விடியா திமுக ஆட்சியில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல்,
கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு
வரும் 82 மாவட்டக் கழகங்களும்,
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து,
விடியா திமுக ஆட்சிக்கு எதிராக,
“விடியா ஆட்சி உங்கள்
வீட்டு Bill-லே சாட்சி”
என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து,
மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும்; தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோம், விடியா திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்...
@AIADMKOfficial
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
“விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'"
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீரின், வரியையும் உயர்த்தி தமிழக மக்களை தவிக்க விட்ட விடியா திமுக அரசு!!
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
“விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'"
என்ற தலைப்பில், கழகத்தின் சார்பில் இன்று முதல் தீவிர பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளுதல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழகத்தின் திசையைத் தீர்மானிக்கப் போகும் 2026 தேர்தல் களத்தில் மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்கள் என்பதைதான்,
நேற்று முன்தினம் வெளியான News7 தமிழ் தொலைக்காட்சியில் வெளிவந்த ஸ்பிக் மீடியா - இடம்வலம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும்,
இன்றைய தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
சிறப்பாக செயல்படக் கூடிய எதிர்க்கட்சியாக அஇஅதிமுக..
சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடியார்..!!
மக்களுக்கு பிடித்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார்!
மக்களைக் காக்க..
தமிழகத்தை மீட்க..
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களால் மட்டுமே முடியும் என்பதை தமிழக மக்கள் முழுமனதோடு உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று தேர்தல் நடந்தால், 38% வாக்குகளுடன் அஇஅதிமுக தான் வெற்றி பெறும் என்பது,
மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்,
வெற்றி நம் கையில் இருக்கிறது என்பதை உறுதிசெய்து விட்டது.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#EPSfor2026
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதி எண் 4
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களால் தமிழகத்தைத் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டிய மூன்றெழுத்து மந்திரம், புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம்.
#MGR #MGRamachandran