குரங்குகளுக்குப் பயந்து மரத்தின் உச்சிக்குத் தப்பியோடிய சிறுத்தை, அங்கிருந்து தலைகீழாகக் கீழே இறங்கும் இந்த மிரட்டலான சாகசம் நம்பவே முடியாததாக உள்ளது! 🐆🐒🔥
💥💥 காங்கிரஸோட இந்த சாணக்கிய அரசியல் உண்மையிலேயே வேற லெவல் பாஸ்! 👏👏👏
கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா புரியும், TN காங்கிரஸ் எவ்வளவு அமைதியா செம கேம் ஆடிட்டு இருக்குனு... இப்போ அவங்க கைக்குள்ள இருக்குற #தவெக-வை வச்சு ஆடுற ஆட்டம் எல்லாம் நெக்ஸ்ட் லெவல்!🔥
🔹 திமுக கூட்டணியில இருந்துகிட்டே ஒதுங்கி பிரசாரம் பண்ணது
🔹 எலெக்ஷன்ல ஜெயிக்க திமுகவை கச்சிதமா யூஸ் பண்ணிகிட்��து
🔹 ஜெயிச்சதும் பதவி ஆசையில் இருந்த தவெக கூட்டணிக்கு தாவி அமைச்சரவையில உட்கார்ந்தது
🔹 வெறும் 5 MLA-க்களை வச்சுக்கிட்டு 1 ராஜ்யசபா MP + 2 அமைச்சர் பதவிகளை தட்டித்தூக்குனது (வேறு பலன்களும் இருக்காமே!)
🔹 அதுல ஒரு அமைச்சர் மேல வர்ற "புகார்கள்" மேல தவெக ஆக்ஷன் எடுக்காம பார்த்துக்கிறது
🔹 நேரடியா திமுகவை சீண்டாம, தவெகவை வச்சு மூவ் பண்றது
🔹 பார்லிமென்ட்ல திமுகவோட அடுத்த மூவ் என்னனு த���ெக அரசை வச்சு ஆழம் பாக்கு��து
என பெரிய லிஸ்ட் போடலாம்
"இதெல்லாம் சாதாரணம் தானே, இதுல என்ன சாணக்கியத்தனம்?"னு கேட்டா...
அதுக்கு ஒரே ஒரு சம்பவம் தான் பதில்! 👇
தவெக மெஜாரிட்டி இல்லாம அதே சமயம் பதவி வெறியோடு இருப்பதையும்..
எப்படியாவது அதிகாரத்துக்கு வரணும்னு NDA கூட பேசிட்டு இருக்காங்க என்பதையும்..
தெரிஞ்சுகிட்டு.., டக்குனு சரியான டைமில் உள்ள புகுந்து தன்னுடைய ஆதரவை கொடுத்து, தவெக-வை #NDA பக்கம் போக விடாம லாக் ���ண்ணது தான் காங்கிரஸோட மாஸ் மூவ்! 🎯
அதுக்கு முன்னாலேயே அபிஷேக் சின்ஹாவை அனுப்பி 2 வாரம் "அரசியல் கிளாஸ்" எடுத்ததுல இருந்து, காங்கிரஸ் இதை ரொம்ப நாளா பிளான் பண்ணிட்டு இருக்காங்க என புரியுது
காங்கிரஸ் சொன்ன எல்லா கண்டிஷனுக்கும் தவெக ஓகே சொன்னது வரை எல்லாமே செம பிளானிங்.
பதவி மோகம் கொண்ட #தவெக அதிகாரத்தை தக்க வெச்சுக்கணும் என்பதற்காக இப்போதைக்கு பாஜக, காங்கிரஸ் ரெண்டு தேசிய கட்சிகளுக்கும் நடுவுல ஒரு கைப்பாவையா மாட்டி இருக்கு.
காங்கிரஸ் இந்த அளவுக்கு சாணக்கியத்தனமா யோசிக்கும்னு கண்டிப்பா யாரும் எதிர்பார்க்கல!
