கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் 2 வயதே ஆன பச்சிளம் பெண் குழந்தை திமுக இளைஞரணி நிர்வாகியான பெரியநாயகம் என்ற SIR-ஆல் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
2 வயது பச்சிளம் பெண் குழந்தைக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி!
தன்னை தற்காத்துக் கொள்ளக் கூட தெரியாத அந்த பிஞ்சுக் குழந்தையின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு? என்ன குற்றம் செய்தாலும், "தி.மு.க." எனும் அடையாளம் தங்களைக் காக்கும் என வலம் வரும் இந்த ஆளுங்கட்சி "SIR"-களைக் கட்டுப்படுத்த, தண்டிக்க வக்கற்ற இந்த விடியா திமுக அரசு தானே?
இப்படிப்பட்ட, சொல்லவே நாக்கூசுகின்ற, வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகளை மட்டுமே தன் ஆட்சியின் சாதனைகளாக வைத்துக்கொண்டு, எப்படி மக்கள் முன் கூச்சமின்றி இந்த பொம்மை முதல்வர் தன் முகத்தைக் காட்டுகிறார்?
தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை படுகுழியில் தள்ளியிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம். திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழகப் பெண்களே- இன்னும் இரு மாதங்களில் அமையப் போகும் "அம்மா"வின் அரசு, உங்களுக்கான அரசாக, பெண்களைப் பாதுகாக்கத் தன்னை அர்ப்பணித்து செயல்படும் அரசாக இருக்கும்!
பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி. அவருக்கென்று கொள்கை கோட்பாடு என்ற ஒன்றே கிடையாது.
- கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு கே.பி.முனுசாமி அவர்கள்
அதிமுக என்றால் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் மட்டும்தான் என்பதை துரோகிகள் அவர்களது நடவடிக்கை மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
- எதிர்க்கட்சித் துணைத் தலைவர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. @rbudhayakumar_ அவர்கள்
அதிமுகவை பிடித்திருந்த சனி இன்றோடு போய்விட்டது. அதிமுக தொண்டர்களுக்கு இன்று தான் தீபாவளி!!
- மாநிலங்களவை உறுப்பினர், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் திரு. சி.வி. சண்முகம் அவர்கள்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அங்கன்வாடி ஊழியர்களும், மடிக்கணினி வழங்க வேண்டும் என மாணவர்களும், ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளும், கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகளும் தொடர்ந்து சாலையில் இறங்கி பல நாட்களாக போராடி வரும் நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் அடக்குமுறையை ஏவிவிடும் கொடுங்கோல் திமுக ஆட்சி..!!
#DMKFailsTN
காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில்,
10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையின் போது, "தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் படித்து தயார்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி?" என்று உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.
மூச்சுக்கு முன்னூறு முறை தங்களை தமிழின் காவலர்கள் போல, தமிழுக்கே தாங்கள் மட்டும் தான் Authority போல பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூட தமிழில் கேட்கவில்லை?
"எங்கும் தமிழ்" என்பது வாயளவுக் கொள்கை தானா? "எதற்கு தமிழ்?" என்பது தான் திமுக அரசின் செயல் கொள்கையா?
@mkstalin
#TNPSCGroup2, கூட்டுறவுத்துறை தேர்வு, எஸ்.ஐ. தேர்வு என தொடர்ந்து அரசுப்பணி தேர்வுகளில் ஏதேனும் ஒரு குளறுபடி நடக்கிறதே... இதை வெறும் நிர்வாகத் திறமையின்மை என்று சொல்லி கடந்துவிட முடியுமா? அதுவும், நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன ஊழலுக்கு பிறகு, "வாங்கியதை" எல்லாம் "திருப்பி கொடுக்காமல்" இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி தேர்வுகளில் குளறுபடிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் தேர்வர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழாமல் இல்லை.
"3.50 லட்சம் அரசுப்பணிகளில் தமிழக இளைஞர்களை அமர்த்துவோம்" என பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி, தேர்வு குளறுபடிகளால் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தோடு, கனவுகளோடு விளையாடும் விடியா திமுக அரசை விரட்டி அடிக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
இன்னும் இரண்டரை மாதங்களில் அமையவுள்ள உங்களின் @AIADMKOfficial அரசு, பல்வேறு அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை முறையாக நடத்தி, தகுதிவாய்ந்த இளைஞர்களை அரசுப்பணிகளில் அமர்த்தி அழகுபார்க்கும் அரசாகத் திகழும்!
#மதுரவாயல், #பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் அளித்த எழுச்சிமிகு வரவேற்பிற்கு இடையே உரையாற்றினேன்.
ஐந்தாண்டுகளாக வாயால் மட்டுமே வடை சுட்ட @mkstalin ஆட்சியால், பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வுகளால் சொல்லொண்ணாப் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளான தமிழக மக்களுக்கு ஊக்கமளித்திடும் வகையில், நான் அறிவித்த ரூ. 10,000/- உதவித்தொகை குறித்து திமுக-வினர் புலம்புவதைப் பார்க்கும் போதே, எனது அறிவிப்பு மக்களிடையே சென்று சேர்ந்து SUPERHIT ஆகியுள்ளது தெரிந்துவிட்டது.
