சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லையே. இந்த அரசு மக்களுக்கானதா எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்கானதா?
முழு காணொளி
https://t.co/17EF2XYQmt
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லையே. இந்த அரசு மக்களுக்கானதா எண்ணெய் நிறுவனங்களுக்கானதா?
https://t.co/17EF2XYQmt
மக்கள் எதிர்க்கும் திட்டத்திற்கு, மக்கள் அச்சப்படும் திட்டத்திற்கு, அதுகுறித்த விரிவான ஆய்வறிக்கைகளோ, கருத்து கேட்புகளோ இல்லாமல் அவசரம் அவசரமாக தவெக அரசு அனுமதி அளிப்பது யாருக்காக?
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கும் தவெக அரசு.
கன்னியாகுமரிமாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணை காலாவதி ஆகும் நிலையில்,அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கன்னியாகுமரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய செயற்குழு கூட்டத்தில்இதே தவெக, இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நாடகம் அரங்கேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான அழிவுத்திட்டங்களை திணிக்கும் பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி நிற்கும் தமிழ்நாடு தவெக அரசின் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
முழு காணொளி மனிதி வலையொளியில்.
https://t.co/PhXtnCrTvr
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளை சுரண்டும் IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணையை புதுப்பித்திருக்கிறது மக்கள் விரோத தவெக அரசு
இந்த விரிவாக்கத்தால் ஏற்படும் சூழலியல் விளைவுகளை தாண்டி நம் மக்கள் சந்திக்கப் போகும் இன்னல்கள் ஏராளம். ஏற்கனவே பாறைகளை கடத்தும் கனரக வாகனங்களால் விபத்துகளும் மரணங்களும் தொடர்கதையான நிலையில் இப்போது மற்றுமொரு பேராபத்து காத்திருக்கிறது.
முழு காணொளி
https://t.co/PhXtnCrTvr
கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@DAEIndia@moefcc@byadavbjp
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை (G.O. Ms No. 12) வெளியிட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, கடந்த 03.11.2024 அன்று நடந்த த.வெ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில், "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டம்" என இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களையும் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் தாது மணலில் இருந்து மோனசைட் (Monazite), சிர்கான் (Zircon) உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும். இந்த அகழ்வினால் ஏற்படக்கூடிய கதிரியக்கம் சுற்றுப்புறக் கிராமங்களில் பரவிப் பொதுமக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கும் ஆபத்து உள்ளது. கடலோர மணலில் இருந்து தாதுப் பொருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் கொட்டுவதால் கடல் நீரின் தன்மை மாறுவதோடு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழிக்கப்படும்.
சென்ற மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளுக்கு புகைப்படக் கலைஞர் குழு புடைசூழ பார்வையிட்டு ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் தன் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு அவர்கள். ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் துறைதான், கன்னியாகுமரியின் 1144 ஹெக்டேர் பரப்பளவை அணுக்கனிமக் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளது. குவாரிகளை சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒட்டுமொத்தக் கடலோரத்தையே கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒன்றிய அரசின் IREL நிறுவனத்திற்கு சிகப்பு மின்கம்பளம் விரிப்பதுதான் அமைச்சர் பிரபு அவர்களின் ‘அதிரடி’ நிர்வாகமா? விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம் காட்டும் இந்த இரட்டை வேடத்தைத்தான் மக்கள் கடந்த மாதம் கொண்டாடித் தீர்த்தார்களா?
மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, 08.09.2025 அன்று அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பபெற்று, எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்திவிட முடியாதா என்று முயற்சிக்கும் நேரத்தில் மாநில அரசோ, IREL நிறுவனத்திற்குத் தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற வசதியாகக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வேண்டும். கன்னியாகுமரி மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கன்னியாகுமரி பகுதியை சார்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் ஒருங்கிணைத்து நடத்திய TN74 PREMIER LEAGUE மட்டைப்பந்து விளையாட்டு தொடரை துவங்கி வைத்து மகிழ்ந்தோம்.
நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பில் அந்நிகழ்விற்கான மதிய உணவு வழங்கப்பட்டது.
போட்டிகளும் விழாவும் மிகவும் நேர்த்தியுடன் திட்டமிடப்பட்டிருந்தது. வருடா வருடம் இதை சிறப்பாக முன்னெடுத்து நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் வெற்றிபெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
@NaamTamilarOrg
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி மீன்பிடி தொடர்பான வேலைகளை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரித்து, முறையான தரவுத்தளம் (Database) ஒன்றை உருவாக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள்!
இந்தத் திட்டத்தில், தொழிலாளர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு, கைரேகைகளும் பதிவு செய்யப்படுகின்றன. அவசரக் காலங்கள், விபத்துக்கள் நேரிடும் போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதே வேளையில் சமூக நல்லிணக்கத்தைப் பேணி சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் இந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு முறை மிக அவசியமான ஒன்றாகும்.