💥💯
#WATCH | மகாராஷ்டிரா: சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்திற்கு அருகில், மொஹர்லி சாலையில் ஒரு தாய் புலி தனது குட்டிகளுடன் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் பரவி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
#SunNews | #Maharashtra | #Tiger
காவிரி நதியைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பினால், இந்தப் பதிவைப் பொறுமையாக படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இதுதான் காவிரி நதியின் பயணம்!
The Journey of #CauveryRiver
காவிரி என்றாலே, கர்நாடகாவில் இருக்கும் ஏதாவது ஓர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அது நேராக தமிழ்நாட்டின் மேட்டூர் #Mettur அணைக்கு வந்துவிடுகிறது என்று பலரும் நினைக��கிறார்கள்.
ஆனால் காவிரியின் உண்மையான பயணம் அவ்வளவு எளிமையானதல்ல.
காவிரி ஒரே நீர்ப்பிடிப்பை மட்டும் சார்ந்த நதி அல்ல. அது பல துணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், துணையாறுகள், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இணைந்த மிகப்பெரிய ஆற்றுப்படுகை.
ஒவ்வொரு துணை நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பெய்யும் மழையின் அளவு வேறுபடும். அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து, அணையின் கொள்ளளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் வேறுபடும்.
காவிரியின் பயணம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரியில் தொடங்குகிறது.
ஹாரங்கி #Harangi, ஹேமாவதி #Hemavathi மற்றும் லட்சுமண தீர்த்தா ஆகியவை தனித்தனி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உருவாகின்றன. இவற்றின் நீர் வெவ்வேறு இடங்களில் காவிரியுடன் இணைந்து, இறுதியாக கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் #KRS அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.
ஆனால் கபினியின் பயணம் வேறு. #Kabini
கபினி கேரளாவின் வயநாடு பகுதியில் உருவாகி, கர்நாடகாவிலுள்ள கபினி அணையில் சேமி���்கப்படுகிறது. பின்னர் T.நரசிபுரா அருகே காவிரியுடன் இணைகிறது.
அதாவது, கபினி அணையிலிருந்து வெளியேறும் நீர் முதலி��் KRS அணைக்குச் செல்வதில்லை. KRS அணையிலிருந்து வெளியேறும் காவிரியும், கபினி அணையிலிருந்து வரும் நீரும் T.நரசிபுரா பகுதியில் தான் ஒன்றாக இணைகின்றன.
இதற்குப் பிறகு சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி மற்றும் வழியிலுள்ள பிற சிறிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரும் நீரும் காவிரியில் சேர்கிறது.
இவ்வாறு பல்வேறு ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சேர்ந்த மொத்த காவி��ி நீர், கர்நாடகா–தமிழ்நாடு எல்லையிலுள்ள பிலிகுண்டுலுவில் #Biligundlu அளவிடப்படுகிறது.
பிலிகுண்டுலு ஓர் அணை அல்ல. அது மத்திய நீர்வள ஆணையத்தின் முக்கிய நீர் அளவீட்டு நிலையம். (CWC Water Gauge)
கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை மட்டும் கூட்டிப் பார்த்து, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் கிடைத்தது என்று கூற முடியாது. வழியிலுள்ள துணையாறுகளின் நீர்வரத்து, மழை, பயண நேரம் மற்றும��� ஆற்றின் உண்மையான ஓட்டம் அனைத்தும் இதில் அடங்கும்.
அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த உண்மையான நீரின் அளவு பிலிகுண்டுலுவில் பதிவாகும் நீரோட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
பிலிகுண்டுலுவைக் கடந்த காவிரி, தமிழ்நாட்டிற்குள் நுழைந்து ஒகேனக்கல் #Hogenakkal வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூரில் சேமிக்கப்படும் நீர், தேவை��ின் அடிப்படையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கீழே திறக்கப்படுகிறது.
