கிள்ளியூரியில் 1144 எக்டேரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசு துணை போவதா? மக்களின் உணர்வுக்கு எதிரான ஆணையை ரத்து செய்யுங்கள்!
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூரில் 1144 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தின் முயற்சிக்கு தமிழக அரசு துணை போயிருக்கிறது. கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் திட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசு அவசர அவசரமாக ஆணை பிறப்பித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கல்ல.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு (Indian Rare Earths Limited) தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1817 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2015-ஆம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அணுசக்தித் துறையின் கோரிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு 1144 எக்டேர் நிலத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2020-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த நிலங்களை அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து 11.06,2021-ஆம் நாள் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.
அதன் தொடர் நடவடிக்கையாக அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 28.09.2024-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டேன். மேலும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களும் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும், அணுக்கனிம சுரங்கத்தை அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மத்திய அரசு, டங்ஸ்டன், தாமிரம், நிக்கல், பிளாட்டினம் உள்ளிட்ட 24 வகையான முக்கியக் கனிமங்களையும், தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான அணுக் கனிமங்களையும் தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்களை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை என்றும், இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்றும் 2025-ஆம் ஆண்டில் மத்திய அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும், மக்களின் எதிர்ப்பு காரணமாக அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. அனுக்கனிம சுரங்கம் அமைக்க 1144 எக்டேர் நிலங்களை ஒதுக்கி 11.06.2021 ஆம் நாள் மத்திய அரசு பிறப்பித்த ஆணை ஐந்தாண்டுகளுக்கு மட்டும் தான் என்பதால், இந்தத் திட்டம் காலாவதியாகி விட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நில ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து கடந்த 10.06.2026-ஆம் நாள் தமிழக அரசு, அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை பிறப்பித்திருக்கிறது. அதிலும் நிலம் ஒதுக்கப்பட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடையும் கடைசி நாளில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அருமணல் ஆலை ஒரு சில அனுமதிகளை மட்டும் அணுக்கனிம சுரங்கத்தை அமைத்து விட முடியும். இதன் மூலம் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள கிள்ளியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகள் ஆகும். மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள மக்கள், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அத்துடன் கூடுதலாக இப்போது அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், அங்குள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும். இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போவதை ஏற்க முடியாது.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும் மக்களின் விருப்பப்படி தான் செயல்பட வேண்டும். ஆனால், மக்களின் விருப்பத்திற்கு மாறாக கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 1144 எக்டேர் நிலம் ஒதுக்கிய ஆணையின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
கும்மிடிப்பூண்டியில் மூன்றரை வயது குழந்தை கூட்டுப் பாலியல்
வன்கொடுமை செய்து கொலை: போதைக் கொடுமையால்
நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திற்கு அருகில் வசிக்கும் வட மாநிலக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தையை 4 மனித மிருகங்கள், நேற்று மாலை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தது. குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. பால்மனம் மாறாத குழந்தையை சீரழித்த நான்கு மனித மிருகங்களும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. நால்வரும் கஞ்சா போதையில் தான் இந்தக் கொடிய குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர். பால்மனம் மாறாத மூன்றரை வயது குழந்தையை 4 மனித மிருகங்கள் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.
இதே கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் தான் கடந்த ஆண்டு ஜூலை 12-ஆம் நாள் நான்காம் வகுப்பு பயிலும் சிறுமியை, ஆந்திராவிலிருந்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மனித மிருகம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தான். இதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர் போராட்டம் நடத்திய பிறகு தான் குற்றவாளி கைது செய்யப்பட்டான். அந்த வழக்கின் விசாரணை 5 மாதங்களில் முடிக்கப்பட்டு, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அதே பகுதியில் இன்னொரு கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆரம்பாக்கத்தில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது. அதை மனதில் கொண்டாவது அந்தப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை ஒழித்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான பாதுகாப்பை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தோல்வி அடைந்ததன் விளைவு தான் மூன்றரை வயது குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஆகும்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம், அதனால் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை அரசும், காவல்துறையும் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுவதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, போளூர் கிழக்கு ஒன்றியம் பொத்தரை கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்த போது.!
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களுடனான சந்திப்பிற்கு பின்பு ANI ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்த போது.!
