ஒருவன் தான் சார்ந்த சாதி, மதம், இனம், மொழி, பாலினம் இவைகளை விட்டு விலகி வந்து ஒரு சமூகத்தைப்பார்க்க வேண்டும். அதுவே ஒரு பண்பட்ட சமூகப்பார்வையாளனுக்கு அறம்.
இந்த அடையாளங்களைச் சுமந்து கொண்டு ஒருவனால் இந்தச் சமூகத்தை நேர்மையாக மதிப்பிட முடியாது.
#HBDPeriyar142
(விஜய் ரசிகர்கள் நேரே கடைசி வரியைப் படிக்கலாம்.)
முதன்முதலில் நீட்டை காங்கிரஸ் கொண்டு வந்தபோது “இது கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதிக்கும்” என கலைஞர் கண்டித்ததால் “நீட் நடத்துவதும் நடத்தாததும் மாநிலங்களின் உரிமை” என பணிந்து சட்டத்தை மாற்றியது காங்கிரஸ்.
பின்னர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது நீட்டை ஏற்றுக் கையெழுத்திட்டார், அப்போது அதிமுகவில் உளவாளியாக இருந்த RSS கைக்கூலி மாஃபாய் பாண்டியராஜன்,
பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தபோதே நீட் என்பது மாபெரும் அநீதி என போராட்டத்தை ஆரம்பித்தார் MKS. ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசைதிருப்ப இப்படிச் செய்கிறார் என வழக்கம்போல் நம்மூர் திருடர்கள் இட்டுக்கட்டினார்கள். மாடு பிடிப்பதில் ஜெயித்துவிட்டு, படிப்பதில் தோற்றோம்.
பிறகு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக பாஜகவை நீட்டை ஒழிக்கச் சொல்லி நிர்பந்திக்கவே இல்லை. ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை வேறு வாங்கியது பாஜக.
பின்னர் திமுக ஆட்சி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது விஷச்செடியாக இருந்த நீட் இப்போது நன்றாக வேர்விட்டு, பல ஏழை, கிராமப்புற, நடுத்தர வர்க, BC, MBC, SC, ST மாணவர்களின் உயிரைக் குடித்து வளர்ந்து விஷ ஆலமரமாக நின்றிருந்தது. சட்டப்படி அதை முற்றிலும் ஒழிப்பதற்காக ஏ.கே.ராஜன் கமிட்டி அமைத்து அதை ஒழிக்கச் சட்டமும் இயற்றி அனுப்பியது திமுக அரசு. அதுதான் உதயநிதி சொன்ன ரகசியம். அதுதான் மந்திரம். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த ரகசியம் வேலை செய்யும். இந்த மந்திரம் பலிக்கும். ஆனால் பாஜகவின் இந்தியாதான் ஜனநாயகமே இல்லையே! ஜனநாயகத்துக்குப் புறம்பாக கவர்னரையும் ஜனாதிபதியையும் வைத்து இன்றளவும் அதை ஒழிக்கவிடாமல் ஒரு பச்சையான அயோக்கியத்தனத்தைச் செய்துகொண்டிருக்கிறது பாஜக. ஆனால் இப்போதும் பாருங்கள் “நீட்டை ஒழிக்கிறேன்னு திமுக சொல்லுச்சே.. ரகசியம் இருக்குனு உதயநிதி சொன்னாரே... ஒழிச்சுச்சா.. கிகிபிகி” என திமுகவைக் கிண்டல் செய்யும் எவனும், அயோக்கியத்தனமாக சட்டத்தை வளைத்த பாஜகவைக் கேள்வி கேட்க மாட்டான். இதில் நீட்டை ஆதரிப்பவனும் அடக்கம், (திமுகவைச் சேராத) எதிர்ப்பவனும் அடக்கம்! அதுதான் தமிழ்நாட்டின் விசித்திர டிசைன்!
வழக்கம்போல், எப்படி திமுகவின் இந்தித்திணிப்பு எதிர்ப்பை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, எப்படி திமுகவின் இட ஒதுக்கீட்டு ஆதரவை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, திமுகவின் மாநில உரிமைக்கான குரலை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ அதேபோல் திமுகவின் நீட் எதிர்ப்பை இப்போது ஏனைய இந்தியா லேட்டாகப் புரிந்துகொண்டிருக்கிறது. இதோ மாணவர் போராட்டம்.
