Live னு ஒன்னு இல்லாம போயிருந்தா தற்குறிகள் உலகம் உண்மையென்று ஆகியிருக்கும்ல !
1. நெல் சேமிப்புக் கிடங்குகள்
தவெக:
“நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதாக திமுக ₹309 கோடி அறிவித்தது. ஆனால் என்ன செய்தீர்கள்?”
திமுக – சக்கரபாணி:
“திமுக ஆட்சியில் கிடங்குகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுள்ளது.”
மேலும் திமுக ஆட்சியின் செயல்பாடுகளில், 57 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், மொத்தம் 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு, சுமார் ₹827.78 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2. “திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம்”
தவெக:
“விவசாயிகளின் போராட்டங்களை ஒடுக்க குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டது.”
திமுக – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:
அந்த போராட்டமே விவசாயிகள் சம்மந்தப்பட்டதல்ல.
குறிப்பாக, திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் வேளாண்மைக்காக ₹1.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதாக விவசாய சங்கங்கள் பாராட்டிய அரசின் செயல்பாட்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
3. நெல்லுக்கான ஊக்கத்தொகை
தவெக:
“நெல்லுக்கு ₹2,500 வழங்குவோம் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை.”
திமுக பதில்:
திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் மற்றும் ஊக்கத்தொகை தொடர்ந்து உயர்த்தப்பட்டதைச் சுட்டிக்காட்டியது.
முக்கிய புள்ளிவிவரம்:
2021–22ல் 43.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்.
2024–25ல் 46.5 லட்சம் மெட்ரிக் டன் வரை கொள்முதல்.
திமுக ஆட்சியில் இதுவரை நெல் கொள்முதல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க உயர்வை கண்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 2026 ஜனவரியில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்ட கணக்குப்படி, அதிமுகவின் 10 ஆண்டுகளில் 1.79 கோடி மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், திமுகவின் சுமார் 4½ ஆண்டுகளில் 1.99 கோடி மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது — அதாவது 19.94 லட்சம் மெட்ரிக் டன் அதிகம்.
4. விவசாயக் கடன் தள்ளுபடி
தவெக:
“நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. திமுக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தது.”
திமுக – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:
“காலத்தை மட்டும் சொல்லாதீர்கள்; நாங்கள் செய்ததைப் பாருங்கள். விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.”
இங்கு திமுக தரப்பின் முக்கிய அரசியல் கேள்வி:
“நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயக் கடன் தொடர்பான வாக்குறுதி என்ன ஆனது?”
5. குறுவை சிறப்புத் தொகுப்பு
தவெக தரப்பு விவசாயிகளுக்கான புதிய உதவிகளை முன்வைத்தபோது,
திமுகவின் பதில்:
திமுக ஆட்சியில் ஏற்கனவே ₹481 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுமார் 20 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் முதன்முறையாக ₹132 கோடி மதிப்பில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. L
6. விவசாய மின் இணைப்புகள்
தவெக தரப்பு விவசாயிகளுக்கான மின்சாரம் தொடர்பாக விமர்சனம் வைத்தபோது,
திமுகவின் புள்ளிவிவர பதில்:
திமுக ஆட்சியில் விவசாய நிலங்களுக்கு 1.82 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதான் “விவசாயிகளுக்கு நாங்கள் என்ன செய்தோம்?” என்ற கேள்விக்கு திமுக தரப்பின் கணக்குடன் கூடிய பதில்
7. பயிர்க்காப்பீடு
திமுக தரப்பு:
“விவசாயிகளுக்கு வெறும் அறிவிப்புகள் மட்டுமல்ல; இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.”
👉 பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 37 லட்சம் விவசாயிகளுக்கு ₹6,049 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக அரசு தரப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
8️⃣ வேளாண்மைக்கு மொத்த நிதி
தவெக:
“எங்கள் அரசு வேளாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது.”
திமுக பதில்:
“மொத்த தொகையை மட்டும் சொல்லாமல், எந்தெந்த தலைப்புகளுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பதையும் பாருங்கள்.”
திமுக ஆட்சியின் ஐந்து வேளாண் தனி நிதிநிலை அறிக்கைகள் மூலம் மொத்தம் ₹1.94 லட்சம் கோடி வேளாண்மைத் துறைக்காக ஒதுக்கப்பட்டதாக அரசு தரப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
9️⃣ “நடிப்பு இல்லை — நடவடிக்கை”
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:
“எங்கள் ஆட்சியில் நடிப்பு இல்லை; நடவடிக்கைதான்.”
நிதியமைச்சர் திரு.மரிய வில்சன் சொல்றார், எங்க தவெக ஆட்சில முதல் காலாண்டுல, அதாவது 2026-27 Q1'ல 20881 கோடி கடன் வாங்கியிருக்கோம், திமுக ஆட்சில 2025-26 Q1'ல 19337 கோடி தான் கடன் வாங்கியிருக்கு, திமுக'விட தவெக அதிக கடன் வாங்கின மாதிரி இருக்கும் ஆனா, மாநிலத்தோட மொத்த பொருளாரத்துல வெச்சு பாத்தா (GSDP) திமுக 0.54% கடன் வாங்கியிருக்கு, தவெக 0.51% தான் வாங்கியிருக்குனு சொல்றாப்ள 😂 அப்படியே இருக்கட்டும்...