#CasteCensus#PMK
சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்வு: மக்களால் தாங்க முடியாத விலை உயர்வை
அரசு உடனடியாக திருமப் பெற வேண்டும்!
வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் ரூ.29 உயர்த்தியுள்ளன. இதனால் சென்னையில் இதுவரை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு பயன்பாடுக்கான எரிவாயு உருளையின் விலை ரூ.957.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களின் அன்றாடத் தேவையான சமையல் எரிவாயு உருளை விலை அண்மைக்காலத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகக்கடுமையாக பாதிக்கும்.
கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. இப்போது மேலும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த மார்ச் மாதத்தில் ரூ. 868.50 ஆக இருந்த சமையல் எரிவாயு விலை 3 மாதங்களில் ரூ.89 உயர்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் மக்களின் வருவாய் ஒரு விழுக்காடு கூட உயராத நிலையில் எரிவாயு விலை 10.25% உயர்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சமையல் எரிவாயு விலை உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களையும், நியாயங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. மேற்காசியப் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலையும் உயர்ந்திருப்பது தான் இதற்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால், அனைத்து நெருக்கடிகளையும் கடந்து விலை உயர்விலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் உள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் பன்னாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களும், அரசும் இன்னும் சில மாதங்களுக்கு தாங்கிக் கொள்ள வேண்டும்; மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
திருச்சியில் சிறுமி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: குற்றச் செயல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
திருச்சி காந்தி சந்தை பகுதியில் 15 வயது சிறுமி மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது.
சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் மாரியப்பன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அச்சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற அவல நிலை நிலவுகிறது. அதனால் தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. அதன் பிறகும் அதே நிலை தொடரக் கூடாது. பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்த சிங்கப்பெண் சிறப்புப் படை உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl
1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை;
20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி - பள்ளிக்
கல்வித் துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும்!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் மட்டுமின்றி, 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களும் காலியாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கல்விக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு பலவீனமாக இருப்பது பெரும் கவலையளிக்கிறது.
திமுக ஆட்சி செய்த கடந்த ஐந்தாண்டுகளில் அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமித்து, அவற்றின் கட்டமைப்பையும், மனிதவளத்தையும் மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தலைமை ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
கல்வியாண்டு முடிவுக்கு வந்த மே 31-ஆம் நாளான நேற்று மட்டும் 30 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 14 மாவட்ட கல்வி அதிகாரிகள், 3 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை உயர்நிலைப்பள்ளிகளில் 700 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 300 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்த்து 800 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1000 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை மன்னிக்கவே முடியாது. மாணவர்களின் கல்வி சார்ந்த எதிர்காலம் இந்தப் பள்ளிகளில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவது இந்தப் பள்ளிகள் தான். இந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அவற்றின் கல்வித்தரம் வீழ்ச்சியடைவதையும், மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதையும் தடுக்க முடியாது.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நேற்றோ, இன்றோ உருவானவை அல்ல. பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. தமிழக அரசு நினைத்தால் ஒற்றை அரசாணை மூலம் இந்த பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப முடியும் ஆனால், நீதிமன்றங்களில் வழக்குகள் காலியாக இருப்பதைக் காரணம் காட்டியே தலைமை ஆசிரியர்களை நியமிப்பதை அரசு தவிர்த்து வந்திருக்கிறது.
இதில் வேதனையான உண்மை என்னவென்றால், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான வழக்குகளில் பெரும்பாலானவை அரசாலோ அல்லது அரசின் தூண்டுதலால் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களாலோ கடந்த காலங்களில் தொடரப்பட்டவை தான். தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இந்த அவலத்தை பாட்டாளி மக்கள் கட்சி பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆனாலும் முந்தைய திமுக ஆட்சியில் இந்தக் குறையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை சொல்லித் தர வேண்டிய பள்ளிகளில், சுவர்களுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட தலைமை ஆசிரியர்கள் இல்லாதது எவ்வளவு கொடுமையான முரண்பாடு?
அந்த சுவர்கள் இல்லாமல் கல்வி எனும் சித்திரத்தை எவ்வாறு வரையமுடியும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்தும் பள்ளிக்கல்வித்துறையின் அவலத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்களை நியமிக்கவும், அனைத்துக் கல்வி மாவட்டங்களுக்கும் மாவட்டக் கல்வி அதிகாரிகள், அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு: 5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்- உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!
மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும்.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத் தான் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.
2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக மொத்தம் 5.50 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலைகளை வழங்கியது. தற்காலிக, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் விரக்தியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் அரசுத் துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
இரா. சுரேஷ் பாபு அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
- பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: தோல்வியடைந்த செல்வங்கள் தளராமல் முயன்று வெல்ல வேண்டும்!
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் 94.31% மாணவச் செல்வங்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காகவும், சிறந்த முறையில் மேல்நிலை மற்றும் தொழிற் பயிற்சி கற்பதற்காகவும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.51% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்லவிரும்பும் அறிவுரை என்னவென்றால், மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பது தான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று மேல்நிலைக்கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
மதுபோதையில் சக மாணவனை படுகொலை செய்து
காணொலியில் படம் பிடித்த சிறுவர்கள்: கஞ்சா, மது
போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை!
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவன் கோகுலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவன் கோகுல், அவருடன் பயிலும் மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, சாதியின் பெயரை சொல்லி திட்டியதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவன் கோகுலை மற்ற மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளை காணொலியாக பதிவு செய்து கொண்டாடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மது மனிதர்களை எந்த அளவுக்கு மிருகமாக்குகிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக் காட்டு இது தான் . தங்களுடன் ஒன்றாக பழகிய நண்பனை கொலை செய்தது மட்டுமின்றி, அதை காணொலியில் பதிவு செய்து கொண்டாடும் அளவுக்கு மது மனிதனை கொடூரனாக மாற்றியிருக்கிறது. மதுவை விட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மனிதர்களை மேலும் மோசமாக்குகின்றன.
தமிழ்நாட்டில் மதுவும், பிற போதைப் பொருள்களும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் மது மற்றும் போதையின் சீரழிவுகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்து விட்டன. நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
ஆதரவு தர்றோம், தரவில்லை என சொல்ல எதற்கு இவ்வளவு காத்திருப்பு.. பேரம் பேசுவது வெளியே அனைவருக்கும் புரிகிறது.. இப்பவும் சொல்றேன்.. அனைத்து ஆதரவையும் விட்டுவிட்டு உங்களுக்கு மக்கள் கொடுத்த 107ஜ நம்பி ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்தால் சட்டப்படி Floor test நடத்த வேண்டும்.. அதை தாண்டி இடதுசாரி பின்னாலே சுற்றுவது ஏதோ உள் நோக்கம் தெரிகிறது.. அனைவருக்கும் பொதுவான கட்சியாகவே ஆட்சி அமையுங்கள்..
சித்திரை முழுநிலவு நாள் இன்று: நிலமும், குலமும் தழைக்க உழைப்போம்- உழைப்பின்
பயனை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்!
தமிழர்களின் வாழ்வில் கொண்டாட்டங்கள் நிறைந்ததும், பாட்டாளி மக்களை ஒன்று கூடச் செய்வதுமான சித்திரை முழுநிலவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்களின் திருநாளான இந்த நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சித்திரை முழுநிலவு நாளின் முதன்மை நோக்கமே சொந்தங்களுடன் கடற்கரைகளிலும், நீர்நிலைகளின் கரைகளிலும் கூடி, குடும்பக் கதைகள் பேசி மகிழ்வது தான். இது நமது பண்பாடு. அந்தப் பண்பாட்டை விட்டுக் கொடுக்காமல் வாய்ப்புள்ள இடங்களில் சொந்தங்கள் ஒன்று கூடி கொண்டாடுங்கள்!
சரியாக ஓராண்டுக்கு முன் மே 11-ஆம் நாள் இதே சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் வியக்கும் வண்ணம் மாமல்லபுரத்தில் நடத்திக் காட்டியதை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்ற ஒன்று கூடலை மீண்டும் நடத்தவும், பாட்டாளி மக்களுடன் ஒன்று கூடி மகிழவும் காத்திருக்கிறேன். அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிச்சயமாக இது நடந்தேறும்.
