கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை.
ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம்.
ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம்.
மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை.
இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார்.
தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம்.
“எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்-
“போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!!
எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்!
@EPSTamilNadu
கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி சாடிவயல் அடுத்த சீங்கபதி மலைவாழ் மக்களுடைய தெய்வமான வனபத்ரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு, அவர்களுடைய பாரம்பரிய இசைக்கு, அவர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தேன்.
அன்பிற்கு அளவுகோல் கிடையாது, அது வானத்தைப் போல் எல்லையற்றது. அதைப்போலத்தான் மலைவாழ் மக்களின் அன்பும் எல்லையற்றது. அவர்களின் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#AIADMK #அஇஅதிமுக
#Vote4AIADMK ✌️🌱
#EPSfor2026
@EPSTamilNadu@AIADMKOfficial
துக்கம் விசாரிக்க சென்ற இடத்திலும் உதவி செய்யும் நல்ல மனிதர் 🙏
என்ன படிக்கிறீங்க மா.. நல்லா படிங்க நான் இருக்கிறேன் கவலைப்படாமல் இருங்கன்னு... உற்சாக படுத்தி மகிழ்ந்த @SPVelumanicbe அவர்கள் #spvarmy
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் என்ற பெயரில் திரியும் திமுக கொத்தடிமையான செந்தில்வேல் என்பவர், தனது பேச்சுக்கு எதிர்க்கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தொண்டர்களை ஆபாசமாக பேசி வெளியேறியதோடு, அவர்களை தாக்குவதற்கு திமுக குண்டர்களை வெளியில் இருந்து அழைத்து வந்து, தாக்குதல் நடத்தி கலவரச் சூழலை ஏற்படுத்தி இருப்பது வெட்கக்கேடானது.
அதுவும் அமைச்சர் சேகர் பாபுவின் படை என்று பெருமையாக கூறி வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வருகிறார் இந்த "பத்திரிகையாளர்". திமுக நடத்துவது கட்சியா? அல்லது, கூலிப்படையா?
திமுக எடுக்கும் இதே ஆயுதத்தை எதிர்க்கட்சிகளும் எடுக்கலாமா? அதுவும், தன் சொந்த கட்சி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் பேசும் ஒரு நிகழ்ச்சியில், அவரே அமைதியாக இருக்கும் போது, இந்த பத்திரிகையாளர் போர்வையில் உள்ள கொத்தடிமைக்காக, ஒரு கலவரக் கூட்டத்தை திமுக அனுப்பியிருப்பது, அரசியல் களத்தில் திமுக வளர்க்கும் நஞ்சை வெட்டவெளிச்சமாக்குகிறது.
ஜனநாயகக் குரல்களை அராஜகம் செய்து ஒடுக்கத் துடிக்கும் திமுக-வுக்கு கடும் கண்டனம்.
#DMKFailsTN
#அத்திக்கடவு_அவிநாசி கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய பெருமிதத்தோடு #அவிநாசி தொகுதி மக்களின் பேரன்பிற்கு இடையே உரையாற்றினேன்.
மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொடுத்து, அவர்களின் எண்ணங்களை செயல்படுத்திய பெருமையோடு நான் தொகுதிதோறும் மக்களை சந்திக்கிறேன். மக்கள் நாம் நடத்திய நல்லாட்சியைப் பாராட்டுகின்றனர்.
மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்கும், போட்டோஷூட் எடுப்பதற்கும் மட்டும் புதுப்புது மேடைகளை அமைத்துக்கொள்வதை மட்டுமே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், எந்த முகத்தோடு மக்களை சந்திப்பார்?
2026-ல் மீண்டும் அமையவுள்ள @AIADMKOfficial அரசு, "மக்கள் தான் ஆட்சியாளர்கள்" என்பதை மெய்ப்பிக்கும் மக்களாட்சியாகத் திகழும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
மாவீரர் பூலித்தேவனின் படைத்தளபதி, சுதந்திர வேட்கை கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட சுதந்திர போராட்ட வீரர் #ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளில், இந்திய விடுதலைக்கான அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial
நூல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளூர் ஏஜெண்ட்டுகளின் ஆதிக்கத்தால் பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று, பருத்தி பயிரிட்ட விவசாயிகள் வேதனை!
உள்ளூர் ஏஜெண்ட்டுகளின் நடவடிக்கைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் விடியா திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
நாள்: 1.7.2025 (செவ்வாய் கிழமை)
இடம் - இரயில் நிலையம் அருகில், திருவாரூர்
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
சென்னை தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு அஇஅதிமுக மாணவர் அணி துணை நிற்கும்!
விடுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் @mkstalin
இல்லையென்றால் கழக மாணவர் அணி, கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும்!
2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி!
திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
இறைவனை வேண்டி நோன்பிருந்து, ஈகைப் பண்பின் வாயிலாக அனைவரிடமும் அன்பைப் பரிமாறி, சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial#AIADMK
#Ramadan
#EidMubarak