமீட்டருக்கு க்யூ..இந்த ரணகளத்துலயும் திருப்பதில 30 மணி நேரம் தரிசனத்துக்கு குழந்தை குட்டிகளோட காத்து கிடக்கானுங்க.சின்னப்பசங்கலாம் கூலிப்படையா மாறி நிக்கிறானுங்க.மத்த ஸ்டேட்டோட எக்கனாமில போட்டி போடுற நேரத்துல ஆட்சி மாறி விமான நிலையம் போச்சு.தொழில் வளர்ச்சி அதள பாதாளத்திக்கு போகப்போகுது.எவ்வளவு சம்பாதிச்சாலும் அடுத்த தலைமுறைக்கு இங்க நிம்மதியான வாழ்க்கை இருக்குமான்னு தெரியல.இதுல எல் நினோனு வரலாறு காணாத வெயில் வேற..விவசாயத்துக்கு தண்ணி இல்ல.எவனும் கவலைப்படுற மாதிரி தெரியல.கருல உள்ள குழந்தைக்கு தளபதீ கச்சேரி பாட்ட போட்டு மூவ் ஆகுறத ரீல்ஸ் போடுற கூட்டத்துக்கிட்ட மாட்டிக்கிட்டு சாவப்போறோம்.
கடைசி வரைக்கும் மக்களுக்கான எந்த பிரச்சனையும் இவன் ஆட்சியில தீர்க்க போறதில்ல.
ஒரு சைடு திமுகவ திட்டி காலத்த ஓட்டுவான், இன்னொரு பக்கம் டாபிக்க மடை மாத்தி மக்களை யோசிக்க விடாம பண்ணிட்டு இருக்க போறான்..
மோடி பண்ண, பண்ணிட்டு இருக்க அதே மெத்தட்...
கர்ப்பிணியான மனைவி தன் கணவரிடம், "உங்களுக்கு என்ன வேண்டும்? மகனா அல்லது மகளா?" என்று கேட்கிறாள்.
அதற்கு கணவர், "அது மகனாக இருந்தால், அவனுக்குக் கணிதம் கற்றுக்கொடுப்பேன், உடற்பயிற்சி செய்ய சொல்வேன், வேட்டையாடக் கற்றுக்கொடுப்பேன், இன்னும் பல விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பேன்," என்று பதிலளிக்கிறார்.
சிரித்துக்கொண்டே அந்தப் பெண், "அப்படியானால் மகளாக இருந்தால்?" என்று கேட்கிறாள்.
கணவர் புன்னகைத்தபடியே, "மகளாக இருந்தால், அவளுக்கு நான் எதையும் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. அவள்தான் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பாள்: எப்படி உடை அணிய வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பது வரை அனைத்தையும்.
விரைவிலேயே, அவள் எனக்கு ஒரு இரண்டாவது தாயைப் போல மாறிவிடுவாள். எந்தச் சிறப்பான முயற்சியும் இல்லாமலேயே, அவள் என்னை எப்போதும் தன் நாயகனாகவே பார்ப்பாள். நான் 'வேண்டாம்' என்று சொன்னால், அதை அவள் புரிந்துகொள்வாள்.
அவள் எப்போதும் தன் வருங்காலக் கணவரை என்னோடுதான் ஒப்பிட்டுப் பார்ப்பாள். அவளுக்கு எவ்வளவு வயதானாலும், அவளை என் குட்டி இளவரசியாக நான் நேசிக்க வேண்டும் என்று அவள் விரும்புவாள். எனக்காக அவள் உலகத்தையே எதிர்த்து நிற்பாள்; யாராவது என்னை காயப்படுத்தினால், அவர்களை அவள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாள்," என்று கூறுகிறார்.
நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...
அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே ???
அவர்தான் முதலமைச்சர்....!!!
யாரோ தவெகவை சேர்ந்த தனுஷ்கோடி என்பவன் போதைல ஒரு ஓட்டுநரை கத்தியால் குத்திட்டானாம்.. உயிர் கூட போகலை... அதுக்கு போய் சோழவந்தான்ல வேலைநிறுத்தமாம்..
ஏம்ப்பா டிரைவர் கண்டக்டர்ஸ், ஒரு handsome CM க்காக ஒரு ஆறு மாசம் கத்தி குத்தெல்லாம் தாங்கிக்ககூடாதா..
அந்த புள்ள நாங்க வேலைக்காரிங்க ன்னு சொல்லும் போது மனசு உருகிடுச்சு😭
படத்துல Emotional Dialogue பேசி மக்களை மைண்ட் Wash பண்ணி CM ஆகிட்டு,
மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளாமல், இப்போ எவன் வீட்டு எழவோ பாயை போட்டு அழுவோமுன்னு ஒருத்தன் இருக்கான்😤
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது !!
சாட்சிகள் !!
அண்ணாமலை அலறவில்லை
திருப்பதி நாரயணன் கதறவில்லை
வானதி வாய் திறக்கவில்லை
நயினார் காணவில்லை
சவுக்கின் புரோக்கிங் வேலை துவங்கவேயில்லை
ஆளும் தவெகவை எதிர்த்து யாருமே பேசவில்லை
வன்புணர்ந்து கொலை செய்யப்படும் செய்திகள் கடைசி பக்கத்தில் சிறு பெட்டிச்செய்தி
கஞ்சா இளைஞர்களின் பயங்கரக் கொலை அரைநாள் தகவல்
காவல் நிலையம் தாக்கப்பட்ட தகவலே எங்குமில்லை
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை (நார்மலைஸ்) இயல்பாக்குகிறார்கள்
சட்டமன்ற உறுப்பினர்களின் தவறுகள் கண்டுக் கொள்ளப்படுவதேயில்லை
கை மாறும் பணம் குறித்து எதிர்கட்சித் தலைவரும் பேசாவிட்டால்,
"புஷ்பா மாடல்" குறித்து யாருக்குமே தெரிந்திருக்காது
திமுககாரனின் ஒன்று விட்ட அத்தை மகனின் மருமகனுக்குப் பிறந்த மகள்வழி பேரன் பிரியாணி கடையில் சண்டை போட்டால் தலைப்புச் செய்தி!
தவெக MLA அறிவாள் எடுத்து கேக் வெட்டினாலும் நகைச்சுவை செய்தி!!
ஊடகங்கள் மக்களின் மனங்களில் விளையாடுகிறது,
மூளைகளில் விலங்கிடுகிறது!
ஊடகங்கள்,
இணையம்,
சனாதனவாதிகள்,
சாதியம்,
மதவாதிகள்,
பிற்போக்கு சோதிடக் கூட்டம்,
விலைபோனக் கூட்டம் என அத்தனைபேரின் கள்ள மௌனத்தில்
ஒரு காட்டு தர்பார் துளிர்கிறதென அறிகுறிகள் தெளிவாக தென்படுகின்றன. உண்மை யா இல்லையா #pls_comment
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்நாடு முழுவதும் ஒருவித மயான அமைதி நிலவுகிறது..
தேர்தல் வெற்றி பெற்று ஒரு கட்சி ஆட்சியமைக்கும் போது இருக்கும் மனநிலை எங்குமே தென்படவில்லை.
என்ன இப்படி ஆகிடுச்சு.. இனிமே என்னாக போகுதோ என்ற அச்சமே அனைவரின் முகத்தில் பிரதிபலிக்கிறது..
எல்லோரும் ஒருவித இறுக்கத்தில் இருக்கிறார்கள்.