அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் :அரச மரம் சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் . அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.#SiddhaDay
சீரகம்= சீர் + அகம்
Botanical name:cuminum cyminum
Action:stomachic,stimulant, carminative
உடம்பில் உள்ள தீ குற்றத்தை தன்னிலைப்படுத்தி வயிற்றில் மந்தத்தைப் போக்கி பசியை உண்டாக்கி உணவை செரிக்குமாறு செய்யும். கண்ணுக்கு குளிர்ச்சியை உண்டு பண்ணும்.#siddhaday#6thsiddhaday2023#siddha
"வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி" :முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். ஆனால் அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.#SiddhaDay#AYUSH