சித்திரை முழுநிலவு நாளின் சிறப்புகள் எண்ணிலடங்காதவை. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா கொண்டாடப்படுவது இந்த நாளில் தான். மாமல்லபுரத்தில் பல்லவர்களும் சித்திரை முழு நிலவு நாளை மக்களுடன் கொண்டாடியிருக்கிறார்கள். இந்திர விழா சித்திரை முழுநிலவு நாளில் நடத்தப்பட்டதற்கு காரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் அறுவடை முடிந்து பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் தான் ஓய்வாக இருப்பார்கள். அந்த நாளில் அவர்கள் கடற்கரையில் ஒன்றுகூடி, இசை, நடனம், பட்டிமன்றம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
நாட்டில் பசி, பிணி, பகை நீங்கவும், நிலம் செழிப்பதற்காக மழை பெய்ய வேண்டிதான் இந்திர விழாக்கள் நடத்தப்பட்டன. இதே நோக்கத்திற்காகத் தான் நாமும் சித்திரை முழுநிலவு நாள் மாநாடுகளை நடத்துகிறோம். தமிழ்நாடு என்ற நமது நிலமும், நமது குலமும் தழைக்க ஆண்டு முழுவதும் கடுமையாக உழைப்போம்; அந்த உழைப்பின் பயனை அறுவடை செய்து அதன் மகிழ்ச்சியை சித்திரை முழுநிலவு நாள்களில் கொண்டாடுவோம் என்று கூறி மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“சித்திரை முழுநிலவு: 2025 பகைகள் ஒழிந்தன! 2026 பணிகள் காத்திருக்கின்றன!”
சித்திரை முழுநிலவு பெருவிழா - தமிழர் மரபில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஒரு சிறப்புமிக்க திருவிழா ஆகும். தமிழ்நாட்டில் அறுவடைக்கு பின்னாலான ஓய்வு காலத்தில் இவ்விழா வருகிறது. ஐங்குறுநூறு, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் இது இந்திர விழாவாக போற்றப்படுகிறது.
“சிலப்பதிகாரம் - இந்திரவிழவு ஊர் எடுத்த காதை!”
சிலப்பதிகாரத்தில் "இந்திரவிழவு ஊர் எடுத்த காதையில்" சித்திரை முழுநிலவு விழா விரிவாக கூறப்பட்டுள்ளது. அதில் பசி, பிணி, பகை நீங்குவதற்கான விழாவாக இது போற்றப்பட்டுள்ளது.
"‘பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும்
பசியும், பிணியும், பகையும், நீங்கி;
வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி;
மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும்"
(சிலப்பதிகாரம் 5: 70)
(பொருள்: பெரு நிலத்தை ஆளும் மன்னனின் நிலப் பரப்பு முழுவதும் பசி, பிணி, பகை ஏதும் இல்லாமல் நீங்கி, மழையும், வளமும் சுரக்கும்படிச் செய்ய வேண்டும் - என்று வேண்டி பெண்கள் குலவை ஒலி செய்தனர்.)
“மணிமேகலை - விழாவறை காதை!”
மணிமேகலையில் "விழாவறை காதையில்" நாட்டின் மக்கள் எல்லோரும் பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் விழாவாக இந்திர விழா குறிப்பிடப்படுகிறது!
"பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்"
- மணிமேகலை (70-72)
(பொருள்: பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் சுரக்கட்டும் என முடிவில் முரசறைந்து தெரிவித்தான்.)
இதே மணிமேகலையில் - இந்திர விழாவின் போது மக்கள் மாறுபட்ட கருத்துகளை விவாதிக்கலாம் என்றும், அதே நேரத்தில் எல்லா பிரிவினரும் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
"ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்"
- மணிமேகலை (60-63)
(பொருள்: குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் நிழல் தரும் மரங்களின் கீழ் அமைந்துள்ள ஊர்ப் பொதுவிடங்களிலும், புண்ணிய நல்லுரைகள் அறிந்தவர்கள் உரையாற்றுங்கள்; தத்தம் சமயத்தில் பொதிந்த தத்துவங்கள் சிறந்தவை என்றால், பட்டி மண்டபத்து ஏறி வாதிட்டுப் பயன் காணுங்கள்; பகை மக்களோடும் பகையும், கோபமும் கொள்ளாமல் அவரை விட்டு அகன்று செல்லுங்கள்; வெண்மணற் குன்றுகள், பூஞ்சோலைகள், நீர்த்துறை ஆகிய இடங்களில் தேவர்களும் மக்களும் சமமாக உலவிக் கொண்டு இருங்கள்; இவை அனைத்தையும் இந்திர விழா நடக்கும் எல்லா இடங்களிலும் பின்பற்றுங்கள்.)