வெளிமாநிலத் தொழிலாளர்களின் வருகையை முறைப்படுத்தவும், மண்ணின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் உள்நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Line Permit - ILP) முறையின் ஒரு வடிவமாகவே எஸ்பி அவர்களின் இந்தச் செயல்பாடு அமைந்துள்ளது.
தற்போது சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டினம் ஆகிய அரசு மீன்பிடித் துறைமுகங்களில் இந்தத் தரவுத்தளப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட எஸ்பி அவர்களிடம் பேசி எங்களது வாழ்த்துகளையும், கோரிக்கையையும் முன்வைத்தோம். அப்போது, கடற்கரைக் கிராமங்கள் மற்றும் துறைமுகங்களோடு இதை நிறுத்திக் கொள்ளாமல், மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற அனைத்துத் துறைகளிலும், தளங்களிலும் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இந்தத் தரவுத்தளப் பதிவை விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தோம்.
முறையான நிர்வாகத்திற்கும், சமூகப் பாதுகாப்பிற்குமான இந்த வழிமுறை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையட்டும்!
@NaamTamilarOrg
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
தென் எல்லை விடுதலைப் போருக்கு தலைமை தாங்கி தமிழர்களை ஒருங்கிணைத்து களம்கண்டவர்.
குமரி மண்ணின் அரசியல் பிரதிநிதியாய் திருவாங்கூர் சட்டமன்றத்தில் தமிழர் உரிமைக்காக முழங்கியவர்.
வீட்டுக்கொரு தமிழன் நாட்டைக் காக்க புறப்படு என்ற அறைகூவலை விடுத்து தமிழர்களை இனமாய் ஒன்றிணைத்து,
குமரி மண்ணை தாய்த் தமிழ்நாட்டுடன் இணைத்துத் தந்தவர்
எம் முன்னோர்களால் ராஜாவு என அன்போடு அழைக்கப்பட்ட, தெற்கெல்லை காவலர், குமரித்தந்தை மார்சல் நேசமணி அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் பெரும் புகழை போற்றுவோம்.
@NaamTamilarOrg
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்..!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்..!
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ் திரைப்படக்கலைக்கு மண்ணின் மணத்தை பூசியவர்.
ஒளிப்பட கருவிகளோடு சேர்த்து உலகின் கண்களையும் தமிழ்நாட்டு கிராமங்களை நோக்கி திருப்பியவர்.
குறிப்பாக குமரி மண்ணின் எழிலையும் நேர்த்தியையும் தன் பல திரைப்படங்களில் காட்சிப்படுத்தியவர்.
கலையிலும் அரசியலிலும் சமரசமே செய்யாதவர்.
தன் பாணியையும் கருத்தியலையும் எதன் பொருட்டும் மாற்றாதவர்.
இனப்படுகொலையை கண்டித்து பெருமைமிக்க ஒன்றிய அரசு விருதை திருப்பிக் கொடுத்தவர்.
தமிழ் மண்ணிற்கான, இனத்திற்கான அனைத்து போராட்டங்களிலும் தனது கருத்தையும் பங்களிப்பையும் வெளிப்படுத்தியவர்.
தமிழ்திரைக்கலையின் தனிப்பெரும் அடையாளம். இயக்குனர் இமயம் எங்கள் ஐயா பாரதிராஜா அவர்கள் இயற்கையில் இளைப்பாறட்டும்.
"தம்பி எல்லாம் சரி தான். ஆனா ஒருமை'ல பேசுறத உங்க அண்ணே நிறுத்தனும்"
நான்கு வருடங்களாக அவனோடு தங்கி சாப்பிட்டு பயணித்த தம்பிகளில் நானும் ஒருவன்... இரவெல்லாம் தூங்க மாட்டான் எம் அண்ணன். புலம்பிக்கொண்டே இருப்பான். ஏதோ ஒரு ஊருக்கு கட்சி ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு போயிருப்பான்.. விடியற்காலை நடைப்பயிற்சி கிளம்புவான். நாங்களும் உடன் செல்வோம். ஒரு சிறிய நீர் குட்டையை பார்ப்பான்.. 'என்னடா இந்த கண்மாய இப்படி போட்டு வச்சிருக்காங்கெ.. கருவேள முள் அடைஞ்சு நாசமா போயிருக்கே டா' இப்படி நீர்நிலைய பாதுகாக்க மறந்துட்டானுங்களே... மனுசன் எப்படி டா வாழுவான்... ஆடு மாடு என்னடா பண்ணும்' இது எந்த நகராட்சிக்கு உட்பட்டு வருது.. நாளை காலை அந்த அதிகாரிங்க கிட்ட பேசு.. உடனே தூர்வாரனும்.. இல்லனா நம்ம புள்ளைங்களை இறக்கி விடு அவனே தூர்வாரி முடிப்பான்' என்று அவ்வளவு அக்கரை கொள்வார் நமது இயற்கை மண்ணின் மேல்..