மாணவர்களை, குறிப்பாகப் பெண்களை அசிங்கமாகத் தொடுவதும், மார்பகங்களைப் பிடிப்பதும், பின்புறம் லத்தியால் அசிங்கமான செய்கைகளைச் செய்வதும் என பாஜக போலீஸ் அயோக்கியத்தனம் செய்துகொண்டிருக்கும்போது, திமுக ஆ.ராசாவை அனுப்பி மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்கும்போது, உதயநிதி மாணவர்களுக்காக தன் ஆதரவையும் வன்மையான கண்டனங்களையும் தெரிவித்திருக்கும்போது, ஒரு காலத்தில் முதுகெலும்போடு நிமிர்ந்து நின்ற தமிழ்நாட்டு அரசு வாயை மூடிக்கொண்டு டேபிளுக்கு அடியில் ஒளிந்துகொண்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமே எதிர்த்த ஒரு அநீதியை இன்று இந்தியாவே எதிர்க்கும்போது உடன் நிற்க தமிழ்நாட்டுக்கு இன்று தெம்பில்லை. அதன் முதுகெலும்பு சினிமா மோக ஆசிட்டில் கரைந்துவிட்டது. அதன் வீரம் ரீல்ஸ்களின் பொய்களில் செத்துவிட்டது.
விலைபோனவர்களின் வார்த்தைகளுக்கும், ரீல்ஸ்களுக்கும், பொய்க்கும் மூளையை அடகு வைத்தவர்களே... ஏன் திமுக? ஏன் திமுக? ஏன் திமுக? என கேட்டுக்கொண்டே இருப்பீர்களே... இதற்காகத்தான் திமுக! நம்மை மானத்தோடு வைத்திருக்கத்தான் திமுக. தமிழ்நாடுக்கு வந்த ஆபத்தை மட்டுமல்ல, வரப்போகும் ஆபத்தைக் கூட எதிர்க்கத்தான் திமுக. தடுப்பூசியைத் தூக்கி எறிந்துவிட்டு உயிர்க்கொல்லிக் கிருமியிடம் உடலை ஒப்படைத்திருக்கிறீர்களே, உங்களைத் தற்குறி என்றால் சொல்லுவது? தற்கொலைக் காதலர்கள் என்றல்லவா சொல்ல வேண்டும்!
நம்மை நிஜ ஹீரோவாக வைத்திருந்தது திமுக. இதோ உங்கள் நிழல் ஹீரோ நம்மை பரிதாபமான நிஜக் கோமாளியாக்கி இருக்கிறார். வடக்கன், பீகார், பீடா வாயன் என கிண்டல் அடித்துச் சிரிப்போமே. அவனெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான், வாயால் அல்ல! ஏன் என்றால் நாம் செய்திருக்கும் காரியம் அப்படி!
மக்கள் கூட பொய்க்குப் பலியான பலியாடுகள். ஆனால் எல்லாம் தெரிந்தும், எல்லாம் அறிந்தும், தவெக என்பது பாஜகவின் ட்ரோஜன் ஹார்ஸ் என்பது தெரிந்தும் தமிழ்நாட்டின் இந்த வரலாறுகாணா அவமானத்திற்கும், அசிங்கத்திற்கும், வீழ்ச்சிக்கும் துணைநின்று ஒத்து ஊதும் திருமாவளவன், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், காங்கிரஸ்... நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
சாத்தான் உங்களுக்கு அதிகாரத்தில் மட்டும் பங்கு தரவில்லை. பாவத்திலும் தந்திருக்கிறான். தமிழ்நாட்டு வரலாறு உங்களுககன சோஃபா செட்டுகளை வட்டியும் முதலுமாய் கொடுக்கும். வட்டியும் முதலுமாய் கொடுக்கும்.
(கடைசி வரி: பதிவு ரொம்ப பெருசா இருந்தா படிக்க மாட்டீங்கள்ல. உங்களுக்குப் புடிச்ச மாதிரி ஷார்ட்டா சொல்றேன். “திமுக தோத்தா திமுக கூப்புக்கு போகாதுடா... நம்மளும் நம்ம வருங்காலமும்தான் கூப்புக்கு போகும். போ... போய் க்யூட் சி.எம்னு கமண்ட் போடு...”