-------------
“வன்னியர் இளைஞர் பெருவிழா”
தமிழ் மன்னர்களால் காவிரிப்பூம்பட்டினம் கடற்கரையில் கொண்டாடப்பட்ட சித்திரை முழுநிலவு விழாவை, மாமல்லபுரம் கடற்கரையில் மீண்டும் கொண்டாடும் மரபை மருத்துவர் அய்யா அவர்கள் தோற்றுவித்தார்கள். அவரது உத்தரவின் கீழ் மாவீரன் குரு அவர்கள் பல ஆண்டுகள் இவ்விழாவை மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2025ஆம் ஆண்டில் தமிழ்நாடே வியக்கும் வகையில் பல லட்சம் இளைஞர்களை திரட்டி, மாநிலங்கள் கடந்து, நாடுகள் கடந்து தலைவர்களை கூட்டி, நவீன அறிவியல் நுட்பங்களை பயன்படுத்தி பழமை வரலாற்றின் தொடர்ச்சியை மாபெரும் பெருவிழாவாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சாதித்து காட்டினார்கள்!
“பெருமிதமும் சோக முடிவும்”
பசி, பிணி, பகை நீங்கும் நோக்கில் பழந்தமிழர் இந்திர விழா நடந்தது. அதனுடன் வஞ்சிக்கப்பட்ட மக்களின் விடுதலை நோக்கத்தையும் இணைத்து சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நடத்தப்பட்டது.
ஆனால், இந்த நோக்கங்கள் எதுவுமற்று நம்முடனே நெடுங்காலம் பயணித்த வஞ்சகக் கூட்டத்தினர் ஒருசிலர் எல்லாவற்றையும் சிதைத்த நிகழ்வாக 2025 சித்திரை மாநாடு முடிவுற்றது. ஒருவருடைய கை விரலைக்கொண்டு அவரது கண்ணையே குத்துவது போன்று, எந்த மாமனிதர் ஒரு இனத்தின் விடுதலைக்கு வழிகாட்டினாரோ, அந்த மாமனிதரையே சதிகாரர்கள் அதே இனத்துக்கு எதிரான ஆயுதமாக மாற்றிய கொடுஞ்செயல் கடந்த ஆண்டு நடந்தது!
“உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.”
- திருக்குறள் (813)
(பொருள்: பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்)
திருவள்ளுவர் குறிப்பிட்டது போன்ற ஒருசில நபர்கள், தனக்கும் தனது குடுபத்தினருக்கும் பெரும் பணமும் பதவியும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு இனத்திற்கே பேரழிவை ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்தனர். அந்தச் சதிகாரக் கும்பலால் 2025 சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா, ஒரு சோக நிகழ்வாக முடிந்தது. உற்சாகத்தோடு ஓடிவந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் பெரும் துன்பத்தை சுமந்து வீடு திரும்பினர்.
-------------
“அடுத்தது என்ன?”
“உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.”
- திருக்குறள் (890)
(பொருள்: உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.)
துரோகக் கும்பலுடன் இணைந்து பயணிப்பது இனி ஒருபோதும் நடக்காது. 2025 ஆம் ஆண்டில் சதிகாரர்கள் தொல்லை ஒழிந்துள்ளது. மருத்துவர் அய்யா அவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்த மாபெரும் இயக்கத்தை தொடங்கினார்களோ, அந்த நோக்கத்தை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் வென்றெடுப்பதற்காக 2026 ஆம் ஆண்டில் பாடுபடுவோம்.
அதற்கு உறுதியேற்கும் தருணமாக இந்த சித்திரை முழுநிலவு நாள் அமையட்டும்.
#VanniyarReservation
#AnbumaniRamadoss
#vanniyar
"நம்பிக்கை நாயகன் சித்தராமையா! நம்பிக்கை துரோகி மு.க. ஸ்டாலின்!"
- கர்நாடகாவின் சித்தராமையா உள் ஒதுக்கீடு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் போது, தமிழ்நாட்டின் மு.க. ஸ்டாலின் மட்டும் ஏமாற்றியது ஏன்?
(நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை) 👇👇
தமிழக சமூகங்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கு தீர்வு காண்போம் என 2021 தேர்தல் அறிக்கையில் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார் (வாக்குறுதி எண்: 336). ஆனால், அதனை நிறைவேற்ற அவர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அப்பட்டமாக நம்பிக்கைத் துரோகம் செய்தார்.
ஆனால், கர்நாடக சமூகங்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கு தீர்வு காண்போம் என 2023 தேர்தல் அறிக்கையில் சித்தராமையா வாக்குறுதி அளித்தார் (Sarvarigu Samapalu - Equal Share For All). அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியும் உள்ளார்.
"விரிவான பின்னணி:"
தமிழ்நாட்டில் MBC பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது போன்றே, கர்நாடக மாநிலத்தில் SC பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீண்டகாலமாக உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்த கட்சிகள் உள் ஒதுக்கீடு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தன. ஆனால், மு.க. ஸ்டாலின் துரோகம் செய்தார். சித்தராமையா துரோகம் செய்யவில்லை!
-----------
நம்பிக்கை நாயகன் சித்தராமையா
கர்நாடக மாநிலத்தில் SC பிரிவினர் வலங்கை சாதிகள், இடங்கை சாதிகள், நாடோடி சாதிகள் என மூன்று பிரிவுகளாக உள்ளனர். இவர்களுள் ஒருசில சாதிகளே பெரும்பான்மை இடஒதுக்கீட்டை எடுத்துக்கொள்வதாக கடந்த 40 ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது.
2012 நீதியரசர் சதாசிவா குழு
கர்நாடக மாநில SC பிரிவினரின் உள் ஒதுக்கீடு சிக்கலுக்கு தீர்வுகாண 2012-ஆம் ஆண்டில் நீதியரசர் சதாசிவா குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை ‘ஒருசில சாதிகளே பெரும்பாலான இடங்களை எடுத்துக்கொள்வதை தடுக்க உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என பரிந்துரைத்தது. எனினும் அக்காலத்தில் SC பிரிவினர் உள் ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்ற தடை இருந்ததாலும் (E. V. Chinnaiah v. State of Andhra Pradesh 2005), அறிக்கை போதுமான தரவுகள் அடிப்படையில் இல்லாததாலும் நிறைவேற்றப்படவில்லை.
2024 உச்சநீதிமன்றத் தீர்ப்பு
SC பிரிவினரை ஒரே பிரிவாக கருத வேண்டும் எனும் 5 நீதிபதிகள் அமர்வின் 2005 உச்சநீதிமன்றத் தீர்ப்பை, 2024ஆம் ஆண்டில் 7 நீதிபதிகள் அமர்வு மாற்றி எழுதியது (State of Punjab v. Davinder Singh, 2024). SC பிரிவினரை ஒரே பிரிவாக கருத வேண்டாம். அவர்களுக்குள் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2019 – 2025 நீதியரசர் நாகமோகன்தாஸ் குழு
SC பிரிவினர் உள் ஒதுக்கீட்டு சிக்கலுக்கு தீர்வுகான 2019ஆம் ஆண்டில் நீதியரசர் நாகமோகன்தாஸ் குழுவை கர்நாடக அரசு அமைத்தது. இக்குழுவானது போதுமான தரவுகள் அடிப்படையில் உள் ஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை 2020ஆம் ஆண்டில் அளித்திருந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 2024 உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, புதிய சூழலில் பரிந்துரை அளிக்க 2024 நவம்பர் மாதம் நீதியரசர் நாகமோகன்தாஸ் குழுவை மீண்டும் கர்நாடக அரசு அமைத்தது. அந்த குழுவின் அறிக்கை மார்ச் 2025-இல் சமர்ப்பிக்கப்பட்டது. குழுவின் அறிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டது.