கடந்த 2024, பாராளுமன்ற தேர்தல் காலம். தூத்துக்குடி சுற்றுப்பயணம் வந்த நேரம். சத்யா ரிசார்ட்டில் தான் தங்கிருந்தோம். பக்கத்து பனங்காடு. அங்கே நடைபயிற்சி போகலாம் என உள்ளூர் கட்சி அண்ணன்கள் அழைத்துச் சென்றார்கள். அது ஒரு சிறிய கால்வாய் தான். முட்புதர் தேங்கி செத்துக்கொண்டிருந்தது...அதைக்கூட சகிக்க முடியவில்லை அவனால். இதை பேசினால் எவனும் கேட்க மாட்டான். நேரலையில் காணொளி போடு என அதைப்பற்றி பேசி சமூக வலைதளத்தில் பரவியது. மறுநாள் காலை அதே இடத்திற்கு நடைப்பயிற்சி சென்றோம். பொக்லேன் இயந்திரங்கள் மூலம் தூர்வாரிக்கொண்டிருந்தனர். யாரென்று கேட்டால் அது பஞ்சாயத்து சார்பில் அரசு சார்பில் தூர்வாருகிறோம் என்றார்கள். இதுபோல் பல ஏரிகள், குளங்கள், குட்டைகள் இன்றும் மீண்டும் உயிரோடு இருக்க ஒரே காரணம் எம் அண்ணன் சீமான் மட்டுமே... இது தான் எங்களது அரசியல். மேதகுவின் இடத்தில் வைத்துப் பார்க்க ஒப்பானவன்... எரியும் நெருப்பில் சிறு துண்டுகள் கனல்களாய் தெரிக்க தான் செய்யும். அக்கோபம் இம்மண்ணிற்கும் மக்களுக்குமானது.. உரிமைப்பாசம் அது..
மேடையில் பல கட்சித் தலைவர்களை விமர்சித்தாலும் நேரில் பார்த்தால் எம் அண்ணனே கட்டி அரவணைத்து அன்பைப் பொழிவார். அது அவர்களுக்கும் தெரியும்.. ஒரு பத்து நிமிடம் அவனது அருகில் இருந்து பாருங்கள். பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் எம் அண்ணன் என புரியும்.. 🔥❣️❣️
உலகெங்கும் வாழும் இசுலாமிய சகோதர சகோதரிகளுக்கு தியாக திருநாளாம் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈகையையும், தன்னலமற்ற தியாகத்தையும் வலியுறுத்தும் இந்த நன்னாள் நம் அனைவர் வாழ்விலும் நற்குணங்களை தரட்டும்
“படைப்புகளிடம் கருணை காட்டாதவர் மீது படைத்தவன் கருணை காட்டமாட்டான்"
என்ற இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் வார்த்தைகளுக்கேற்ப , இயற்கையையும், மனிதர்களையும், அனைத்து உயிர்களையும் நேசித்து வாழ முயல்வோம்.
@NaamTamilarOrg
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
@ShalinSpeaks@Janu_Bhaskar_ One thing I like u in you is u r brutally honest and that kicks 🙏 Picking ppl for what they are in a distractive pace of the social order is a new age trait. I enjoy all that he does and then also remember this to be fair.
மாபெரும் தமிழ் கனவு ஒன்று கந்தக குண்டுகளாலும் துப்பாக்கி தோட்டாக்களாலும் சிதைத்து புதைக்கப்பட்ட நாள் இன்று.
தமிழினம் கண்ட மாபெரும் தலைவனின் வீரப்பெரும்படை தங்கள் ஆயுதங்களை மவுனித்த நாள் இன்று.
தாய்த் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகளாம் ஈழத்தமிழ் சொந்தங்களின் கதறல் சத்தம் விண்ணைப்பிழந்து அடங்கிய நாள் இன்று.
விண்ணைப்பிழந்த அக்கதறல் சத்தம் நம்மை எட்டாமல் பார்த்துக்கொண்டனர்.
களத்தில் குடும்பத்தை ஈந்த தலைவனை மறுத்து யார் யாரையோ தமிழினத்தலைவராய் நம் தலையில் கட்டினர்.
அப்பெருங்கனவினை தமிழினத்தின் கற்பனையில் கூட இல்லாது அழிக்க நினைத்தனர்.
இதோ 17ஆவது இனப்படுகொலை நினைவு நாள் நமக்கு சொல்வது இதை தான்.
சிதைத்து புதைக்கப்பட்ட அக்கனவு என்றோ ஒருநாள் முளைத்து எழும்.
அதுவரை உன் தலைவன் யார், துரோகிகள் எவர், உன்னை வீழ்த்திய அரசியல் எது, உன் விடுதலைக்கான அரசியல் எது என்பதை மட்டும் நினைவிலே வைத்துக்கொள்.
அதை அடுத்த தலைமுறைக்கு கடந்து.
விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை பாடியது போல
“கொடியுயர்த்தி வாழ்ந்தவொரு
குடிவாழ்க்கை
இடிவிழுந்து எல்லாமிழந்து
இருக்கிறது சூனியமாய்
நாளையிது மீண்டும் நிமிரும்
மீள அழகொழிரும்”
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.
@NaamTamilarOrg
#TamilGenocideDay2026
#தமிழினப்_பேரெழுச்சிநாள்2026