மக்கள் எப்போது தேர்தல் வரும் என காத்திருக்கிறார்கள்; மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, மக்களுக்கான @AIADMKOfficial ஆட்சிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான
திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.
'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@AIADMKOfficial
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாய் வீற்றிருக்கும் நம் ஒப்பற்ற தலைவி மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளையொட்டி, இன்றைய தினம் எக்ஸ் தளப் பதிவு வாயிலாகவும், #மனதின்_குரல் நிகழ்ச்சி வாயிலாகவும் , மாண்புமிகு அம்மா அவர்கள் குறித்தான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு,
புகழாரம் சூட்டிய மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு @AIADMKOfficial சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் அவர்கள் கூறியதுபோல், சமுதாயத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்கள் ஆற்றிய சேவை மக்கள் நினைவில் என்றும் இருக்கும்.
மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் நெடும் புகழை நினைவுகூர்ந்த மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் (@VPIndia) திரு. @CPR_VP அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்கள், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. @nitin_gadkari அவர்கள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும், ஆந்திர மாநிலத் துணை முதல்வர் (@APDeputyCMO) திரு. @PawanKalyan அவர்களுக்கும், பாஜக மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்கள், பாமக தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் அவர்கள் (@draramadoss), அமமுக பொதுச்செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள், தமாகா தலைவர் திரு. @GK__Vasan அவர்கள், தமமுக தலைவர் திரு. @JohnPandianTMMK உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், ஊடக மற்றும் பத்திரிகைத் துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும், பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளுக்கும், தமிழகமெங்கும் மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழக மக்களுக்கும் @AIADMKOfficial சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில், சட்டம் ஒழுங்கையும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தையும் தனது முழுமுதற் கொள்கையாகக் கொண்டு செயலாற்றி, தமிழகத்தை "அமைதி, வளம், வளர்ச்சி" என்ற அம்மா காட்டிய பாதையில் செலுத்திடும் நல்லாட்சியாகத் திகழுமென்ற உறுதியை மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளில் தமிழக மக்களுக்கு அளிக்க விழைகிறேன்.
#என்றென்றும்_அம்மா
கூட்டுறவுத் துறை சார்பில்,
கடந்த அக்டோபர் மாதம் SRB மற்றும் DRB பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாட்கள் கடந்த பின்னும், இதுவரை முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சித்து வருகிறது @mkstalin மாடல் விடியா திமுக அரசு.
பெரும் கனவுகளோடு தாங்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளை இதுவரை வெளியிடாத விடியா திமுக அரசைக் கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள, திமுக அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
#TNPSCGroup2 தேர்வை முறையாக நடத்த தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், நடந்து முடிந்த கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட வக்கற்ற அரசாக பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது.
தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவுத் துறை தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
"அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1000" என்று வாய்கிழிய 2021-ல் தேர்தல் வாக்குறுதி அளித்தது யார்?
அதை இன்று வரை முழுமையாக நிறைவேற்றினீர்களா @mkstalin அவர்களே?
28 மாதங்கள் ரூ.1000 கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டதை @AIADMKOfficial தொடர்ந்து சுட்டிக்காட்டிய பிறகுதானே, அரைகுறையாக திட்டத்தை துவக்கினீர்கள்?
இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு உங்களுக்கு கோபம் வருகிறது பொம்மை முதல்வரே?
"Ongoing Scheme"-களை தேர்தல் ஆணைய நடத்தை விதிகள் கட்டுப்படுத்த முடியாது என்ற அடிப்படை விதிகள் கூட பொம்மை முதல்வருக்கு தெரியவில்லையா? அல்லது, தெரிந்தும் வேண்டுமென்றே நடிக்கிறீர்களா?
இப்படி உண்மைக்கு கொஞ்சம் கூட நெருக்கமற்ற Conspiracy Theory-களை மட்டுமே வைத்துக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் பூச்சாண்டி அரசியல் செய்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?
"எனது சகோதரிகள் கணக்கில் வரவு வைத்துள்ளேன்" என்று மார்தட்டுகிறீர்களே... அப்படியென்றால், தகுதி இல்லை என்று நீங்கள் நீக்கிய ஏறத்தாழ ஒரு கோடி தமிழ்ப் பெண்கள் உங்களுடைய சகோதரிகள் இல்லையா?
Copy, Paste செய்வது,
ஸ்டிக்கர் ஒட்டுவது,
அஇஅதிமுக திட்டங்கள் மீது, அதன் பலன்கள் மீது சவாரி செய்வது
என இப்படியே ஐந்தாண்டுகளைக் கடத்தியிருப்பது யாரென்று மக்களுக்கு தெரியாதா?
இல்லந்தோறும் உங்கள் மகளிர் ராணுவப் படை செல்லும் போது, "திமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி" என்று சொல்லி பிரச்சாரம் செய்ய முடியுமா? சொல்லித்தான் பாருங்களேன்!
