"3 மகள்களை பெற்ற ஒரு தந்தையாக சொல்கிறேன்.."
இதுவரைக்கும் எத்தனையோ ஆட்சிகளை பார்த்துவிட்டோம்.. ஆனால் இதுபோல் ஒரு ஆட்சியை பார்த்ததே இல்லை.. - அன்புமணி
#PMK | #NDAprotest | #Anbumani | #Election2026
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் பங்கேற்ற, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட, மூன்றாவது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், திருச்சியில் ப���்கேற்று உரையாற்றிய போது.!
@narendramodi @EPSTamilNadu
#PMK #ADMK #BJP #election2026
இன்று செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தில் கலந்துகொண்டு
எழுச்சியை ஏற்படுத்திய பசுமை தாயகம் தலைவர் முனைவர்
#சௌமியாஅன்புமணி அவர்கள்
#மகளிர்உரிமைமீட்புப்பயணம்#PmK
இன்று செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற
தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தில்
சிங்கப்பெண்க���் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில்
பசுமைத் தாயகம் தலைவர், முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்
மகளிர் உரிமை, சமத்துவம், சமூக பொறுப்பு குறித்து
உற்சாகமும், சிந்தனையூட்டும் வகையிலும்
சிறப்புரையாற்றினார்.
பெண்ணியம் பேசும் பயணம் அல்ல இது…
பெண் அதிகாரம் நிலைநாட்டும் பயணம்..
#மகளிர்உரிமைமீட்புப்பயணம்
#சிங்கப்பெண்ணேஎழுந்துவா
#SowmiyaAnbumani
#ForAllWomenAndGirls
#PMK
#genderequality
இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை: திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை!
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் ��த்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவி ஷாலினியை இழந்து வாடும் குட���ம்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் தம்மை காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், அவரைக் காதலிக்க ஷாலினி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த முனியராஜ், இன்று காலை மாணவி ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார்.
பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும் பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் பேருந்து நிறுத்தங்களிலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செவிமடுக்க திமுக அரசு தவறியதன் விளைவாகத் தான் ஓர் அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய க���லைகளுக்கு காரணம் ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்; அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் சாதனை ஆகும்.
இராமேஸ்வரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது ப���ண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும்.
மருத்துவ விடுப்பு மறுக்கப்பட்டு, பணி வழங்கப்படாததால் போக்குவரத்துக்கழக பொறியாளர் தற்கொலை: காரணமான அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த யுவராஜ் என்பவருக்கு மருத்துவ விடுப்பு மறுக்கப்பட்டதுடன், பணியும் வழங்கப்படாததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபங்கள���யும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக யுவராஜ் கழுத்து வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். அவரால் பணிக்கு செல்ல முடியாத நிலையில் ம��ுத்துவ விடுப்பு கோரியிருந்தார். ஆனால், அவரது மருத்துவ விடுப்பை அதிகாரிகள் ஏற்கவில்லை. மேலும் அவருக்கு பணி வழங்கவும் மறுத்துள்ளனர். இதனால் கடந்த 3 மாதங்களாக அவரது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், கடுமையான வறுமையிலும் வாடினார். ஒரு கட்டத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அப���பாவி பொறியாளரின் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்கொலை செய்து கொண்ட யுவராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.! @CMOTamilnadu
வேலூர் மாவட்டம், குடியாத்தம் RGD திருமண மண்டபத்தில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர், C.K.இரமேஷ் நாயுடு - இர.அமுலு தம்பதியரின் அன்பு மகள் இர.மம்தா - சு.சிவபிரசாத் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் பாட்டாளி சொந்தங்களுடன் பங்கேற்று வாழ்த்திய போது.!
"உரிமை மீட்க… தலைமுறை காக்க" பயணத்தில், காவேரி ஆற்றின் குறுக்கே கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டி, நீரேற்று குழாய் மூலமாக, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களிலும் நிரப்பும், அரியலூர் சோழர் பாசன திட்டத்தை விரைந்து செ���ல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி, அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தா.பழூர்
ஒன்றியம், சித்தமல்லி ஏரியை பார்வையிட்டு, பொதுமக்களிடையே கலந்துரையாடிய போது.
#உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்த���ள்ள, "எண்ணேகொள்புதூர் - படேதலாவ்" இடது கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த போது.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க