-டான் அசோக்
21-07-2026
@tamiltalkies உங்க போஸ்ட்டை எல்லாம் பார்த்து யாரும் திருந்துவார்கள் என்று உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருக்குதா??
Reel World is actually Real World.
Real world is just Reel world.
We are living in Real world which is actually a Reel World.
#முடியல
@devpromoth வன்னியரசு அண்ணனுக்கு எதுக்கு இந்த அடியாள் வேலை?
விஜய்க்கு எதிராக திமுககாரன் பேசுனா தவெக காரன் வரட்டும். குறுக்கு இவரு எதுக்கு வர்றாரு.
ஒன்னும் சரியா படல. @thirumaofficial
எல்லாரையும் திருப்பி அடிக்க வேண்டிய தேவை வளர்ந்துகொண்டே போவது நல்லதுக்கில்ல.
@chennaipolice_ என்னங்க சார் உங்க சட்டம்??
கோவில் நிலத்தை ஆட்டைய போட்டவனை கைது பண்ணுவீங்கனு பார்த்தா, ட்வீட் போட்டவன கைது பண்ணியிருக்கீங்க.
Blastu.. Blastu..
இந்த பதிவில் நிறைய நண்பர்கள் வேறுபடலாம். ஆனாலும் இதை பதிவிடவேண்டுமென்று விரும்புகிறேன்.
சமீபத்து பேட்டி ஒன்றில் @udhaystalin, "கடைசிவரை எதிரி யார் என்று தெரியாமலேயே போர் செய்துகொண்டு இருந்தோம்" என்று தேர்தலில் அதிமுகவை மட்டும் தாக்கி பேசியதை சொன்னார்.
இது மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. கோபம் கொள்ள உரிமையில்லை.
"Tvkக்கு இளைஞர்களிடம் support கூடுகிறது" என்பது @Dmk_youthwing & @dmkwomenswing ற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவர்கள் ஏன் caution செய்யவில்லை என்று தெரியவில்லை?
அவர்களை விடுங்கள். காவல்துறையில் உள்ள உளவுத்துறைக்கு 100% தெரிந்திருக்கும். திமுக மேல் உள்ள அதிருப்தியில் காவல்துறை "திமுகவின் உண்மையான எதிரி யார்?" என்று @mkstalin இடம் சொல்லாமல் விட்டிருப்பார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்னொரு முறை @mkstalinனே ஆட்சிசெய்தாலும் இப்பொழுது செய்த அளவிற்கு நலத்திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்களை செய்திருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவே வியக்கும் அளவிற்கு ஆட்சி செய்தார். ஆனால், அவையாவும் மக்களிடம் புரியும்படி கொண்டு சேர்க்காததும் தோல்விக்கு ஒரு காரணம்.
எதிரி யார் என்று தெரியாததால் தேர்தலுக்கு முன்பு "Tvkயின் குற்றசாட்டுக்களுக்கு பதில் சொல்லாமல் ஆட்சியை இழந்தோம். ஆனால் "இப்பொழுது எதிரி யார்?" என்று தெரிந்தும் அவர்கள் பரப்பும் குற்றசாட்டுக்களுக்கு பதில் சரியாக சொல்லாமல் எதிர்வரும் தேர்தல்களில் எல்லாம் தோல்வி அடைய போகிறோம்.
தீயசக்தி என்று திமுகவை விஜய் முத்திரையே குத்திவிட்டார். அதை அப்பொழுதே எதிர்த்து TNஐ அழிக்க வந்த #அழிவுசக்திTVK என்று பதில் சொல்லி முத்திரைகுத்த திமுகவால் முடியவில்லை.
இப்பொழுது விஜய் "திமுகவில் உள்ளவர்களை எல்லாம் திருடர்கள்" என்கிறார். அதற்கும் திமுக react செய்யவில்லை. எனவே இதுவும் முத்திரை குத்தப்படும்.
அதற்கு மேலாக, @mkstalin & @V_Senthilbalaji மீதும் @arivalayam மீதும் கரூரில் 41 பேரை கொன்ற பழியை விஜயும், ஆதவும் போடுகிறார்கள். இதற்கு திமுக சரியான எதிர்வினை ஆற்றவில்லை.