இதுல நம்ம நிதியமைச்சர் சொன்னாருல திமுக ஆட்சி காலத்துல தமிழ்நாடு GSDP 35,67,818 லட்சம் கோடி, நம்ம தவெக ஆட்சில தமிழ்நாடு GSDP 40,67,312 லட்சம் கோடினு, இது ஏதோ இவங்க இந்த மூனு மாசத்துல 5லட்சம் கோடிய தமிழ்நாட்டு பொருளாதாரத்துல சேத்த மாதிரியும், பொருளாதாரம் வளர்ந்த மாதிரியும் சொல்றார்ல அது தான் twist...
இந்த ரெண்டு GSDP'ல 2025-26 ஆண்டு 35லட்சம் கோடி GSDP திமுக அரசாங்கத்துல வளர்ந்த வளர்ச்சி அத அடிப்படையா வெச்சு 3% கடன் வாங்குச்சு திமுக(தமிழ்நாடு அரசு), இப்போ தவெக 40,67,313 லட்சம் கோடினு சொல்லுச்சுல அது என்னனா 2026 பிப்ரவரி மாசம் நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு இதே வளர்ச்சிய திமுக செயல்படுத்தினா தமிழ்நாட்டோட பொருளாதாரம் (GSDP) 2026-27 நிதியாண்டுல 40,67,313 லட்சம் கோடி இருக்கும்னு சொன்ன budget estimate இத வெச்சு தவெக அரசாங்கம் அடுத்த ஒரு வருசத்துக்கு கடன் வாங்க முடியும் அதாவது 40,67,313 கோடிக்கு 3% கடன்'னா சரியா இந்த வருசம் 1.22லட்சம் கோடி நிகர கடன் வாங்கும் தவெக. (50ஆயிரம் கோடி வட்டி தனி)
இந்த 0.51%, 0.54%னு இப்ப இவர் பேசுறதெல்லாம் சும்மா எதோ பேசனும்னு பேசிட்டு இருக்காப்ள... கொரளி வித்த.
இப்போ என்ன சொல்லிடங்கனு இவ்வளவு கோபம். அதுவும் ரவுடி போல சட்டமன்றத்தில் மரிய வில்சன் பேச்சு கேட்டு கொண்டு எப்படி திமுக அமைதியா இருக்கு ? பொறுமை அமைதி அன்பு கிறிஸ்தவம் எனக்கு சொல்லி கொடுத்தது என இவர் சொல்லும் போது பொறுமை இல்லாமல் “அப்படி தான் பேசுவேன்” என திமிராக பதில் கூறுகிறார்.. அதில் கடைசியா மைக் தட்டி விட்டு உட்காரும் போதும் ரவுடி போல தான் நடந்து கொள்கிறார். இதில் எனக்கு ஆங்கிலம் தான் பழக்கம் அப்படி தான் பேசுவேன் என திமிர் பதில் வேறு..
ஆனால் திமுக எந்த எதிர்ப்பும் காட்டாமல்- ஒரு படி மேலே போய் ஏவ வேலு தம்பி ரெம்ப நாளா தெரியும் என கூல் செய்வது வெக்கக்கேடு..
அமைச்சர் மரிய வில்சன் நடந்து கொண்ட விதம் கண்டிக்கதக்கது..
ஆமா இந்த ஆளு அன்பு பொறுமை தான் ஊருக்கு தெரியுமே.. பிறருக்கு கிறிஸ்தவ பைபிள் பாடம் எடுக்கிறார்..
நெறியாளர்: CJP க்கு பணம் எங்கிருந்து வந்ததூ?
CJP அசுதோஷ் ரங்கா: CJP பணம் மொத்தமும் பிரதமர் care fund இல் இருந்து வந்தது. எனவே பிரதமர் care fund ஐ முழுமையாக
விசாரிக்க வேண்டும்.
இந்த CJP கிட்ட சிக்கிட்டு பிஜேபியும் மோடி ஆதரவு மீடியாவும் படற பாடு இருக்கே பயங்கரம். என்ன பேசினாலும் வாலில் தீ வைத்த மாதிரியே ஆகுது. இந்த மாதிரி பசங்களுக்கு தான் இந்தியா காத்துட்டு இருந்துச்சு.
சட்டமன்றத்தில் உண்மையிலேயே எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் எவ்வளவு நிதானத்தில் இருக்கிறார்கள் என்பது புரிந்தது 🥺🥺
மரிய வில்சன் போன்ற தகுதியற்ற
சொந்த தம்பியை கொலை செய்ய முயன்ற ரவுடியை
தொலைக்காட்சியில் பார்க்கிற நமக்கே டிவியை உடைத்து விடலாமா என்கிற அளவிற்கு கோபம் வருகிறது 😡
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இந்த மாவட்ட மக்கள் தான் தவெகவுக்கு அதிகமாக ஓட்டு போட்டார்கள்.
அந்த மாவட்ட மக்கள் தான் மின் கட்டண உயர்வு, மற்றும் மின் கட்டண குளறுபடிகளால் அதிகம் பாதிப்பு அடைந்து உள்ளார்கள்.
#விசில்_சத்தம் நல்லா கேட்கிறதா? மக்களே.