"இளைஞர்களின் எழுச்சி"
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் 'இளந்தலைவர்' அவர்களின் தலைமை ஏற்று எழுச்சி கொண்ட தமிழ்நாட்டின் இளைஞர்கள் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன்.
@Udhaystalin🔥💥🌄
#ஸ்டாலின்_தொடரட்டும்#StalinWave2026
கேஸ் ச��லிண்டர் தட்டுப்பட்டால் இன்றைக்கு இந்தியா முழுவதும் உணவகங்கள் மூட ஆரம்பித்து விட்டார்கள் - விரைவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இருக்கும் என செய்திகள் வந்துள்ளது. இதையெல்லாம் சமாளிக்க வேண்டிய பிரதமர், ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்க அரசின் கைப்பாவையாக இருந்து - தவறான நிர்வாகக் கொள்கையால் பல்வேறு உலக நாடுகளை பகைத்து, இன்றைக்கு நாட்டையே படுகுழியில் தள்ளி இருக்கிறார்.
மக்களின் மேல் அக்கறை இல்லாத, நிர்வாக��்திறன் இல்லாத இந்த NDA கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் விரட்டி அடிப்பார்கள்!
#TNvsNDA
DMK: The Development Engine!
குடிசையில்லாத் தமிழ்நாடு எனும் கனவை அடைந்திடும் நோக்கத்துடன் 1970-இல் தலைவர் கலைஞர் அவர்கள் “தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்” உருவாக்கினார். நமது #DravidianModel-இல் அதனை “நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” எனப் பெயர் மாற்றினோம். இது வெறும் பெயர் மா��்றமல்ல; செயலாற்றலில் புதுப் பாய்ச்சல் என நிரூபித்திருக்கிறோம்.
அதற்கான Data இதோ:
கட��்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், இந்த வாரியத்தின் மூலம், சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் என மொத்தம் 27,668 குடியிருப்புகள்தான் உருவாக்கப்பட்டன.
நம்முடைய #DravidianModel-இல்,
☀️ சென்னை - 30,167
☀️ மற்ற மாவட்டங்களில் - 46,207
-என மொத்தம் 76,374🌇 குடியிருப்புகளை உருவாக்கியுள்ளோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்தக் குடியிருப்புகளின் எண்ணிக்கையைவிட, நமது ஆட்சிக்காலத்தில் சென்னையில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம். இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! இதுதான் செயலாற்றல்!
இதன் தொடர்ச்சியாக 700 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட “முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்புகள்” உள்ளிட்ட திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தேன்.
#DravidianModel 2.0-வில் இது இன்னும் பன்மடங்காகும்!
பெண்க���ுக்கான ஆட்சி, மக்களுக்கான நல்லாட்சி! - எனத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் நற்சான்றிதழே இந்த ஆட்சியின் மகத்தான சாட்சி. மக்களின் பேராதரவோடு 2026-ல் மகத்தான வெற்றி நிச்சயம்.
#StalinWave2026
TAMILNADU vs NDA - உரத்து ஒலிக்கும் உரிமைக்குரல்!
பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். சட்டமன்றத் தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனைமுறை மோடி தமிழ்நாட்டுக்குப் படையெடுக்கப்போகிறார் என்பது ‘திருப்பரங்குன்றம் முருக’னுக்கும் ‘அயோத்தி ராமருக்கு’மே வெளிச்சம். எத்தனைமுறை படையெடுத்தாலும் அவருக்குத் தோல்வியை மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் பரிசளிக்கப்போகிறார்கள். ஏனெனில் தமிழ��நாட்டுக்கு மோடி அரசு இழைத்த துரோகங்கள் ஏராளம்.
இந்தியாவில் அதிகமாக வரி வசூலித்து ஒன்றிய அரசுக்குத் தரும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. ஆனால் உத்திரப்பிரதேசம், பீகார், குஜராத் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு கிள்ளிக்கூட கொடுக்க முன்வரவில்லை. ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதியைத் தருவதிலும் இழுத்தடித்தது ஒன்றிய அரசு. இப்போது ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் மாறியதால் தமிழ்நாட்டுக்கு ஏற்��டும் இழப்புகளையும் சரிசெய்ய முன்வரவில்லை.