2025 அவசர சாதிவாரி சர்வே
நீதியரசர் நாகமோகன்தாஸ் குழுவின் 2025 அறிக்கையை மேலும் துல்லியமாக சரிபார்க்கும் நோக்கில், SC பிரிவினரிடையே புதிதாக அவசர சாதிவாரி சர்வே நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டது. 2025 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 1 கோடி பேரிடம் வீடுவீடாக நடத்தப்பட்ட அந்த சர்வே அறிக்கை 2025 ஆகஸ்ட் மாதம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
2026 ஷாலினி ரஜ்னீஷ் ஐ.ஏ.எஸ் குழு
கர்நாடக மாநிலத்தில் விரைவில் புதிதாக 56,000 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனத்திற்கு முன்பாகவே SC பிரிவினர் உள் ஒதுக்கீட்டை செயல்படுத்த விரும்பினார் முதலமைச்சர் சித்தராமையா. இதனால் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு தொழில்நுட்பக் குழுவை 16.04.2026 அமைத்தார். இக்குழு 24.04.2026 அன்று அறிக்கை அளித்தது.
உள் ஒதுக்கீடு நிறைவேற்றம்
ஷாலினி ரஜ்னீஷ் ஐ.ஏ.எஸ் குழு அறிக்கை பெறப்பட்ட உடனேயே 24.04.2026 அன்றே SC பிரிவினர் உள் ஒதுக்கீட்டிற்கு முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
வலங்கை SC சாதிகள்: 5.25%
இடங்கை SC சாதிகள்: 5.25%
நாடோடி SC சாதிகள்: 4.50%
என கர்நாடக SC பிரிவினர் உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-----------
மு.க. ஸ்டாலின் செய்த மாபெரும் துரோகம்
கர்நாடக மாநிலத்தில் SC பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருப்பது போன்றே, தமிழ்நாட்டில் MBC பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. தமிழ்நாட்டின் உள் ஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என 2021- தேர்தல் அறிக்கையில் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார் (வாக்குறுதி எண்: 336).
2022 உச்சநீதிமன்றம் தீர்ப்பு
MBC பிரிவுக்குள் உள் இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. போதிய தரவுகளைத் திரட்டி உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று 31.03.2022 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. (அதன்பின் இரண்டரை ஆண்டுகள் கடந்து கர்நாடக SC பிரிவினர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு 01.08.2024 அன்றுதான் வழங்கப்பட்டது)
முந்தைய குழுவின் அறிக்கை
கர்நாடக மாநிலத்தில் SC பிரிவினர் உள் ஒதுக்கீடு குறித்து நீதியரசர் சதாசிவம் குழு, நீதியரசர் நாகமோகன்தாஸ் குழுவினர் விரிவான அறிக்கைகளை அளித்துள்ளது போன்றே, தமிழ்நாட்டில் MBC பிரிவுக்குள் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து நீதியரசர் ஜனார்த்தனம் குழு ஏற்கெனவே அறிக்கை அளித்துள்ளது.
புதிய குழு அமைப்பு
நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரான சூழலில் உள் ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிக்கக் கோரி, கர்நாடக மாநிலத்தில் 3 மாதத்தில் நீதியரசர் நாகமோகன்தாஸ் குழு அமைக்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 9 மாதங்கள் கடந்த பின்னர் -
MBC உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதியரசர் வீ. பாரதிதாசன் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் அணையத்திற்கு தமிழ்நாடு அரசு 12.01.2023 அன்று ஆணை பிறப்பித்தது.
ஆனால், அதிலிருந்து மூன்றாண்டாண்டுகளுக்கு மேல் ஆகியும் MBC உள்ஒதுக்கீடு குறித்துப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்த அறிக்கையும் இன்னமும் தாக்கல் செய்யவில்லை.
-----------
ஒப்பீடு:
நம்பிக்கை நாயகன் சித்தராமையா
கர்நாடக மாநிலத்தில் SC பிரிவினருக்குள் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தவுடன், முதலமைச்சர் சித்தராமையா நீதியரசர் தலைமையில் குழு அமைத்தார், 1 கோடி பேரிடம் சாதிவாரி சர்வே நடத்தினார். தலைமைச் செயலாளர் தலைமையில் தொழில்நுட்பக்குழு அமைத்து உள் ஒதுக்கீட்டிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்ததார்.
நம்பிக்கை துரோகி மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டின் MBC பிரிவினருக்குள் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து 9 மாதங்கள் கடந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதியரசர் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் 3 மாதத்தில் அறிக்கை கேட்டார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அந்த வரவே இல்லை!
கர்நாடக மாநிலத்தில் 633 நாட்களில் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. தமிழ்நட்டில் 1489 நாட்கள் கடந்தும் கூட எதுவும் நடக்கவில்லை.
#VanniyarReservation #vanniyar