மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான மதிப்பிற்குரிய ஐயா கலை அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, தன்னுடைய பார்வையையும், கருத்தையும் ஆணித்தரமாக முன்வைக்கும் ஐயா கலை அவர்கள் தனிப்பட்ட முறையில் என் மீதும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியின் மீதும் பெரும் அக்கறைகொண்டவராவார். அவருடைய மறைவுச்செய்தி பெரும் வேதனையளிக்கிறது.
ஐயா கலை அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
மாலை முரசு தொலைக்காட்சியின் நெறியாளர் அண்ணன் பரத் அவர்களின் மறைவுச்செய்தி பேரதிர்ச்சி தருகிறது.
எப்போதும் அன்பொழுகப் பேசுவார். இவ்வளவு சீக்கிரம் விட்டுப் போவார் என்று நினைக்கவில்லை.
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் !
தமிழ்நாட்டின் மொழி , பண்பாடு , கலை,இலக்கியம் , மாநில உரிமைகள் காக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் !
தமிழ்த்தாய் வாழ்க !
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
இந்திய ஒன்றிய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம் தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது.
தமிழ்நாடு என்ற சொல்லாடல் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதை பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
என்று சிலப்பதிகார காட்சிக் காதையில் பாடும் இளங்கோவடிகள்
“‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
என்று வாழ்த்துக் காதையில் பாடுகிறார்.
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.” என்று பாடுகிறது பரிபாடல்
தொல்காப்பியத்திற்கு பதினொராம் நூற்றாண்டில் உரை எழுதிய இளம்பூரணர் தெளிவான கேள்வி-பதிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு “நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“ என ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறுதியிட்டு தெளிவாக வரையறுக்கிறார்.
“மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்” என்றும்
“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்” என்றும் பெரிய புராணத்தில் பாடுகிறார் சேக்கிழார் பெருமான்.
உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி
மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ” என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! என்று தமிழ்நாடு தமிழ்நாடு என்று கொண்டாடுகிறார் பெரும்பாவலர் பாரதியார்.
அப்பெருமை மிக்க வரலாற்றுப் பெயரை மீண்டும் சென்னை மாகாணத்திற்கு இடக்கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 79 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார். ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய் நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ நாம் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம்.
‘தமிழ்நாடு’ என்று பெருமிதத்தோடு அழைத்தாலும் தமிழர் நிலத்தில், தமிழர்களுக்கான முதன்மைத்துவம் இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதன் பெருங்கொடுமை. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கன்னடர் ஒருவரை நியமித்துள்ள அநீதி தவெக அரசால் இழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உச்ச பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தமிழர் அல்லாத பிறமாநிலத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். தவெக அரசின் அதிகார மையங்களாக இருப்பவர்கள் அனைவரும் பிற மாநிலத்தவர்களாகவே உள்ளனர். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகாரம் ஏதுமற்ற கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாய்மொழிக்காக தன் இன்னுயிரை இழந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லைதான். ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ‘தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது.
ஆங்கிலம் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கும் அவல நிலையுள்ளது. இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதையே நல்லியல்பு, அதுவே நவீன நாகரீகம் என்று எண்ணுகிற மூடத்தனம் எங்கும் விரவிக் கிடக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் சட்டசபையிலயே வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசும் அவலத்தையும், அமைச்சர் பெருமக்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை தப்பும் தவறுமாக தமிழைப் பேசும் அவலத்தையும் தமிழ்நாடு காண்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி புகுத்தப்பட்டு தாய்மொழிக் கல்வி முற்றாக சிதைந்துள்ளது.
பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு என்கின்ற நிலைக்கேற்ப தமிழ்நாட்டு வீதிகளில் எங்கும் தமிழ் இல்லை என்றாகிவிட்டது. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பது அரிது. நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளை கடந்துவிட்ட பிறகும், அதைவிட மோசமானநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். அத்தகு பிறமொழி கலக்கும் அவலநிலை நீங்கி தாய்த் தமிழ்மொழி ஆட்சி அதிகார மொழியாக உண்மையான மாட்சிமை பெற்றிட தமிழ்நாடு நாளில் உளமாற உறுதியேற்போம்.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அனைவருக்கும் நமது உயிரினும் மேலான தாய்நிலமாம் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்...
பெயர் வைத்த நாளை கொண்டாடும் குழப்பத்தை ஒழித்து மாநிலம் உருவான நாளைக்கொண்டாட உண்மையான தமிழ்தேசிய ஆட்சி நாம் தமிழர் ஆட்சி அமைய இன்றைய நாளில் உறுதியேற்போம்..
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
ஒவ்வொரு நாளும் நாம் நிறைய Hoarding பார்க்கிறோம். அவற்றில் பல விதிமீறல்களுடன் இருக்கும் Hoarding. அப்படி விதி மீறும் பொழுது அது என்று நம் தலையில் விழும் என்று தெரியாது. இது குறித்து அறப்போர் இயக்கம் முதல்வர் முதல் சென்னை மாநகராட்சி ஆணையர் வரை பலருக்கு புகார் அனுப்பி உள்ளோம். இதன் விதிமீறல்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம் !
இது குறித்த முழு காணொளியை இந்த லிங்கில் பார்க்கலாம்.
https://t.co/RuIAsiPPXY
@CMOTamilnadu@chennaicorp
கன்னடத்திற்கு இருப்பது போல் இலக்கண, இலக்கியங்கள் வரலாற்று சிறப்புகள் எதுவும் தமிழ் மொழிக்கு கிடையாது.
-சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் "தமிழ்ச்செல்வி"
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழி கற்றுக் கொண்டாலும் ,தன் தாய் மொழி கன்னடம் தான் இவர்களுக்கு பெரிது.
A clock company was given a 140 year old bridge to repair. Four days after it reopened, the bridge fell into the river with 500 people on it. 135 died, more than 50 of them children. The man accused was later weighed in sweets at a ceremony in the same town.
His name is Jaysukh Patel, managing director of the Oreva group, the company behind Ajanta clocks.
In March 2022 the Morbi municipality gave Oreva a 15 year contract to repair and run the bridge.
On 26 October 2022 the bridge reopened. The town's chief officer later said the company opened it without telling them.
On 30 October 2022, around 6.40 pm, it was Sunday evening and the bridge was packed with families. It collapsed.
The youngest to die was 18 months old.
A forensic report said the cables were rusted, the anchors broken and the bolts loose.
Ten people were arrested, including Jaysukh Patel. He was charged with culpable homicide not amounting to murder.
In December 2023 the Gujarat High Court rejected his bail. In March 2024 the Supreme Court granted it, with a condition that he stay out of Morbi.
In November 2024 a court relaxed that condition. Days later a community group in Morbi honoured him at a temple event and weighed him in sweets.
Narendra Parmar, whose 10 year old daughter died on the bridge, said, "It is a matter of sadness for us to see the main accused being honoured like that."
Four years later, the trial is still going on.
கன்னடத்திற்கு இருப்பது போல் இலக்கண, இலக்கியங்கள் வரலாற்று சிறப்புகள் எதுவும் தமிழ் மொழிக்கு கிடையாது -இப்படிக்கு சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் "தமிழ்ச்செல்வி"🤦
தாய் மொழியை, அதன் பெருமைகளை காட்டி கொடுத்து பிழைப்பதற்கு விபச்சாரம் செய்து பிழைத்துக் கொள்ளலாம்😡
So three guys get life imprisonment for killing cows
Meanwhile son of a judge who ran over and killed A HUMAN gets bail in 3 hours
India is the country of Sodom and Gomorrah now
உயிருக்கு ஆபத்தான விளமபர பதாகைகள் - அறப்போர் இயக்கம் விதிமீறல் ஆதாரங்களுடன் புகார்
சென்னையில் எப்படி பலவிளம்பர பதாகைகள் விதிகள் மீறி உள்ளன என்பதற்கு உதாரணமாக 23 சட்டவிதிகளை மீறும் பதாகைகள் குறித்து ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் இன்றைய தினம் முதலமைச்சர், தலைமை செயலர், நகராட்சி நிர்வாக செயலர், நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு புகார் அனுப்பி உள்ளோம். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதிகளை மீறும் பதாகைகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளை மீறி சென்னையில் வைக்கப்பட்டுள்ள 23 விளம்பரப் பலகைகள் மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை ஒவ்வொன்றும் நேரில் பார்வையிடப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, கூகுள் மேப்ஸ் (Google Maps) இணைப்புகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு விளம்பரப் பலகையும் அது எந்த குறிப்பிட்ட விதியை மீறுகிறது என்பது சரிபார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஒரு மாதிரி மட்டுமே; அனைத்து விளம்பரப் பலகைகளும் விதிகளைத் துல்லியமாகப் பின்பற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதைவிட முக்கியமாக, இந்த பெரிய விளம்பரப் பலகைகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை (structural stability) குறித்து நாங்கள் மிகவும் கவலையடைகிறோம், ஏனெனில் இது மனித உயிர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும்.
புகார் குறித்த விரிவான வீடியோவை இங்கே காணலாம்
@Chief_Secy_TN@CMOTamilnadu@chennaicorp
தம்பி கலையை இறுதி ஈழப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்திலிருந்து அறிவேன். டெல்லி பல்கலைகழக மாணவராய் இருந்து தமிழர்களின் அணைத்து பிரச்சனைக்கும் தலைநகரிலிருந்து போராடி தன்னாலான எல்லா முயற்சியும் செய்தவர். எம்.எஸ்.எஸ் பாண்டியன்க்கு பிறகு தமிழ் அறிவுத்தளத்தில் குறுப்பிட வேண்டிய ஒருவர். சித்தாந்த முரண்களை கடந்து அரசியலில் இயங்கும் எல்லா கட்சிக்கும் அதன் தலைமைக்கும் அறிந்தவர். அவரை தவெக அரசின் காவல்துறைக்கு யார் என்று தெரியவில்லை. எந்த பின்புலத்தையும் விசாரிக்காமல் போலி இன்ஸ்டா முகப்பு படத்தை வைத்து கைது செய்யும் அளவிற்கு உளவுத்துறையின் லட்சணம் இருக்கிறது.
கோமாளிகளின் ஆட்சியில் அறிவர்களுக்கு இது தான் நிலை.
தவெக அரசு... தமிழ் நாட்டின் இருமொழி கொள்கையில் இருந்து விலகி விட்டதா ?
தவெக கட்சியில் 'இரு மொழி கொள்கை ' அடிப்படை கொள்கை இருந்து அகற்றப்பட்டு விட்டதா ?
Tvk government implementing Three language policy - in govt administration...
'Arignar anna' policy in dust bin
Rss agenda in front seat