‘மதுரை எய்ம்ஸ்’ - அறிவிப்பில் இருக்கிறதே தவிர, இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. மும்மொழிக்கொள்கையை ஏற்கவேண்டும் என்ற ஒன்றிய அரசின் கொள்கையை ஏற்க மறுத்து, ‘இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்று சுயமரியாதையுடன் நிற்பதால் ’சமக்ர சிக்ஷா’ கல்வி நிதியை வழங்க மறுக்கிறது ஒன்றிய அரசு.
அதேபோல் இயற்கை பேரிடர்களின்போது நாம��� கோரும் நிதியை வழங்கவும் ஒன்றிய அரசு முன்வருவதில்லை. சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முதலில் நிதியை மறுத்து, பிறகு இழுத்தடித்து தந்தது ஒன்றிய பா.ஜ.க அரசு. மதுரைக்கும் கோவைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை அனுமதிக்க மறுத்து சொத்தை காரணங்களை முன்வைத்தது. அவ்வளவு ஏன், சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் ‘தமிழ்நாடு’ என்ற வார��த்தையே இல்லை.
இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்துவிட்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் தமிழ்நாடு வரும் மோடி ஒருசில வார்த்தைகளைத் தப்பும் தவறுமாகத் தமிழில் பேசிவிட்டு, ‘தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்’ என்று பசப்ப மட்டும் தவறுவதில்லை.
இன்று திருச்சி வரும் மோடியும் அவரின் துரோகங்களுக்குத் துணைநிற்கும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட NDA கூட்டணியை சேர்ந்தவர்களும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதில் தருவார்களா, அல்லது பொய்க்குற்றசாட்டுகளை அளந்துவிட்டு வழக்கம்போல் வாயிலேயே ���டை சுடுவார்களா?
#TNvsNDA #NDABetraysTN #ADMKFails
2026 தேர்தல் வெற்றிக்கான அலை,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ தேர்தல் பாடல்
🎵 “ஸ்டாலின் வழியில்… வெற்றி நிச்சயம்!”
இது ஒரு பாடல் அல்ல…
இது தமிழ்நாட்டின் முடிவு! 💥
இப்போதே Download செய்து உங்கள் போனில் Ringtone-ஆக வையுங்கள்.
👇 பதிவிறக்கம் செய்ய:
https://t.co/0kume5DQB3�
#ஸ்டாலின்_தொடரட்டும்
This is the official audio release of DMK Campaign Song for the 2026 Elections.
The people are chanting for Stalin to Continue and Tamil Nadu to Win!
Enjoy the Lyrical Video of the 2026 Official DMK Campaign Song.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வப் பரப்புரை பாடல் 'ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!'
ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டைச் சிதைக்க வடக்கிலிருந்து பெரும் பருந்து கிளம்புகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேராற்றலால் அதனை ஒவ்வொரு முறையும் விரட்டியடித்துள்ளோம். இப்போது 2026 தேர்தல் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் மீண்டும் அப்பருந்தின் இறகுகளைப் பிடுங்கி எறியும் நேரம் வந்துள்ளது.
தன்மானத் தமிழரின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் கூட்டத்திற்கு கருப்பு சிவப்பு படையின் ரௌத்திரம் கொண்டு பாடம் புகட்டிடுவோம்.
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
இந்த பாடலை Download செய்து உங்கள் போன் Ringtone-ஆக set செய்யுங்கள்.
பாடல் குறித்த உங்கள் க���ுத்துகளை comment செய்து, நண்பர்களுக்கும் இப்பாடலை share செய்யுங்கள்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
நம் #ChepaukTriplicane தொகுதியில் உள்ள இராயப்பேட்டை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலைக்கடையில் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்த பொங்கல் பரிசு ரூ.3000 மற்றும் அரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பினை நம்முடைய தொகுதி மக்களுக்கு வழங்கினோம்.
சாதி - மத பேதங்களைக் கடந்து அனைவரும் கொண்டாடுகிற பொங்கல் பண்டிகையையொட்டி நம் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம்!
@Dayanidhi_Maran@nchitrarasu