ஜமீன்களிலும் - பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று!
நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய தி.மு.கழகம் இன்று 78-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் பல எட்டாத உயரங்களுக்குத் தமிழ்ச்சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு.
சமூக நீதி - மாநில உரிமை - பெண் விடுதலை - தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில்,
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை கழகம் ஆற்றிய பணிகள் ஏராளம்.
எத்தனையோ அடக்குமுறைகள் - ஏவப்பட்ட நெருக்கடிகள் - புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது தி.மு.கழகம்.
நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம்.
கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல - நம் உயிர் என்று முழங்குவோம்!
வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்!!
#DMK78
திருப்பத்தூர் வடக்கு மண்டலப் பாகமுகவர்கள் பயிற்சி மாநாட்டிற்கு வருகை தந்த முதலமைச்சர் @mkstalin அவர்களை கருப்பு - சிவப்புத் துண்டு அணிவித்து வரவேற்ற கழகத் தொண்டர்கள்!🤩🖤♥
#ஸ்டாலின்_தொடரட்டும்
மாண்புமிகு #துணை_முதலமைச்சர், கழக #இளைஞரணி செயலாளர், எல்லோர்க்கும் எல்லாம் என சமூகநீதி காத்து எங்களை வழிநடத்திடும் ஆருயிர் இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க இளந்தலைவர்!
#HBDUdhay