கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும் – காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் – எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
தமிழ்நாட்டின் GST வருவாய் கடந்த நான்கு தொடர்ச்சியான மாதங்களாக எதிர்மறை ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே சமயம் பல பிற முக்கிய மாநிலங்கள் இன்னும் இரட்டை இலக்க வளர்ச்சியில் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இவ்வாறு நீண்டகாலமாக தொடரும் எதிர்மறை YoY வளர்ச்சியை நாம் பார்த்ததில்லை. என்ன நடக்கிறது?
மேற்கு வங்காளம் கூட zero மெயின்டைன் பண்ணி இருக்கான். முதல் முறையாக தொடர்ச்சியான 3 மாதங்களில் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. இது பண புழக்கம் குறைவதற்கான அறிகுறி. இன்னும் 6 மாதம் இப்படியே தொடர்ந்தால் தமிழ்நாடு போன்ற manufacturing மாநிலத்திற்கு சாவு மணி என்று பொருள் கொள்க.இப்படியே போச்சுன்னா ஊஊ தான்
மதுரை மேலூர் FQL மோசடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி ரஞ்சித் திருமண அழைப்பிதழ்..அதுல ஒரு பக்க முதல்வர் விஜய் அவர்கள் ஃபோட்டோ, இன்னொரு பக்கம் FQL நிறுவனர் என்று சொல்லபடும் richard soros போட்டோ. கல்யாணம் நடந்தது மே 29. யார் ரா நீங்க
ஆதவ் அர்ஜுனா இருநூறு கோடி ரூபாய் மதுபான மதுபான கம்பெனிகளிடமிருந்து வாங்கி இருக்கிறார். எரிக்கா என்கிற மதுபான கம்பெனி தயாரிக்கும் 11 மதுபானங்கள் தரம் இல்லாதவை என மத்திய அரசு உணவு கட்டுப்பாட்டு துறை இந்த மாதம் 11ஆம் தேதி தடை செய்து இருக்கிறது. அந்தத் தடை எந்தவிதமான ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் மாநில அரசால் 13ஆம் தேதி நீக்கப்பட்டிருக்கிறது. இந்த எரிக்கா கம்பெனி அதிபர் விஷ்ணு ரெட்டிக்கு நெருக்கமானவர். முகுந்த சீனிவாச ரெட்டி இவர் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்.. இந்த அரசு ஊழல் செய்யாத அரசு நம்புங்கள்!
குடியரசுத்தலைவர் ஆட்சியிலிருந்து காப்பாற்றி தமிழ்நாட்டை "பாயாசம்" கையில் ஒப்படைத்திருக்கும் @tncpim@CpiTamilnadu தோழர்கள், குறிப்பாக @Shanmugamcpim எப்படி "கடிதோச்சி மெல்ல எறிவார்" என்று அறியக் காத்திருக்கிறேன்.
கழகத்துக்கும் தலைவர் கலைஞருக்கும் தன் இறுதிமூச்சு வரை உண்மையாக இருந்த களங்கமில்லாத திராவிடத் தீரர் முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன்.
அண்ணாவின் தம்பியாக அவர் ஆற்றிய உரைகளும் எழுதிய நூல்களும் நம் இயக்கத்தின் இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் பயின்றாக வேண்டிய பாடப்புத்தகங்கள்.
ஓர் எளிய தஞ்சை டெல்டா மைந்தன் டெல்லி வரை சென்று தடம் பதித்தார். பின்பு தோகா வரை சென்று இந்தியா மட்டுமில்லாமல், உலகின் வளரும் நாடுகள் அனைத்துக்காகவும் வாதாடினார். எத்தனை உயரம் சென்றாலும் அந்தப் புகழை எல்லாம் கலைஞருக்கே காணிக்கையாக்கிய #முரசொலிமாறன் அவர்களின் புகழ் வாழிய வாழியவே!
தி.மு.கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும் - கேடயமுமாக திகழும், கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம்.
கழகத்தினர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் கைது செய்வது; அதுவே, டெல்லி ஓனர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் இருப்பது என பம்மி நிற்கும் டம்மி அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் கழக வழக்கறிஞர் அணி அம்பலப்படுத்த வேண்டும் என்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டு நலனுக்காகவும் - கழகத்திற்காகவும் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ள கழக வழக்கறிஞர் அணியின் பணிகள் மென்மேலும் வேகமெடுக்கும் வகையில் உற்சாகமூட்டினோம்.
வழக்கறிஞர் அணியின் பணிகள் சிறக்க வாழ்த்தினோம்!
@DMKLegalWing@RSBharathiDMK@nrelango_dmk@PWilsonDMK
லாட்டரி குடும்பம் பத்தி எதுனா பேசுனு கேட்டா electoral bond வாங்குற கட்சிகளுக்கு ethics பேச உரிமையில்லனு.. அவங்களுக்கு உரிமையில்ல நீங்க பேசலாம்ல.. ஏன் கவர் வருதா லாட்டரில இருந்து ?
இதற்குக் கடும் நடவடிக்கை எடுத்து மேலும் நடக்காமல் தடுக்க நினைக்கிறார்களா அல்லது ரூட் மாபியாவை வைத்து நீர்த்துப் போக வைக்கிறார்களா என்று பாருங்கள்.
அரசோ, முதலமைச்சரோ இதற்கு நேரடியாக பதிலளிக்காவிட்டால் இரண்டாவது வழியில் தான் செல்கிறார்கள் என்று பொருள்.
இந்த ஆட்சிக்காலம் முழுவதும் இதுவேதான் தொடரும் என்பது அதன் மறைபொருள்.
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#SofaModel#NitiAyog#DravidianModel
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது!
தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்டியும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன்.
@KanimozhiDMK@geethajeevandmk