நான் முந்திய பதிவினிலேயே, "விஜய் ஜோசியரின் உத்தரவுபடி 41 பேரை பலி கொடுத்தார்" என்று பேசுங்கள் என்று சொன்னேன்.
அவர்கள் "மக்கள் நம்பும்படி" பொய்பேசுகையில் நாமும் பேசவேண்டியதுதான். அடாவடியை அடாவடித்தனமாகதான் சந்திக்கவேண்டும்.
Bit bitஆக திமுக தலைவர்கள் பதில் சொல்லி பிரயோசனம் இல்லை. அவர்கள் பேட்டியை @Kalaignarnewsயே முழுதாக போடுவதில்லை.
நல்ல திறமையாக, அவதூறு வழக்கில் சிக்கிக் கொள்ளாதவாறு, தரவுகளுடன் பேசக்கூடிய இளம் தலைவர்களை official Spokespersonsஆக @mkstalin & @udhaystalin உடனடியாக நியமிக்க வேண்டும்.
கொலைபழியை மக்கள் நம்பும்படி Tvk பரப்பிவிட்டார்கள். இதற்கும் மௌனம் தான் பதில் என்றால் திமுக எந்த காலத்திலும் வெல்லமுடியாது.
"திமுக ஆட்சியை தோண்ட தோண்ட ஊழலாக வருகிறது" என்கிறார்.
மேலும், "தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஊழலை 100% ஒழித்துவிட்டோம். மாநில வருவாயை அதிகரித்து விட்டோம்" என்றும் விஜய் மக்கள் நம்பும்படி பேசுகிறார். இவற்றையெல்லாம் பொய் என்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
"மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்" என்று அலட்சியமாக இருக்கவேண்டாம்.
மக்கள்,"Insta, Whatsappல் திரும்ப திரும்ப வரும் செய்திகள், reelsகளை தான்" நம்புவார்கள்.
கரூர் பழிக்கு பதில் சொல்லாததால் இப்பொழுது மேலும் கலைஞரை களங்கப்படுத்தும் வகையில்,"ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவது தெரிந்து", "கலைஞர் தன் meetingஐ cancel செய்தார் என்று அபாண்டமாக நிர்மல்குமார் பேசியுள்ளார்.
மௌனமே பதில் என்று திமுக இருந்தால் மேலும் பல குற்றசாட்டுக்களை மக்கள் மனதில் பதியுமாறு Tvk பரப்பிவிடுவார்கள்.
பிறகு Tvk எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும், 2031ல் மக்கள் வாக்களிக்கையில் அவர்களுக்கு திமுக மேல Tvkயால் பரப்பப்பட்ட குற்றசாட்டுக்கள்தான் நினைவில் வரும்.
@shanmugamchin10@reach2kalyan@Gayashaba@SUDAYASOORIAN@Sindhu_ilamaran@aishwaryyan@Ranjith_Rayappa@mechanic_jockey@ArunaARUMUGAMS@Arifkodai0609@JackalVenom@Chitra41882129@Lingesd2024@DeepikaTwitz@Vaishnavi_Ragu@VSHemalatha
@Udhaystalin
அறிவுரை 3:
ஓட்டுக்கு பணம் கொடுக்காதீங்க. திமுக ஊழல் கட்சி என்பதற்கான ஆதாரத்தை நாமே மக்களிடம் பணமாக கொடுக்கிறோம். இன்னும் 2/3 தோல்விகள் வந்தாலும் பரவாயில்லை, ஓட்டுக்கு பணம் கொடுக்காதீங்க. பார்த்துக்கலாம்.
@mkstalin
திமுககாரங்க இன்னமும் இலக்கியநடையில் பேசிகிட்டிருக்காங்க.காலம்மாறி விட்டது. விஜய் மேடைப் பேச்சு என்று சொல்லி ஆடுகிறார் பாடுகிறார் அழுகிறார். நவரசங்களையும் காட்டி நடிக்கிறார். நம்மாளுங்க இலக்கிய நடையில் பேச ஆரம்பிக்கும் போதே போரடிச்சி சேனலை / வீடியோவை / ரீல்ஸை மாத்தீடுறாங்க.