திமுக எனும் ஓடாத ஓட்டை எஞ்சினை, மக்கள் விரட்டி அடிக்கப் போவது தான் இந்த சட்டமன்றத் தேர்தலின் ஒரே Narrative!
#ByeByeStalin
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று, 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
இது தான் சமூகநீதியா @mkstalin அவர்களே? இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது?
இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?
பிரச்சார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் பொம்மை முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா?
தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த பொம்மை முதல்வர்?
மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக மக்களே- சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக!
@AIADMKOfficial
#பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மக்களின் சிறப்பான வரவேற்பிற்கு இடையே, எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
என்னைப் பார்த்து, பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை என்று @Udhaystalin சொல்கிறார் என்றால், அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று சொல்வார்? என்ன பட்டம் கொடுப்பார்?
தன் தாத்தா கருணாநிதியை நேரடியாக விமர்சிக்க முடியாமல், என் பெயரைக் குறிப்பிட்டு தன் தாத்தாவைப் பற்றி பேசுகிறாரா?
ஆக, அரசியல் கத்துக்குட்டி உதயநிதி ஸ்டாலின் தெரிந்து பேச வேண்டும்.
இன்று உலகின் பணக்காரக் குடும்பங்களுள் ஒன்றாக ஸ்டாலின் குடும்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பத்தின் ஆட்சி தேவையா?
குடும்ப ஆட்சியை, வாரிசு அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் வீழ்த்திடப் போகும் தேர்தல் தான் வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்.
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
#மாதவரம் தொகுதி மக்கள் திரளாகக் குழுமிநின்று அளித்த எழுச்சிமிகு வரவேற்பை மகிழ்வோடு பெற்று, அவர்களிடையே உரையாற்றினேன்.
துரோகத்தைப் பற்றி ஸ்டாலின் பேச என்ன அருகதை இருக்கிறது? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் துரோகி ஸ்டாலின் தான்!
#ஆவடி#அம்பத்தூர் தொகுதிகளில் பேசிய போது, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து பேசினேன். இந்த ஊழல் பற்றி @dir_ed மூன்று முறை கடிதம் எழுதியும் இந்த ஸ்டாலின் அரசு வழக்கு பதியவில்லை. இது குறித்து @AIADMKOfficial தொடர்ந்த வழக்கில், இந்த ஊழல் குறித்து வழக்கு பதியவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கண்டு பயத்தில் அலறிப் போய் உளறிக் கொண்டிருக்கிறார் திரு. @mkstalin. இந்த ஊழலெல்லாம் மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
இந்த எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, அஇஅதிமுக-வின் எந்தவொரு தொண்டனுக்கும் பயம் என்பதே இல்லை! உழைப்பை நம்பி, சொந்தக் காலில் நிற்கும் எங்களுக்கு என்ன பயம் இருக்கப் போகிறது? வெறும் கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி சவாரி செய்யும் ஸ்டாலின் தான் பயத்தில் இருக்கிறார்.
மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். விளம்பர விடியா திமுக ஆட்சியை #ByeByeStalin என சொல்லி விரட்டியடித்து, சொன்னதை செய்து மக்களுக்காக உழைக்கும் @AIADMKOfficial ஆட்சியை தமிழக மக்கள் நிறுவப் போகும் தேர்தல் தான் வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
நம் உயிருக்கு நேராம்,
சமூகத்தின் விளைவுக்கு நீராம்,
உரிமைச் செம்பயிருக்கு வேராம்,
உயர்வுக்கு வானாம்,
பிறவிக்குத் தாயாம்,
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்...
தமிழுக்கும் தமிழருக்கும் @AIADMKOfficial என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்...
ஒட்டன்சத்திரம் அருகே பட்டியலினத்தை சேர்ந்த பெருமாள் என்ற இளைஞர், கடந்த 30.01.2026 அன்று பிறப்பு உறுப்பு அறுக்கப்பட்டு, உடலில் துளையிடப்படட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இப்படி ஒரு செய்தியை வெளியே வரவிடாமல் மிரட்டல்கள் மூலம் தடுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
யார் தடுப்பது என்பது பார்த்தால், சகல குற்றங்களுக்கும் லைசன்சாக இருக்கும் "கருப்பு சிவப்பு" கொடி கொண்ட ஆளுங்கட்சி திமுக தான் என்பதும் தெரியவந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ள @r_sakkarapani , தன் தொகுதியில் நடந்துள்ள இந்த நெஞ்சை உறையவைக்கும் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
தங்கள் பெயரைச் சொல்லி தான் இந்த வழக்கு திசை திருப்பப் படுவதாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன விளக்கம் வைத்துள்ளார் இந்த அமைச்சர்?
துளையிட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டது பெருமாள் மட்டும் அல்ல; திமுக வாய்கிழிய பேசும் சமூக நீதியும் தான்!
பெருமாள் கொலை வழக்கில் எந்த திசைதிருப்பலுக்கும், அரசியல் குறுக்கீடுக்கும் இடமின்றி, உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
(Disclaimer: Sensitivity கருதி புகைப்படத்தை Blur செய்து வெளியிடுகிறோம்.)
தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000/- ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#EPSfor2026 #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்