01.08.2026 நிலவரப்படி முக்கிய அணைகளின் நீர்மட்டம் மற்றும் மொத்த கொள்ளளவில் உள்ள நீர் இருப்பு:
✅Harangi: 127.55/129 அடி – 94%
✅Hemavathi : 100.98/117 அடி – 64%
✅KRS: 91.80/124.80 அடி – 34%
✅Kabini: 56.28/65 அடி – 74%
✅Mettur: 73.82/120 அடி – 39%
✅Bhavani Sagar: 55.32/105 அடி – 18%
✅Amaravati: 28.54/90 அடி – 9%
“சதவீதம்” என்பது அந்த அணையின் மொத்த கொள்ளளவில் தற்போது எவ்வளவு நீர் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ஒவ்வொரு அணையின் உயரமும் கொள்ளளவும் வேறுபடும். எனவே, அணைகளின் நீர்மட்டத்தை மட்டும் நேரடியாக ஒப்பிடக் கூடாது.
மேட்டூர் அணைக்குக் கீழே பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன.
எனவே, இந்த ஆறுகளின் நீர் மேட்டூர் #Mettur அணையை நிரப்பாது. ஆனால் மேட்டூருக்குக் கீழே காவிரியின் ஓட்டத்திற்கும், டெல்டா பகுதிகளின் தேவைக்கும் அவை கூடுதல் பங்களிப்பை வழங்குகின்றன.
அதன்பிறகு முக்கொம்பு மேலணைப் பகுதியில் காவிரி–கொள்ளிடம் நீர்ப் பிரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரி டெல்டாவின் பல்வேறு கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
எனவே, காவிரி டெல்டாவிற்குக் கிடைக்கும் நீர் என்பது ஏதாவது ஓர் அணையின் இருப்பை மட்டும் சார்ந்ததல்ல.
அது பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரோட்டம், மேட்டூர் அணையின் இருப்பு மற்றும் வெளியேற்றம், தமிழ்நாட்டின் பவானி–நொய்யல்–அமராவதி துணையாறுகள், உள்ளூர் மழை மற்றும் நீர் ம��லாண்மை ஆகிய அனைத்தையும் சார்ந்துள்ளது.
சாதாரண நீராண்டில், ஜூன் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை மொத்தம் 177.25 TMC நீர் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டும். இது ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலான மொத்த அளவு.
சுருக்கமாக காவிரியின் பயணம்:
பல மழைப்பகுதிகள்
→ தனித்தனி துணை நீர்ப்பிடிப்புகள்
→ துணையாறுகள் மற்றும் அணைகள்
��� KRS–கபினி நீர் இணைப்பு
→ பிலிகுண்டுலு அளவீடு
→ ஒகேனக்கல்
→ மேட்டூர்
→ தமிழகத்தின் துணையாறுகள்
→ முக்கொம்பு
→ கல்லணை
→ காவிரி டெல்டா.
ஒரே காவிரி ஆற்றுப்படுகை; ஆனால் அதற்குள் பல துணை நீர்ப்பிடிப்புகள்!
இந்த வரைபடத்தின் நோக்கம், அந்த நீண்ட மற்றும் சிக்கலான காவிரிப் பயணத்தை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளச் செய்வதே.
ஆ��ாரம்: தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் நீர்த்தேக்கக் கண்காணிப்புத் தளம், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், கருத்துப் பகுதியில் கேளுங்கள். என்னால் முடிந்தவரை அதுகுறித்த தகவல்களைத் தேடி, உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
@praddy06 @tamilnadu_wrd @CWCOfficial_GoI
#Cauvery #Tamilnadu #Karnataka #Monsoon #Kerala
Sivaji ayya performs a therukoothu while in his son-in-law's home in America🥹.
The way kamala amma adores him every moment. 🤌
Tht "மூச்சி வாங்குதா மாமா? " was due to myocardiopathy from which he had been suffering for years.
BGM-ல் இசைஞானி இளையராஜா என்றாலே தனி உலகம். 👌
சீதா காபியுடன் என்ட்ரி ஆகும் அந்தக் காட்சியில் ஒலிக்கும் வீணை இசை... என்ன ஒரு அற்புதமான மிக்சிங்! 😍🎶
#IlaiyaraajaForever ❤️
#இளையராஜா