தலைவரே @mkstalin , அய்யா TKS இளங்கோவன் மூத்த அரசியல்வாதி தான்... பழுத்த அரசியல் அனுபவம் உள்ளவர் தான்... ஆனால் மிகவும் பழகிப்போனவர்.... அவர் மூலம் கருத்துக்கள் வெளியாவது வழக்கமான அரசியலாக எடுத்துக் கொள்ளப்படும்.
செருப்பால அடித்தாற்போல் கேள்வி கேட்டு கண்டனம் தெரிவிக்கும் இளைய பேச்சாளர்கள் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, யாழினி, தமிழன் பிரசன்னா இவர்களை அதிகாரப்பூர்வமாக களமிறக்குங்கள்... வெளுத்து விடட்டும்
@Udhaystalin
2வது அறிவுரை.
பத்திரிக்கையாளர்களை சந்திக்காதீங்க.மாறாக அவர்கள் உங்களை தேடட்டும்.
சனாதனம்,சமூகநீதி,சாதி மறுப்பு என எதைப்பற்றியும் பேசாதீர்கள்.3 மாசத்துக்கொரு தடவ போடுற கூட்டத்துல என்ன பேசணுமோ அதுல மட்டும் கவனம் செலுத்துங்க.குறிப்பா இலக்கியநடையில் பேசாதீங்க.நடிங்க.
@Udhaystalin
ஒரு அறிவுரை.
நீங்க எல்லாத்துக்கும் கருத்து சொல்லத்தேவையில்லை. 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் போட்டு பக்கா ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி ஏற்ற இறக்கத்துடன் தேவைக்கு ஏற்ப முகபாவங்களை மாற்றி ஸ்டேஜ் பண்ணுங்க. மொத்தத்துல ஸ்டேஜ்ல நடிக்க. கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா வேறு வழியில்லை.
@tamiltalkies பேச சொன்னோம். நடிக்க சொல்லல.
ஆனா நல்லா நடிக்கிறாரு.
I strongly believe. Vijay have Zero Socio /Political knowledge.
Staging things as per script without even knowing the severity of the issue.
@tamiltalkies திமுக மேல் பழி போட முடியாத மரணங்கள் மேல் எல்லாம் அண்ணனுக்கு எந்த அக்கறையும் இல்லை.
ஓட்டாக மாற்ற முடியாத மரணஙகளில் நேரவிரயம் செய்ய அண்ணனுக்கு நேரமும் இல்லை விருப்பமும் இல்லை போல.
@tamiltalkies நிச்சயமாகத் தவறு தான். திமுக தன்னை தடுக்கிறது / ஒடுக்குகிறது என்று ஒப்பாரி பாடிக்கொண்டே இருந்ததாதல், விஜயைத்தடுப்பது அரசியல் ரீதியாக பின்னடைவைத்தரும் என்று எண்ணி விஜயை இஷ்டம் போல ஆட விட்டது திமுக அரசு. அதன் பலனை இன்று அனுபவிக்கிறது.
@devpromoth நீதி என்று ஒன்று உண்டென்றால், விஜய் இந்தப் பாவத்துக்கான தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்.
யார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் எத்தனை கோவில் போய் வேண்டினாலும் விஜயின் பாவம் கழியப்போவதிவ்லை, அவர் தன் தவறை உணர்ந்து பேசாத வரை.
@tamiltalkies விஜய் இப்பவும் நல்லா நடிக்கிறாரு.
டயலாக் டெலிவரி வழக்கம் போல பட்டாஸ்.
ஆனால் உண்மை தான் பாவம், உறங்குகிறது.
விஜய் தமிழ்நாட்டின் சாபக்கேடு.
@THE_INDRA_KUMAR@mkstalin ஒவ்வொரு முறை கரூர் சம்பவம் பற்றிய பேச்சைக் கேட்கும் போதும் பதற்றம் வருகிறது.
41 பேர் சாவுக்கு காரணமாக இருந்துவிட்டு எப்படி இவ்வளவு தைரியமாக வாய் கூசாமல் பேச முடிகிறது விஜயால்.
நீதி,நேர்மை என்பதெல்லாம் வெற்று வார்த்தைகள் தானா?
உண்மை வெல்லும் என்பது பொய்யா?
என் வலி தீர மருந்துண்டா?